தாராளமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்பதிவு
சொற்பிறப்பு - சேர்க்கை
வரிசை 10: வரிசை 10:


வெவ்வேறு வடிவங்களிலான தாராண்மையியங்கள் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருப்பினும், பல அடிப்படையான கொள்கைகளில் அவை ஒன்றுபட்டுள்ளன. சிந்தனைச் சுதந்திரமும் [[பேச்சுச் சுதந்திரம்|பேச்சுச் சுதந்திரமும்]], சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமாக எண்ணங்களைப் பகிர்தல், தனியார் சொத்துரிமை, கட்டற்ற சந்தை, [[வெளிப்படையான அரசு முறைமை]] என்பன இவற்றுள் அடங்குவன.
வெவ்வேறு வடிவங்களிலான தாராண்மையியங்கள் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருப்பினும், பல அடிப்படையான கொள்கைகளில் அவை ஒன்றுபட்டுள்ளன. சிந்தனைச் சுதந்திரமும் [[பேச்சுச் சுதந்திரம்|பேச்சுச் சுதந்திரமும்]], சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமாக எண்ணங்களைப் பகிர்தல், தனியார் சொத்துரிமை, கட்டற்ற சந்தை, [[வெளிப்படையான அரசு முறைமை]] என்பன இவற்றுள் அடங்குவன.

== சொற்பிறப்பு ==







{{பொருளாதார முறைமைகள்}}
{{பொருளாதார முறைமைகள்}}

13:00, 20 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

தாராண்மையியம் (Liberalism) என்பது, தனிப்பட்டவர்களது சுதந்திரத்தை மிகவும் முக்கியமான அரசியல் இலக்காகக் கொண்ட அரசுகளின் அடிப்படையான கொள்கையாகும். இக் கொள்கை பரந்துபட்ட எண்ணக்கருக்களையும், கோட்பாடுகளையும் தன்னுள் அடக்கியுள்ளது. தனிப்பட்டவர்களது சுதந்திரம் தாராண்மையியக் கொள்கைகளின் அடிப்படையாக இருப்பினும், பொருளியல் அடிப்படையில் நல்ல நிலையில் உள்ளவர்கள் தமது வருமானத்தின் ஒரு பகுதியை அரசுக்குக் கொடுக்க வேண்டியது கடமையாகக் கருதப்படுகிறது. தாராண்மையியத்தின் மூலம் அறிவொளிக் காலத்தில் இருந்து வருகிறது. அரசர்களின் கடவுளுக்கு ஈடான உரிமை, தலைமுறை உரிமை, அரசு மதம், காப்பாண்மையியம் (protectionism) போன்ற முன்னைய அரசுக் கோட்பாடுகளின் அடிப்படை எடுகோள்கள் பலவற்றைத் தாராண்மையியம் ஏற்க மறுத்தது.

ஆடம் சிமித்

ஆடம் சிமித் என்பவராலும் பிறராலும் முதன் முதலில் உருவாக்கப்பட்ட பொருளியல் தாராண்மையியம், அமைதிக்கும், வளத்துக்குமான சிறந்த வழியாக கட்டற்ற சந்தை, கட்டற்ற வணிகம் என்பவற்றை ஏற்றுக்கொண்டது. தனியார் சொத்துரிமையும், தனிப்பட்ட ஒப்பந்தங்களுமே பொருளியல் தாராண்மையியத்தின் அடிப்படைகள்.

பண்பாட்டுத் தாராண்மையியம் என்பது, பாலியல் சுதந்திரம், மத சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், தனிப்பட்ட வாழ்வில் அரசின் தலையீட்டிலிருந்து பாதுகாப்பு என்பவை உள்ளிட்ட தனியார் சுதந்திரங்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளது.

வெவ்வேறு வடிவங்களிலான தாராண்மையியங்கள் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருப்பினும், பல அடிப்படையான கொள்கைகளில் அவை ஒன்றுபட்டுள்ளன. சிந்தனைச் சுதந்திரமும் பேச்சுச் சுதந்திரமும், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமாக எண்ணங்களைப் பகிர்தல், தனியார் சொத்துரிமை, கட்டற்ற சந்தை, வெளிப்படையான அரசு முறைமை என்பன இவற்றுள் அடங்குவன.

சொற்பிறப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராளமயம்&oldid=2418099" இலிருந்து மீள்விக்கப்பட்டது