முடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19: வரிசை 19:
==விவரிப்பு==
==விவரிப்பு==
ஒவ்வொரு மயிரிழையும் அகணி, புறணி, புறத்தோல் பகுதிகளைக் கொண்டதாகும்<ref name="Hair Structure and Hair Life Cycle">[http://www.follicle.com/hair-structure-life-cycle.html Hair Structure and Hair Life Cycle]</ref>. உள்ளார்ந்தப் பகுதியான ஒழுங்கற்ற, திறந்த பகுதிகளை உள்ளடக்கிய அகணி எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை<ref name="How Does Hair Grow?">[http://www.hairlosshelp.com/hair_loss_research/hair.cfm "How Does Hair Grow?"] Web. 09 Feb. 2010</ref><ref name="Topic 2: The Layers of the Hair">[http://www.texascollaborative.org/hildasustaita/module%20files/topic2.htm Topic 2: The Layers of the Hair]</ref>. உயர் வடிவமும், ஒருங்கமைவுமுள்ள புறணி (அல்லது முடியின் மைய அடுக்கானது) வலுவிற்கும், நீர் உறிஞ்சுவதற்கும் மூலமாக உள்ளது. புறணியில் மெலனின் என்னும் நிறமிப் பொருள் உள்ளது. இதன் எண்ணிக்கை, பரவல், மெலனின் குருணைகளின் வகைகளின் அடிப்படையில் முடி இழைகளின் வண்ணம் வேறுபடுகிறது. மயிர்க்குமிழ்களின் வடிவம் புறணியின் வடிவத்தை வரையறுக்கிறது. நீளமான அல்லது சுருண்ட முடியைப் பொருத்து மயிரிழைகளின் வடிவம் மாறுபடுகிறது. நீளமான முடியை உடையவர்களின் மயிரிழைகள் வட்டவடிவமாக உள்ளது. நீள் வட்டம் அல்லது பிற வடிவங்களில் மயிரிழைகளைக் கொண்டவர்களின் முடிக்கற்றைகள் அலைஅலையாகவோ, சுருண்டதாகவோக் காணப்படுகிறது. புறத்தோல் வெளிப்புறத்தை மூடிக்கொண்டுள்ளது.
ஒவ்வொரு மயிரிழையும் அகணி, புறணி, புறத்தோல் பகுதிகளைக் கொண்டதாகும்<ref name="Hair Structure and Hair Life Cycle">[http://www.follicle.com/hair-structure-life-cycle.html Hair Structure and Hair Life Cycle]</ref>. உள்ளார்ந்தப் பகுதியான ஒழுங்கற்ற, திறந்த பகுதிகளை உள்ளடக்கிய அகணி எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை<ref name="How Does Hair Grow?">[http://www.hairlosshelp.com/hair_loss_research/hair.cfm "How Does Hair Grow?"] Web. 09 Feb. 2010</ref><ref name="Topic 2: The Layers of the Hair">[http://www.texascollaborative.org/hildasustaita/module%20files/topic2.htm Topic 2: The Layers of the Hair]</ref>. உயர் வடிவமும், ஒருங்கமைவுமுள்ள புறணி (அல்லது முடியின் மைய அடுக்கானது) வலுவிற்கும், நீர் உறிஞ்சுவதற்கும் மூலமாக உள்ளது. புறணியில் மெலனின் என்னும் நிறமிப் பொருள் உள்ளது. இதன் எண்ணிக்கை, பரவல், மெலனின் குருணைகளின் வகைகளின் அடிப்படையில் முடி இழைகளின் வண்ணம் வேறுபடுகிறது. மயிர்க்குமிழ்களின் வடிவம் புறணியின் வடிவத்தை வரையறுக்கிறது. நீளமான அல்லது சுருண்ட முடியைப் பொருத்து மயிரிழைகளின் வடிவம் மாறுபடுகிறது. நீளமான முடியை உடையவர்களின் மயிரிழைகள் வட்டவடிவமாக உள்ளது. நீள் வட்டம் அல்லது பிற வடிவங்களில் மயிரிழைகளைக் கொண்டவர்களின் முடிக்கற்றைகள் அலைஅலையாகவோ, சுருண்டதாகவோக் காணப்படுகிறது. புறத்தோல் வெளிப்புறத்தை மூடிக்கொண்டுள்ளது.
புறத்தோலின் சிக்கலான வடிவமைப்பு கொழுமிய ஒற்றை மூலக்கூறுகளாலானதால் முடி வீங்கும்போது நழுவும் தன்மையை ஏற்படுத்துகிறது. மேலும், இதனால் முடிக்கு நீரை விலக்கும் தன்மை உருவாகிறது<ref name="Hair Structure and Hair Life Cycle"/>. மனித முடியின் குறுக்களவு 0.017-0.18 மில்லிமீட்டர் (0.00067 - 0.00709 அங்குலம்) அளவில் வேறுபட்டு காணப்படுகிறது<ref>{{cite web |last=Ley |first=Brian |title=Diameter of a Human Hair |year=1999 |url=http://hypertextbook.com/facts/1999/BrianLey.shtml |accessdate=28 June 2010 |archiveurl=https://www.webcitation.org/5qpTnR6HP?url=http://hypertextbook.com/facts/1999/BrianLey.shtml |archivedate=28 June 2010 |deadurl=yes |df=dmy-all }}</ref>.
புறத்தோலின் சிக்கலான வடிவமைப்பு கொழுமிய ஒற்றை மூலக்கூறுகளாலானதால் முடி வீங்கும்போது நழுவும் தன்மையை ஏற்படுத்துகிறது. மேலும், இதனால் முடிக்கு நீரை விலக்கும் தன்மை உருவாகிறது<ref name="Hair Structure and Hair Life Cycle"/>. மனித முடியின் குறுக்களவு 0.017-0.18 மில்லிமீட்டர் (0.00067 - 0.00709 அங்குலம்) அளவில் வேறுபட்டு காணப்படுகிறது<ref>{{cite web |last=Ley |first=Brian |title=Diameter of a Human Hair |year=1999 |url=http://hypertextbook.com/facts/1999/BrianLey.shtml |accessdate=28 June 2010 |archiveurl=https://www.webcitation.org/5qpTnR6HP?url=http://hypertextbook.com/facts/1999/BrianLey.shtml |archivedate=28 June 2010 |deadurl=yes |df=dmy-all }}</ref>. இரண்டு மில்லியன் நுண்குழலியச் சுரப்பிகளும், வியர்வைச் சுரப்பிகளும் நீர்மத் திரவங்களை சுரப்பதனால் ஆவியாதல் முறையில் உடல் குளிர்சியாகிறது. மயிரிழைத் தொடங்கும் பகுதியில் உள்ள சுரப்பிகள் சுரக்கும் கொழுப்புப் பொருள்கள் முடிக்கு உயவூட்டுகின்றன<ref>{{cite book |title=Disease and Its Causes |year=1913 |publisher=New York Henry Holt and Company London Williams and Norgate The University Press, Cambridge, USA |location=United States |author=Councilman, W. T. |chapter=Ch. 1}}</ref>.


