வெடிமருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 78: வரிசை 78:
* {{Citation |last=Ágoston |first=Gábor |year=2008 |title=Guns for the Sultan: Military Power and the Weapons Industry in the Ottoman Empire |publisher=Cambridge University Press |isbn=0-521-60391-9}}
* {{Citation |last=Ágoston |first=Gábor |year=2008 |title=Guns for the Sultan: Military Power and the Weapons Industry in the Ottoman Empire |publisher=Cambridge University Press |isbn=0-521-60391-9}}
* {{Citation |last=Agrawal |first=Jai Prakash |title=High Energy Materials: Propellants, Explosives and Pyrotechnics |year=2010 |publisher=Wiley-VCH}}
* {{Citation |last=Agrawal |first=Jai Prakash |title=High Energy Materials: Propellants, Explosives and Pyrotechnics |year=2010 |publisher=Wiley-VCH}}
* {{Citation |last=al-Hassan |first=Ahmad Y. |author-link=Ahmad Y Hassan |year=2001 |contribution=Potassium Nitrate in Arabic and Latin Sources |contribution-url=http://www.history-science-technology.com/Articles/articles%202.htm |title=History of Science and Technology in Islam |url=http://www.history-science-technology.com |accessdate=23 July 2007}}.
* {{citation| editor-last = Buchanan | editor-first = Brenda J. | title = Gunpowder, Explosives and the State: A Technological History | place=Aldershot | publisher =Ashgate | year =2006 | isbn = 0-7546-5259-
* {{citation| editor-last = Buchanan | editor-first = Brenda J. | title = Gunpowder, Explosives and the State: A Technological History | place=Aldershot | publisher =Ashgate | year =2006 | isbn = 0-7546-5259-
* {{Citation |last=Chase |first=Kenneth |year=2003 |title=Firearms: A Global History to 1700 |publisher=Cambridge University Press |isbn=0-521-82274-2}}.
* {{Citation |last=Chase |first=Kenneth |year=2003 |title=Firearms: A Global History to 1700 |publisher=Cambridge University Press |isbn=0-521-82274-2}}.

10:43, 4 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

FFG மணியளவுள்ள, துப்பாக்கிக் குழல்களில் புகட்டுவதற்கான, தற்காலப் பதிலி வெடித்தூள்
FFFg மணியளவுள்ள, சுடுகலன்களிலும் கைத்துப்பாக்கிகளிலும் குழல்களுக்குப் புகட்டும், வெடிமருந்துத் தூள். ஒப்பீட்டுக்காக 24 மிமீ அமெரிக்கக் குவார்ட்டர் நாணயம் காட்டப்பட்டுள்ளது.


A modern black powder substitute for muzzleloading rifles in FFG size
Black powder for muzzleloading firearms and pistols in FFFg granulation size. U.S. quarter (diameter 24 mm) for comparison.

வெடிமருந்து (Gunpowder) என்பது மிகப் பழைய வேதியியல் வெடிபொருளாகும். இது கந்தகம், கரி, பொட்டாசியம் நைத்திரேட்டு ஆகியவற்றைக் கொண்ட ஒரு வெடிபொருட் கலவை ஆகும். இதில் உள்ள கந்தகமும் கரியும் எரிபொருள்களாகவும் பொட்டாசியம் நைட்டிரேட்டு உயிரகமேற்றியாகவும் பயன்படுகின்றன.[1][2] மிக விரைவாக எரிந்து சூடான திண்மங்களையும் பெரிய பருமனளவுள்ள வளிமங்களையும் உண்டாக்கக்கூடிய இயல்பால், இது சுடுகலன்களில் உந்துவிசையை உருவாக்கவும், பட்டாசுகளிலும் ஏவூர்திகளிலும் பயன்படுகின்றது. மேலும் கல்லுடைப்பிலும் சுருங்கைகளிலும் சாலை அமைக்கவும் கூட இது பயன்படுகிறது.

வெடிமருந்து 9 ஆம் நூற்றாண்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு, 13 ஆம் நூற்றாண்உக்குள் ஐரோப்பாசிய முழுவதும் பரவிவிட்டது.[3] Most arguments on early gunpowder developments now revolve around how much Chinese advancements in gunpowder influenced gunpowder warfare in the Middle East and Europe, வெடிமருந்தின் துல்லியமான தோற்ற இடம் குறித்த விவாதம் இன்றும் தொடர்ந்தவண்ணமே உள்ளது.[4][5]

வெடிமருந்து, சிதைவடையும்போது ஒப்பீட்டளவில் மெதுவாகச் சிதைவடைவதால் அதனால் மெதுவாக எரிதலாலும் தாழ்நிலை வெடிபொருளாக வகைப்படுத்தப்படுகிறது. உயர்நிலை வெடிபொருட்கள் வெடிப்புத் தூண்டலினால் (detonation) ஒலியினும் மிகுந்த வேகம் கொண்ட அழுத்த அலைகளை உருவாக்கும்போது, தாழ்நிலை வெடிபொருட்கள் எரிந்து ஒலியினும் குறைவான வேகம் கொண்ட அழுத்த அலைகளையே உருவாக்குகின்றன. வெடிமருந்து எரிவதனால் உருவாகும் வளிமங்களின் அழுத்தம் துப்பாக்கிக் குண்டுகளை உந்துவதற்குப் போதுமானது எனினும், சுடுகலனின் குழாயைச் சிதைக்கும் அளவுக்குப் போதியது அல்ல. இதனால், பாறைகளையோ உறுதியாக அரண்களையோ உடைப்பதற்கு "வெடிமருந்து" பொருத்தமானது அல்ல. இத்தகைய தேவைகளுக்கு டி.என்.டி எனப்படும் முந்நைத்திரோ தொலுயீன் போன்ற உயர் வெடிபொருட்கள் தேவைப்படுகின்றன. என்றாலும் 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் உயர்வெடிபொருள்கள் தோன்றும் வரை படைத்துறையிலும் தொழில்துறையிலும் பயன்பாட்டி இருந்துவந்தது. மேலும் டைனமைட், அம்மோனியம் நைட்டிரேட்டு/எரிம எண்ணெய் (ANFO) ஆகியவற்றை ஒப்பிடும்போது இதன் அடக்கவிலை கூடுதலாக அமைவதால் வழக்கில் இருந்து வீழ்ந்துவிட்டது. .[6][7] இன்று வெடிமருந்து வேட்டையாடல், இலக்கு சுடுதல் பயிற்சி, எரிகுண்டற்ற வரலாற்று நிகழ்ச்சிப்படம் எடுத்தல் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுகிறது.

வரலாறு

வெடிமருந்துக்கான எழுதப்ப்ட்ட மிகப் பழைய வாய்பாடு, வூசிங் சாங்யாவோ , 1044 AD.
காற்றுக் குண்டை நோக்கிச் செல்லும் ஒரு மாயத் தீ விண்கல், குவோலாங்யிங் கி.பி. 1350.
யப்பானில் Tetsuhau (இரும்புக் குண்டு) அல்லது சீன மொழியில் Zhentianlei (இடி நொறுக்கும் குண்டு)எனப்படும் கற்கலக் குண்டு, தகாசிமா கப்பற்சிதிலத்தில் கிடைத்தது. அக்தோபர் 2011, யப்பானை மங்கோலியர்கள் முற்றுகையிட்ட (கி.பி 1271–1284) காலத்தினது.



மிகப் பழைய வெடிமருந்துக்கான வாய்பாடு சீனாவில் 11 ஆம் நூற்றாண்டில் சாங் பேரரசில் எழுதப்பட்ட வூசிங் சாங்யாவோ எனும் பனுவலில் உள்ளது.[8] என்றாலும் 10 ஆம் நூற்றாண்டு முதலே சீனாவில் தீயம்புகளில் வெடிமருந்து பயன்பட்டுள்ளது. பிந்தைய நூற்றாண்டுகளில், சீனாவில் குண்டுகள், தீயெறிகள், சுடுகலன் போன்ற வெடிமருந்து ஆயுதங்கள் தோன்றி அங்கிருந்து ஐரோப்பாசியா முழுவதும் பரவியுள்ளது.[3] மிகப் பழைய வெடிமருந்து பற்றிய மேலைய நாடுகள் சார்ந்த விவரம் 13 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய மெய்யியலாராகிய உரோசர் பேக்கன் எழுதிய நூல்களில் இருந்து கிடைக்கிறது.[9]

வெடிமருந்து தோன்றிய காலத்தை அறிவதில் உள்ல பெருஞ்சிக்கலே அவை உருவாகிய காலத்துக்கு நெருங்கிய கால விவரிப்ப்ய்கள் அல்லது படிமங்கள் கிடைக்காத்தே ஆகும். கிடைக்கும் முதல் பதிவுகள், பெரும்பாலும் நிகழ்வுகள் தோன்றிய கலத்துக்கு சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரானதாகவே அமைகின்றன. இவை தகவல் தருவோரின் சமகால பட்டறிவால் கைவண்ணம் கலந்த்தாகவே அமைகிறது.[10]சீன இரசவாத நூல்களை ஆங்கிலத்தில் உள்ள நன்கு வரையறுத்த அண்மைய அறிவியல் வளத்துடன் துல்லியமாக மொழிபெயர்ப்பது அரிய பணியாகும். அவை நிகழ்வுகளை உருவகமுறையிலேயே விவரிக்கின்றன. மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் கலைநய விடுதலையை பெற்றிருந்ததால் பிழைகளுக்கும் அல்லது குழம்பிய விளக்கங்களுக்குமே இட்டுச் சென்றன.[11]எடுத்துகாட்டாக, naft எனும் அரபுச் சொல் நாப்தாவைக் குறிப்பதில் இருந்து பெயர்ந்து வெடிமருந்தைக் குறிப்பதாகவும் pào எனும் சீனமொழிச் சொல் catapult இல் இருந்து cannon ஐக் குறிப்பதாகவும் பொருண்மை மாற்றத்துக்கு ஆட்படுகிறது.[12] இது வேர்ச்சொல்லின் அடிப்படையில் உண்மையான வெடிமருந்தின் தோற்றத்தை அறிவதில் விவாதங்களை எழுப்புகிறது. அறிவியல் தொழில்நுட்ப வரலாற்றாசிரியரான பெர்ட் எசு. ஃஆல் பின்வரும் கவனிப்பைக் கூறுகிறார்:

சொல்லாமலே இது நமக்கு விளங்குவதே. என்றாலும், வரலாற்றாசிரியர்கள் தம் சொந்தநிலையை எளிதாக நிலைநிறுத்த இவ்வகைச் சொற்குழப்பங்கள் ஊடாக செறிவான பொருளைக் காண முயல்கின்றனர்.[13]

பெர்ட் எசு. ஃஆல்


சீனா

கி.பி. முதல் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே சீனர் நைட்டிரேட்டு எனும் (வெடியுப்பு) பற்றி அறிந்திருந்தனர். வெடியுப்பு சீச்சுவான், சாங்கி, சாந்தோங் ஆகிய மாநிங்களில் செய்யப்பட்டது.[14] பல்வேறு மருந்துச் சேர்மான்ங்களிலும் வெடியுப்பும் கந்தகமும் பயன்படுத்தியமைக்கான உறுதியான சான்று கிடைக்கிறது.[15] 492 ஆம் ஆண்டைச் சார்ந்த ஒரு சீன இரசவாத நூல் வெடியுப்பு ஊதா நிறத்தில் எரிவதாக்க் கூறுகிறது. இக்குறிப்பு பிற கனிம உப்புகளில் இருந்து பிரித்துணரும் நம்பத்தகுந்த நடைமுறை இருந்துள்ளதை அறிவிக்கிறது. இது இரசவாதிகள் தூய்மிப்பு நுட்பங்களை ஒப்பிடவும் மதிப்பிடவும் உதவியுள்ளது; வெடியுப்பு தூய்மிப்பு பற்றிய மிகப் பழைய விவரங்கள் இலத்தீன மொழியில் கி.பி. 1200 அளவில் தான் கிடைக்கின்றன.[16]

இந்த வெடிகலவைகளின் தீய விளைவுகள், 9 ஆம் நூற்றாண்டு தாவோ மெய்யியல் நூலாகிய சென்யுவான் மியாதாவோ யாவோலுயே இல் விவரிக்கப்படுகின்றன:[17] "சிலர் கந்தகத்தையும் வெடியுப்பையும் தேனுடன் கலந்து எரித்தனர். புகையும் தணலும் எழுந்து அவர்களின் கைகளையும் முகங்களையும் சுட்டது. அவர்கள் இருந்த வீடே பற்றியெரிந்தது."[18] வெடிமருந்துக்கான சீனச் சொல் சீனம்: 火药/火藥பின்யின்: huŏ yào /xuo yɑʊ/ என்பதாகும். இதன் பொருள் "தீ மருந்து" என்பதாகும்;[19] என்றாலும் இந்தச் சொல் வெடிகலவைகள் கண்டுபிடித்த பிறகு பல நூற்றாண்டுகள் கழிந்த பின்னரே வழக்கில் வந்தது.[20] பிந்தைய நூற்றாண்டுகளில், பொன்ம உருள்கலச் சுடுகலங்கள் கண்டுபிடிக்கும் முன்பே, ஏவுகணை, வெடிகுண்டுகள், நிலத்தடி வெடிகுண்டுகள் போன்ற பல்வேறு வெடிமருந்து ஆயுதங்கள் உருவாகின.[21] மங்கோலிய்ர் யப்பானை முற்றுகையிட்ட காலத்தில் அதாவது 1281 இல் பயன்படுத்திய வெடிகுண்டுகள் யப்பானியக் கடற்கரையோரம் கண்டெடுத்த கப்பற்சிதிலங்களில் கிடைத்துள்ளன.[22]

சீன மொழியில் செங் கோங்லியாங் (Zeng Gongliang) 1040–1044) என்பவரால் எழுதப்பட்ட வூயிங் சாங்யாவோ (Wujing Zongyao) (படைசார் செவ்வியல் நூல்களின் முழுசாரம்) எனும் நூல் பாறைவேதிப் பொருள்களோடு பூண்டும் தேனும் கலந்த பல வெடிகலவைகளிப் பற்றி விவரிக்கிறது. வடிகுழாய் நெறிமுறையைப் பின்பற்றிய மெதுவான தீக்குச்சியாலான தீயெறியும் இயங்கமைப்புகளை வெடிகளுக்கும் தீவாணங்களுக்கும் பயன்படுத்தியமை இந்நூலில் குறிப்பிடப்படுகிறது. வெடிப்பை உருவாக்க இந்நூலில் குறிப்பிடப்படும் வெடிகலவை வாய்பாடுகளில் அவ்வளவாக வெடியுப்பு சேர்க்கப்படவில்லை; 50% அளவுக்கே வெடியுப்பின் பயன் வரம்புபடுத்தப்பட்டுள்ளது; இதுவே தீமூட்டும் கருவியை உருவாக்க போதுமானதாக அமைந்துள்ளது.[8] சாரங்கள் (Essentials) எனும் நூல் சாங் பேரரசு அரசவை சார்ந்த அலுவலரால் எழுதப்பட்டுள்ளது. இது போர்க்கலையில் உடனடி விளைவேதும் செலுத்தியதாகத் தெரியவில்லை. 11 ஆம் நூற்றாண்டில் தாங்குத் மக்களை எதிர்த்து நடந்த போர்கள் பற்றிய கதைகளில் வெடிமருந்து பயன்பாட்டுக்கான விவரிப்பு ஏதும் கிடைக்கவில்லை. இந்நூற்றாண்டில் சீன மிகவும் பெரிதும் அமைதியாகவே இருந்தது.

