திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 76: வரிசை 76:
[[சென்னை சிவப்பதிகள் 333 (நூல்)|சென்னை சிவப்பதிகள் 333]] - சிவ த வெங்கடேசன்
[[சென்னை சிவப்பதிகள் 333 (நூல்)|சென்னை சிவப்பதிகள் 333]] - சிவ த வெங்கடேசன்
* [http://temple.dinamalar.com/New.php?id=988]]
* [http://temple.dinamalar.com/New.php?id=988]]

==வெளி இணைப்புகள்==

*[https://www.youtube.com/watch?v=6JSDr-VFpLc ஆவணித் திருநாளில் தேவரடியாருக்கு கிடைத்த சிறப்பு
@ திருவொற்றியூர் ]



==இவற்றையும் பார்க்க==
==இவற்றையும் பார்க்க==

16:45, 22 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் திருக்கோயில்
திருவொற்றியூர் படம்பக்க நாதர் திருக்கோயில்
பெயர்
பெயர்:திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் திருக்கோயில்
திருவொற்றியூர் படம்பக்க நாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவொற்றியூர்
மாவட்டம்:திருவள்ளூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:படம்பக்கநாதர் (ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்)
தாயார்:வடிவுடையாம்பிகை (திரிபுரசுந்தரி அம்மன்),வட்டப்பாறையம்மன்
தல விருட்சம்:மகிழம், அத்தி
தீர்த்தம்:பிரம்ம, நந்தி தீர்த்தம்
ஆகமம்:காரணம், காமீகம்
சிறப்பு திருவிழாக்கள்:கார்த்திகை பௌர்ணமி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்

ஆதிபுரீசுவரர் கோயில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவொற்றியூரில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஆதிபுரீசுவர், தாயார் திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக அத்தி மரமும், மகிழ மரமும் உள்ளது. தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும், ஆதிசேட தீர்த்தமும் அமைந்துள்ளன.

இத்தல இறைவனார் சுயம்பு புற்று லிங்கம். ஓர் ஆண்டில் கார்த்திகை பௌர்ணமி அன்று மாலை மட்டுமே வெள்ளி கவசம் திறக்கப்பட்டு அதற்கடுத்த இரு நாட்கள் மட்டுமே இவரை முழுமையாக தரிசனம் செய்ய இயலும்.அப்போது மட்டுமே இறைவனாருக்கு புணுகு சாம்பிராணி தைல அபிஷேகம் நடைபெறும்.நடப்பு ஆண்டு 2014ல் 05.12.2014 வெள்ளிக்கிழமை மாலை கவசம் திறக்கப்பட்டு 07.12.2014 ஞாயிறு இரவு கவசம் மூடப்படும்.[1]

தலவரலாறு

பிரளயம் வேண்டாத பிரம்ம தேவர் சிவபெருமானின் தன்னுடைய கோரிக்கையை வைக்க யாகம் செய்தார். அந்த யாகத்தின் வெற்றியால் யாகத்திலிருந்து சிவபெருமான் தோன்றி பிரளயத்தினை நிகழ்த்தாமல் தடுத்தார்.

இதனால் இத்தலம் பிரளயத்தினை ஒற்றச் செய்தல் (விலகச் செய்தல்) எனும் பொருளில் திருவொற்றியூர் என்று அழைக்கப்படுகிறது.

திருவொற்றியூர் கலிய நாயனாரின் திருஅவதாரத் தலம். சுந்தரர் சங்கிலியாரைத் திருமணம் செய்த தலம்[2]

கம்பர் பகலில் வால்மீகி இராமாயணத்தைக் கேட்டு, இரவில் எழுதினார் என்பது வரலாறு. அவ்வாறு இரவில் எழுதும்போது இங்குள்ள வட்டப்பாறையம்மனைப் பார்த்து,

ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே!
நந்தாது எழுதுதற்கு நல்லிரவில்
பிந்தாமல் பந்தம் பிடி!

என்று வேண்ட, அவ்வாறே காளியன்னையும் பந்தம் பிடித்து, கம்பர் ராமாயணம் எழுத உதவினார். [2]

கருவி நூல்

சென்னை சிவப்பதிகள் 333 - சிவ த வெங்கடேசன்

வெளி இணைப்புகள்

@ திருவொற்றியூர் ]


இவற்றையும் பார்க்க

  1. http://www.vadivudaiamman.tnhrce.in/invitation/Thyagaraja.pdf
  2. 2.0 2.1 தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 9