பார்வைக் குறைபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை இணைப்புக் கோரிக்கை
No edit summary
வரிசை 15: வரிசை 15:
}}
}}


'''குருட்டுத் தன்மை''' என்பது, [[உடலியல்]] அல்லது [[நரம்பியல்]] காரணிகளால் ஏற்படக்கூடிய [[பார்வை உணர்வு]]க் குறைவு நிலையைக் குறிக்கும். பார்வை இழப்பின் அளவை விளக்குவதற்கும் குருட்டுத் தன்மையை வரையறுப்பதற்கும் பல அளவீட்டு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வடிவ உணர்வும், பார்க்கக்கூடிய [[ஒளி]]யை முற்றாகவே உணர முடியாத நிலையும் முழுமையான குருட்டுத் தன்மை எனப்படும். இதனை மருத்துவ அடிப்படையில், "என்எல்பி" (NLP) எனக் குறிப்பிடுவர் இது "ஒளியுணர்வின்மை" என்பதன் ஆங்கிலத் தொடரின் (no light perception) சுருக்கம் ஆகும். "ஓளியுணர்வு" (light perception)கொண்டவர்களால் ஒளியை இருளில் இருந்து பிரித்து அறியமுடியும். "ஒளிவீழ்ப்பு" (light projection) உணர்வு கொண்டவர்கள் ஒளி மூலத்தின் பொதுவான திசையை அறிந்து கொள்ள முடியும்.
'''குருட்டுத் தன்மை''' என்பது, [[உடற்கூற்றியல்]] அல்லது [[நரம்பியல்]] காரணிகளால் ஏற்படக்கூடிய [[பார்வை உணர்வு]]க் (:en:Visual perception) குறைவு நிலையைக் குறிக்கும். பார்வை இழப்பின் அளவை விளக்குவதற்கும் குருட்டுத் தன்மையை வரையறுப்பதற்கும் பல அளவீட்டு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வடிவ உணர்வும், பார்க்கக்கூடிய [[ஒளி]]யை முற்றாகவே உணர முடியாத நிலையும் முழுமையான குருட்டுத் தன்மை எனப்படும். இதனை மருத்துவ அடிப்படையில், "என்எல்பி" (NLP) எனக் குறிப்பிடுவர் இது "ஒளியுணர்வின்மை" என்பதன் ஆங்கிலத் தொடரின் (no light perception) சுருக்கம் ஆகும். "ஓளியுணர்வு" (light perception) கொண்டவர்களால் ஒளியை இருளில் இருந்து பிரித்து அறியமுடியும். "ஒளிவீழ்ப்பு" (light projection) உணர்வு கொண்டவர்கள் ஒளி மூலத்தின் பொதுவான திசையை அறிந்து கொள்ள முடியும்.


பார்வைக் குறைபாடுகள் காரணமாக எத்தகையவர்களுக்குச் சிறப்பான உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை முடிவு செய்வதற்காகப் பல நாடுகளில் அரசாங்க நீதியமைப்புக்கள் விரிவான வரைவிலக்கணங்களை உருவாக்கியுள்ளன. இவை "சட்டக் குருட்டுத்தன்மை" எனப்படுகின்றது. [[வட அமெரிக்கா]]விலும், [[ஐரோப்பா]]வின் பெரும்பகுதியிலும் குருட்டுத்தன்மை என்பது, மிகவும் அதிகமாக இயலக்கூடிய திருத்தங்களுடன் கூடிய கண்ணின் [[பார்வைக் கூர்மை]]யின் அளவு 20/200 (6/60) அல்லது அதிலும் குறைவாக இருத்தல் என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. சாதாரணமான பார்வையுடைய ஒருவர் 200 அடி (60 மீட்டர்) தொலைவில் இருந்து பார்க்கக்கூடிய பொருளொன்றைச் சட்டக் குருட்டுத்தன்மை கொண்ட ஒருவர் 20 அடி (6 மீட்டர்) தொலைவில் இருந்தே அதேயளவு தெளிவாகப் பார்க்கமுடியும் என்பதே இதன் பொருளாகும். சில பகுதிகளில், சராசரிப் பார்வைக் கூர்மை உள்ள ஒருவருடைய [[பார்வைப் புலம்]] (visual field) 20 பாகைக்குக் (இருக்கவேண்டிய அளவு 180 பாகை) குறைவாக இருந்தாலும் அவர் சட்டக் குருட்டுத்தன்மை கொண்டவராகக் கருதப்படுகிறார்.
பார்வைக் குறைபாடுகள் காரணமாக எத்தகையவர்களுக்குச் சிறப்பான உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை முடிவு செய்வதற்காகப் பல நாடுகளில் அரசாங்க நீதியமைப்புக்கள் விரிவான வரைவிலக்கணங்களை உருவாக்கியுள்ளன. இவை "சட்டக் குருட்டுத்தன்மை" எனப்படுகின்றது. [[வட அமெரிக்கா]]விலும், [[ஐரோப்பா]]வின் பெரும்பகுதியிலும் குருட்டுத்தன்மை என்பது, மிகவும் அதிகமாக இயலக்கூடிய திருத்தங்களுடன் கூடிய கண்ணின் [[பார்வைக் கூர்மை]]யின் அளவு 20/200 (6/60) அல்லது அதிலும் குறைவாக இருத்தல் என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. சாதாரணமான பார்வையுடைய ஒருவர் 200 அடி (60 மீட்டர்) தொலைவில் இருந்து பார்க்கக்கூடிய பொருளொன்றைச் சட்டக் குருட்டுத்தன்மை கொண்ட ஒருவர் 20 அடி (6 மீட்டர்) தொலைவில் இருந்தே அதேயளவு தெளிவாகப் பார்க்கமுடியும் என்பதே இதன் பொருளாகும். சில பகுதிகளில், சராசரிப் பார்வைக் கூர்மை உள்ள ஒருவருடைய [[பார்வைப் புலம்]] (visual field) 20 பாகைக்குக் (இருக்கவேண்டிய அளவு 180 பாகை) குறைவாக இருந்தாலும் அவர் சட்டக் குருட்டுத்தன்மை கொண்டவராகக் கருதப்படுகிறார்.

11:14, 23 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

குருட்டுத்தன்மை
Classification and external resources
நீளமான வெள்ளைப் பிரம்பு குருட்டுத்தன்மையின் அனைத்துலகக் குறியீடு
ஐ.சி.டி.-10 H54.0, H54.1, H54.4
ஐ.சி.டி.-9 369
DiseasesDB 28256

குருட்டுத் தன்மை என்பது, உடற்கூற்றியல் அல்லது நரம்பியல் காரணிகளால் ஏற்படக்கூடிய பார்வை உணர்வுக் (:en:Visual perception) குறைவு நிலையைக் குறிக்கும். பார்வை இழப்பின் அளவை விளக்குவதற்கும் குருட்டுத் தன்மையை வரையறுப்பதற்கும் பல அளவீட்டு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வடிவ உணர்வும், பார்க்கக்கூடிய ஒளியை முற்றாகவே உணர முடியாத நிலையும் முழுமையான குருட்டுத் தன்மை எனப்படும். இதனை மருத்துவ அடிப்படையில், "என்எல்பி" (NLP) எனக் குறிப்பிடுவர் இது "ஒளியுணர்வின்மை" என்பதன் ஆங்கிலத் தொடரின் (no light perception) சுருக்கம் ஆகும். "ஓளியுணர்வு" (light perception) கொண்டவர்களால் ஒளியை இருளில் இருந்து பிரித்து அறியமுடியும். "ஒளிவீழ்ப்பு" (light projection) உணர்வு கொண்டவர்கள் ஒளி மூலத்தின் பொதுவான திசையை அறிந்து கொள்ள முடியும்.