நடுவண் கிழக்குப் பகுதி

15ஆம் நூற்றாண்டு கிரேனடா பேரரசு சார்ந்த சுடுகலனின் ஓவியம், நூல் ஆலிழ்வால் இரிஃபா (Al-izz wal rifa'a).

முசுலீம்கள் 1240 முதல் 1280 வரையிலான காலகட்டத்தில் வெடிமருந்து பற்றிய அறிவைப் பெற்றுள்ளனர். அப்போது சிரிய நாட்டின் காசன் அல்-இராம்மா (Hasan al-Rammah]] வெடிமருந்துக்கான வாய்பாட்டையும் வெடியுப்பைத் தூய்மிக்கும் வழிமுறைகளையும் வெடிமருந்து தீமூட்டும் விவரிப்புகளையும் அரபு மொழியில் எழுதியுள்ளார. இவர் இந்த அறிவைச் சினவில் இருந்து பெற்றதாக இவரது மொழிதல்கள் புலப்படுத்துகின்றன. இவர் வெடியுப்பை சீனப்பனிக்கட்டி என்றே கூறுகிறார் (அரபு மொழி: ثلج الصينthalj al-ṣīn), fireworks as "Chinese flowers" and rockets as "Chinese arrows" that knowledge of gunpowder arrived from China.[11] என்றாலும் வெடிமருந்தைத் தனது தந்தையிடம் இருந்தும் தாத்தாவிடம் இருந்தும் பெற்றதாகக் கூறி சிரியாவிலும் எகுபதியிலும் வெடிமருந்து 12 ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ அல்லது 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ பயன்படத் தொடங்கிவிட்டதாக வாதிடுகிறார்".[23] In Persia saltpeter was known as "Chinese salt" (பாரசீக மொழி: نمک چینی‎) namak-i chīnī)[24][25] or "salt from Chinese salt marshes" (نمک شوره چینی namak-i shūra-yi chīnī).[26][27]

ஐரோப்பா

மிகப் பழைய ஐரோப்பியச் சுடுகலனின் ஓவியம், "De Nobilitatibus Sapientii Et Prudentiis Regum", வால்தேர் தெ மைல்மெத்தே, 1326.
Büchsenmeysterei : von Geschoß, Büchsen, Pulver, Salpeter und Feurwergken, 1531
தெ லா பைரோடெக்னியா, 1540
Deutliche Anweisung zur Feuerwerkerey, 1748

இந்தியா

1780 ஆம் ஆண்டில் பிரித்தானியர் மைசூர் சுல்தானின் இடங்கலைக் கைப்பற்றத் தொடங்கியது. ஆங்கிலேயரின் இரண்டாம் மைசூர்ப் போரில், பிரித்தானியப் படையணி குண்டூர்ப் போரில் ஐதர் அலையின் படையால் தோற்கடிக்கப்பட்டது. அப்போரில் திறம்பட நெருக்கமாக அமைந்த பிரித்தானியப் பட்ளுைக்கு எதிராக மைசூர் ஏவுகணைகளும் ஏவுகணைப் பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன.
முகலாயப் பேரரசர் சாஜகான் மாலை அந்தியில் தீக்கவணைப் பயன்படுத்தி மானை வேட்டையாடுதல்.

ஆக்கத் தொழில்நுட்பம்

மீட்டெடுத்த விளிம்போட்ட அரைவை ஆலை, ஆகுலே அருங்காட்சியகமும் நூலகமும்
பழைய வெடிமருந்து தேக்கிடம், 1642, இங்கிலாந்து முதலாம் சார்லசுவின் ஆணையின் பேரில் செய்தது. அயர்சயரின் இர்வைன், வடக்கு அயர்சயர், இசுகாட்லாந்து
வெடிமருந்து தேக்கும் உருள்கலன்கள், மார்டெலோ கோபுரம், பாயிண்ட் பிளெசண்ட் பூங்கா
வெடிமருந்து தேக்கிடத்தின் 1840 ஆம் ஆண்டு வரைபடம்,தெகுரான், பாரசீகம். நாதெரியப் போர்களில் வெடிமருந்து பேரளவில் பயன்பட்டுள்ளது.

குறிப்புகள்

  1. Agrawal 2010, ப. 69.
  2. Cressy 2013.
  3. 3.0 3.1 Buchanan 2006, ப. 2.
  4. Kelly 2004.
  5. Easton 1952.
  6. Hazel Rossotti (2002). Fire: Servant, Scourge, and Enigma. Courier Dover Publications. பக். 132–137. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-486-42261-9. 
  7. "Explosives – History". science.jrank.org. பார்க்கப்பட்ட நாள் 2 February 2017.
  8. 8.0 8.1 Chase 2003, ப. 31.
  9. Needham 1986.
  10. Ágoston 2008, ப. 15.
  11. 11.0 11.1 Kelly 2004, ப. 22.
  12. Purton 2010, ப. 108-109.
  13. Partington 1999, ப. xvi-xvii.
  14. Needham 1986, ப. 103.
  15. Buchanan 2006.
  16. Chase 2003, ப. 31-32.
  17. Chase 2003.
  18. Kelly 2004, ப. 4.
  19. The Big Book of Trivia Fun, Kidsbooks, 2004
  20. Lorge 2008, ப. 18.
  21. Chase 2003, ப. 1.
  22. Delgado, James (February 2003). "Relics of the Kamikaze". Archaeology (Archaeological Institute of America) 56 (1). http://archive.archaeology.org/0301/etc/kamikaze.html. 
  23. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; AhmedY என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  24. Watson 2006, ப. 304.
  25. Nolan 2006, ப. 365.
  26. Partington 1960, ப. 335.
  27. Needham 1980, ப. 194.

மேற்கோள்கள்

  • Ágoston, Gábor (2008), Guns for the Sultan: Military Power and the Weapons Industry in the Ottoman Empire, Cambridge University Press, ISBN 0-521-60391-9
  • Agrawal, Jai Prakash (2010), High Energy Materials: Propellants, Explosives and Pyrotechnics, Wiley-VCH
  • al-Hassan, Ahmad Y. (2001), "Potassium Nitrate in Arabic and Latin Sources", History of Science and Technology in Islam, பார்க்கப்பட்ட நாள் 23 July 2007.
  • {{citation| editor-last = Buchanan | editor-first = Brenda J. | title = Gunpowder, Explosives and the State: A Technological History | place=Aldershot | publisher =Ashgate | year =2006 | isbn = 0-7546-5259-
  • Chase, Kenneth (2003), Firearms: A Global History to 1700, Cambridge University Press, ISBN 0-521-82274-2.
  • Cressy, David (2013), Saltpeter: The Mother of Gunpowder, Oxford University Press
  • Easton, S. C. (1952), Roger Bacon and His Search for a Universal Science: A Reconsideration of the Life and Work of Roger Bacon in the Light of His Own Stated Purposes, Basil Blackwell
  • Kelly, Jack (2004), Gunpowder: Alchemy, Bombards, & Pyrotechnics: The History of the Explosive that Changed the World, Basic Books, ISBN 0-465-03718-6.
  • Lorge, Peter A. (2008), The Asian Military Revolution: from Gunpowder to the Bomb, Cambridge University Press, ISBN 978-0-521-60954-8
  • Needham, Joseph (1986), Science & Civilisation in China, vol. V:7: The Gunpowder Epic, Cambridge University Press, ISBN 0-521-30358-3.
  • Partington, J. R. (1999), A History of Greek Fire and Gunpowder, Baltimore: Johns Hopkins University Press, ISBN 0-8018-5954-9
  • Purton, Peter (2010), A History of the Late Medieval Siege, 1200–1500, Boydell Press, ISBN 1-84383-449-9

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gunpowder
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெடிமருந்து&oldid=2424268" இலிருந்து மீள்விக்கப்பட்டது