"மம்மி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,048 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Mummy in Vatican Museums.jpg|thumb|200px|[[வத்திக்கான் நகர்|வத்திகன்]] அருங்காட்சியகத்தில் உள்ள ஓர் எகிப்திய மம்மி]]
'''மம்மி''' (Mummy) என்பது தற்செயலாகவோ, திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். இயற்கையாகவே சில வேதிப்பொருள்களாலும், கடும் குளிராலும் இறந்த உயிரினத்தின் சடலம் பாதுகாக்கப்படுவது உண்டு. இவ்வாறு காலத்தால் அழியாத மனித மம்மிகளையும், மற்ற விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராட்சியாளர்கள் கண்டுடெடுத்துள்ளனர். எகிப்தில் மட்டும் நூறு கோடி விலங்குகளின் மம்மிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகம் [[பூனை]] ஆகும். அதற்கு அடுத்தபடியாக அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டவை புனித இபிஸ் எனப்படும் கொக்கைப் போன்ற ஆப்ரிக்க கண்டத்தின் பறவை ஆகும். இதன் காலம் [[கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு|கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்புப்படி]] ஏறத்தாழ கி.மு 450 முதல் கி.மு 250 ஆகும்.
== சொற்றோற்றம் ==
மம்மி என்ற சொல் ஆங்கிலத்தின் ''மம்மி'' என்ற சொல்லிருந்தும், அச்சொல் [[இலத்தீன்]] மொழியின் ''மம்மியா'' என்ற பதத்திலிருந்தும், இலத்தீன் மொழிச் சொல், பாரசீக மற்றும் அராபிய மொழிகளில் உள்ள ''மும்மியா'' (مومية) என்ற பதத்திலிருந்தும் தோன்றியதாக அறியப்படுகிறது. பாரசீக மொழியில் இப்பதம் நிலக்கீல் எனப் பொருள்படும். மம்மிகளின் நிறம் கருநிற நிலக்கீலின் நிறத்தை ஒத்திருப்பதாலும், எகிப்திய சடலப்பதனிடல் இப்பொருள் உபபோகப்படுத்தப்பட்டதாக கூறப்படுவதாலும் இப்பெயர் சூட்டப்பட்டதாக அறிய முடிகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2497447" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி