மூசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
645 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
== இறைவனின் அழைப்பு ==
எகிப்திற்கு திரும்பவேண்டுமென்று மூசா அவர்களின் மனதினில் இறைவன் எண்ணத்தை ஏற்படுத்த மூசா(அலை) திரும்பி செல்லும்போது [[சினாய்]] மலையில் இறைவனுடன் பேசும் வாய்ப்பு மூசா(அலை) அவர்களுக்கு கிடைத்தது.
 
20:9 மேலும் (நபியே!) மூஸாவின் செய்தி உமக்கு எட்டியதா? 20:10 அவர் நெருப்பைக் கண்டபோது தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: “கொஞ்சம் இருங்கள்; நான் நெருப்பைக் காண்கின்றேன். அதிலிருந்து ஒரு கொள்ளியை உங்களுக்கு நான் கொண்டு வரக்கூடும்; அல்லது அந்த நெருப்பிற்கு அருகில் (பாதையை அறிந்துகொள்ள) ஏதாவது ஒரு வழிகாட்டுதல் எனக்குக் கிடைக்கக்கூடும்.” 20:11 அங்குச் சென்றதும் அவர் உரக்க அழைக்கப்பட்டார்: “மூஸாவே! 20:12 நானே உம்முடைய இறைவன்; உம்முடைய காலணிகளைக் கழற்றிவிடும். திண்ணமாக நீர் “துவா” எனும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். 20:13 மேலும், நான் உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே “வஹியாக”* அருளப்படுகின்றவற்றைச் செவியேற்பீராக! 20:14 திண்ணமாக, நான்தான் அல்லாஹ்; என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, எனக்கு அடிபணிவீராக! என்னை நினைவுகூர்வதற்காகத் தொழுகையை நிலைநிறுத்துவீராக! 20:15 மறுமைநாள் வருவது திண்ணம். அது வரும் நேரத்தை நான் மறைத்து வைக்க விரும்புகின்றேன்; ஒவ்வொரு ஆன்மாவும் அவரவரின் முயற்சிகளுக்கேற்ற கூலி பெற வேண்டும் என்பதற்காக! 20:16 எனவே, எவன் அந்த நாளின் மீது நம்பிக்கை கொள்ளாமல் தன் மன இச்சையைப் பின்பற்றுகின்றானோ அவன் அந்நாளைப் பற்றிய சிந்தனையிலிருந்து உம்மைத் தடுத்திட வேண்டாம். அவ்வாறாயின் நீர் அழிவிற்குள்ளாகி விடுவீர் 20:17 மேலும், மூஸாவே! உம்முடைய வலக்கரத்தில் இருப்பது என்ன?” 20:18 அதற்கு மூஸா பதிலளித்தார்: “இது என்னுடைய கைத்தடி; இதனை ஊன்றிக் கொண்டு நடப்பேன்; இதன் மூலம் என்னுடைய ஆடுகளுக்கு இலை தழைகளைப் பறித்துப் போடுவேன்; இன்னும் இதன் மூலம் என்னுடைய வேறு பல தேவைகளும் நிறைவேறுகின்றன.” 20:19 அப்போது இறைவன், “மூஸாவே! நீர் அதனைக் கீழே எறிந்துவிடும்” என்றான். 20:20 அவர் அதனை எறிந்துவிட்டார். உடனே அது நெளிந்து செல்லும் பாம்பாயிற்று; 20:21 இறைவன் கூறினான்: “இதனைப் பிடியும்; அஞ்சாதீர்; முன்பு எப்படி இருந்ததோ அப்படியே இதனை மீண்டும் ஆக்கிவிடுவோம். 20:22 மேலும், உம்முடைய கையை உம்முடைய கக்கத்தில் சேர்த்து வைப்பீராக! அது பிரகாசமாக வெளிப்படும், எத்தகைய ஊறுமின்றி! இது மற்றொரு சான்றாகும். 20:23 ஏனெனில், நாம் உமக்கு நம்முடைய மாபெரும் சான்றுகளைக் காண்பிக்கக் கூடியவராய் இருக்கிறோம். 20:24 இனி, நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும்; அவன் வரம்பு மீறியவனாக இருக்கின்றான்.”
சினாய் மலையில் நெருப்பினை கண்ட மூஸா தன் குடும்பத்தாரிடம் "நீங்கள் இங்கே சிறிது நேரம் தங்குங்கள், நிச்சயமாக நான் நெருப்பினை கண்டேன், ஒரு வேளை அதிலிருந்து வெளிச்சத்தையோ அல்லது நாம் செல்லவேண்டிய பாதையையோ அந்த நெருப்பின் உதவிக்கொண்டு காணலாம்" என்று கூறினார்.
 
நெருப்பின் அருகே அவர் சென்றவுடன் "மூசாவே" என்று அழைக்கப்பட்டார்.
 
"நிச்சயாமாக நான் தான் உன் இறைவன். உன் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும், நிச்சயமாக நீ துவா எனும் புனித பள்ளத்தாக்கில் உள்ளீர்"
 
இன்னும் நான் உம்மை என் தூதராகத் தேர்வுசெய்தேன் ஆதலால் வஹியின் வாயிலாக உமக்கு அறிவிக்கப்படுவதற்கு நீர் செவி ஏற்ப்பீராக.
 
நிச்சயமாக நான் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே என்னையே நீ வணங்கும்; என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக."
([http://www.tamililquran.com/quran.asp?sura=20&line=9])
 
"மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?" என்று இறைவன் கேட்க
 
(அதற்கவர்) "இது என்னுடைய கைத்தடி இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன் இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன் இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன" என்று கூறினார்.
 
அதற்க்கு இறைவன் "மூசாவே! அதை கீழே எறியும்" என்றான்.
 
மூஸா அவ்வாறு செய்ததும் அது ஊர்ந்து செல்லும் ஒரு மலை பாம்பாயிற்று.
 
இறைவன் கூறினான்: "அதைப் பிடியும் பயப்படாதீர் உடனே நான் அதை பழைய நிலைக்கே மீட்டுவேன்"
 
இன்னும் உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி வெளியில் எடும் அது மாசற்ற வெண்மையாக வெளிவரும் இது மற்றோர் அத்தாட்சி ஆகும்.
 
இவ்வாறு என்னுடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து சிலவற்றை உமக்கு காண்பிக்கிறேன்
ஃபிர்அவுனிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்" என்றும் அல்லாஹ் கூறினான்.
([http://www.tamililquran.com/quran.asp?sura=20&line=25])
 
== [[அல்-கிள்ரு]] நபியும் மூஸா(அலை) அவர்களும் ==
150

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2420243" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி