"நல்லூர் கந்தசுவாமி கோவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
632 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
முன்னரே சிறியதாக இருந்த [[கோயில்|கோயிலைத்]] தனது ஆட்சிக்காலத்தில் புவனேகவாகு பெருப்பித்துக் கட்டியிருக்கக் கூடும் என்பதே பொருத்தம் என்பது வேறுசிலர் கருத்து.
 
உண்மையில் நல்லூர் இப்போது உள்ள அமைப்பானது முன்றாவது கோயில் கட்டுமானம் ஆகும். இந்த 3 வது கோயிலின் அமைப்பில் அது வரை இருந்த பழைய ஆலயத்தின் எந்த கட்டுமானங்களும் சமந்தப்படாத புதிய கட்டுமானம் தான் இப்போதுள்ள நல்லூர்கந்தன் ஆலயம் அகும்.   
 
[[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரிலிருந்த மிகப்பெரிய கோவில் இதுவேயென்பது [[போத்துக்கீசர்|போத்துக்கீசருடைய]] குறிப்புக்களிலிருந்து தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான [[பிலிப்பே டி ஒலிவேரா]], [[1620]]ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான். இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய [[யாழ்ப்பாணக் கோட்டை|கோட்டை]] கட்டுவதில் பயன்பட்டதாகத் தெரிகின்றது. இது இருந்த இடத்தில் [[போத்துக்கீசர்]] சிறிய [[கத்தோலிக்க சமயம்|கத்தோலிக்க]] தேவாலயமொன்றை அமைத்ததாகத் தெரிகிறது. பின்னர் [[ஒல்லாந்தர்]] இதனைத் தாங்கள் சார்ந்த [[புரட்டஸ்தாந்த சமயம்|புரட்டஸ்தாந்த]] கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினார்கள். இன்றும் இவ்விடத்தில் பிற்காலத்தில் பெரிதாகத் திருத்தியமைக்கப்பட்ட [[கிறிஸ்தவ சமயம்|கிறிஸ்தவ]] தேவாலயமே காணப்படுகின்றது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2555706" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி