மேகாலயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: fa:مگالایا
சி தானியங்கி இணைப்பு: it:Meghalaya
வரிசை 84: வரிசை 84:
[[hu:Meghálaja]]
[[hu:Meghálaja]]
[[id:Meghalaya]]
[[id:Meghalaya]]
[[it:Meghalaya]]
[[ja:メーガーラヤ州]]
[[ja:メーガーラヤ州]]
[[ka:მეგჰალაია]]
[[ka:მეგჰალაია]]

17:53, 6 சூன் 2008 இல் நிலவும் திருத்தம்

மேகாலயா

மேகாலயா அமைந்த இடம்
தலைநகரம் ஷில்லாங்
மிகப்பெரிய நகரம் ஷில்லாங்
ஆட்சி மொழி காரோ, காசி, ஆங்கிலம்
ஆளுனர் எம். எம். ஜேகப்
முதலமைச்சர் டி. டி. லபாங்
ஆக்கப்பட்ட நாள் 25 ஜனவரி 1971
பரப்பளவு 22,429 கி.மீ² (22வது)
மக்கள் தொகை (2001)
அடர்த்தி
2,306,069 (23வது)
102/கி.மீ²
மாவட்டங்கள் 7

மேகாலயா (Meghalaya) (1991 சனத்தொகை. 1,774,778) இந்தியாவின் சிறிய மாநிலங்களில் ஒன்று. இது வட கிழக்கு இந்தியாவிலுள்ளது.

அமைவிடம்

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்துக்கும், வங்காள தேசத்துக்கும் இடையில் மலைப்பாங்கான பிரதேசத்தில் ஒரு ஒடுங்கிய பட்டைபோன்று, 300 கிமீ நீளமும், 100 கிமீ அகலமும் உடையதாக உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 22,429 ச. கிமீ ஆகும். இதன் தெற்கெல்லையில் வங்காள தேசமும், வடக்கு எல்லையில் பிரம்மபுத்திரா ஆறும் உள்ளன. இதன் தலை நகரம் ஷில்லாங் ஆகும்.

வரலாறு

மேகாலயா ஆரம்பத்தில் அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. பின்னர் 21 ஜனவரி 1972 ல் தனியான மாகாணமாக ஆனது.

புவியியல்

சேராப்புஞ்சியில் ஒரு பெயர்ப் பலகை

மேகாலயாவின் காலநிலை மிதமானது, ஆனால் அதிக ஈரப்பதன் கொண்டது. ஆண்டுக்கான மழை வீழ்ச்சி இம் மாநிலத்தில் சில இடங்களில் 1200 சமீ வரை காணப்படுவதால், இந்தியாவின் அதிக ஈரமான மாநிலமாக இது உள்ளது. தலை நகர் ஷில்லாங்குக்குத் தெற்கேயுள்ள நகரமான சேராப்புஞ்சி, ஒரு மாதத்தில் உலகிலேயே மிக அதிகமான மழை பெற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் அண்மையிலுள்ள மௌசின்ராம் என்னும் கிராமம் ஓராண்டில் உலகிலேயே அதிக மழை பெற்ற சிறப்பைப் பெற்றுள்ளது. மாநிலத்தின் 1/3 பகுதி காடாகும். மேற்கிலுள்ள காரோ குன்றுகளும், கிழக்கிலமைந்துள்ள காசி குன்றுகள், ஜைந்தியா குன்றுகள் போன்றனவும், உயரமானவை அல்ல. இங்கே ஷில்லாங் சிகரம், 1965 மீ உயரத்துடன் அதியுயர்ந்ததாக உள்ளது. தனித்துவமான சுண்ணாம்புக்கள் அமைப்புக்களோடு கூடிய பல குகைகள் இங்கே இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

பண்பாடு

பண்பாட்டு அடிப்படையில், சனத்தொகையில் பெரும்பாலானவர்கள், "காசி"கள், "ஜைந்தியா"க்கள், "காரோ"க்கள் என்னும் இனத்தவர்களாவர்.

தீவிரவாத பிரச்சனைகள்

மாநில அரசு சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதில் அக்கறை காட்டினாலும், தீவிரவாத இயக்கங்கள் காரோ குன்றுகளைத் தங்களது நடவடிக்கைகளுக்கான தளமாகப் பயன்படுத்துவதால் இம் முயற்சி அதிக வெற்றியடையவில்லை.

நிர்வாகம்

மாவட்டங்கள்

குறிப்பிடத்தக்க பிரமுகர்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகாலயா&oldid=250438" இலிருந்து மீள்விக்கப்பட்டது