கிருஷ்ணதேவராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
(122.164.35.121 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2029026 இல்லாது செய்யப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==பேரரச பதவி==
கிருஷ்ணதேவராயரின் தந்தை '''[[துளுவ நரச நாயக்கன்]],'''
கிருஷ்ணதேவராயரின் தாத்தாவின் பெயர் ''' துளுவ ஈஸ்வரா நாயக்கன் .''' பேரரசன் [[சாளுவ நரசிம்ம தேவ ராயன்|சாளுவ நரசிம்ம தேவ ராயனிடம்]] தளபதியாக இருந்தவர். நரசிம்ம தேவ ராயன் இறந்த பின்னர் ஆட்சிக்கு வந்த அவரது மகனும் கொல்லப்பட்டான். சிறுவனாயிருந்த இன்னொரு மகனை அரசனாக்கி, பேரரசு சிதைந்துவிடாமலிருக்க அதன் நிர்வாகப் பொறுப்பைத் தன்கையில் எடுத்துக் கொண்டார் நரச நாயக்கன். ஆனால், நரச நாயக்கனுக்குப் பின் நிர்வாகப் பதவியை ஏற்றுக்கொண்ட அவரது மூத்த மகனும், கிருஷ்ணதேவராயரின் தமையனுமான [[வீரநரசிம்ம ராயன்]] சில காலத்தின் பின் தானே பேரரசராக முடிசூட்டிக் கொண்டார். கிருஷ்ணதேவராயர் அவருக்கு நிர்வாகத்தில் உதவியாக இருந்தார். வீரநரசிம்ம ராயன் இறந்த பின் கிருஷ்ணதேவராயருக்குப் பேரரச பதவி கிட்டியது. கிருஷ்ணதேவராயரின் முடிசூட்டுவிழா கிருஷ்ணனின் பிறந்தநாளில் நடைபெற்றது. திறமை வாய்ந்த முதன் மந்திரியாகிய [[திம்மராசன்]], கிருஷ்ணதேவராயருக்குப் பேரரசின் நிர்வாகத்தில் பெரும் உதவியாக இருந்தார். கிருஷ்ணதேவராயரை ஆட்சிபீடம் ஏற்றியதில் பெரும் பங்கு திம்மராசனையே சாரும். கிருஷ்ணதேவராயர் இவரை ஒரு தந்தையின் இடத்தில் மதித்து வந்தார்.
 
கிருஷ்ணதேவராயரின் மிகமுந்திய [[கல்வெட்டு]] 26 ஜூலை 1509 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவர், விஜயநகரத்துக்கு அருகில் தனது தாயின் நினைவாக அவரது பெயரால், [[நாகலபுரம்]] என்னும் புறநகர்ப் பகுதியைக் கட்டினார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2572183" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி