கோயம்புத்தூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 118: வரிசை 118:


== மக்கள் வகைப்பாடு ==
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 4,732 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்ட மொத்த [[மக்கள்தொகை]] 3,458,045 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 1,729,297 (51%) ஆகவும், பெண்கள் 1,728,748 (49%) ஆகவும் உள்ளனர். ஆவார்கள். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 968 பெண்கள் வீதம் உள்ளனர். குழ்ந்தைகள் பாலின விகிதம், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். சராசரி [[எழுத்தறிவு]] 83.98% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 89.06%, பெண்களின் கல்வியறிவு 78.92% ஆகும். இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 731 நபர்கள் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011) மக்கள்தொகை வளர்ச்சி 18.56% ஆகவுயர்ந்துள்ளது. ஆறு வயதிற்குட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 319,332 ஆக உள்ளது.<ref>[https://www.census2011.co.in/census/district/32-coimbatore.html Coimbatore District : Census 2011 data]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 4,732 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்ட மொத்த [[மக்கள்தொகை]] 3,458,045 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 1,729,297 (51%) ஆகவும், பெண்கள் 1,728,748 (49%) ஆகவும் உள்ளனர். ஆவார்கள். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 968 பெண்கள் வீதம் உள்ளனர். குழ்ந்தைகள் பாலின விகிதம், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். சராசரி [[எழுத்தறிவு]] 83.98% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 89.06%, பெண்களின் கல்வியறிவு 78.92% ஆகும். இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 731 நபர்கள் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011) மக்கள்தொகை வளர்ச்சி 18.56% ஆகவுயர்ந்துள்ளது. ஆறு வயதிற்குட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 319,332 ஆக உள்ளது.<ref>[https://www.census2011.co.in/census/district/32-coimbatore.html Coimbatore District : Census 2011 data]</ref><ref>[https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2018/06/2018061272.pdf DISTRICT CENSUS HANDBOOK COIMBATORE]</ref>


இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 30,44,145 (88.03%), இசுலாமியர்கள் 211,035 (6.10%), கிறித்தவர்கள் 1,90,314 (5.50%) மற்றவர்கள் 0.36% ஆக உள்ளனர்.
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 30,44,145 (88.03%), இசுலாமியர்கள் 211,035 (6.10%), கிறித்தவர்கள் 1,90,314 (5.50%) மற்றவர்கள் 0.36% ஆக உள்ளனர்.

09:55, 7 செப்தெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

கோயம்புத்தூர் மாவட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம் கோயம்புத்தூர்
மிகப்பெரிய நகரம் கோயம்புத்தூர்
ஆட்சியர்
ஹரிஹரன்
காவல்துறைக்
கண்காணிப்பாளர்


ஆக்கப்பட்ட நாள்
பரப்பளவு 4,732 கி.மீ² (வது)
மக்கள் தொகை
(2011
வருடம்
அடர்த்தி
3,458,045 (22வது)
731/கி.மீ²
வட்டங்கள் 10
ஊராட்சி ஒன்றியங்கள் {{{ஊராட்சி ஒன்றியங்கள்}}}
நகராட்சிகள் 3
பேரூராட்சிகள் 37
ஊராட்சிகள் 227
வருவாய் கோட்டங்கள் 2

கோயம்புத்தூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பதிரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். பொருளாதாரத்திலும், தொழிற்றுறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று. கோயம்புத்தூர் தமிழ் நாட்டில் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த ஒரு நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் துணி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம் நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோயம்புத்தூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது சுருக்கமாக கோவை என்று அழைக்கப்படுகிறது. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றிப் பெறப்படும் குடிநீரும் மின்சாரமும் ஆகும்.

பழைமை வாய்ந்த கொங்கு நாட்டின் ஒரு பகுதியாய் திகழ்ந்த இம்மாவட்டத்தில் கோசர் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்தூர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் முற்காலச் சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது[சான்று தேவை]. இதனை இராட்டிரகூடர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், ஹோசைளர்கள், விஜய நகரப் பேரரசு ஆகிய பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன.

வரலாறு

கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பழங்குடிகளான இருளர்கள் முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9 ஆம் நூற்றாண்டில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்த போது அவர்கள் கோயம்புத்தூரைத் தமது ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தனர்[சான்று தேவை]. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு[சான்று தேவை] முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள், குறிப்பாக கோசர்கள் ஆண்டு வந்தனர். கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது[சான்று தேவை].

1550 களில் மதுரையில் விசய நகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில் உருவெடுத்தனர். 1700 களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டை நடைபெற்றது[சான்று தேவை]. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.

பழங்குடியினரின் ஆதிக்கம் இவ்விடத்தில் வெகு காலம் நீடிக்கவில்லை. இராட்டிரகூடர்களிடம் இப்பகுதி சில காலம் இருந்து பின்னர் இராஜராஜ சோழன் காலத்தில்[சான்று தேவை] சோழர் கைக்கு மாறியது. சோழ அரசு வீழ்ச்சி அடைந்த பின் கொங்கு நாடு சாளுக்கியர்களாலும் பின்னர் பாண்டியர்களாலும் ஆளப்பட்டது. பாண்டியர்களின் ஆட்சியில் உண்ணாட்டுப் பிரச்சினைகள் ஏற்பட்ட போது, டெல்லி சுல்தான் தலையிட்டதனால்[சான்று தேவை] இப்பகுதி மதுரை சுல்தானின் கைக்கு மாறியது. இவர்களிடமிருந்து இப்பகுதியினை 1377-78 ஆம் ஆண்டு காலத்தில் விஜய நகரப் பேரரசு கைப்பற்றியது[சான்று தேவை]. இதற்குப் பின் இப்பகுதியினை மதுரை நாயக்கர்கள் ஆண்டனர்[சான்று தேவை].

1760 களில் மைசூரை ஹைதர் அலி கைப்பற்றினார். அவர் பிரித்தானியருக்கு எதிராகச் செயற்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799 ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.

அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்துடன் இணைத்துக் கொண்டனர். 1801 ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார், மைசூர் ஆகியவற்றின் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848 ஆம் ஆண்டு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது. 1981 ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்கா நல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.

புவியியல்

கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் மழைச் சாரல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு மனத்திற்கு இதம் அளிக்கின்ற கால நிலை வருடம் முழுவதும் நிலவுகிறது. 25 கி.மீ நீளமுள்ள பாலக்காட்டு கணவாய் வழியாக வீசும் குளிர்ந்த காற்று இதன் பருவ நிலைக்கு காரணமாக அமைகிறது. இங்கு அதிகமாக உள்ள கரிசல் மண் இந்த பகுதியில் விவசாயமும் அதனைச் சார்ந்த தொழில்களும் சிறந்து விளங்க ஒரு காரணியாக அமைந்துள்ளது.

தொழில்கள்

இங்கு வெற்றிகரமாக விளங்கும் பருத்தி விளைச்சல் நெசவுத் தொழிற்சாலைகளுக்கு சிறந்த அடித்தளத்தை அமைக்க வழி செய்துள்ளது. இங்கு முதல் நெசவு நூற்பாலை 1888 இல் அமைக்கப்பட்டது. ஆனால் இங்கு இப்பொழுது நூற்றுக்கு அதிகமான நூற்பாலைகள் இயங்கி வருகின்றது. இது உறுதியான பொருளாதாரம் ஏற்படவும் கோயம்புத்தூர் புகழ் மிக்க நூற்பாலை நகரமாக உருவெடுக்கவும் காரணமாக அமைந்தது. இங்கு 25000 இற்கு மேல் சிறு நடுத்தர பெரிய தொழிற்சாலைகளும் நூற்பாலைகளும் உள்ளன. கோயம்புத்தூர் சிறந்த நீர் ஏற்றுக் குழாய் (Motor pump sets), இயந்திர பொறியமைப்பு கருவிகள் என்பவற்றின்த உற்பத்தி மையமாக விளங்குகிறது. 1930 இல் பைகாரா நீர்மின் திட்டம் செயற்படத் தொடங்கியதன் காரணமாக கோயம்புத்தூர் நகரம் தொழில் வளர்ச்சியில் உச்சத்தை அடைந்தது.

கோயம்புத்தூர் மாவட்டம் அண்டை மாநிலமான கேரளத்திற்க்கும் புகழ் மிகுந்த உதக மண்டலத்திற்கும் நுழை வாயிலாக அமைந்துள்ளது. மேட்டுப்பாளையத்திருந்து இயங்கும் புகழ் பெற்ற மலைத் தண்டவாளம் இங்கிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து ஊட்டிக்கு வழக்கமான பேருந்துப் போக்குவரத்துக்கள் உள்ளன.

மலைவளம்

இம்மாவட்டத்தின் தட்பவெட்ப நிலைக்கும் மழைக்கும் காரணமாக அமைவது சுற்றியுள்ள மலைகளே ஆகும். இம்மாவட்டத்தின் தெற்கில் ஆணைமலை, வடமேற்கில் குச்சும்மலை, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நீலகிரி மலை, வெள்ளியங்கிரி மலை ஆகியவை உள்ளன. மற்றும் குமரிக்கல், புதுக்கல், அஞ்சநாடு பள்ளத்தாக்கு பொளாம்பட்டி மலைகள், ஆசனூர், பருகூர், பாலமலை, போன்ற மலைகள் உள்ளன. இம்மலைகளின் உயரம் 4000 அடிமுதல் 5000 அடி வரை உள்ளது, கடல் மட்டத்திலிருந்து 6000 அடிமுதல் 8000 அடிவரை உள்ளது.

காட்டு வளம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் காடுகள் அடர்த்தியாகவும் சிறந்த உயர்ந்த மரங்களைக் கொண்டும் விளங்குகின்றன. இத்தகைய காடுகளை 8 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.1951 - ஆண்டிலிருந்து தனியாக வனத்துறை அமைக்கப்பட்டு காடுகள் பராமரிக்கப்படுகிறது. இம்மாவட்ட காடுகளின் எல்லை நீலகிரி மலை சரிவையும், மேற்கில் போலம்பட்டி தடாகம் பள்ளதாக்கு பகுதிகளில் உள்ள காடுகளையும், கிழக்கில் ஆணைமலை காடுகளையும் கொண்டுள்ளது. இதில் தேக்கு மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. பொள்ளாச்சி டாப்சிலிப் , ஆணைமலை , துணக்கடவு தொகுதிகள் என பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் மரங்கள் 150 அடி உயரம் வரை வளர்கின்றன. மூங்கில் பெரும்பான்மையாக கோவை மாவட்டத்திலேயே கொள்முதல் செய்யப்படுகின்றன.

கனிம வளம்

இம்மாவட்டத்தில் குறிப்பிடதக்க கனிம வள இடங்கள் உள்ளன. கருங்கல், சுண்ணாம்பு குவார்ட்ஸ் என்னும் பொருட்கள் சிறிய அளவில் கிடைக்கின்றன. இவைகளைக் கொண்டு மதுக்கரையில் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.

வேளாண்மை

கோவை மாவட்டம் தலைசிறந்த தொழில் மாவட்டமாக விளங்கிய போதிலும், வேளாண்மையிலும் தஞ்சை, திருச்சி மாவட்டங்களைப் போல சிறந்து விளங்குகிறது. மொத்த நிலபரப்பில் 65 சதவிகிதம் விவசாயம் சாகுபடி செய்யப்படுகின்றன.

நெல், சோளம், கம்பு, ராகி, தினை, சாமை வரகு, முதலியவை சாகுபடி செய்யப்படுகின்றன.பயிறு வகைகளில் துவரை உளுந்து, கொள்ளு, மொச்சை, கடலை வகைகளும் சாகுபடி ஆகின்றன. பணப்பயிர்களான பருத்தி, நிலக்கடலை, புகையிலை, கரும்பு, தேங்காய் வாழை, மஞ்சள் போன்றவைகளும் பயிராகின்றன.பயிர் செய்யுப்படும் பரப்பு, மொத்த நிலப்பரப்பில் 1,16,000 ஹெக்டர்கள். கோயம்புத்தூர் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை வட்டங்களில் அமராவதி, பவானி, ஆழியாறு, பாசன வசதியால் நெல் மிகுதியாக விளங்கிறது.

ஆறுகள்

ஆழியாறு, சிறுவாணி ஆறு, பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன.

