துணிப்புத் தகைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 70: வரிசை 70:
====எடுத்துகாட்டு====
====எடுத்துகாட்டு====


கார்த்தேய ஆயங்களில்(x,y) ஓர் இருபருமான வெளியைக் கருதுவோம்.இதில் அமையும் பய்வு விரைவு உறுப்புகள் (u,v)) ஆகும்; இதன் துணிப்புத் தகைவு பின்வரும் எண்சாரத்தால் தரப்படும்:
கார்த்தேய ஆயங்களில்(x,y) ஓர் இருபருமான வெளியைக் கருதுவோம்.இதில் அமையும் பாய்வு விரைவு உறுப்புகள் (u,v)) ஆகும்; இதன் துணிப்புத் தகைவு பின்வரும் எண்சாரத்தால் தரப்படும்:


:<math>\begin{pmatrix}
:<math>\begin{pmatrix}
வரிசை 82: வரிசை 82:
</math>
</math>


இந்தக் சமன்பாடு நியூட்டனியல் பய்வைக் குறிக்கிறது. நடப்பில் இதைப் பின்வருமாறும் கோவைப்படுத்தலாம்:
இந்தச் சமன்பாடு நியூட்டனியல் பாய்வைக் குறிக்கிறது. நடப்பில் இதைப் பின்வருமாறும் கோவைப்படுத்தலாம்:
:<math>\begin{pmatrix}
:<math>\begin{pmatrix}
\tau_{xx} & \tau_{xy} \\
\tau_{xx} & \tau_{xy} \\
வரிசை 98: வரிசை 98:
</math>,
</math>,


இது ஒருபடிதல்லாத பாய்வுக்கான பிசுப்புக்கான உய்ர்நெறியனாகும்:
இது ஒருபடித்தல்லாத பாய்வுக்கான பிசுப்புக்கான உயர்நெறிய (tensor)னாகும்:


:<math>\begin{pmatrix}
:<math>\begin{pmatrix}
வரிசை 110: வரிசை 110:
</math>
</math>


இது சீரிலாத பெயர்நிலை பாய்வைக் குறிக்கிறது; இது உண்மையில் பாய்வு விரைவுகளைச் சாராதிருத்தலைக் காணலாம்:
இது சீரிலாத பெயர்நிலைப் (transient) பாய்வைக் குறிக்கிறது; இது உண்மையில் பாய்வு, அதன் விரைவுகளைச் சாராதிருத்தலைக் காணலாம்:


:<math>\mathbf \mu(x,t) = \begin{pmatrix}
:<math>\mathbf \mu(x,t) = \begin{pmatrix}
வரிசை 117: வரிசை 117:
\end{pmatrix} </math>
\end{pmatrix} </math>


இது நியூட்டனையப் பாய்வாகும். இதன் பிசுப்புமை பின்வருமாறு:
இது நியூட்டனியப் பாய்வாகும். இதன் பிசுப்புமை பின்வருமாறு:


:<math>\begin{pmatrix}
:<math>\begin{pmatrix}
வரிசை 129: வரிசை 129:
</math>
</math>


இதில் பிசுப்புமை பாய்வு விரைவைச் சார்ந்துள்ளதால் நியூட்டனியல் சாராத பாய்வாகும். இந்தப் பாய்வு ஒருபடித்தானதாகும்.(இந்த எண்சாரம் முற்றொருமை என்சாரமாக அமைவதால், இதன் பிசுப்புமை அளவனாக அமைகிறது:
இதில் பிசுப்புமை, பாய்வு விரைவைச் சார்ந்துள்ளதால் நியூட்டனியல் சாராத பாய்வாகும். மேலும், இந்தப் பாய்வு ஒருபடித்தானதாகும்.இந்த எண்சாரம் முற்றொருமை எண்சாரமாக அமைவதால், இதன் பிசுப்புமை பின்வருமாறு அளவனாக அமைகிறது:


:<math>\mu (u) = \frac 1 u </math>.
:<math>\mu (u) = \frac 1 u </math>.

12:29, 27 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்

துணிப்புத் தகைவு
பொதுவான குறியீடு: τ
SI அலகு: பாசுகல்
வேறு அலகுகளிலிருந்து பெறப்படும் வாய்ப்பாடு: τ = F/A
இணைத்தகைவால் சேதம் அடைந்துள்ள சாலை
அடிப்பக்கம் நிலையாக பொருத்தப்பட்ட ஒரு செவ்வகத்துக்கு மேற்பகுதியில் துணிப்பு விசை தரப்பட்டுள்ளது. இதனால் விளையும் துணிப்புத் தகைவு, τ, செவ்வகத்தை உருமாற்றி இணைகரம் ஆக்குகிறது. இது செவ்வக மேற்பகுதிப் பரப்பில் செயல்படுகிறது.


துணிப்புத் தகைவு (shear stress) அல்லது நறுக்குத்தகைவு அல்லது வெட்டு தகைவு என்பது என்பது ஒரு பொருளின் பரப்பளவிற்கு செங்குத்தாகவும் வெட்டுமுகத்துக்கு இணையாகவும் செயல்படும் தகைவு ஆகும். [1]

துணிப்புத் தகைவு துணிப்பு விசைகளால் ஏற்படுகிறது. இந்த விசைகள் பொருளின் வெட்டுமுகத்துக்கு இணையாக எதிரெதிராகச் செயல்படும் சம அளவு விசைகளாகும்.

