இயற்பியலின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4: வரிசை 4:
==பண்டைய வரலாறு==
==பண்டைய வரலாறு==
இயற்பியலின் கூறுகள் வடிவியலின் உதவியுடன் இயங்கக்கூடிய பிரிவுகளான வானவியல், இயந்திரவியல் மற்றும் ஒளியியல் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. கணித கோட்பாடுகளின் மூலம் இயற்பியலை வரையறுப்பது [[ஹெலனிய காலம்|ஹெலனிய கால]] பண்டைய எழுத்தாளர்களான ஆர்க்கிமிடிஸ், [[தாலமி]] மற்றும் பாபிலோனியர்கள் காலத்திலிருந்தே தொடங்கப்பட்டது. பண்டைய மெய்யியல் அறிஞர்கள் தமது கருத்துக்கள் மூலம் இயற்பியலை விளக்க முற்பட்டனர். உதாரணத்திற்கு அரிஸ்டாட்டிலின் ''நான்கு வகையான காரணங்கள்''.
இயற்பியலின் கூறுகள் வடிவியலின் உதவியுடன் இயங்கக்கூடிய பிரிவுகளான வானவியல், இயந்திரவியல் மற்றும் ஒளியியல் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. கணித கோட்பாடுகளின் மூலம் இயற்பியலை வரையறுப்பது [[ஹெலனிய காலம்|ஹெலனிய கால]] பண்டைய எழுத்தாளர்களான ஆர்க்கிமிடிஸ், [[தாலமி]] மற்றும் பாபிலோனியர்கள் காலத்திலிருந்தே தொடங்கப்பட்டது. பண்டைய மெய்யியல் அறிஞர்கள் தமது கருத்துக்கள் மூலம் இயற்பியலை விளக்க முற்பட்டனர். உதாரணத்திற்கு அரிஸ்டாட்டிலின் ''நான்கு வகையான காரணங்கள்''.
===பண்டைய கிரேக்கம்===
இயற்கையையும் அதன் கோட்பாடுகளையும் புரிந்துக் கொள்ள கிரேக்கர்கள் கிமு 650 முதலே முற்படுகின்றனர். சாக்கிரட்டீஸிற்கும் முன்பு வாழ்ந்த கிரேக்க மெய்யியல் அறிஞரான [[தேலேஸ்]] அறிவியலின் தந்தை எனக் கருதப்படுகிறார். ஏனெனில் இவர் மதக்கோட்பாடுகளையும், மூடநம்பிக்கைகளையும் மறுத்து ஒவ்வொரு நிகழ்விற்கும் பின் அறிவியல் காரணங்கள் உள்ளது என்று அறிவுறுத்தினார். தேலேஸ் கி.மு. 580 இல் சில அறிவியல் முடிவுகளையும் வெளியிட்டார். அதன்படி தண்ணீர்தான் அனைத்து பொருட்களுக்கும் அடிப்படைக்கூறு என்று கூறினார். உராயப்பட்ட பசை மற்றும் காந்தங்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையை பற்றியும் விளக்கினார். இவரே முதல் முறை பதிவு செய்யப்பட்ட அண்டவியல் கோட்பாடுகளை கூறியவர்.

13:54, 19 மே 2018 இல் நிலவும் திருத்தம்

இயற்பியல் (பண்டைய கிரேக்கம்:φύσις, ஆங்கிலம்:Physics) என்பது அறிவியலின் ஒரு அடிப்படை பிரிவு ஆகும். இயற்பியல் என்பதன் ஆங்கிலப் பெயர் கிரேக்க மொழியிலிருந்து வந்தது. அதற்கு இயற்கை என்பது பொருள். இப்பிரிவு இயற்கையினை பற்றியும் அதன் தன்மைகளைப் பற்றியும் ஆராய்ந்து அறிந்து கொள்ள உதவுகிறது. இயற்பியல் இயற்கையின் பொருட்களைப் பற்றியும் அதன் ஆற்றலைப் பற்றியும் படிக்க உதவுகின்றது. இத்துறை மிகவும் பழமையானது, மேலும் அடிப்படை அறிவியல் கோட்பாடுகளினால் உருவாக்கப்பட்டது. பொருட்களும், ஆற்றலும் இயற்கையின் மிக முக்கியமான கூறுகள் என்பதால் இயற்பியலின் மூலம் அனைத்து வகையான கண்டுபிடிப்புகளையும் மேற்கொள்ள முடியும். இயற்பியல் துறையைப் போல் அல்லாமல் மற்ற அறிவியல் துறைகள் தனக்கென்று ஒரு எல்லைகளை வரையறுத்துள்ளன. அதனால் சில பொருட்களைப் பற்றியும் அதன் இயக்கங்களைப் பற்றியும் மட்டுமே அத்துறைகளில் படிக்க இயலும். அனைத்து அறிவியல் துறைகளும் இயற்பியலின் மூலம் வளர்ந்து பின்னர் தனித்துறையாக மாறியதாக கருதப்படுவதும் உண்டு. பொதுவாக இயற்பியலில் இரு பிரிவுகள் உள்ளன. ஒன்று பாரம்பரிய இயற்பியல் இரண்டாவது நவீன இயற்பியல்.

பண்டைய வரலாறு

இயற்பியலின் கூறுகள் வடிவியலின் உதவியுடன் இயங்கக்கூடிய பிரிவுகளான வானவியல், இயந்திரவியல் மற்றும் ஒளியியல் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. கணித கோட்பாடுகளின் மூலம் இயற்பியலை வரையறுப்பது ஹெலனிய கால பண்டைய எழுத்தாளர்களான ஆர்க்கிமிடிஸ், தாலமி மற்றும் பாபிலோனியர்கள் காலத்திலிருந்தே தொடங்கப்பட்டது. பண்டைய மெய்யியல் அறிஞர்கள் தமது கருத்துக்கள் மூலம் இயற்பியலை விளக்க முற்பட்டனர். உதாரணத்திற்கு அரிஸ்டாட்டிலின் நான்கு வகையான காரணங்கள்.

பண்டைய கிரேக்கம்

இயற்கையையும் அதன் கோட்பாடுகளையும் புரிந்துக் கொள்ள கிரேக்கர்கள் கிமு 650 முதலே முற்படுகின்றனர். சாக்கிரட்டீஸிற்கும் முன்பு வாழ்ந்த கிரேக்க மெய்யியல் அறிஞரான தேலேஸ் அறிவியலின் தந்தை எனக் கருதப்படுகிறார். ஏனெனில் இவர் மதக்கோட்பாடுகளையும், மூடநம்பிக்கைகளையும் மறுத்து ஒவ்வொரு நிகழ்விற்கும் பின் அறிவியல் காரணங்கள் உள்ளது என்று அறிவுறுத்தினார். தேலேஸ் கி.மு. 580 இல் சில அறிவியல் முடிவுகளையும் வெளியிட்டார். அதன்படி தண்ணீர்தான் அனைத்து பொருட்களுக்கும் அடிப்படைக்கூறு என்று கூறினார். உராயப்பட்ட பசை மற்றும் காந்தங்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையை பற்றியும் விளக்கினார். இவரே முதல் முறை பதிவு செய்யப்பட்ட அண்டவியல் கோட்பாடுகளை கூறியவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்பியலின்_வரலாறு&oldid=2526556" இலிருந்து மீள்விக்கப்பட்டது