அரும்பைத் தொள்ளாயிரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10: வரிசை 10:
* பாட்டுடைத்தலைவனின் வெற்றிகள்
* பாட்டுடைத்தலைவனின் வெற்றிகள்
காலிங்கராயன், நரலோக வீரன் என்னும் சிறப்புப் பெயர்கள் மணவிற் கூத்தனுக்கு உண்டு என்பதை அவன் திருப்பணி செய்த கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. விக்கிம சோழன் உலாவில் இவன் ‘கலிங்கர் கோன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். விழிஞம், கொல்லம், கொங்கம், இரட்டம், ஒட்டம், கலிங்கம் ஆகிய ஊர்களில் இவன் வெற்றி கண்டவன். <ref>[[விக்கிரம சோழன் உலா]] கண்ணி 77-79</ref> இத்தகைய சிறப்புப் பெற்றவன்மீது இந்த அரும்பைத் தொள்ளாயிரம் பாடப்பட்டுள்ளது.

==நரலோகவீரன்==

சோழப் பேரரசின் மன்னனாக விளங்கிய விக்கிரம சோழனது காலத்தில் முதலமைச்சர் மற்றும் படைத் தளபதியாக இருந்த நரலோகவீரன் என்பவன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பல திருப்பணிகளை செய்துள்ளான். குறிப்பாக சிதம்பரம் கோயிலை சுற்றி அகன்ற சாலைகளை ஏற்படுத்தி, இரவு நேரங்களில் மக்கள் அச்சமின்றி செல்வதற்காக தெரு விளக்குகளை ஏற்படுத்தி இரவு பகலாகும்படியாக திகழச்செய்தவன் இந்த நரலோக வீரன். மேலும் விக்கிரம சோழன் தமது பெயரில் விக்கிரமசோழன் திருவீதி என்ற பெருவீதி தில்லை மாநகரில் அமைத்ததை பற்றி இவனது மெய்கீர்த்தி குறிப்பிடுகிறது. இத்திருவீதியின் அழகைப்பற்றி குலோத்துங்கன் பிள்ளைத் தமிழில் ‘’ விக்கிரம சோழன் தெங்குத் திருவீதி ‘’ என்று ஒட்டக்கூத்தர் குறிப்பிடுகிறார்.

மேலும் இந்த நரலோக வீரன் நடராஜர் கோயிலுக்காக சிதம்பரத்தில் ஐம்பதாயிரம் பாக்கு மரங்களை நட்டுவித்தான். கோயிலின் கிழக்கு பகுதியில் இருந்து கடற்கரை வரை நந்தவனங்களை ஏற்படுத்தி தில்லை நகரை பசுமை நகரமாக மாற்றினான். மாசி மகத்தன்று நடராஜர் கடலுக்குச் சென்று புனித நீராடுவதற்காக சிதம்பரம் நகரிலிருந்து கடற்கரை வரை சாலை அமைத்தான். மேலும் அங்கு வரும் பக்தர்களின் தாகம் தீர்க்க கடற்கரை பகுதியில் மூன்று நன்னீர் குளங்களை வெட்டுவித்தான். இச்செய்திகளை இவனது கல்வெட்டின் மூலம் அறியமுடிகிறது. மேலும் சிதம்பரம் கோயிலுக்கு மட்டும் 73 நந்தவனங்கள் நகரை சுற்றி ஏற்படுதப்பட்டிருந்ததையும் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

13:43, 27 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

அரும்பை என்பது அரும்பாக்கம்.
அரும்பைத் தொள்ளாயிரம் என்னும் நூல் அரும்பாக்கத்தில் வாழ்ந்த பெருமகன் சிறப்புகளைக் கூறும் நூல். 900 பாடல்களைக் கொண்ட நூல். இந்த நூலைப்பற்றிய குறிப்பு மட்டுமே உள்ளது. நூல் கிடைக்கவில்லை.

  • பாட்டிடைத் தலைவன்

விக்கிரம சோழனின் படைத்தலைவனாக விளங்கியவன் அரும்பாக்கம் மணவிற்கூத்தன்.
இவன் படைத்தலைவனாக இருந்த காலத்தில் தில்லை, திருவதிகை வீரட்டானம் ஆகிய கோயில்களில் திருப்பணி செய்தவன். இச்சிறப்புப் பற்றி இந்நூல் இவன்மேல் பாடப்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

  • நூல் பற்றிய குறிப்பு

எண்ணால் பெயர் பெற்ற நூலுக்கு எடுத்துக்காட்டு தரும்போது முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் ஆகிய நூல்கள் குறிப்பிடப்படுகின்றன. [1]

  • பாடியவர்

இதனைப் பாடியவர் ஒட்டக்கூத்தர். சரசுவதி தம்பலம் கொடுக்க்க் கவிதை உண்டாகிய கூத்த முதலியாரை, அரும்பைத் தொள்ளாயிரம் பாடும்போது, விக்கிரம சோழன் கேட்டு, ஒரு கவியை ஒட்டச்சொல் என்று சொன்னபோது, ஒட்டக்கூத்தர் பாடியது என்ற தலைப்போடு, தமிழ் நாவலர் சரிதை நூலில் ஒரு பாடல் வருகிறது. [2]

  • பாட்டுடைத்தலைவனின் வெற்றிகள்

காலிங்கராயன், நரலோக வீரன் என்னும் சிறப்புப் பெயர்கள் மணவிற் கூத்தனுக்கு உண்டு என்பதை அவன் திருப்பணி செய்த கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. விக்கிம சோழன் உலாவில் இவன் ‘கலிங்கர் கோன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். விழிஞம், கொல்லம், கொங்கம், இரட்டம், ஒட்டம், கலிங்கம் ஆகிய ஊர்களில் இவன் வெற்றி கண்டவன். [3] இத்தகைய சிறப்புப் பெற்றவன்மீது இந்த அரும்பைத் தொள்ளாயிரம் பாடப்பட்டுள்ளது.

நரலோகவீரன்

சோழப் பேரரசின் மன்னனாக விளங்கிய விக்கிரம சோழனது காலத்தில் முதலமைச்சர் மற்றும் படைத் தளபதியாக இருந்த நரலோகவீரன் என்பவன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பல திருப்பணிகளை செய்துள்ளான். குறிப்பாக சிதம்பரம் கோயிலை சுற்றி அகன்ற சாலைகளை ஏற்படுத்தி, இரவு நேரங்களில் மக்கள் அச்சமின்றி செல்வதற்காக தெரு விளக்குகளை ஏற்படுத்தி இரவு பகலாகும்படியாக திகழச்செய்தவன் இந்த நரலோக வீரன். மேலும் விக்கிரம சோழன் தமது பெயரில் விக்கிரமசோழன் திருவீதி என்ற பெருவீதி தில்லை மாநகரில் அமைத்ததை பற்றி இவனது மெய்கீர்த்தி குறிப்பிடுகிறது. இத்திருவீதியின் அழகைப்பற்றி குலோத்துங்கன் பிள்ளைத் தமிழில் ‘’ விக்கிரம சோழன் தெங்குத் திருவீதி ‘’ என்று ஒட்டக்கூத்தர் குறிப்பிடுகிறார்.

       மேலும் இந்த நரலோக வீரன் நடராஜர் கோயிலுக்காக சிதம்பரத்தில் ஐம்பதாயிரம் பாக்கு மரங்களை நட்டுவித்தான். கோயிலின் கிழக்கு பகுதியில் இருந்து கடற்கரை வரை நந்தவனங்களை ஏற்படுத்தி தில்லை நகரை பசுமை நகரமாக மாற்றினான். மாசி மகத்தன்று நடராஜர் கடலுக்குச் சென்று புனித நீராடுவதற்காக சிதம்பரம் நகரிலிருந்து கடற்கரை வரை சாலை அமைத்தான். மேலும் அங்கு வரும் பக்தர்களின் தாகம் தீர்க்க கடற்கரை பகுதியில் மூன்று நன்னீர் குளங்களை வெட்டுவித்தான். இச்செய்திகளை இவனது கல்வெட்டின் மூலம் அறியமுடிகிறது. மேலும் சிதம்பரம் கோயிலுக்கு மட்டும் 73 நந்தவனங்கள் நகரை சுற்றி ஏற்படுதப்பட்டிருந்ததையும் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. 

கோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து

மாசில் முடிமுதலா முற்றணிகள் சாத்தினான் வேளான் குடிமுதலான் தொண்டையர் கோன்" என்று நரலோகவீரனை போற்றுகிறது

  • இந்த நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

அடிக்குறிப்பு

  1. இலக்கண விளக்கம் பாட்டியல் உரை.
  2. ஒட்டக்கூத்தர் அரும்பைத் தொள்ளாயிரம் பாடும்போது, அதில் லரும் ஒரு பாடலை ஒட்டி மற்றொரு பாடலைப் பாடுமாறு விக்கிரம சோழன் கேட்டதாகவும், ஒட்டக்கூத்தர் சோழன் விருப்பப்படி ஒட்டிப் பாடியதால் ‘ஒட்டக்கூத்தர்’ என்னும் பெயரைப் பெற்றார் என்னும் செய்தியும் கூறப்படுகிறது.
  3. விக்கிரம சோழன் உலா கண்ணி 77-79
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரும்பைத்_தொள்ளாயிரம்&oldid=2433643" இலிருந்து மீள்விக்கப்பட்டது