"ஆயிஷா பின்த் அபூபக்கர் (ரலி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
18,247 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
இவர்களுக்கு மூன்று சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உண்டு. இவர்களில் [[அப்துர் ரஹ்மான்|அப்துர் ரஹ்மான்(ரலி)]] சொந்த சகோதரர் ஆவார். முஹம்மத் என்பவர் அபூபக்ர் (ரலி) அவர்களின் மூன்றாவது மனைவியான அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) என்பவருக்குப் பிறந்தவர். அவ்ஃப் இப்னு ஹாரித் (ரலி) என்பவர் பால் குடி சகோதரர் ஆவார். இரண்டு சகோதரிகளும் அபூபக்ர் (ரலி) அவர்களின் மற்ற மனைவியருக்குப் பிறந்தவர்கள். அஸ்மா(ரலி) அவர்கள் கதீலா (குதைலா என்போரும் உண்டு) என்ற முதல் மனைவிக்கும், உம்மு குல்சூம்(ரலி) என்பவர் நான்காவது மனைவி உம்மு ஹபீபா(ரலி) அவர்களுக்கும் பிறந்தவர்கள்.
 
== சுருக்க சரிதை ==
 
நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், நபித்தோழர்களில் மிகச் சிறந்த அறிஞர், அவர் எல்லா விதத்திலும் தனித்தவராக இருந்தார். வேறு எந்த நபித்தோழர்களாலும் சொல்ல முடியாதவற்றை, இவர்கள் தான், நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டு அறிவித்துள்ளார். ஏனென்றால், ஆண்களில் எவரும் நபியவர்களிடம் அத்தனை நெருக்கமாக அறிந்திருக்கவில்லை. அவர் தான் நபி (ஸல்) அவர்களுக்கு மிகப் பிரியமானவராக இருந்தார். இஸ்லாமிய சரித்திரத்தில் மிக முக்கியமான இடம் பெற்றுள்ள இந்த வியத்தகு பெண்மணியைப் பற்றி சற்று அறிந்து கொள்வோம்.
 
ஆயிஷா பிந்த் அபுபக்கர் (ரலி) அவர்கள் கி.பி.614 இல் பிறந்தார்கள். அவருடைய தந்தை நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமான தோழர் அபு பக்கர் சித்தீக் (ரலி). அவருடைய தாயார் உம் ருமான் (ரலி). இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் இருந்த மக்காவில் பிறந்தாலும், ஆயிஷா (ரலி) பிறப்பிலேயே ஒரு முஸ்லிம். ஜாஹிலியா (இறை வழிகாட்டுதலை அறியாமல் இருத்தல்) இல்லாத ஒரு முஸ்லிம் குடும்ப சூழலில் வளர்ந்தார்கள்.
 
சிறுபிராயத்திலிருந்தே அவர்களுடைய அறிவுத்திறனும், அறிவுத் தேடலில் உள்ள ஆர்வமும் பின்வரும் நிகழ்வின் மூலம் வெளிப்பட்டது:
 
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களைச் சந்திக்க வருகிறார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் இறக்கைகள் உள்ள குதிரைப் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், அவரிடம் அது என்ன என கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ‘குதிரை’ என பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு குதிரைகளுக்கு இறக்கை இருப்பதில்லை என கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், சுலைமான் (அலை) அவர்கள் இறக்கைகள் உடைய குதிரைகள் வைத்திருந்ததாக கூறினார்!
 
அஸ்ஸுஹ்ரி (ரஹ்) அவர்கள், கூறியுள்ளார்கள், ‘ஆயிஷா(ரலி)வுடைய அறிவு அனைத்தையும் ஒன்று சேர்த்து, எல்லா பெண்களின் மொத்த அறிவுடனும் ஒப்பிட்டால், அவருடைய அறிவு அவர்கள் அனைவரையும் விட உயர்ந்திருக்கும்.’
 
நபி (ஸல்) அவர்களுடைய கனவுகளில், ஆயிஷா (ரலி) அவர்கள் காட்டப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஆயிஷா (ரலி) அவர்களிடம்: “நீ என்னுடைய கனவுகளில் மூன்று இரவுகள் காட்டப்பட்டாய். ஒரு வானவர் உன்னை ஒரு பட்டுத்துணியில் சுமந்து வந்து என்னிடம், ‘இவர் உம்முடைய மனைவி’ என கூறினார். நான் அதைத் திறந்த போது, அது நீயாக இருந்தாய். பிறகு நான், ‘இந்த கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாக இருந்தால், அவனே அதை நிறைவேற்றுவான்.’ என்று கூறினேன்.’ கூறினார்கள்
 
அல்லாஹ்வின் நாட்டத்தினால் அக்கனவு நிறைவேறியது. கல்வா பின் ஹகீம் (ரலி). என்பவர் நபி (ஸல்) அவர்களுக்காக, ஆயிஷா (ரலி) அவரகளிடம் தூது சென்றார். நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களிலேயே ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டுமே கன்னிப்பெண்ணாக இருந்தார்கள்.
 
