ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{translate}}
{{about|நீரோடும் ஆற்றைப்|எண்ணைப் பற்றிய கட்டுரைக்கு|6 (எண்)}}
{{about|நீரோடும் ஆற்றைப்|எண்ணைப் பற்றிய கட்டுரைக்கு|6 (எண்)}}
[[படிமம்:AR Arkansas River.jpg|thumb|300px|ஆர்க்கான்சாஸ் ஆறு]]
[[படிமம்:AR Arkansas River.jpg|thumb|300px|ஆர்க்கான்சாஸ் ஆறு]]
'''ஆறு''' (வடமொழியில் நதி) என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக [[மலை]]ப் பகுதிகளில் தொடங்குகின்றன. ஆற்றின் இருபுறமும் உள்ள நிலப்பகுதி கரை என அழைக்கப்படுகிறது. ஆறுகள் பொதுவாக மற்றொரு ஆற்றிலோ, [[ஏரி]]களிலோ அல்லது [[கடல்|கடலிலோ]] இணைகின்றன. ஆற்றில் நீரோட்டமானது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது. சில வேளைகளில் ஆறுகள் இன்னொரு நீர் நிலையை அடையும்
'''ஆறு''' (வடமொழியில் '''நதி''') என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக [[மலை]]ப் பகுதிகளில் தொடங்குகின்றன. ஆற்றின் இருபுறமும் உள்ள நிலப்பகுதி கரை என அழைக்கப்படுகிறது. ஆறுகள் பொதுவாக மற்றொரு ஆற்றிலோ, [[ஏரி]]களிலோ அல்லது [[கடல்|கடலிலோ]] இணைகின்றன. ஆற்றில் நீரோட்டமானது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது. சில வேளைகளில் ஆறுகள் இன்னொரு நீர் நிலையை அடையும் முன்பே நிலத்துக்குள் உறிஞ்சப்படுவதோ அல்லது வரண்டு விடுவதோ உண்டு. பெரிய நீரோட்டங்கள் ஆறுகள் என்றும், சிறியவை சிற்றாறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனினும் எதனை ஆறு என்று அழைக்கலாம் என்பதற்கான பொது விதி எதுவும் கிடையாது.
முன்பே நிலத்துக்குள் உறிஞ்சப்படுவதோ அல்லது வரண்டு விடுவதோ உண்டு. பெரிய நீரோட்டங்கள் ஆறுகள் என்றும், சிறியவை சிற்றாறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனினும் எதனை ஆறு என்று அழைக்கலாம் என்பதற்கான பொது விதி எதுவும் கிடையாது.

ஆறு [[நீர் வட்டம்|நீர் வட்டத்தின்]] ஒரு கூறு ஆகும். ஆற்றில் இருக்கும் நீர் பொதுவாக [[மழை]] போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. புவி மேற்பரப்பில் வழிந்து ஓடுவதன் மூலமும், நிலத்தடி நீரை மீள்விப்பதன் மூலமும், இயற்கையான நீர் நிலைகள் நிரம்புவதன் மூலமும் மழை நீர் ஆற்றை அடைகின்றது.

வரிசை 71: வரிசை 69:
* [[எல்பே]] – [[ஹம்பர்க்]] நகரின் ஊடாக ஓடும், [[ஜெர்மனி]]யின் முக்கிய ஆறுகளில் ஒன்று.
* [[எல்பே]] – [[ஹம்பர்க்]] நகரின் ஊடாக ஓடும், [[ஜெர்மனி]]யின் முக்கிய ஆறுகளில் ஒன்று.
* [[இயூபிரட்டீஸ்]] – [[அனதோலியா]] (துருக்கி) மற்றும் [[மெசொப்பொத்தேமியா]] (ஈராக்)ஆகியவற்றைச் சேந்த முக்கியமான இரட்டை ஆறுகளில் ஒன்று.
* [[இயூபிரட்டீஸ்]] – [[அனதோலியா]] (துருக்கி) மற்றும் [[மெசொப்பொத்தேமியா]] (ஈராக்)ஆகியவற்றைச் சேந்த முக்கியமான இரட்டை ஆறுகளில் ஒன்று.
* River Forth – Stirling, South Queensferry க்கு இடையில் ஓடும் ஆறு
* [[கங்கை]] – இந்தியா வங்காளதேசம் ஆகியவற்றில் ஓடும் முக்கிய ஆறு.
* [[கங்கை]] – இந்தியா வங்காளதேசம் ஆகியவற்றில் ஓடும் முக்கிய ஆறு.
* [[கோதாவரி ஆறு|கோதாவரி]] – [[தென்னிந்தியா]]வின் முக்கிய ஆறு.
* [[கோதாவரி ஆறு|கோதாவரி]] – [[தென்னிந்தியா]]வின் முக்கிய ஆறு.
வரிசை 99: வரிசை 96:
* [[நைஜர் ஆறு]] – மேற்கு ஆப்பிரிக்காவின் முதன்மை ஆறு.
* [[நைஜர் ஆறு]] – மேற்கு ஆப்பிரிக்காவின் முதன்மை ஆறு.
* [[நைல்]] – [[எகிப்து]] மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்காவின் முதன்மை ஆறு.
* [[நைல்]] – [[எகிப்து]] மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்காவின் முதன்மை ஆறு.
* Ob River – சைபீரியாவின் மிகப்பெரிய ஆறு.
* ஓப் ஆறு – சைபீரியாவின் மிகப்பெரிய ஆறு.
* Oder River – நடு ஐரோப்பாவில் உள்ள பெரிய ஆறு.
* ஓடர் ஆறு – நடு ஐரோப்பாவில் உள்ள பெரிய ஆறு.
* [[ஓகியோ ஆறு]] – [[மிசிசிப்பி ஆறு]], [[ஆப்பலேச்சிய மலைத்தொடர்]] க்கிடையிலான ஆறு
* [[ஓகியோ ஆறு]] – [[மிசிசிப்பி ஆறு]], [[ஆப்பலேச்சிய மலைத்தொடர்]] க்கிடையிலான ஆறு
* Orinoco – வெனிசுவேலாவின் முதன்மை ஆறு.
* ஒரினோக்கோ – வெனிசுவேலாவின் முதன்மை ஆறு.
* பரனா ஆறு – [[தென் அமெரிக்கா]] விலுள்ள நீளமான, அதி முக்கியமான ஆறுகளில் ஒன்று. இது [[பிரேசில்]], [[பரகுவை]], [[அர்கெந்தீனா]] ஊடாகப் பாய்கின்றது.
* பரனா ஆறு – [[தென் அமெரிக்கா]] விலுள்ள நீளமான, அதி முக்கியமான ஆறுகளில் ஒன்று. இது [[பிரேசில்]], [[பரகுவை]], [[அர்கெந்தீனா]] ஊடாகப் பாய்கின்றது.
* [[போ ஆறு]] - இத்தாலி்யின் முக்கிய ஆறு.
* [[போ ஆறு]] - இத்தாலி்யின் முக்கிய ஆறு.
* [[ரைன்]] – இந்த ஆறு மேற்கு [[ஐரோப்பா]] விலுள்ள நீளமானதும், மிக முக்கியமானதும், கப்பல்கள் செல்லக்கூடியளவு ஆழமானதும் அகலமானதுமான ஆறுகளில் ஒன்றாகும். இது [[சுவிட்சர்லாந்து]] இலிருந்து, [[நெதர்லாந்து]] ஊாடகப் பாய்ந்து, [[லீக்டன்ஸ்டைன்]], [[ஆசுதிரியா]], [[செருமனி]], [[பிரான்சு]] ஆகிய நாடுகளுடன் இற்கையான எல்லையைக் கொண்டுள்ளது.

* ரோன் – இந்த ஆறு மேற்கு [[ஐரோப்பா]] விலுள்ள நீளமானதும், மிக முக்கியமானதும், கப்பல்கள் செல்லக்கூடியளவு ஆழமானதும் அகலமானதுமான ஆறுகளில் ஒன்றாகும். இது [[சுவிட்சர்லாந்து]] இலிருந்து, [[பிரான்சு]] க்குச் செல்கின்றது.

* Río de la Plata – உலகின் மிக அகலமான அறு.
* ரியோ டி லா பிலாட்டா – உலகின் மிக அகலமான அறு.
* [[ரியோ கிராண்டே]] – [[மெக்சிகோ]]வுக்கும் [[டெக்சஸ்]]-க்கும் எல்லை
* [[ரியோ கிராண்டே]] – [[மெக்சிகோ]]வுக்கும் [[டெக்சஸ்]]-க்கும் எல்லை
* [[சபர்மதி ஆறு]] – இந்தியாவின் அகமதாபாத் வழியாக ஓடும் ஆறு.
* [[சபர்மதி ஆறு]] – இந்தியாவின் அகமதாபாத் வழியாக ஓடும் ஆறு.
* Saint Lawrence River – [[அமெரிக்கப் பேரேரிகள்|Great Lakes]] களை வடிகட்டி வரும் ஆறு.
* புனித லாரன்சு ஆறு – [[அமெரிக்கப் பேரேரிகள்|Great Lakes]] களை வடிகட்டி வரும் ஆறு.
* St. Marys River (Michigan-Ontario) – [[அமெரிக்க ஐக்கிய நாடு]] க்கும், [[கனடா]] க்குமான எல்லையாகவும், [[சுப்பீரியர் ஏரி]] யை Lake Huron உடன் இணைப்பதாகவும் அமைவதுடன், உலகின் மிகவும் பரபரப்பான Soo Locks எனப்படும் நீர்ப் போக்குவரத்தைக் கொண்டுள்ளது.
* புனித மேரி ஆறு – [[அமெரிக்க ஐக்கிய நாடு]] க்கும், [[கனடா]] க்குமான எல்லையாகவும், [[சுப்பீரியர் ஏரி]] யை உரோன் ஏரியுடன் இணைப்பதாகவும் அமைவதுடன், உலகின் மிகவும் பரபரப்பான Soo Locks எனப்படும் நீர்ப் போக்குவரத்தைக் கொண்டுள்ளது.
* São Francisco River – [[பிரேசில்]] இலுள்ள மிக நீண்ட ஆறு
* சாவோ பிரான்சிஸ்கோ ஆறு – [[பிரேசில்]] இலுள்ள மிக நீண்ட ஆறு
* [[சவா ஆறு]] – [[சுலோவீனியா]], [[குரோவாசியா]], [[பொசுனியா எர்செகோவினா]] (இந் நாட்டின் வட எல்லையாக அமைந்துள்ளது), [[செர்பியா]] ஆகிய நான்கு நாடுகளின் ஊடாகப் பாயும் ஆறு. அதனால் பழைய [[யுகோசுலாவியா]] வின் அடையாளமாகக் காணப்படுகின்றது.

* [[சவான்னா ஆறு]] –தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவின் முக்கியமான ஒரு ஆறு. [[ஜோர்ஜியா (மாநிலம்)]], தென் கரொலைனா]] ஆகியவற்றுக்கிடையேயான எல்லையின் பெரும்பகுதியாக அமைந்துள்ளது.
* [[சவான்னா ஆறு]] –தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவின் முக்கியமான ஒரு ஆறு. [[ஜோர்ஜியா (மாநிலம்)]], தென் கரொலைனா]] ஆகியவற்றுக்கிடையேயான எல்லையின் பெரும்பகுதியாக அமைந்துள்ளது.
வரிசை 120: வரிசை 117:
* [[செவர்ன் ஆறு]] – [[பெரிய பிரித்தானியா]] விலுள்ள மிக நீளமான ஆறு.
* [[செவர்ன் ஆறு]] – [[பெரிய பிரித்தானியா]] விலுள்ள மிக நீளமான ஆறு.
* [[ஷன்னன் ஆறு]] (''Shannon'') - அயர்லாந்தில் உள்ள நீளமான ஆறு.
* [[ஷன்னன் ஆறு]] (''Shannon'') - அயர்லாந்தில் உள்ள நீளமான ஆறு.
* Shatt al-Arab – [[ஈரான்]] க்கும், [[ஈராக்]] க்கும் எல்லையா அமைந்திருக்கும் ஆறு.
* சாட்-அல்-அராப் – [[ஈரான்]] க்கும், [[ஈராக்]] க்கும் எல்லையா அமைந்திருக்கும் ஆறு.
* [[சினானோ காவா]] – ஜப்பானில் உள்ள நீளமான ஆறு.
* [[சினானோ காவா]] – ஜப்பானில் உள்ள நீளமான ஆறு.
* [[பாம்பா ஆறு]] – கொலம்பியா ஆற்றின் முக்கியமான துணையாறுகளுள் ஒன்று.
* [[பாம்பா ஆறு]] – கொலம்பியா ஆற்றின் முக்கியமான துணையாறுகளுள் ஒன்று.
* Susquehanna River – [[பென்சில்வேனியா]] மற்றும் [[செசாபீக் பே]]வின் முதன்மை நதி.
* [[தாகுஸ்]] – [[ஐபீரிய மூவலந்தீவு|ஐபீரிய மூவலந்தீவில்]] உள்ள நீளமான நதி.
* [[தாகுஸ்]] – [[ஐபீரிய மூவலந்தீவு|ஐபீரிய மூவலந்தீவில்]] உள்ள நீளமான நதி.
* [[டே ஆறு]] (Tay) – ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய ஆறு.
* [[டே ஆறு]] (Tay) – ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய ஆறு.
வரிசை 133: வரிசை 129:
* [[டோன் ஆறு|டோன்]] (''Tone'') – சப்பானின் நீளமான ஆறுகளில் ஒன்று.
* [[டோன் ஆறு|டோன்]] (''Tone'') – சப்பானின் நீளமான ஆறுகளில் ஒன்று.
* [[விஸ்துலா]] – [[போலந்து|போலந்தின்]] முதன்மையான ஆறு.
* [[விஸ்துலா]] – [[போலந்து|போலந்தின்]] முதன்மையான ஆறு.
* Vltava – [[பிராகா]] வழியாகப் பாயும் ஆறு.
* வித்தாவா – [[பிராகா]] வழியாகப் பாயும் ஆறு.
* [[வோல்கா ஆறு|வொல்கா]] – ரசியாவின் முதன்மையானதும் ஐரோப்பாவின் நீளமானதுமான ஆறு.
* [[வோல்கா ஆறு|வொல்கா]] – ரசியாவின் முதன்மையானதும் ஐரோப்பாவின் நீளமானதுமான ஆறு.
* [[வோல்ட்டா ஆறு|வோல்ட்டா]] – மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஆறு.
* [[வோல்ட்டா ஆறு|வோல்ட்டா]] – மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஆறு.
வரிசை 139: வரிசை 135:
* [[யாங்சே ஆறு|யாங்சே]] – சீனாவிலும் ஆசியாவிலும் மிகவும் நீளமான ஆறு.
* [[யாங்சே ஆறு|யாங்சே]] – சீனாவிலும் ஆசியாவிலும் மிகவும் நீளமான ஆறு.
* [[மஞ்சள் ஆறு|மஞ்சள்]] – சீனாவின் முதன்மையான ஆறுகளில் ஒன்று.
* [[மஞ்சள் ஆறு|மஞ்சள்]] – சீனாவின் முதன்மையான ஆறுகளில் ஒன்று.
* Yenisei River – சைபீரியாவில் உள்ள ஒரு பெரிய ஆறு.
* யெனிசெய் ஆறு – சைபீரியாவில் உள்ள ஒரு பெரிய ஆறு.
* [[யூகோன் ஆறு|யூகோன்]] – அலாஸ்காவின் முதன்மையான ஆறு.
* [[யூகோன் ஆறு|யூகோன்]] – அலாஸ்காவின் முதன்மையான ஆறு.
* [[சாம்பசி ஆறு]] – தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் முதன்மையான ஆறு.
* [[சாம்பசி ஆறு]] – தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் முதன்மையான ஆறு.

22:40, 23 மே 2018 இல் நிலவும் திருத்தம்

ஆர்க்கான்சாஸ் ஆறு

ஆறு (வடமொழியில் நதி) என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக மலைப் பகுதிகளில் தொடங்குகின்றன. ஆற்றின் இருபுறமும் உள்ள நிலப்பகுதி கரை என அழைக்கப்படுகிறது. ஆறுகள் பொதுவாக மற்றொரு ஆற்றிலோ, ஏரிகளிலோ அல்லது கடலிலோ இணைகின்றன. ஆற்றில் நீரோட்டமானது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது. சில வேளைகளில் ஆறுகள் இன்னொரு நீர் நிலையை அடையும் முன்பே நிலத்துக்குள் உறிஞ்சப்படுவதோ அல்லது வரண்டு விடுவதோ உண்டு. பெரிய நீரோட்டங்கள் ஆறுகள் என்றும், சிறியவை சிற்றாறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனினும் எதனை ஆறு என்று அழைக்கலாம் என்பதற்கான பொது விதி எதுவும் கிடையாது.

ஆறு நீர் வட்டத்தின் ஒரு கூறு ஆகும். ஆற்றில் இருக்கும் நீர் பொதுவாக மழை போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. புவி மேற்பரப்பில் வழிந்து ஓடுவதன் மூலமும், நிலத்தடி நீரை மீள்விப்பதன் மூலமும், இயற்கையான நீர் நிலைகள் நிரம்புவதன் மூலமும் மழை நீர் ஆற்றை அடைகின்றது.

தோற்றம்

ஊற்றுக்களில் இருந்தோ, ஏரிகளில் இருந்தோ, பனியாறுகள் உருகுவதன் மூலமோ, மழை நீர் வழிந்தோடுவதனாலோ அல்லது வேறு பல வழிகளிலோ ஆறுகள் உருவாகக் கூடும். பொதுவாக ஆறுகளுடன் வேறு ஆறுகள் வந்து இணைவது உண்டு. இத்தகைய ஆறுகள் கிளையாறுகள் அல்லது துணையாறுகள் என அழைக்கப்படுகின்றன. ஆற்றில் கொண்டு செல்லப்படும் நீரின் அளவு. ஆற்றில் மேற்பரப்பில் செல்லும் நீரும், கண்ணுக்குத் தெரியாமல் நிலத்துக்குக் கீழ் செல்லும் நீரும் சேர்ந்தது ஆகும். பெரிய பள்ளத்தாக்குகளில் ஓடும் ஆறுகளில் இவ்வாறான கண்ணுக்குத் தெரியாத நீரோட்டத்தின் கூறு மேலே தெரியக்கூடிய நீரின் அளவை விடப் பெருமளவு அதிகமாக இருக்கக்கூடும்.

ஆற்றின் மூலத்தில் இருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் ஆறுகள் பொதுவாகக் கடலிலோ அல்லது பெரிய ஏரிகளைப் போன்ற நீர் நிலைகளிலோ கலக்கின்றன. வரண்ட பகுதிகளில் ஆற்று நீர் ஆவியாவதன் மூலம் இவ்வாறான நீர் நிலைகளை அடையு முன்னரே வரண்டு விடுவது உண்டு. சில ஆறுகள் மண்ணுக்கு ஊடாகவோ, ஊடுசெல்லவிடும் பாறைகளூடாகவோ நிலத்துக்குள் உறிஞ்சப்படுவது உண்டு. இது நிலத்தடி நீராகத் தங்கிவிடுகிறது. தொழிற்சாலைகளுக்கும், நீர்ப்பாசனத் தேவைகளுக்கும் பெருமளவில் நீரை எடுப்பதனாலும் அதன் இயற்கையான முடிவிடத்தை அடையுமுன்பே ஆறு வற்றிவிடுவதையும் காணலாம். ஆற்றுக்கு நீரை வழங்கும் பகுதி அல்லது ஆற்றினால் வடியச் செய்யப்படும் நிலப்பகுதி வடிநிலம் அல்லது நீரேந்து பகுதி எனப்படுகின்றது.

நில அமைப்பு

ஆற்றில் செல்லும் நீர் பொதுவாக அதன் கால்வாய்ப் பகுதியூடாகவே செல்கிறது. இது இரண்டு கரைகளுக்கு இடைப்பட்ட ஆற்றுப்படுகையினால் ஆனது. பெரிய ஆறுகளில் இந்த வாய்க்கால் பகுதிக்கு வெளியே வெள்ளப்பெருக்குச் சமதளம் (Flood plains) இருப்பதுண்டு. இது வெள்ளப்பெருக்குக் காலங்களில் ஆற்றுநீர் வாய்க்கால் பகுதிக்கு வெளியே செல்லும்போது உருவாவது. வெள்ளப்பெருக்குச் சமதளங்கள் ஆற்றின் கால்வாய் அளவிலும் மிகப் பெரிதாக இருப்பதும் உண்டு.

பெரும்பாலும் ஆறுகள் ஒரு வழியிலேயே செல்லுகின்றன. ஆனால் சில ஆறுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட பல வழிகளில் சென்று பின்னல் ஆறுகளாக அமைவதும் உண்டு. பெரிய அளவிலான இவ்வாறான ஆறுகள், நியூசிலாந்தின் தெற்குத் தீவு போன்ற, உலகின் சில பகுதிகளிலேயே காணப்படுகின்றன. பின்னல் ஆறுகள், அரிப்புச் சமவெளிகளிலும், சில ஆற்றுக் கழிமுகங்களிலும் அமைவதுண்டு.

பாயும் ஆறு ஒரு ஆற்றல் மூலமாகும். இதனால் இவ்வாற்றல் ஆற்றின் வாய்க்கால் மீது தாக்கி அதன் வடிவத்தை மாற்றுகிறது. பிராமின் விதிப்படி (Brahm's law) ஆற்றினால் அடித்துச் செல்லப்பக்கூடிய பொருளொன்றின் திணிவு ஆற்றின் வேகத்தின் ஆறாம் அடுக்குக்கு விகிதசமம் ஆகும். இதனால், ஆற்றின் ஓட்ட வேகம் இரண்டு மடங்காக அதிகரிக்கும்போது, 64 மடங்கு அதிக திணிவுள்ள பொருளை அடித்துச் செல்லக்கூடிய ஆற்றலைப் பெறுகிறது. மலைப்பாங்கான கடினப்பாறை வலயங்களில் இதன் காரணமாக கடினப் பாறைகள் ஊடாக அரிப்பு வாய்க்கால்கள் (erosion channel) ஏற்படுவதோடு, பெரிய பாறைகள் உடைந்து மணலும், சிறு கற்களும் உருவாவதைக் காணலாம். ஆறுகள் ஓடும் பாதையின் இடைப் பகுதிகளில் அது சமதளங்களில் ஓடும்போது, கரைகள் அரிக்கப்படுவதனால் வளைவுகள் ஏற்படுவதுடன், இத்தகைய உட்புற வளைவுகளில் படிவுகளும் ஏற்படுகின்றது. ஆற்றுப் பாதைகள் தடம் (loop) போல் அமையும் இடங்களில் சில வேளைகளில் ஆறு குறுக்கே ஓடி இணைந்து ஆற்றுப் பாதையின் நீளத்தைக் குறைப்பதுடன் இலாட வடிவ ஏரியையும் உருவாக்கும்.

வகைப்பாடு

ஆறுகளைக் கற்பனை செய்து பார்ப்பதற்குக் கீழ் காட்டப்படும் வகைப்பாடு உதவும் எனினும், வேறு பல காரணிகளையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஓட்டப்பாதையின் சரிவு புவிமேலோட்டு அசைவுகளில் தங்கியுள்ளது எனினும் ஓடும் நீரின் அளவு, காலநிலையிலும், படிவின் அளவு, நிலவியல் அமைப்பு, சரிவு என்பவற்றிலும் தங்கியுள்ளன.

இளமை ஆறு
இது கூடிய சரிவைக் கொண்டதும், குறைந்த அளவு துணையாறுகளைக் கொண்டதும், வேகமாக ஓடுவதுமான ஆறு ஆகும். இத்தகைய ஆறுகள் அகலமாக அரிப்பதிலும் ஆழமாக அரிக்கின்றன. (எகா: பிராசோஸ் ஆறு, டிரினிட்டி ஆறு, எப்ரோ ஆறு)
முதிர்ந்த ஆறு
இளமை ஆறுகளிலும் குறைந்த சரிவு கொண்ட இது குறைவான வேகத்தில் ஓடுவது. இதன் வாய்க்கால்கள் அகலமாக அரிக்கப்படுகின்றன. இவை அதிகமான துணையாறுகளைக் கொண்டிருப்பதுடன் இளம் ஆறுகளைவிடக் கூடிய நீர் வரத்தைக் கொண்டிருக்கும். (எகா: மிசிசிப்பி ஆறு, சென். லாரன்ஸ் ஆறு, தனூப் ஆறு, ஓகியோ ஆறு, தேம்ஸ் ஆறு)
பழைய ஆறு
குறைந்த சரிவைக் கொண்டிருப்பதுடன், குறைவான அரிப்பு ஆற்றலையும் கொண்டிருக்கும். வெள்ளச் சமவெளிகளைக் கொண்டிருப்பது இவற்றின் சிறப்பு இயல்பாகும். (எகா: ஹுவாங் ஹே ஆறு, கங்கை ஆறு, டைகிரிஸ் ஆறு, இயுபிரட்டீஸ் ஆறு, சிந்து நதி, நைல் ஆறு)
புத்திளமை ஆறு
புவிமேலோட்டு அசைவினால் சரிவு கூடுதலான ஆறு.

ஆறுகளின் இன்றியமையாமை

உலகின் பெரும் நாகரிகங்கள் ஆறுகளின் கரைகளிலேயே அமைந்துள்ளன. ஆறுகள் மனிதர்களுக்கு குடிநீர்த் தேவையை மட்டுமன்றி அவர்களது வாழ்வியல் தேவைகளையும் நிறைவு செய்கின்றன. வேளாண்மை, பல வகையான தொழிற்சாலைகள் (எ.கா: காகித ஆலை) ஆற்று நீரையே நம்பியிருக்கின்றன. தற்காலத்தில் ஆற்றோட்டத்தைப் பயன்படுத்தி மின்சாரமும் உருவாக்கப்படுகிறது.

ஆறுகளின் பட்டியல்

உலகின் பத்து நீளமான ஆறுகளின் பட்டியல்

  1. நைல் (6,690 கி.மீ)
  2. அமேசான் (6,452 கி.மீ)
  3. யாங்சே (சாங்-சியாங்) (6,380 மி.மீ)
  4. மிசிசிப்பி-மிசூரி (6,270 கி.மீ)
  5. யெனிசே-அங்காரா (5,550 கி.மீ)
  6. ஓப்-இர்டிஷ் (5,410 கி.மீ)
  7. ஹுவாங்-ஹ (மஞ்சள் ஆறு) (5,464 கி.மீ)
  8. ஆமுர் (4,410 கி.மீ)
  9. காங்கோ (4,380 அல்லது 4,670 கி.மீ)
  10. லெனா (4,260 கி.மீ)

புகழ்பெற்ற ஆறுகள்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. http://news.bbc.co.uk/1/hi/world/americas/6759291.stm. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 6, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறு&oldid=2528949" இலிருந்து மீள்விக்கப்பட்டது