ஹம்சத்வனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 34: வரிசை 34:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references />
<references />

== வெளியிணைப்புகள் ==
* [https://www.youtube.com/watch?v=Lhc_H9q3Sr4 Raga Hamsadhwani] - டி. எம். கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி


{{ஜன்னிய இராகங்கள்}}
{{ஜன்னிய இராகங்கள்}}

05:30, 18 பெப்பிரவரி 2018 இல் நிலவும் திருத்தம்

ஹம்சத்வனி 29 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ இராகம் ஆகும்.

இதர அம்சங்கள்

ஹம்சத்வனி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி23 ப நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 ப க3 ரி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • ஆரோகண அவரோகணத்தில் ம, த வர்ஜம். இது உபாங்க இராகம் ஆகும்.
  • மூர்ச்சனாகாரக இராகம். இதன் பஞ்சம மூர்ச்சனையே நாகஸ்வராளி இராகம் ஆகும்.
  • ஜண்டை சுரக்கோர்வைகளும், தாட்டு சுரக்கோர்வைகளும் இவ்விராகத்திற்கு இனிமையைக் கொடுக்கின்றன.
  • அரங்கிசை நிகழ்ச்சிகளிலும், பிற நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் பாடுவதற்கு மிகப் பொருத்தமான இராகம். வீரச்சுவை நிரம்பியது.
  • முத்துஸ்வாமி தீஷிதர் அவர்களின் தந்தையாகிய இராமசாமி தீஷிதர் (1735-1817) இந்த இராகத்தைக் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகின்றது.

உருப்படிகள்

  1. வர்ணம் : "ஜலஜாக்ஷா" - ஆதி - மானம்புசாவடி வெங்கடசுப்பைய்யர்.
  2. கிருதி : "வாதாபி கணபதீம்" - ஆதி - முத்துஸ்வாமி தீட்சிதர்.
  3. கிருதி : "ரகு நாயகா" - ரூபகம் - தியாகராஜர்.
  4. கிருதி : "கந்தனைக் காணாமல்" - ஜம்பை - பெரியசாமி தூரன்.
  5. திருவருட்பா : "தயாகி தந்தையும்" - கண்ட சாபு - இராமலிங்க அடிகள்.


ஹம்சத்வனி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்

  1. சிறீரங்க ரங்கநாயகி... - மகாநதி
  2. வா வா வா கண்ணா வா... - வேலைக்காரன்
  3. திறக்காதக் காட்டுக்குள்ளே... - என் சுவாசக் காற்றே
  4. தேர்கொண்டுவந்தவன்... - எனக்குள் ஒருவன்
  5. மௌனம்யாவும் மலரும்... - மயூரி
  6. காலம் மாறலாம்... - வாழ்க்கை

மேற்கோள்கள்


வெளியிணைப்புகள்

  • Raga Hamsadhwani - டி. எம். கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹம்சத்வனி&oldid=2486943" இலிருந்து மீள்விக்கப்பட்டது