மக்காவிலிருந்து மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்த போது அவர் எட்டு வயது சிறுமியாக இருந்தார். அதற்கு பல ஆண்டுகள் கழித்து கூட ஹிஜ்ரத்துடைய துல்லியமான விவரங்களைக் கூட விடாமல் அவர் கூறியுள்ளார்! இந்த அபாரமான நினைவாற்றலால் தான் நபியவர்களுடைய பல ஹதீஸ்களை அவரால் அறிவிக்க முடிந்தது .
 
அவர் ஒன்பது வயதானபோது, நபி (ஸல்) அவர்களுடன் அவருடைய திருமண வாழ்வு முழுமையடைந்தது. அவர், பிற்காலத்தில், நபி (ஸல்) அவர்களும், நேர் வழி பெற்ற முதல் இரு கலிஃபாக்களின் அடக்கஸ்தலமாகப் போகும் கௌரவத்தைப் பெற்ற இல்லத்தில் தன் திருமண வாழ்வைத் தொடங்கினார். அது ஆறடி அகலம் கொண்ட, மண் சுவர்களையும், இலை, தழைகளால் வேயப்பட்ட கூரையையும் உடைய வீடு. அவருடைய வீட்டில் இருந்த பொருட்கள், ஒரு பாய், ஒரு மெல்லிய மெத்தை, ஒரு மரத்துகள்கல் திணிக்கப்பட்ட தலையணை, ஒரு குடிநீர்ப்பை, பேரிச்சம்பழங்கள் நிரம்பிய தட்டு மற்றும் ஒரு தண்ணீர் குவளை.
 
அவர் தான் நபி (ஸல்) அவர்களுடைய மனைவியரிலேயே மிகவும் இளமையானவரும், பிரியமானவரும் ஆவார். நபி (ஸல்) அவர்கள், அவருடன் விளையாடுவார்கள், கதைகளும் சொல்வார்கள்.
 
அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நான் நபி(ஸல்) அவர்களைக் காண ஒரு நாள் வந்திருந்த போது, அவர்களிடம், ‘மனிதர்களிலேயே உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?’ என கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆயிஷா’ என பதிலளித்தார்கள். பிறகு நான், ‘ஆண்களில் uஉங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?’ என கேட்டதற்கு, ‘ஆயிஷாவின் தந்தை’ என்றார்கள்.”
 
நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுடைய அறையில் இருக்கும்போது இறைச்செய்தி (வஹி) பெற்றிருக்கிறார்கள். அவர் ஒரு முறை நம்பிக்கையாளர்களின் அன்னையர்களிடம், ‘…அல்லாஹ்வின்மீதாணையாக! உங்களில்அவரல்லாதவேறெந்தப்பெண்ணின் போர்வைக்குள்நான்இருக்கும்போதும்எனக்குவஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டதில்லை” என்றுகூறினார்கள். .”[புகாரி]
 
குர்’ஆன் ஆயத்துக்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்காக அருளப்பட்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, அவர் நயவஞ்சகர்களால் துர்நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட போது, அல்லாஹ், சூரத்துன்னூரின் 11லிருந்து 21 வரை உள்ள வசனங்களை அவருக்கு பரிந்து அருளினான். இன்னொரு சந்தர்ப்பம், சூரத்துன்னிஸாவின் 43ஆவது வசனம் – தயம்மும் பற்றியது.
 
ஆயிஷா (ரலி) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பார்த்திருக்கிறார்கள். ஒரு முறை, அவர் நபி (ஸல்) ஒரு குதிரைச் சவாரி செய்பவரிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். ஆயிஷா அவர்கள் தன் கண்ணால், அம்மனிதரைப் பார்த்தார். நபி (ஸல்) அவர்கள், அவரை மனித உருவில் இருந்த ஜிப்ரீல் (அலை) என்றும், அவர் தன்னுடைய ஸலாமை அவருக்கு அறிவிக்கும்படி கூறியதாகவும் கூறினார்கள்!
 
நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய அருள்மிகுந்த வாழ்வின் இறுதி நாட்களில் சிலவற்றை ஆயிஷா (ரலி) அவர்களுடைய அறையில் தான் கழித்தார்கள், அவருடைய மடியில் தான் உயிர் துறந்தார்கள். அவருடைய அறையில் தான் அடக்கம் செய்யப்பட்டார்கள். இன்று வரை, நபி (ஸல்) அவர்களுடைய வீட்டில் மீதமிருக்கும் ஒரே அறை அது தான்.
 
ஆயிஷா (ரலி) தன் வாழ்நாள் முழுதும் தொடர்ந்து இஸ்லாத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டும், ஹதீஸ்களை அறிவித்துக் கொண்டும் இருந்தார்கள். ஹதீஸ் அறிவிப்பாளர்களில் நான்காவது இடத்தை வகிக்கும் அவர் அறிவித்த ஹதீஸ்களின் எண்ணிக்கை மொத்தம் 22102. பல சிறந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர்களின் சங்கிலித்தொடர் வரிசை அவரிடம் முடியும். அவற்றில், உபைதுல்லாஹ் இப்னு உமர் காசிமிடமிருந்தும், காசிம் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும் என்ற தொடர் பொன்னான தொடராக கருதப்படுகிறது.
 
அன்னையவர்களின் மாணவர்களில் மூவரான முவாவியா, உர்வா இப்னு ஸுபைர், ஸைத் இப்னு அபி சுஃப்யான் (ரலியல்லாஹு அன்ஹும் அஜ்மையீன்) அவரிடமிருந்து எழுத்து வடிவில் ஹதீஸ்களைப் பெற்றிருக்கிறார்கள்.
 
அவருக்கே எழுதத்தெரிந்திருந்ததா அல்லது, ஒரு எழுத்தரின் மூலமாக எழுதினார்களா என்பது தெளிவாக அறியப்படவில்லை. ஆனால், அவருக்குப் படிக்கத் தெரிந்திருந்தது என்பது நிச்சயமாகத் தெரிகிறது.
 
அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய கடிதங்களில் இரண்டை அறிவித்தார்கள். அல் ஹகீம் (ரஹ்) அல் முஸ்தத்ரக்கில், ‘ஷரீ’அத் சட்டங்களில் நான்கில் ஒரு பங்கு ஆயிஷா (ரலி) அவர்களால் அறிவிக்கப்பட்டது.’ என குறிப்பிடுகிறார்கள்.
 
அபு மூஸா அல் அஷ்’அரி (ரலி) அவர்கள், ‘எங்களுக்கு ஒரு ஹதீஸ் தெளிவில்லாமல் இருந்தால், நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டு, அவரிடமிருந்து அந்த ஹதீஸின் அறிவைப் பெறுவோம்.’ என்று கூறினார்கள்.
 
அன்னையவர்கள் ஃபிக் (இஸ்லாமிய சட்ட,திட்டங்களின் தத்துவம்) கலையில் தேர்ந்த அறிவு பெற்றவராக இருந்தார். நான்கு நேர்வழி பெற்ற கலிஃபாக்களின் ஆட்சியின் போது அவருடைய ஃபதாவாக்கள் (தீர்ப்புகள்) ஏற்றுக் கொள்ளப்பட்டன. மற்ற மூத்த நபித்தோழர்களும் ஷரீ’அத்தின் நுணுக்கமான பகுதிகள் பற்றி அவர்களுடன் ஆலோசித்தார்கள். மஸ்ரூஃக் இப்ன் அல் அஜ்தா, “முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய மூத்த தோழர்களில் இருந்த நான் அவரை சொத்துரிமை பற்றிய சட்டத்தைப் பற்றி கேட்டிருக்கிறேன்.” என்று கூறினார்கள். கூறினார்கள்
 
ஆயிஷா (ரலி) அவர்கள் 66 வயதில் ரமதான் 17, ஹிஜ்ரி 58ல் மரணமடைந்தார்கள். அவருடைய ஜனாஸா தொழுகையை அபு ஹுரைரா (ரலி) அவர்கள் நடத்தினார்கள். அவர்கள் ஜன்னதுல் பகீயில் அடக்கம் செய்யப் பட்டார்கள். இன்னா லில்லாஹி, வ இன்ன இலைஹி ராஜி’வூன்..
 
== மேற்கோள்கள்==
150

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2419823" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி