அறிவியலாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Louis_Pasteur,_foto_av_Félix_Nadar.jpg with File:Louis_Pasteur,_foto_av_Paul_Nadar.jpg (by CommonsDelinker because: File renamed: https://www.getty.edu/art/collection/objects/38317/paul-nadar-louis-p
வரிசை 36: வரிசை 36:
=== வரலாற்று அறிவியலறிஞர்கள் ===
=== வரலாற்று அறிவியலறிஞர்கள் ===
{{Unreferenced-section|date=January 2010}}
{{Unreferenced-section|date=January 2010}}
[[படிமம்:Louis Pasteur, foto av Félix Nadar.jpg|thumb|right|185px|லூயிஸ் பாஸ்டியுரின் பிற்கால வாழ்க்கை]]
[[படிமம்:Louis Pasteur, foto av Paul Nadar.jpg|thumb|right|185px|லூயிஸ் பாஸ்டியுரின் பிற்கால வாழ்க்கை]]
[[படிமம்:Albert Einstein photo 1921.jpg|thumb|right|185px|இயற்பியல் அறிவியலறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 20ஆம் நூற்றாண்டில் மிகப்பிரசித்திபெற்றவர்களில் ஒருவராவார்.]]
[[படிமம்:Albert Einstein photo 1921.jpg|thumb|right|185px|இயற்பியல் அறிவியலறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 20ஆம் நூற்றாண்டில் மிகப்பிரசித்திபெற்றவர்களில் ஒருவராவார்.]]
[[படிமம்:Ludwik Hirszfeld1.jpg|thumb|right|185px|ல்யூட்விக் ஹிர்ஸ்ஜ்ஃபெல்ட், ஏபிஓ மரபுவழி இரத்தவகையைக் கண்டுபிடித்த இணை-கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர்.]]
[[படிமம்:Ludwik Hirszfeld1.jpg|thumb|right|185px|ல்யூட்விக் ஹிர்ஸ்ஜ்ஃபெல்ட், ஏபிஓ மரபுவழி இரத்தவகையைக் கண்டுபிடித்த இணை-கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர்.]]

22:02, 25 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்


சோதனைச்சாலையில் பணியாற்றும் அறிவியலறிஞர்கள்

விரிவான பொருளில், அறிவைப் பெற ஒரு திட்டமிட்ட செயலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் யாராயினும் அல்லது சிந்தனைக் கருத்துக்கள் அல்லது தத்துவம் தொடர்புடைய விஷயங்களில் ஈடுபடுத்திக்கொள்ளும் தனிநபர், ஒரு அறிவியல் அறிஞர் அல்லது அறிவியலாளர் அல்லது விஞ்ஞானி ஆவார். மிகச் சரியானப் பொருளில், ஒரு அறிவியல் அறிஞர் என்பவர் அறிவியல் முறையினைப்[1] பயன்படுத்தும் ஒரு தனிநபர் ஆவார். அந்நபர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிவியல்[2] விஷயங்களில் ஒரு வல்லுனராக இருக்கலாம். இக்கட்டுரை அவ்வார்த்தையின் மிக மிகச்சரியான பயன்பாட்டினை கருத்தில் கொள்ளுகிறது.

தற்கால அறிவியல் அறிஞர்களோடு ஓரளவு ஒத்துப்போகக்கூடிய சமூக விடயங்களை குறைந்தது 17ஆம் நூற்றாண்டு இயற்கை தத்துவத்துக்கு பின்னோக்கிச் சென்றால் காணலாம், ஆனால் அறிவியல் அறிஞர் என்ற வார்த்தை மிகச்சமீபத்தில் தோன்றியதாகும். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை, அறிவியலில் சாதனை புரிய முயற்சி செய்தவர்கள் "இயற்கை தத்துவஞானிகள்" அல்லது "அறிவியல் மேதைகள்" எனப்பட்டனர்.[3][4][5][6]

ஆங்கில தத்துவஞானியும் அறிவியல் வரலாற்றாசிரியருமான வில்லியம் வேவெல் 1833ஆம் ஆண்டில் அறிவியல் அறிஞர் எனும் வார்த்தையை உருவாக்கினார், மேலும் அது முதன்முதலில் வேவெல்லின் காலாண்டு மீளாய்வில் வெளியிடப்பட்ட மேரி ஸோமர்வைல்லின் இயல்பியல் அறிவியல்களின் தொடர்புகள் பற்றி (ஆன் தெ கனெக்ஷன் ஆஃப் தெ ஃபிஸிகல் சையன்சஸ்) எனும் நூலின் 1834ஆம் ஆண்டு மதிப்பீட்டில் ஒருமித்த கருத்தாக பிரசுரிக்கப்பட்டது. அவ்வார்த்தையைப்பற்றிய வேவெல்லின் கருத்து ஓரளவு கேலிக்கு உட்பட்டது, மற்ற அறிவுசார் வடிவங்களிலிருந்து வேறுபட்டு அதிக அளவு காணப்பட்ட இயற்கை அறிவுள்ள அறிவியல் மாற்றுக் கருத்துகளுக்குப் பதிலளிப்பதாக இருந்தது. அறிவியல்களில் "பிரித்தல் மற்றும் கூறாக்குதலில் ஒரு வளரும் போக்கு" என்பதைப் பற்றி வேவெல் எழுதினார்; அதேசமையம் மிகவும் பிரத்யேகமான வார்த்தைகள் அதிக எண்ணிக்கையில் தோன்றியபோது - ரசாயன அறிஞர், கணித அறிஞர், இயற்கைஅறிஞர் - "தத்துவமேதை" எனும் விரிவான கருத்துடைய வார்த்தை, அறிவியல் சாதனையில் ஈடுபட்டோருக்கு "இயற்கையான" அல்லது "சோதனைக்குட்பட்ட" தத்துவமேதை எனும் தற்காலத் தடுப்பு நடவடிக்கையின்றி திருப்தி அளிக்கவில்லை. அறிவியல் முன்னேற்றத்திற்கான பிரிட்டிஷ் சங்க உறுப்பினர்கள் சமீபகால கூட்டங்களில் ஒரு சிறந்த வார்த்தையின்மையைப் பற்றி குறை கூறிவந்தனர், என்பதை வேவெல் அவருடைய மீளாய்வில் குறிப்பிட்டுள்ளார்; தன்னையே சுட்டிக்காட்டி, அவர் "கூர்மதியுடைய சிலர் அறிஞர் (ஆர்டிஸ்ட்) எனும் வார்த்தையை இணைத்து அறிவியல் அறிஞர் (சையண்டிஸ்ட்) எனும் வார்த்தையை உருவாக்கவேண்டும் எனவும் , நாம் ஏற்கனவே பொருளாதார அறிஞர் (எகனாமிஸ்ட்) மற்றும் நாத்திகர் (அத்தீய்ஸ்ட்) போன்ற வார்த்தைகளைக் கொண்டுள்ளதால் அப்படிச் செய்வதில் தயக்கம் ஏதும் இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர் - ஆனல் பொதுவாக இது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல" எனக் குறிப்பிட்டுள்ளார்.

1840ஆம் ஆண்டில் அவரது தெ ஃபிலாஸஃபி ஆஃப் தெ இண்டக்டிவ் ஸ்யன்ஸஸ் எனும் நூலில் வேவெல் அவ்வார்த்தையை மீண்டும் வலியுறுத்தி முன்மொழிந்துள்ளார் (ஒருமித்த கருத்தாக அல்ல).

We need very much a name to describe a cultivator of science in general. I should incline to call him a Scientist. Thus we might say, that as an Artist is a Musician, Painter, or Poet, a Scientist is a Mathematician, Physicist, or Naturalist.

அதேசமையம் அவர் ஃபிஸிஸிஸ்ட் எனும் வார்த்தையை ஃபிஸிஸியன் எனும் ஃப்ரென்ச் வார்த்தைக்கு இணையாகவும் முன்மொழிந்துள்ளார். பிறகு பல பத்தாண்டுகள்வரை எந்த வார்த்தையும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை; அறிவியல் அறிஞர் (ஸயண்டிஸ்ட்) எனும் வார்த்தை 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐக்கிய நாடுகளிலும், 20ஆம் நூற்றாண்டு தொடங்கும் காலத்தில் பெரிய பிரிட்டனிலும் பொதுவான வார்த்தையாக மாறியது.[7][8][9] இருபதாம் நூற்றாண்டுவாக்கில், சிறப்பு அம்சம் பொருந்திய ஒரு பிரிவினரால் செயல்படுத்தப்பட்டு ஒரு தனித்தன்மை வாய்ந்த முறையின் மூலம் சாதனை புரிய முயற்சி செய்யப்பட்ட, உலக தகவல்களின் சிறப்பு குறியீடு எனும் அறிவியலைப்பற்றியத் தற்காலக் கருத்து, முக்கியமான ஒன்றாகிவிட்டது.

விளக்கம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை தொடர்ந்து மாற்றி அமைத்துள்ளன. தொழில்ரீதியாக இன்றைய அறிவியல் அறிஞர் பரவலாக அங்கீகரிக்கப்படுகிறார். முக்கியமாக தற்போதுள்ள புள்ளிவிவரங்களைக்கொண்டு புதிய மாதிரிகளை உருவாக்கி புதிய விளைவுகளை முன்னதாக கூறுபவர், மற்றும் முக்கியமாக மாதிரிகளை அளந்தறிந்து சோதன செய்யும் சோதனையாளர்கள் ஆகிய கருத்தியலாளர்கள் — செயல்வடிவில் இவ்விரு பிரிவினர்களுக்கும் உள்ள வேறுபாடு தெளிவாக இல்லையாயினும் அறிவியல் அறிஞர்களில் அடங்குவர், மேலும் பல அறிவியல் அறிஞர்கள் இரண்டு வேலைகளையும் செய்கின்றனர்.

கணிதம் பொதுவாக அறிவியல்களில் சேர்க்கப்படுகிறது. மற்ற அறிவியல் அறிஞர்களைப்போல் கணிதவல்லுநர்கள் கருதுகோள்களில் தொடங்கி பிறகு அவைகளைச் சோதிக்க குறியீட்டு அல்லது கணக்கீட்டு சோதனைகளைச் செய்பவர். மிகச்சிறந்த இயற்பியல் வல்லுநர்களில் சிலர் ஆக்கமிக்க கணித வல்லுநர்களாக இருந்துள்ளனர். அதிகத் திறனுள்ள கருத்தியலாளர்களுக்கும் அதிகத் திறனுள்ள செயல்வடிவ அறிவியல் அறிஞர்களுக்கும் இடையில் அறுதியிட்டுக் கூறும்படியான வேறுபாடுகள் இன்றி ஒரு தொடர்தன்மை உள்ளது. ஆளுமை, ஆர்வம், பயிற்சி மற்றும் தொழில்ரீதியான செயல் ஆகியவற்றில் செயல்வடிவ கணிதவல்லுநர்கள் மற்றும் கருத்தியல் இயல்பியல்வல்லுநர்கள் ஆகியோருக்கிடையில் வேறுபாடு இல்லை.

அறிவியல் அறிஞர்கள் பல வழிகளில் ஊக்குவிக்கப்படலாம். நாம் பார்க்கும் உலகம் ஏன் இவ்வறு உள்ளது என்பதையும் அது எவ்வாறு உருவானது என்பதையும் தெரிந்துகொள்ள பலர் ஆர்வம் கொண்டுள்ளனர். உண்மைத்தன்மை பற்றி ஒரு வலுவான ஆர்வத்தினை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர். அவர்களின் சகஊழியர்களாலும் கௌரவத்தாலும் கிடைக்கும் அங்கீகாரம், அல்லது மக்களின் ஆரோக்கியத்திற்காக, உலக நாடுகளுக்காக, உலகத்திற்காக, இயற்கை அல்லது தொழிற்சாலைகள் (கல்வி அறிவியல் அறிஞர் மற்றும் தொழில்ரீதியான அறிவியல் அறிஞர்) ஆகியவற்றுக்காக அறிவியல் அறிவினை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் ஆகியவை மற்ற ஊக்குவிப்புகள் ஆகும்.

அறிவியல் அறிஞர்களும் பொறியியல் வல்லுநர்களும்

பொதுமக்கள் பார்வையில் பொறியியல் வல்லுநர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் குழப்புவதாக உள்ளது, முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது செயல்வடிவ அறிவியல் என்பதற்கு மிக தொடர்புடையதாக உள்ளது. அறிவியல் அறிஞர்கள் பொது விதிகளைக்காண இயற்கையை ஆரய்கின்றபோது, பொறியியல் வல்லுநர்கள் புதியனவற்றைக் கண்டுபிடிக்கவும் பழையனவற்றை சீர்படுத்தவும் அறிவியல்மூலம் நிறுவப்பட்ட அடிப்படைக் கருத்துக்களை உபயோகிக்கின்றனர். சுருங்கக்கூறின், அறிவியல் அறிஞர்கள் பொருள்களை ஆராய்கின்றபோது பொறியியல் வல்லுநர்கள் பொருள்களை வடிவமைக்கின்றனர். இருப்பினும், ஒருவராலேயே இரண்டு துறைகளிலும் குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்துள்ளதற்கான ஆதரங்கள் நிறைய உள்ளன. ஒரு அறிவியல் அறிஞருக்கு பொறியியல் கல்வியும் இருந்தால், அதே நபர் பிரச்சனைகளைத் தீர்க்கவும் புதிய தொழில்நுட்பங்களை வடிவமைக்கவும் இயற்கையின் அடிப்படைக் கருத்துக்களை ஆராய்வார். அறிவியல் அறிஞர்கள் சோதனைக் கருவிகளை வடிவமைத்து மூல முன் மாதிரிகளை உருவாக்க பெரும்பாலும் சில பொறியியல் செயல்களில் ஈடுபடுகின்றபோது, சில பொறியியல் வல்லுநர்கள் முதல்தரமான அறிவியல் ஆராய்ச்சி செய்கின்றனர். உயிர்களில் மருத்துவ ஆய்வு, எந்திரவியல், மின்னியல், இரசாயனவியல், மற்றும் விண்வெளிப் பெறியியல் ஆகிய பொறியியல் வல்லுநர்கள் பெரும்பாலும் புதிய முறைகளையும் பொருள்களையும் அறிவியல் மூலம் கண்டுபிடிப்பதின் நுழைவாயிலில் உள்ளனர். பீட்டர் தெபை இரசாயனவியல் ஒரு நோபல் பரிசு பெருவதற்கு முன்னால் மின் பொறியியலில் ஒரு பட்டமும் இயற்பியலில் ஒரு முனைவர்பட்டமும் பெற்றார். அவ்வாறே, பால் டிராக், எந்திர அளவியல் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர், கணிதத் துறைக்குச் சென்று பின்பு ஒரு கருத்தியல் இயற்பியல் துறைக்கு வருவதற்கு முன்னால் அவரது கல்விப்பணியை ஒரு மின்பொறியியல் வல்லுநராக தொடங்கினார். க்ளௌட் ஷன்னான், ஒரு கருத்தியல் பொறியியல் வல்லுநர், தற்கால தகவல் கருத்தியலை கண்டுபிடித்தார்.

வரலாற்று வளர்ச்சி

அறிவியல் அறிஞர்களின் சமூகப் பணியும், தற்கால அறிவியல் துறைகள் தோன்றுவதற்கு முன்பாக இருந்த அவர்களுடைய முன்னோர்களது பணியும், அதிகமாகவே தோன்றி உள்ளது. பல்வேறு காலகட்டத்தின் அறிவியல் அறிஞர்கள் (மற்றும் அவர்களுக்கு முன்பு இருந்தவர்கள், இயற்கை தத்துவமேதைகள், கணிதவல்லுநர்கள், இயற்கை வரலாற்றாசிரியர்கள், இயற்கை சமையமேதைகள், பொறியியல் வல்லுநர்கள், மற்றும் அறிவியல் வளர்ச்சியில் பங்குகொண்ட மற்றவர்) சமூகத்தில் பரவலாக பல நிலைகளில் உள்ளனர், மேலும் அறிவியல் அறிஞர்களோடு தொடர்புடைய சமூக விதிகள், நன்னடத்தை நெறி, மற்றும் இயற்கை மற்றும் அறிவுசார் பண்புகள்—மேலும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டவை—திடீரென மாறிவிட்டன. அவ்வாறே, தற்கால அறிவியல் கருத்துகளின் தேவைகளின் அடிப்படையில் பல வெவ்வேறு வரலாற்றாளர்களை முற்கால அறிவியல் அறிஞர்களாக அடையாளங்காணலாம். சில வரலாற்றாசிரியர்கள் பதினேழாம் நூற்றாண்டை தற்காலத்தில் உள்ளதுபோல் அறிவியல் வளர்ச்சியடைந்த காலம் என குறிப்பிடுகின்றனர் (பிரபலமாக அறிவியல் புரட்சி என்று கூறப்படுவது), எனவே அறிவியல் அறிஞர்கள் என கருதப்படுபவரைக் கண்டது எப்போது எனக் காணவேண்டியுள்ளது. அறிவியல் ஆராய்ச்சியைத் தொழிலாகக் கொண்டவரை மட்டும் "அறிவியல் அறிஞர்" வகையில் எடுத்துக்கொண்டால், அறிவியல் துறையின் ஒரு பகுதியாக அறிவியல் அறிஞரின் சமூகப் பணி 19 ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது.

பண்டைக்கால மற்றும் இடைக்கால அறிவியல்

மரபார்ந்த பண்டைத் தன்மையின் இயற்கைபற்றிய அறிவுசார்ந்த சோதனை பல்வேறு அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டது. அறிவியலுக்கு கிரேக்கர்களின் பங்களிப்பு—வடிவியல் மற்றும் கணித வானவியல், உயிரியல் முறைகள் மற்றும் தாவரங்கள், விலங்குகளின் அட்டவணைப்பற்றிய ஆரம்பகால குறிப்புகள், மற்றும் அறிவு, கற்றல் கருத்தியல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவை—தத்துவமேதைகள் மற்றும் மருத்துவர்கள் ஆகியொராலும் பல தொழில் செய்தவராலும் வழங்கப்பட்டது. இவைகளும், ரோமானியப் பேரரசு பரவியதாலும், கிருத்துவமதம் பரவியதாலும் ஏற்பட்ட அறிவியல் அறிவோடு அவர்களுக்குள்ள தொடர்பும் ஐரோப்பாவின் பெரும்பாலானப் பகுதியின் மத பயிலகங்களோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியது. ஜோதிடம் மற்றும் வானவியல் அறிவின் ஒரு முக்கியப் பகுதியாகியது, மேலும் வானவியல் நிபுணர்/ஜோதிடர் பணி அரசியல் மற்றும் மத புரவலரின் ஆதரவால் வளர்ச்சியுற்றது. இடைக்கால பல்கலைக்கழக முறை ஏற்பட்டபோது, இயற்கை தத்துவம் அடங்கிய மூன்று தொகுதி —தத்துவம் மற்றும் வானவியலை உள்ளடக்கிய நான்கு தொகுதி —கணிதம் என அறிவு பிரிக்கப்பட்டது. எனவே, இடைக்கால அறிவியல் அறிஞர்களின் ஒப்புமை உடையவர்கள் தத்துவமேதைகளாகவோ அல்லது கணித வல்லுநர்களாகவோ இருந்தனர். தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றிய அறிவு மருத்துவர்களின் பணியில் அதிக இடத்தைப் பிடித்தது.

இடைக்கால இஸ்லாமிய அறிவியல் தத்துவமேதை மற்றும் கணித வல்லுநர் போன்ற தற்போதுள்ள சமூக அமைப்பு எல்லைகளுக்கு உள்ளாகவே இயற்கை அறிவை வளர்ப்பதில் சில புதிய வழிமுறைகளை உருவாக்கியது, பரிசோதனைமுறையை வலியுறுத்திய ஒரு ஆரம்பகால அறிவியல் முறை பலதுறை அறிவுகூர்மையுள்ள பெர்ஷியன் தத்துவமேதை மற்றும் வானவியலறிஞர்-கணிதவல்லுநர் இப்ன் அல்-ஹைதம் (அல்ஹஜென்) என்பவரால், கி.பி.1021ஆம் ஆண்டில் , அவருடைய புக் ஆஃப் ஆப்டிக்ஸ் நூலின்மூலம் வளர்ச்சியடைந்தது ,இதன் காரணமாக அவர் "முதல் அறிவியல் அறிஞர்" என விவரிக்கப்பட்டுள்ளார்.[10] இஸ்லாமிய பொற்காலம் மற்றும் இடைக்காலம் மற்றும் ஐரோப்பிய மறுமலர்ச்சிகால பல முன்னோடி-அறிவியலறிஞர்கள், தற்கால அறிவியல் பகுதிகள் சார்ந்த ஏதேனும் ஒரு குறைபாட்டால் ஓரளவு பலதுறை அறிஞர்களாகக் கருதப்படுகின்றனர். இந்த ஆரம்பகால பலதுறை அறிஞர்களில் பலர் மத போதகர்களாகவும் சமயவாதிகள் ஆகவும்கூட இருந்துள்ளனர்: உதாரணத்திற்கு, அல்ஹஜன் மற்றும் அல்-பிருனி முதகல்லிமிலின்ஆக இருந்தனர்; மருத்துவர் இப்ன் அல்-நஃபிஸ் ஒரு ஹஃபிஜ், முஹட்டித் மற்றும் உலிமாஆக இருந்தார்; தாவரவியலறிஞர் ஓட்டோ ப்ரூன்ஃபெல்ஸ் ஒரு சமையவாதியாகவும் ப்ரொடெஸ்ட்டேண்டிஸத்தின் வரலாற்றாசிரியராகவும் இருந்தார்; வானவியல் அறிஞரும் மருத்துவருமான நிக்கோலஸ் கோபர்நிகஸ் ஒரு மதபோதகராக இருந்தார்.

வரலாற்று அறிவியலறிஞர்கள்

லூயிஸ் பாஸ்டியுரின் பிற்கால வாழ்க்கை
இயற்பியல் அறிவியலறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 20ஆம் நூற்றாண்டில் மிகப்பிரசித்திபெற்றவர்களில் ஒருவராவார்.
ல்யூட்விக் ஹிர்ஸ்ஜ்ஃபெல்ட், ஏபிஓ மரபுவழி இரத்தவகையைக் கண்டுபிடித்த இணை-கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர்.
கருத்தியல் இயற்பியல் அறிவியலறிஞர் ஸ்டீஃபன் ஹாகிங் அண்டவியல் மற்றும் மொத்த ஈர்ப்பு பகுதிகளில் கண்டுபிடித்தமைக்காக பிரபலமானவர்.

டெஸ்கார்டெஸ் பகுமுறை வடிவியலின் முன்னோடியாகமட்டுமின்றி எந்திரவியல் கருத்தியல் ஒன்றையும் விலங்கின் இடப்பெயற்சி மற்றும் உய்த்துணர்தல் தோற்றம் பற்றிய மிக முன்னேறிய கருத்துகளையும் உருவாக்கினார். கண்பார்வை, காதுகேட்டல் மற்றும்இசை ஆகியவற்றையும்கூட ஆய்ந்தறிந்த மருத்துவர்கள் யங் மற்றும் ஹெல்ம்ஹோல்ட்ஜ்க்கு பார்வைபகுதியில் ஆர்வம் ஏற்பட்டது, நியூடன் (அதேகாலத்தில் இருந்த லெய்ப்னிஜ் உடன் இணைந்து) நுண்கணிதம் கண்டுபிடிப்பால் டெஸ்கார்ட்ஸின் கணிதத்தினை விரிவுபடுத்தினார். அவர் மரபார்ந்த எந்திரவியலுக்கு ஒரு தெளிவான உருவம் கொடுத்து ஒளி மற்றும் கண்பார்வைப்பற்றி ஆரய்ந்தார். ஃபோரியர் கணிதத்தில் ஒரு புதிய பிரிவினைக் கண்டுபிடித்தார் — அளவிலி, சுழல்வகை தொடர்கள் — வெப்பம் திரவஓட்டம் மற்றும் இன்ஃப்ராரெட் கதிர்வீச்சு ஆகியவற்றை ஆராய்ந்து, பைங்குடில் விளைவு என்ற ஒன்றைக் கண்டுபிடித்தார். வொன் நியூமேன், டர்னிங், கின்சின், மார்கோவ் மற்றும் வீனர், அனைவரும் கணிதமேதைகள், கணினிகள் சர்ந்த கருத்துகள், புள்ளிவிவர எந்திரவியல் மற்றும் அளவு எந்திரவியல் சார்ந்த சில கண்டுபிடிப்புகளையும் உள்ளடக்கிய அறிவியலிலும் நிகழ்தகவு கருத்தியல் எனும் கணிதப்பிரிவிலும் அவர்களது பங்களிப்பு மிக அதிகம். கணித தொடர்புள்ள பல அறிவியலறிஞர்கள், கலிலியோவையும் சேர்த்து, இசையாளர்களாகவும் இருந்தனர்.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், லூயிஸ் பாஸ்டர், ஒரு கரிம இரசாயனவல்லுநர், நுண்ணுயிரிகள் வியாதிக்கு காரணமாகலாம் எனக்கண்டறிந்தார். ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு, ஆலிவர் வெண்டல் ஹோல்ம்ஸ், சகோ., அமெரிக்க மருத்துவர், கவிஞர் மற்றும் கட்டுரையாளர், குழந்தைபிறப்புக்குப்பின் பெண்களிடத்தில் ஏற்படும் இரத்த நச்சுப்பாடு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கைகள் மூலம் பரப்பப்பட்டது என ஸெம்மெல்வெய்ஸ் ஐரோப்பாவில் கண்டுபிடிப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக கண்டுபிடித்தார். மருத்துவம் மற்றும் உயிரியல் ஆகியவற்றில், இரத்த ஓட்டம் பற்றிய கருத்துக்களின் வளர்ச்சி கேலன் இடமிருந்து ஹார்வேக்கு வந்தது எனக் கூறுவது போன்ற பல வலியுறுத்திக் கூறும் கதைகள் உள்ளன. 20ஆம் நுற்றாண்டில் தோன்றிய மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் பலரறிந்த பெயர்களில் அதிக அளவில் உள்ளன. ராமோன் ஒய் கஜல் உடற்கூற்றுநரம்பியல் என்பதில் அவரது மெச்சும்படியான கண்டுபிடிப்புகளுக்காக 1906ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றார்.

சோதனை அறிவியல்களையும் வானவியல், வானிலை ஆய்வியல், கடலியல்மற்றும் நிலநடுக்க இயல் போன்ற சுத்தமான "கூர்ந்துநோக்கும்" அறிவியல்களையும் சிலர் இருபிரிவாகப் பார்க்கின்றனர். ஆனால் வானியலறிஞர்கள் கண்பார்வை சார்ந்து அடிப்படை ஆராய்ச்சிகளைச் செய்துள்ளனர், விசை-இணைப்பு கருவிகளை தயாரித்தனர், மேலும் சமீப பத்தாண்டுகளில் ஹப்ல் டெலஸ்கோப்பை பயன்படுத்தி சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டம் எவ்வாறு தோன்றியது என்பதை அறிவதுடன் மற்ற கிரகங்களை ஆராய விண்வெளி ஆய்வுகருவிகளை அனுப்பியுள்ளனர். கூர்ந்தறிந்த புள்ளிவிவரங்களை உறுதி செய்து இரசாயனவியலில் ஒரு புதிய பகுதியைத் தொடங்க தேவையான சோதனைச்சாலை பரிசொதனைகள் மற்றும் கணினி மாதிரி ஆகிய தேவைகளைக் கொண்ட கனிம மூலக்கூறுகளை டஜன் கணக்கில் இப்பொது நுண்ணலை நிறப்பிரிகை அகநட்சத்திர வெளியில் கண்டுபிடித்துள்ளது. கணினி மாடலிங் மற்றும் எண் முறைகள், அளவு அறிவியல் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் உள்ள மாணவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்களாகும்.

