ஆகத்து 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
11:18, 25 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
ஆகத்து 25 (August 25) கிரிகோரியன் ஆண்டின் 237 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 238 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 128 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1580 - ஸ்பெயின் அல்காண்டரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் போர்த்துக்கலை வென்றது.
- 1609 - இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்.
- 1732 - யாழ்ப்பாணத் தளபதியாக கோல்ட்டெரஸ் வூல்ட்டெரஸ் நியமிக்கப்பட்டான்.
- 1758 - பிரஷ்யாவின் இரண்டாம் பிரெடெரிக் மன்னன் சோண்டோர்ஃப் என்ற இடத்தில் ரஷ்ய இராணுவத்தைத் தோற்கடித்தான்.
- 1768 - ஜேம்ஸ் குக் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தான்.
- 1803 - யாழ்ப்பாணம் பனங்காமம் பற்று மன்னன் பண்டாரவன்னியன் விடத்தல் தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.
- 1825 - உருகுவே நாடு பிரேசிலிடமிருந்து விடுதலையை அறிவித்தது.
- 1830 - பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது.
- 1912 - சீனத் தேசியவாதிகளின் குவாமிங்தாங் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
- 1920 - போலந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் ஆகஸ்ட் 13 இல் ஆரம்பித்த போர் செம்படையினரின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.
- 1933 - சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: பாரிஸ் நாசி ஜெர்மனியிடம் இருந்து நட்பு நாடுகளால் விடுவிக்கப்பட்டது.
- 1955 - கடைசி சோவியத் படைகள் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறின.
- 1981 - வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிகக்கிட்டவாகச் சென்றது.
- 1989 - வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்குக் கிட்டவாகச் சென்றது.
- 1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது.
- 2003 - மும்பாயில் இரண்டு கார்க் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
- 2007 - இந்தியா, ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
- 2007 - கிறீசில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 53 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1530 – உருசியாவின் நான்காம் இவான், உருசியப் பேரரசர் (இ. 1584)
- 1887 – செல்லப்பா குமாரசுவாமி, இலங்கை அரசியல்வாதி
- 1903 – அர்பத் எலோ, அங்கேரிய-அமெரிக்க சதுரங்க வீரர், எலோ தரவுகோள் முறையை அறிமுகப்படுத்தியவர் (இ. 1992)
- 1905 – மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா, போலந்து புனிதர் (இ. 1938)
- 1906 – கிருபானந்த வாரியார், சமயச் சொற்பொழிவாளர் (இ 1993)
- 1906 – கிட்டப்பா, நடிகர், பாடகர் (இ. 1933)
- 1911 – வோ இங்குயென் கியாப், வியட்நாமிய இராணுவத் தலைவர் (இ. 2013)
- 1929 – எஸ். வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி
- 1930 – சான் கானரி, இசுக்கொட்டிய நடிகர்
- 1931 – எம். கே. அர்ஜுனன், கேரலத் திரைப்பட இசையமைப்பாளர்
- 1938 – ஃபிரெட்ரிக் ஃபோர்சித், ஆங்கிலேய ஊடகவியலாளர், எழுத்தாளர்
- 1945 – ராம் புனியானி, இந்திய உயிரிமருத்துவர்
- 1952 – விஜயகாந்த், தமிழக நடிகர், அரசியல்வாதி
- 1952 – துலிப் மென்டிஸ், இலங்கைத் துடுப்பாளர்
- 1957 – எம். ஆர். கே. பன்னீர்செல்வம், தமிழக அரசியல்வாதி
- 1962 – தஸ்லிமா நசுரீன், வங்காள தேச எழுத்தாளர்
- 1964 – அஸ்மின் அலி, மலேசியக் கணிதவியலாளர், அரசியல்வாதி
- 1973 – நித்யஸ்ரீ மகாதேவன், கருநாடகப் பாடகி
- 1987 – மோனிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
- 79 – மூத்த பிளினி, உரோமை இராணுவத் தலைவர், மெய்யியலாளர் (பி. 23)
- 1636 – பாய் குருதாஸ், பஞ்சாபிக் கவிஞர் (பி. 1551)
- 1776 – டேவிடு யூம், இசுக்கொட்டியப் பொருளியலாளர், மெய்யியலாளர் (பி. 1711)
- 1819 – ஜேம்ஸ் வாட், இசுக்கொட்டிய-ஆங்கிலேயப் பொறியியலாளர் (பி. 1736)
- 1822 – வில்லியம் எர்செல், செருமானிய-ஆங்கிலேய வானியலாளர் (பி. 1738)
- 1867 – மைக்கேல் பரடே, ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1791)
- 1887 – செல்லப்பா குமாரசுவாமி, இலங்கை அரசியல்வாதி
- 1900 – பிரீட்ரிக் நீட்சே, செருமானிய மெய்யியலாளர் (பி. 1844)
- 1908 – என்றி பெக்கெரல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1852)
- 1919 – விக்தர் நோர், செருமானிய-உருசிய வானியலாளர் (பி. 1840)
- 1938 – அலெக்சாண்டர் குப்ரின், உருசிய நாடுகாண் பயணி (பி. 1870)
- 1971 – வ. சு. செங்கல்வராய பிள்ளை, தமிழறிஞர் (பி. 1883)
- 1981 – எஸ். ஏ. விக்கிரமசிங்க, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1901)
- 2001 – மட்கே ஜெர்ட்ரூடே ஆடம், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1912)
- 2008 – தா. இராமலிங்கம், ஈழத்துக் கவிஞர் (பி. 1933)
- 2009 – எட்வர்ட் கென்னடி, அமெரிக்க அரசியல்வாதி (பி. 1932)
- 2012 – நீல் ஆம்ஸ்ட்றோங், அமெரிக்க விண்வெளி வீரர் (பி. 1930)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (உருகுவை, 1825)
- விடுதலை நாள் (பிரான்சு)