1991 இந்தியப் பொதுத் தேர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 122: வரிசை 122:


[[பகுப்பு:1991 தேர்தல்கள்]]
[[பகுப்பு:1991 தேர்தல்கள்]]
[[பகுப்பு:இந்தியப் பொதுத் தேர்தல்கள்]]

06:53, 4 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்

இந்தியப் பொதுத் தேர்தல், 1991

← 1989 மே 20, ஜுன் 12 மற்றும் 15, 1991 [1] 1996 →

மக்களவைக்கான 543 தொகுதிகள்
  First party Second party Third party
 
தலைவர் பி. வி. நரசிம்ம ராவ் எல். கே. அத்வானி வி. பி. சிங்
கட்சி காங்கிரசு பாஜக ஜனதா தளம்
கூட்டணி காங்கிரசு பாஜக கூட்டணி தேசிய முன்னணி
தலைவரின் தொகுதி நந்தியால் காந்திநகர் ஃபதேபூர்
வென்ற தொகுதிகள் 244 120 69
விழுக்காடு 35.66 20.04 11.77

முந்தைய இந்தியப் பிரதமர்

சந்திரசேகர்
சமாஜ்வாடி ஜனதாக் கட்சி

இந்தியப் பிரதமர்

பி. வி. நரசிம்ம ராவ்
காங்கிரசு

இந்தியக் குடியரசின் பத்தாம் நாடாளுமன்றத் தேர்தல் 1991 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பத்தாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. காங்கிரசுத் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையில் இந்திய தேசிய காங்கிரசு வென்று பி. வி. நரசிம்ம ராவ் பிரதமரானார்.

பின்புலம்

முந்தைய தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய முன்னணி அரசு, ஒற்றுமையின்மையால் இரு ஆண்டுகளில் கவிழ்ந்தது. அதன் முக்கிய அங்கமான ஜனதா தளம் இரண்டாகப் பிளவுற்று சந்திரசேகர் தலைமையில் சவாஜ்வாடி ஜனதாக் கட்சி உருவானது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுடுப்பில் வி. பி. சிங் தோற்று சந்திரசேகர் பிரதமரானார். சந்திரசேகர் அரசுக்கு ராஜீவ் காந்தியின் காங்கிரசு கட்சி வெளியிலிருந்து ஆதரவளித்தது. ஆனால் விரைவில் ஆதரவை விலக்கிக் கொண்டதால், சந்திர சேகர் அரசும் கவிழ்ந்து, புதிதாக தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலில் நான்கு முனைப்போட்டி காணப்பட்டது - காங்கிரசு, பாரதீய ஜனதா கட்சி, ஜனதா தளம், சமாஜ்வாடி ஜனதாக் கட்சி ஆகியவை தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் களத்தில் இருந்தன.

தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் பி. வி. நரசிம்ம ராவ் காங்கிரசு தலைவரானார். ராஜீவ் படுகொலையினால் எழுந்த அனுதாப அலையால் காங்கிரசு நிறைய இடங்களில் வென்று முதலிடத்தில் வந்தது. தனிப்பெரும்பான்மை கிட்டவில்லையென்றாலும் தனிப்பெரும் கட்சி என்பதால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. நரசிம்ம ராவ் பிரதமரானார்.

முடிவுகள்

மொத்தம் 55.71 % வாக்குகள் பதிவாகின

கட்சி % இடங்கள்
காங்கிரசு 35.66 244
பாஜக 20.04 120
ஜனதா தளம் 11.77 59
சிபிஎம் 6.14 35
சிபிஐ 2.48 14
தெலுங்கு தேசம் 2.96 13
அதிமுக 1.61 11
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 0.53 6
ஜனதா கட்சி 3.34 5
புரட்சிகர சோசலிசக் கட்சி 0.63 5
சிவ சேனா 0.79 4
ஃபார்வார்டு ப்ளாக் 0.41 3
பகுஜன் சமாஜ் கட்சி 1.8 3
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 0.3 2
இந்திய காங்கிரசு (சோசலிசம்) 0.35 1
அசாம் கன பரிசத் 0.54 1
கேரளா காங்கிரசு (மணி) 0.14 1
மணிப்பூர் மக்கள் கட்சி 0.06 1
நாகாலாந்து மக்கள் குழு 0.12 1
சிக்கிம் சங்கராம் பரிசத் 0.04 1
அசாம் சிறுபான்மையினர் முன்னணி 0.07 1
மஜ்லீஸ்-ஈ-இத்தீஹாதுல் முஸ்லீமன் 0.16 1
சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு 0.5 1
அரியானா முன்னேறக் கட்சி 0.12 1
ஜனதா தளம் (குஜராத்) 0.5 1
சுயெட்சைகள் 4.01 1

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்