அறிவியலை ஒரு தொழிலாகக் கருதுபவர்கள் பொதுவாக எல்லைகளை நோக்குகின்றனர். இவற்றில் அண்டவியல் மற்றும் உயிரியல், குறிப்பாக நுண்ணுயிர் உயிரியல் மற்றும் மனித மரபுத்தொகுதித் திட்டம் ஆகியவை அடங்கும். மற்ற தீவிர ஆராய்ச்சிப் பகுதியில், அதி-சக்தி இயற்பியல் விவரித்துள்ளபடி தொடக்கநிலை துகள்கள் நிலையில் ஜடப்பொருள் ஆய்வு, மற்றும் மிகநுண்ணிய கணினிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுகூட உள்ளடக்கிய மின்னணுவியலை வளர்க்கும் .நானோ தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும். மூளைச் செயல்பாடு மற்றும் நரம்புவழி செய்திபரவல்கள் சார்ந்து மெச்சத்தக்க கண்டுபிடிப்புகள் இருப்பினும், உள்ளம் மற்றும் மனித எண்ணம் ஆகியவற்றின் தன்மை இப்போதும் தெரியாததாகவே உள்ளன.

இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களோடு, சமீப காலங்களில் அறிவியல் வளர்ச்சியில் முக்கிய பங்குகொண்டுள்ள மிகச்சிறந்த இருபால் அறிவியலறிஞர்கள் உள்ளனர்.

அறிவியல் அறிஞர்களின் வகைகள்

  • விவசாய அறிவியல் அறிஞர்கள்
  • தொல்பொருள் ஆராய்ச்சி அறிவியல் அறிஞர்கள்
  • வானியல் ஆராய்ச்சியாளர்கள்
  • நட்சத்திர இயற்பியல் அறிஞர்கள்
  • உயிரியல் அறிஞர்கள்
    • நட்சத்திர உயிரியல் அறிஞர்கள்
    • உயிரித் தொழில்நுட்ப அறிஞர்
    • உயிரி இயற்பியல் அறிஞர்கள்
    • தாவரவியல் அறிஞர்கள்
    • பூச்சிகளாய்வு அறிஞர்கள்
    • தோற்றுவாய் உயிரியல் அறிஞர்கள்
    • சூழ்நிலையியலறிஞர்கள்
    • மரபியலறிஞர்கள்
    • ஊர்வனப்பற்றிய அறிஞர்கள்
    • மீன்பற்றிய அறிஞர்கள்
    • நோயெதிர்ப்புசக்திசார் அறிஞர்கள்
    • பூச்சியினவரிசைசார் அறிஞர்கள்
    • கடல் உயிரியல் அறிஞர்கள்
    • நுண்ணுயிரியல் அறிஞர்கள்
    • காளானியல் அறிஞர்கள்
    • நரம்பியல் அறிவியல் அறிஞர்கள்
    • பறவையியல் அறிஞர்கள்
    • புதைப்படிமங்களைக்(அ)தொல்லுயிர் எச்சங்களைக் கொண்டு முற்காலத்தினை ஆராய்பவர்கள்
    • மரணத்தின் காரணத்தை ஆராயும் மருத்துவர்கள்
    • மருந்தியல் வல்லுநர்கள்
    • உடற்செயலியல் வல்லுநர்கள்
    • உயிரியல் வல்லுநர்கள்
  • வேதியியல் வல்லுநர்கள்
    • பகுமுறை வேதியியல் வல்லுநர்கள்
    • உயிரிவேதியியல் வல்லுநர்கள்
    • அனங்கக வேதியியல் வல்லுநர்கள்
    • அங்கக வேதியியல் வல்லுநர்கள்
    • இயற்பியல் வேதியியல் வல்லுநர்
  • கணினி அறிவியலறிஞர்கள்
  • புவி அறிவியலறிஞர்கள்
    • நிலநூல் வல்லுநர்கள்
    • க்ளாசியோலாஜிஸ்ட்ஸ்
    • நீரியியல் அறிஞர்கள்
    • வானிலை இயல் வல்லுநர்கள்
    • நடிப்பியல் வல்லுநர்கள்
    • தாதுப்பொருள் வல்லுநர்கள்
    • கடலியல் வல்லுநர்கள்
    • ஆலியன்ப்டொலஜிஸ்ட்ஸ்
    • நிலநடுக்க இயல் வல்லுநர்கள்
    • எரிமலை இயல் வல்லுநர்கள்
  • கல்வி உளவியல் அறிஞர்கள்
  • நூலக அறிவியலறிஞர்கள்
  • மேலாண்மை அறிவியலறிஞர்கள்
  • கணிதமேதைகள்
  • மருத்துவ அறிவியலறிஞர்கள்
  • இராணுவ அறிவியலறிஞர்கள்
  • தத்துவமேதைகள்
  • இயற்பியல் அறிஞர்கள்
  • உளவியலறிஞர்கள்
  • சமூக அறிவியலறிஞர்கள்
    • மக்கள் வளர்ச்சி நூல் அறிஞர்கள்
    • தொடர்பு அறிவியல் வல்லுநர்கள்
    • மக்கள் தொகையியல் புள்ளி விபர வல்லுநர்கள்
    • பொருளாதார நிபுணர்கள்
    • புவியியல் வல்லுநர்கள்
    • அரசியல் பொருளாதார நிபுணர்கள்
    • அரசியல் அறிவியலறிஞர்கள்
    • சமூக அறிவியலறிஞர்கள்
  • தொழில்நுட்ப அறிவியலறிஞர்கள்

மேலும் பார்க்கவும்

குறிப்புதவிகள்

  1. ஐசக் நியூட்டன் (1687, 1713, 1726). "[4]இயற்கை தத்துவம் பயில விதிமுறைகள்", ஃபிலசோஃபியா நேச்சுரலிஸ் ப்ரின்ஸிபியா மேதமெடிகா , மூன்றாம் பதிப்பு. 4 விதிகளைக்கொண்ட தெ ஜென்ரல் ஸ்கோலியம் புத்தகம் 3 , தெ சிஸ்டம் ஆஃப் தெ வோர்ல்ட் ஐ பின்பற்றியுள்ளது. ஐ. பெர்னார்ட் கோஹன் மற்றும் அன்னி வொயிட்மேனின் 1999 மொழிபெயர்ப்பில் பக்கங்கள் 794-796ல் மறு பதிப்பு, யூனிவர்சிடி ஆஃப் கலிஃபோர்னியா ப்ரஸ் ஐஎஸ்பிஎன் 0-520-08817-4, 974 பக்கங்கள்.
  2. ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி, 2ஆம் பதிப்பு. 1989
  3. பத்தொன்பதாம்-நூற்றாண்டு மனப்பாங்குகள்: அறிவியல் மனிதர்கள்http://www.rpi.edu/~rosss2/book.html
  4. ஃப்ரைட்ரிச் யுஎபெர்வெக், தத்துவ வரலாறு: ஃப்ரம் தேல்ஸ் டு தெ ப்ரஸண்ட் டைம். சி. ஸ்க்ரைப்னெர்ஸ் ஸன்ஸ் வால்.1, 1887
  5. ஸ்டீவ் ஃபுல்லர், குன் வெர்சஸ் பொப்பெர்: தெ ஸ்ட்ரக்ல் ஃபார் தெ ஸோல் ஆஃப் சயன்ஸ். கொலம்பியா யூனிவர்சிடி ப்ரஸ் 2004 பக்கம் 43. ஐஎஸ்பிஎன் 0231134282
  6. அறிவியல் முன்னேற்றத்தில் அமெரிக்க சங்கம் வெளியிட்ட அறிவியல் , 1917. வால்..45 1917 ஜன-ஜூன். பக்கம்274.
  7. ஸிட்னி ரோஸ் (1962) "அறிவியலறிஞர்: ஒரு வார்த்தையின் கதை", அன்னல்ஸ் ஆஃப் சயன்ஸ் , வால்யூம் 18, வெளியீடு2, பிபி. 65 — 85.
  8. "William Whewell (1794-1866) gentleman of science". பார்க்கப்பட்ட நாள் 2007-05-19.
  9. டமரா ப்ரெஔட், டெரெக் இ.ஆஸ்டெர்கார்ட், தெ ஸேவ்ரெஸ் போர்ஸெலைன் மேன்யுஃபேக்டரி. யேல் யூனிவர்சிடி ப்ரஸ் 1997. 416 பக்கங்கள் ஐஎஸ்பிஎன் 0300073380 பக்கம் 36
  10. ப்ராட்லி ஸ்டெஃபன்ஸ் (2006) ஐப்ன் அல்-ஹேதம்: முதல் அறிவியலறிஞர் ,மார்கன் ரெனால்ட்ஸ் பப்ளிஷிங், ஐஎஸ்பிஎன் 1599350246.

வெளிக் கட்டுரைகள்

மேலும் படிக்க
வலைத்தளங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியலாளர்&oldid=2568714" இலிருந்து மீள்விக்கப்பட்டது