உலகிலேயே சுவையான குடீநீர் இரண்டாம் இடத்தில் சிறுவாணி ஆறு இருக்கிறது.

நிர்வாகம்

கிபி 1804 ம் ஆம் ஆண்டு கோவை மாவட்டம் தனி மாவட்டமாக உருவானது. இம்மாவட்டத்தின் வடக்கு எல்லையாக பெரியார் மாவட்டமும், தெற்கில் கரூர் மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும், கிழக்கில் சேலம் மாவட்டமும் அமைந்துள்ளது. 1979 - ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக கோவை மாவட்டம், பெரியார் மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியோரம் அமைந்துள்ளது.

உள்ளாட்சி நிர்வாகம் மாநகராட்சி – கோயம்புத்தூர்
ஊராட்சி ஒன்றியங்கள் : 12 காரமடை, மதுக்கரை, பெரியநாயக்கன் பாளையம்,சர்க்கார்சாமகுளம், தொண்டாமுத்தூர்,அன்னூர், சூலூர், சுல்தான்பேட்டை, ஆனைமலை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி (வடக்கு), பொள்ளாச்சி (தெற்கு)
பேரூராட்சிகள் 37
ஊராட்சிகள் 227
மாநகராட்சிகள் 1
நகராட்சிகள் 3
வருவாய் நிர்வாகம் கோட்டங்கள்:2 பொள்ளாச்சி, கோவை.
வட்டங்கள்: 10 கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், கிணத்துக்கடவு, அன்னூர், மதுக்கரை மற்றும் போரூர்
சட்டசபை தொகுதிகள்:10 மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, வால்பாறை.

வட்டங்கள்

கோயம்புத்தூர் மாவட்டம் 8 வட்டங்களாக பிரிக்கப்படுகிறது.

  1. பொள்ளாச்சி
  2. கோயம்புத்தூர் வடக்கு வட்டம்
  3. சூலூர்
  4. வால்பாறை
  5. கோயம்புத்தூர் தெற்கு வட்டம்
  6. மேட்டுப்பாளையம்
  7. கிணத்துக்கடவு
  8. அன்னூர்
  9. பேரூர்
  10. மதுக்கரை

அவினாசி, பல்லடம், திருப்பூர், உடுமலைபேட்டை ஆகியவை கோவையில் இருந்து பிரிந்த திருப்பூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டன.

வருவாய் கோட்டம்

  1. கோயம்புத்தூர்
  2. பொள்ளாச்சி
  3. மேட்டுப்பாளையம்
  4. வால்பாறை

நகராட்சிகள்

  1. மேட்டுப்பாளையம்
  2. பொள்ளாச்சி
  3. வால்பாறை

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 4,732 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்ட மொத்த மக்கள்தொகை 3,458,045 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 1,729,297 (51%) ஆகவும், பெண்கள் 1,728,748 (49%) ஆகவும் உள்ளனர். ஆவார்கள். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 968 பெண்கள் வீதம் உள்ளனர். குழ்ந்தைகள் பாலின விகிதம், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 83.98% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 89.06%, பெண்களின் கல்வியறிவு 78.92% ஆகும். இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 731 நபர்கள் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011) மக்கள்தொகை வளர்ச்சி 18.56% ஆகவுயர்ந்துள்ளது. ஆறு வயதிற்குட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 319,332 ஆக உள்ளது.[1][2]

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 30,44,145 (88.03%), இசுலாமியர்கள் 211,035 (6.10%), கிறித்தவர்கள் 1,90,314 (5.50%) மற்றவர்கள் 0.36% ஆக உள்ளனர்.

ஆதாரங்கள்

  1. Coimbatore District : Census 2011 data
  2. DISTRICT CENSUS HANDBOOK COIMBATORE

வெளி இணைப்புகள்

  1. தமிழக அரசின் மாவட்ட வரைபடங்கள் (இணையத்தில்)
  2. கோயம்புத்தூர் மாவட்டம் அரசின் அதிகாரப்பூர்வதளம்
  3. கோவை மாவட்ட சிறப்பு
  4. கோவை மாவட்ட செய்திகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயம்புத்தூர்_மாவட்டம்&oldid=2574014" இலிருந்து மீள்விக்கப்பட்டது