டி. டி. வி. தினகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான்றுகளை இணைத்துள்ளேன் ... ....
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎வழக்குகள்: சான்று இணைக்கப்பட்டுள்ளது .. ...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 32: வரிசை 32:


== வழக்குகள் ==
== வழக்குகள் ==
1996-ஆம் ஆண்டில் இவர் மீதான அந்நிய செலாவனி மோசடி வழக்கில் 2016-இல் அமலாக்கத் துறை 28 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
1996-ஆம் ஆண்டில் இவர் மீதான அந்நிய செலாவனி மோசடி வழக்கில் 2016-இல் அமலாக்கத் துறை 28 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. <ref>{{cite web|url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=270708|title=அன்னிய செலாவணி மோசடி வழக்கு: டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்|access date= பிப்ரவரி 4, 2018}}தினகரன் </ref>


[[செயலலிதா சொத்து குவிப்பு வழக்கு|செயலலிதா சொத்து குவிப்பு வழக்கில்]] ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டி. டி. வி. தினகரன் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.<ref>[http://www.thehindu.com/news/national/tamil-nadu/How-TTV-Dinakaran-got-relief-from-Jayalalithaa-wealth-case/article17307798.ece How TTV Dinakaran got relief from Jayalalithaa wealth case]</ref>
[[செயலலிதா சொத்து குவிப்பு வழக்கு|செயலலிதா சொத்து குவிப்பு வழக்கில்]] ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டி. டி. வி. தினகரன் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.<ref>[http://www.thehindu.com/news/national/tamil-nadu/How-TTV-Dinakaran-got-relief-from-Jayalalithaa-wealth-case/article17307798.ece How TTV Dinakaran got relief from Jayalalithaa wealth case]</ref>

17:43, 4 பெப்பிரவரி 2018 இல் நிலவும் திருத்தம்

டி.டி.வி. தினகரன்
பிறப்புதிசம்பர் 13, 1963 ( 1963 -12-13) (அகவை 60)
திருத்துறைப்பூண்டி
இருப்பிடம்5, நான்காவது தெரு, வெங்கடேஸ்வரா நகர், அடையாறு, சென்னை
வாழ்க்கைத்
துணை
டி. அனுராதா
பிள்ளைகள்ஒன்று
உறவினர்கள்வி. என். சுதாகரன், வி. பாஸ்கரன், வி. கே. சசிகலா, எம். நடராஜன், ஜெ. இளவரசி, டாக்டர். எஸ். வெங்கடேஷ்

டி. டி. வி. தினகரன் (T. T. V. Dhinakaran) தமிழ்நாட்டு அரசியல்வாதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளர் ஆவார்.[1] இவர் வி. கே. சசிகலாவின் மறைந்த அக்காளான வனிதாமணியின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார்.[2][3] இவரது தம்பி வி. என். சுதாகரன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக சிறிது காலம் இருந்தவர்.[சான்று தேவை]

டி. டி. வி. தினகரன் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1999–2004) பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004- (2004–2010)இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] அன்னியச் செலாவணி வழக்கில் தான் சிங்கப்பூர் நாட்டின் குடிமகன் என தினகரன் அறிவித்தார்.[5]

ஜெயலலிதாவால், டிசம்பர் 2011-இல் டி. டி. வி. தினகரன் உள்ளிட்ட வி. கே. சசிகலாவின் 12 குடும்ப உறுப்பினர்கள் நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டனர்.[6] பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளாராகப் பதவி ஏற்றுக் கொண்ட வி. கே. சசிகலா, டி. டி. வி. தினகரனை, பிப்ரவரி 2017-இல் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.[7][8]

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அதிமுகவின் எடப்பாடி க. பழனிசாமி தலைமையிலான அரசை 18 பிப்ரவரி 2017-இல் சட்டமன்றத்தில் வெற்றி பெறச் செய்ததில் டி. டி. வி. தினகரன் பெரும்பங்காற்றியவர். இராதா கிருட்டிணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளராக போட்டியிட்டார்.[9] இத்தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்ததாக எழுந்த புகாரில், இந்தியத் தேர்தல் ஆணையம் இத்தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்தது.[10]

23.11.17 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் இவரிடம் இருந்தது பிரிக்கப்பட்டது அதில் இருந்து இது வரை சின்னம் இல்லாத கட்சி தலைவராக இருந்து வருகிறார். [11]

21 திசம்பர், 2017 அன்று நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 89,063 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[12]

வழக்குகள்

1996-ஆம் ஆண்டில் இவர் மீதான அந்நிய செலாவனி மோசடி வழக்கில் 2016-இல் அமலாக்கத் துறை 28 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. [13]

செயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டி. டி. வி. தினகரன் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.[14]

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தைத் தங்கள் அணிக்குப் பெறத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுக்க முயன்றார் என தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.[15] பின்பு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

  1. "பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்!". 18/03/2016. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. டி.டி.வி. தினகரனின் பின்னணி
  3. எம்ஜிஆரின் அதிமுகவை வழிநடத்தப்போகும் டிடிவி தினகரனின் "தகுதி" என்ன தெரியுமா?
  4. http://research.omicsgroup.org/index.php/Rajya_Sabha_members_from_Tamil_Nadu
  5. TTV Dinakaran: The nephew Sasikala believes in
  6. Jayalalithaa expels TTV Dinakaran
  7. VK Sasikala Placed Nephew In Charge Of Party. It Can't Get Enough Of Him
  8. Life and times of TTV Dinakaran — Sasikala's new pawn in TN's political battle
  9. RK Nagar bypoll: Dinakaran is AIADMK candidate
  10. பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை
  11. "இரட்டை இலை சின்னம் தீர்ப்பு".
  12. https://tamil.oneindia.com/news/tamilnadu/rk-nagar-counting-election-result-live-306109.html
  13. "அன்னிய செலாவணி மோசடி வழக்கு: டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்". {{cite web}}: Unknown parameter |access date= ignored (|access-date= suggested) (help)தினகரன்
  14. How TTV Dinakaran got relief from Jayalalithaa wealth case
  15. "AIADMK's TTV Dinakaran Arrested At Midnight After 4 Days Of Questioning". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 25, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._டி._வி._தினகரன்&oldid=2480046" இலிருந்து மீள்விக்கப்பட்டது