மயிர்க்கால்களிலிருந்து முடி வளரத் தொடங்குகிறது. முடியின் ஒரே உயிர்ப்பானப் பகுதி நுண்குமிழ்களில் காணப்படுகிறது. கண்ணுக்குத் தெரியும் முடி மயிர்த்தண்டாகும். மயிர்த்தண்டுகள் எவ்விதமான உயிர்வேதியியத் தொழிற்பாடுகளும் இல்லாத இறந்த ஒன்றாகக் கருதப்படுகின்றன.முடியின் அடிப்பகுதியிலுள்ள மயிர்க்கால்களில் (நுண்குமிழ்கள்) மயிர்த்தண்டுகளை உருவாக்கும் செல்கள் உள்ளன<ref>{{cite book |editor1=Freinkel, R.K. |editor2=Woodley, D.T. |title=The Biology of the Skin |date=15 March 2001 |publisher=[[CRC Press]] |isbn=9781850700067 |page=80}}</ref>. மயிர்க்கால்களில், முடிக்கு உயவூட்டும் எண்ணையைத் தயாரித்து வெளியிடும் எண்ணைச் சுரப்பிகள் (sebaceous glands), முடியைச் செங்குத்தாக நிற்கச் செய்யும் சிலிர்த்தசைகள் (arrector pili) ஆகியனவும் உள்ளன. மனிதர்களில் சிலிர்த்தசைகளினால் உடலிலுள்ள முடிகள் மயிர்சிலிர்ப்பு
(goose bumps) அடைகின்றன.


==வெளியிணைப்புகள்==
==வெளியிணைப்புகள்==

06:10, 27 மே 2018 இல் நிலவும் திருத்தம்

முடியின் குறுக்குவெட்டுத் தோற்றம்

முடி, மயிர் அல்லது சிகை (Hair) என்பது அடித்தோலில் (dermis) காணப்படும் மயிர்க்கால்களிலிருந்து வளரும் இழை வடிவமுடைய புரத இழைகளாலான உயிரியப் பொருளாகும். முடி வளர்வது பாலூட்டிகளின் ஒரு குறிப்பிடத்தக்கப் பண்பாக உள்ளது. மயிரற்ற தோல் (glabrous skin) பகுதிகளைத் தவிர்த்து, மனிதர்களின் தோல்பகுதி முழுவதும் தடித்த இறுதியான மற்றும் நயமான இளமயிர்களை உருவாக்கும் மயிர்க்கால்கள் பரவியுள்ளன. முடி வளர்த்தல், அதன் வகைகள், பராமரிப்புக் குறித்த பரவலான ஆர்வம் இருந்தாலும் மயிரானது, முதன்மையாக கெரட்டின் (நகமியம்) என்ற புரதத்தாலான முக்கியமான உயிரியப் பொருளாகும். பொதுவாக, பல மனித சமூகங்களில் பெண்கள் தலைமுடியை நீளமாகவும், ஆண்கள் குட்டையாகவும் வளர்க்கின்றார்கள்.

பல்வேறுவகையான முடிகளைக் (முடி நீக்குதல், முடி ஒப்பனைகள்) குறித்த மனப்பாங்கு பல்வேறு காலகட்டங்களில், கலாச்சாரங்களில் பரவலாக வேறுபட்டுக் காணப்பட்டாலும் முடியானது தனிமனிதனின் நம்பிக்கைகள் அல்லது சமூக (வயது, பாலினம், மத நம்பிக்கை) நிலையைச் சுட்டுவதாக அமைந்துள்ளது[1].

மீள்பார்வை

இருநூறு மடங்கு உருப்பெருக்கத்தில் மனித மயிரிழை

முடி என்பது இரண்டு தனிப்பட்ட வடிவங்களைக் குறிப்பிடுகின்றது:

  • முதலாவதாக, தோலுக்கடியிலுள்ள மயிர்க்கால்களையும், தோலிலிருந்து நீக்கப்பட்ட மயிர்க்குமிழ்களையும் குறிக்கின்றது. இவ்வுறுப்பு அடித்தோலில் அமைந்துள்ளது. இது, முடி விழுந்தவுடனோ அல்லது நீக்கப்பட்டவுடனோ மீண்டும் வளரும் குருத்தணுக்களைப் (stem cells) பராமரிக்கிறது. இவை காயமேற்பட்டப்பின் தோல் மீண்டும் வளரவும் உபயோகப்படுகிறது[2].
  • இரண்டாவதாக, தோலின் மேற்புறமுள்ள கடினமான இழைவடிவ மயிர்த்தண்டுகளைக் குறிக்கின்றது. மயிர்த்தண்டின் குறுக்குவெட்டுப் பகுதிகளைத் தோராயமாக மூன்றாகப் பிரிக்கலாம்.

மயிரிழைகளின் வடிவம் பல அடுக்குகளாலானது:

  • கூரை ஓடுகளைப் போல ஒன்றின்மேலோன்றாக தட்டையாகவும், ஒல்லியாகவும் உள்ள செல்களின் பல அடுக்குகளைக் கொண்டப் புறத்தோல் (cuticle)
  • பிரம்பு போன்ற (தோராயமாக) கெரட்டின் கற்றைகளை, செல் வடிவங்களிலுடைய புறணி (cortex)
  • மயிரிழையின் நடுவிலுள்ள ஒழுங்கற்ற, திறந்த பகுதிகளை உள்ளடக்கிய அகணி (medulla)[3]

விவரிப்பு

ஒவ்வொரு மயிரிழையும் அகணி, புறணி, புறத்தோல் பகுதிகளைக் கொண்டதாகும்[4]. உள்ளார்ந்தப் பகுதியான ஒழுங்கற்ற, திறந்த பகுதிகளை உள்ளடக்கிய அகணி எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை[5][6]. உயர் வடிவமும், ஒருங்கமைவுமுள்ள புறணி (அல்லது முடியின் மைய அடுக்கானது) வலுவிற்கும், நீர் உறிஞ்சுவதற்கும் மூலமாக உள்ளது. புறணியில் மெலனின் என்னும் நிறமிப் பொருள் உள்ளது. இதன் எண்ணிக்கை, பரவல், மெலனின் குருணைகளின் வகைகளின் அடிப்படையில் முடி இழைகளின் வண்ணம் வேறுபடுகிறது. மயிர்க்குமிழ்களின் வடிவம் புறணியின் வடிவத்தை வரையறுக்கிறது. நீளமான அல்லது சுருண்ட முடியைப் பொருத்து மயிரிழைகளின் வடிவம் மாறுபடுகிறது. நீளமான முடியை உடையவர்களின் மயிரிழைகள் வட்டவடிவமாக உள்ளது. நீள் வட்டம் அல்லது பிற வடிவங்களில் மயிரிழைகளைக் கொண்டவர்களின் முடிக்கற்றைகள் அலைஅலையாகவோ, சுருண்டதாகவோக் காணப்படுகிறது. புறத்தோல் வெளிப்புறத்தை மூடிக்கொண்டுள்ளது. புறத்தோலின் சிக்கலான வடிவமைப்பு கொழுமிய ஒற்றை மூலக்கூறுகளாலானதால் முடி வீங்கும்போது நழுவும் தன்மையை ஏற்படுத்துகிறது. மேலும், இதனால் முடிக்கு நீரை விலக்கும் தன்மை உருவாகிறது[4]. மனித முடியின் குறுக்களவு 0.017-0.18 மில்லிமீட்டர் (0.00067 - 0.00709 அங்குலம்) அளவில் வேறுபட்டு காணப்படுகிறது[7]. இரண்டு மில்லியன் நுண்குழலியச் சுரப்பிகளும், வியர்வைச் சுரப்பிகளும் நீர்மத் திரவங்களை சுரப்பதனால் ஆவியாதல் முறையில் உடல் குளிர்சியாகிறது. மயிரிழைத் தொடங்கும் பகுதியில் உள்ள சுரப்பிகள் சுரக்கும் கொழுப்புப் பொருள்கள் முடிக்கு உயவூட்டுகின்றன[8].

மயிர்க்கால்களிலிருந்து முடி வளரத் தொடங்குகிறது. முடியின் ஒரே உயிர்ப்பானப் பகுதி நுண்குமிழ்களில் காணப்படுகிறது. கண்ணுக்குத் தெரியும் முடி மயிர்த்தண்டாகும். மயிர்த்தண்டுகள் எவ்விதமான உயிர்வேதியியத் தொழிற்பாடுகளும் இல்லாத இறந்த ஒன்றாகக் கருதப்படுகின்றன.முடியின் அடிப்பகுதியிலுள்ள மயிர்க்கால்களில் (நுண்குமிழ்கள்) மயிர்த்தண்டுகளை உருவாக்கும் செல்கள் உள்ளன[9]. மயிர்க்கால்களில், முடிக்கு உயவூட்டும் எண்ணையைத் தயாரித்து வெளியிடும் எண்ணைச் சுரப்பிகள் (sebaceous glands), முடியைச் செங்குத்தாக நிற்கச் செய்யும் சிலிர்த்தசைகள் (arrector pili) ஆகியனவும் உள்ளன. மனிதர்களில் சிலிர்த்தசைகளினால் உடலிலுள்ள முடிகள் மயிர்சிலிர்ப்பு (goose bumps) அடைகின்றன.

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Sherrow, Victoria (2006). Encyclopedia of Hair: A Cultural History. 88 Post Road West, Westport, CT: Greenwood Press. பக். iv. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-313-33145-6. 
  2. Krause, K; Foitzik, K (2006). "Biology of the Hair Follicle: The Basics". Seminars in Cutaneous Medicine and Surgery 25: 2. doi:10.1016/j.sder.2006.01.002. 
  3. Feughelman, Max Mechanical properties and structure of alpha-keratin fibres: wool, human hair and related fibres, Sydney, UNSW Press (1996) ISBN 0-86840-359-8
  4. 4.0 4.1 Hair Structure and Hair Life Cycle
  5. "How Does Hair Grow?" Web. 09 Feb. 2010
  6. Topic 2: The Layers of the Hair
  7. Ley, Brian (1999). "Diameter of a Human Hair". Archived from the original on 28 சூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2010. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  8. Councilman, W. T. (1913). "Ch. 1". Disease and Its Causes. United States: New York Henry Holt and Company London Williams and Norgate The University Press, Cambridge, USA. 
  9. The Biology of the Skin. CRC Press. 15 March 2001. பக். 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781850700067. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முடி&oldid=2531439" இலிருந்து மீள்விக்கப்பட்டது