பார்வைக் குறைபாடுகள் காரணமாக எத்தகையவர்களுக்குச் சிறப்பான உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை முடிவு செய்வதற்காகப் பல நாடுகளில் அரசாங்க நீதியமைப்புக்கள் விரிவான வரைவிலக்கணங்களை உருவாக்கியுள்ளன. இவை "சட்டக் குருட்டுத்தன்மை" எனப்படுகின்றது. வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவின் பெரும்பகுதியிலும் குருட்டுத்தன்மை என்பது, மிகவும் அதிகமாக இயலக்கூடிய திருத்தங்களுடன் கூடிய கண்ணின் பார்வைக் கூர்மையின் அளவு 20/200 (6/60) அல்லது அதிலும் குறைவாக இருத்தல் என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. சாதாரணமான பார்வையுடைய ஒருவர் 200 அடி (60 மீட்டர்) தொலைவில் இருந்து பார்க்கக்கூடிய பொருளொன்றைச் சட்டக் குருட்டுத்தன்மை கொண்ட ஒருவர் 20 அடி (6 மீட்டர்) தொலைவில் இருந்தே அதேயளவு தெளிவாகப் பார்க்கமுடியும் என்பதே இதன் பொருளாகும். சில பகுதிகளில், சராசரிப் பார்வைக் கூர்மை உள்ள ஒருவருடைய பார்வைப் புலம் (visual field) 20 பாகைக்குக் (இருக்கவேண்டிய அளவு 180 பாகை) குறைவாக இருந்தாலும் அவர் சட்டக் குருட்டுத்தன்மை கொண்டவராகக் கருதப்படுகிறார்.

குருட்டுத்தன்மை பல காரணங்களால் ஏற்படும். அவற்றுள் சில

      1. விபத்துக்கள் மற்றும் கண்ணின் மேற்புறத்தில் ஏற்படும் காயங்கள் காரணமாக (இரசாயனங்களால் ஏற்படும் காயம் மற்றும் விளையாடும்போது ஏற்படும் காயம்).
      2.  நீரிழிவு நோய்.
      3. கண் அழுத்த நோய் (Glaucoma).
      4. கண் தசைச் சீர்கேடு (Macular degeneration).
      இவை தவிர குழந்தை தாயின் கருவில் இருக்கும் போதே சில காரணங்களால் பிறக்கும்போதே குருட்டுத்தனமை ஏற்படும். இதை பிறவிக் குருடு என்பர். கண் முழுமையாக வளர்ச்சி அடையாதது மற்றும் அரிதாக கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் சில வைரஸ் தாக்குதல் காரணமாக குழந்தைக்கு பிறவிக்குருடு ஏற்படும்.

விபத்துக்கள் :

      சாலை விபத்துகளின் போது கண்ணில் ஏற்படும் அதிர்ச்சி காரணமாகவும் குருட்டுத்தன்மை ஏற்படும். விபத்துக்களின்போது தலையில் குறிப்பாக மூளையில் ஏற்படும் காயம் காரணமாகவும் இது ஏற்படுகிறது.

இரசாயனங்கள் ( Chemicals) :

      அமிலங்கள் பொதுவாக கண்ணின் முற்பகுதியில் மட்டும் பாதிப்பு ஏற்படுத்தும். எனினும் சில சமயங்களில் அவை கருவிழியில் (cornea) மோசமான பாதிப்பை ஏற்படுத்தி குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.

நீரிழிவு நோய்:

      நீரிழிவு நோய் காரணமாகவும் விழித்திரைக்கு  (retina) பாதிப்பு ஏற்படும். நீரிழிவு விழித்திரைக் குறைபாடு, விழித்திரையில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் கசிவு காரணமாக பார்வைக் குறைபாடு ஏற்படும். இதை லேசர் சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

தசைச் சீர்கேடு (Macular degeneration) :

      இது வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் பார்வைக் கோளாறு அல்லது குருட்டுத்தன்மையைக் குறிக்கும். ஆரம்ப காலத்தில் அறிகுறிகள் ஏதும் இருக்காது. நாளாவட்டத்தில் சிலர் படிப்படியாக பார்வைக் குறைபாட்டை உணர்வார்கள். முழு குருட்டுத்தன்மை இல்லாவிட்டாலும், கண்ணின் மத்தியப் பகுதியில் பார்வை இல்லாததால் தினசரி வாழ்வில் அனைத்து செயல்களும் கடினமாகி விடும். மரபணுக் காரணிகள் மற்றும் புகைபிடித்தலுக்கு முக்கியப் பங்குண்டு. விழித்திரையில் உள்ள மேக்யூலா (விழித்திரையின் மத்தியில் உள்ள நீள்வட்ட நிறமிப் பகுதி) பாதிப்பதால் இது ஏற்படுகிறது.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Blindness
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வைக்_குறைபாடு&oldid=2419532" இலிருந்து மீள்விக்கப்பட்டது