கத்திரிக்கோல் துணிப்புத் தகைவு தாளுக்குச் செங்குத்தாகவும் தாள் வெட்டுமுகத்திக்கு இணையாகவும் செயல்படுகிறது.

நீர்மம் ஒன்று ஒரு பரப்பில் நகரும் போது, எதிர்படும் பொருட்பரப்புக்குச் செங்குத்தாகச் செயல்பட்டு அது துணிப்புத் தகைவை உண்டாக்குகிறது. மழைநீரால் ஏற்படும் நில அரிப்பு, சாலைத் துண்டிப்பு ஆகியவை இவ்வாறே உண்டாகின்றன.

பொதுத் துணிப்புத் தகைவு

நிரல் (சராசரி) துணிப்புத் தகைவு அல்குப் பரப்பில் செயல்படும் விசையாகும்.:[2]

இங்கு,

τ = துணிப்புத் தகைவு;
F = தரப்பட்ட விசை;
A = அந்த விசை நெறியனுக்கு இணையாக அமையும் பொருளின் குறுக்கு வெட்டுமுகத்தின் பரப்பாகும்.

பிற வடிவங்கள்

தூய நிலை

தூயத் துணிப்புத் தகைவு, தூயத் துணிப்புத் திரிபுக்குக் ( γ ) கீழுள்ள சமன்பாட்டால் உறவுபடுத்தப்படுகிறது:[3]

இங்கு, G என்பது ஒருபடித்தான பொருளின் துணிப்பு மட்டு ஆகும். துணிப்பு மட்டு கீழுள்ள வாய்பாட்டால் தரப்படுகிறது.

இங்கு, E என்பது யங் மட்டு ஆகும்; ν என்பது பாயிசான் விகிதம் ஆகும்.

விட்டத்தின் துணிப்புத் தகைவு

விட்டத் துணிப்புத் தகைவு என்பது விட்டத்துக்குத் தந்த துணிப்பு விசை உருவாக்கும் அகத் துணிப்புத் தகைவாக வரையறுக்கப்படுகிறது.

இங்கு,

f = குறிபிட்ட இடத்தில் செயல்படும் மொத்தத் துணிப்பு விசையாகும்;
Q = பரப்பின் நிலையியல் திருப்புமை (திருப்புதிறன்) ஆகும்;
b = துணிப்புக்குச் செங்குத்தாக அமையும் பொருளின் தடிப்பு (அகலம்) ஆகும்;
I =மொத்த வெட்டுமுகப் பரப்பின் உறழ்வுத் திருப்புமை ஆகும்.

விட்டத் துணிப்புத் தகைவின் வாய்பாடு சுராவ்சுகி துணிப்புத் தகைவு வாய்பாடு எனப்படுகிறது. இந்த வாய்பாட்டை 1855 இல் திமித்ரி இவனோவிச் சுராவ்சுகி முதன்முதலாக கணித வாய்பாடாகக் கொணர்ந்தார்.[4][5]

பகுதி மேலோட்டுத் துணிப்புத் தகைவு

மொத்தல் துணிப்புத் தகைவு

பாய்மங்களில் துணிப்புத் தகைவு

எடுத்துகாட்டு

கார்த்தேய ஆயங்களில்(x,y) ஓர் இருபருமான வெளியைக் கருதுவோம்.இதில் அமையும் பாய்வு விரைவு உறுப்புகள் (u,v)) ஆகும்; இதன் துணிப்புத் தகைவு பின்வரும் எண்சாரத்தால் தரப்படும்:

இந்தச் சமன்பாடு நியூட்டனியல் பாய்வைக் குறிக்கிறது. நடப்பில் இதைப் பின்வருமாறும் கோவைப்படுத்தலாம்:

,

இது ஒருபடித்தல்லாத பாய்வுக்கான பிசுப்புக்கான உயர்நெறிய (tensor)னாகும்:

இது சீரிலாத பெயர்நிலைப் (transient) பாய்வைக் குறிக்கிறது; இது உண்மையில் பாய்வு, அதன் விரைவுகளைச் சாராதிருத்தலைக் காணலாம்:

இது நியூட்டனியப் பாய்வாகும். இதன் பிசுப்புமை பின்வருமாறு:

இதில் பிசுப்புமை, பாய்வு விரைவைச் சார்ந்துள்ளதால் நியூட்டனியல் சாராத பாய்வாகும். மேலும், இந்தப் பாய்வு ஒருபடித்தானதாகும்.இந்த எண்சாரம் முற்றொருமை எண்சாரமாக அமைவதால், இதன் பிசுப்புமை பின்வருமாறு அளவனாக அமைகிறது:

.

உணரிகளால் அளத்தல்

விரியும் சால்பட்டை துணிப்புத் தகைவு உணரி

நுண்கம்பத் துணிப்புத் தகைவு உணரி

மேற்கோள்கள்

  1. Hibbeler, R.C. (2004). Mechanics of Materials. New Jersey USA: Pearson Education. பக். 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-191345-X. 
  2. Hibbeler, R.C. (2004). Mechanics of Materials. New Jersey USA: Pearson Education. பக். 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-191345-X. 
  3. "Strength of Materials". Eformulae.com. பார்க்கப்பட்ட நாள் 24 December 2011.
  4. Лекция Формула Журавского [Zhuravskii's Formula]. Сопромат Лекции (in Russian). பார்க்கப்பட்ட நாள் 2014-02-26.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Flexure of Beams" (PDF). Mechanical Engineering Lectures. McMaster University.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துணிப்புத்_தகைவு&oldid=2515773" இலிருந்து மீள்விக்கப்பட்டது