"ஊழ் (சைனம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
16 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(திருத்தம்)
[[படிமம்:Types_of_Karma.JPG|thumb|அருக நெறியின் படி ஊழின் வகைகள்]]
'''ஊழ்''' அல்லது '''கர்மா''' அல்லது '''வினைப்பயன்'''  [[சைனம்|சைன]] அருக நெறியின் படி, உள மற்றும் அண்டவியல் சார்ந்த முக்கியமான கோட்பாடுகளில் ஒன்று ஆகும். எளிமையாகச் சொன்னால், மனிதனின் நல்வினையும் தீவினையுமே சீவனின் ([[ஆன்மா|soul]])  மறுபிறவியைத் தீர்மானிக்கின்றது என்பது சமணக்கொள்கை. உலகியல் சார்ந்த சம்சார உலகில் உழலும் ஆன்மாக்கள் இறுதியில் மோட்சத்தை அல்லது வீடுபேற்றை அடையும் வரை ஊழின் காரணமான பிறவிகளில் ஆன்மா உழன்று கொண்டிருக்கும். வீடுபேற்றை அடைவதற்கு தூய வழிகளில் ஒன்றை ஒருவன் கடைப்பிடிக்கவேண்டும்.<ref>{{Harvnb|Chapple|1990|p=255}}</ref>
 
== தோற்றமும் வளர்ச்சியும் ==
ஊழ் கொள்கை எல்லா  [[இந்தியாவிலுள்ள சமயங்கள்|இந்திய மதங்களுக்கும்]] பொதுவானது எனினும், அது எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதைக் கூறுவது கடினம். அருகரின் மிகப்பழைய நூல்களிலேயே ஊழ் கொள்கை தொடர்பான கருத்துக்களைக் காண முடிகின்றது.{{Sfn|Glasenapp|1999|p=175}}  அவற்றில் அசராங்க சூத்திரம், சூத்திரக்கிருதாங்கம் என்பன குறிப்பிடத்தக்கவை..<ref name="E.B 2001 3357, 3372">{{harvnb|E.B|2001|pp=3357, 3372}}</ref> மகாவீரருக்கு முந்திய பார்சுவ நாதரின் காலத்தில் ஊழ், மறுபிறவி போன்ற கோட்பாடுகள் சமணத்தில் தோன்றியிருக்க வேண்டும் என்பது பொதுவான நம்பிக்கை..{{Sfn|Glasenapp|1999|p=176}} பொ.மு   8 அல்லது 9ஆம் நூற்றாண்டு என்று இந்தக் காலம் பொதுவாக வரையறுக்கப்படுகின்றது.{{Sfn|Glasenapp|1999|p=176}}<ref>{{Harvnb|Glasenapp|2003|p=ix}}</ref>
 
பொ.மு 300 அளவில் பத்திரபாகுவின் காலத்தில் ஊழ் தொடர்பான நம்பிக்கை ஆழமாக வேரூன்றி விட்டது என்பதற்கான சான்றுகளை திகம்பர - சுவேதாம்பர இரு அருகப் பிரிவுகளிலும் காணமுடிகின்றது. அருக சமூக - சமய நடைமுறைகளான நோன்புகள், கடுமையான விரதங்கள்,  ''[[சல்லேகனை|Sallekhana]] எனும் தன்னுயிர் நீப்பு''<ref>{{Harvnb|Jaini|2000|p=134}}</ref> மற்றும் இறைமறுப்பு முதலான எல்லா அடிப்படைக் கோட்பாடுகளிலும், ஊழ் பற்றிய அருக நம்பிக்கை ஆழமாகப் பதிந்திருப்பதைக் காணலாம்.  ஊழில் சமணருக்கும் சைவ வைணவருக்கும் கொண்டிருக்கும் கருத்து மாறுபாடுகளையும் இந்த இடத்தில் நாம் ஊன்றி நோக்கவேண்டும். ஊழில் இந்துக்களிலிருந்து மாறுபட்ட கொள்கை கொண்டவர்கள் என்பதால், சைவ வைணவரின் சிரார்த்தச் சடங்கும் நீத்தார் வழிபாடும்  அருகரால் மூடநம்பிக்கை என்று விமர்சிக்கப்படுகின்றது.<ref name="Jaini135">{{Harvnb|Jaini|2000|p=135}}</ref> மனிதன் மிருகமாகப் பிறக்கலாம், மிருகம் மனிதனாகப் பிறக்கலாம் என்ற ஆழமான நம்பிக்கையே, அருகரின் புகழ்பெற்ற ஜீவகாருணியம் என்ற கோட்பாட்டுக்கு அடிநாதமாக விளங்குகின்றது என்று கொள்ளலாம். . <ref>{{Harvnb|Patil|2006|p=11}}</ref>
 
== மெய்யியல் கண்ணோட்டம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2521116" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி