பீட்டர் டிரக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கனகுவின் திருத்தத்தை மீள்விக்கிறேன்
சி தானியங்கி இணைப்பு: ka:დრაკერი, პიტერ, ko:피터 드러커
வரிசை 38: வரிசை 38:
[[it:Peter Drucker]]
[[it:Peter Drucker]]
[[ja:ピーター・ドラッカー]]
[[ja:ピーター・ドラッカー]]
[[ka:დრაკერი, პიტერ]]
[[ko:피터 드러커]]
[[nl:Peter Drucker]]
[[nl:Peter Drucker]]
[[no:Peter Drucker]]
[[no:Peter Drucker]]

06:38, 14 மே 2008 இல் நிலவும் திருத்தம்

பீட்டர் ஃபெர்டினாண்ட் ட்ரக்கர்
பிறப்புநவம்பர் 19, 1909
காஸ்க்ரேபன், வியன்னா, ஆஸ்திரியா
இறப்புநவம்பர் 11, 2005
க்ளேர்மாண்ட், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிமேலாண்மை ஆலோசகர்

பீட்டர் எஃப். ட்ரக்கர்(நவம்பர் 19, 1909 - நவம்பர் 11, 2005) புகழ்பெற்ற மேலாண்மைத்துறை எழுத்தாளர், பேராசிரியர் ஆவார். 1909ல் வியன்னாவில் பிறந்து, அங்கேயும் பின்னர் இங்கிலாந்திலும் கல்வி பயின்றார். இவருடைய தந்தையார் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவருடைய தந்தையின் நண்பர் ஒருவர் மூலமாக இவருக்கு இத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டது. ஜெர்மனி, ஃப்ராங்க்பர்ட் நகரில் பத்திரிகை நிருபராக இருந்தபொழுது, பொது, சர்வதேச சட்டத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.பின்னர் இங்கிலாந்தில் ஒரு சர்வதேச வங்கியில் பொருளாதார நிபுணராக பணியாற்றினார். 1937ல் அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் நாட்டிற்கு வந்த அவர், இரண்டாண்டுகளில் தனது "The End of Economic Man" எனும் முதல் புத்தகத்தினை வெளியிட்டார். ட்ரக்கரின் மேலாண்மை நூல்களும், பொருளாதாரம், சமூகம் பற்றிய அவரது பகுப்பாய்வுகளும் இருபதிற்கும் மேற்பட்ட மொழிகளில் பதிப்பிக்கப்பட்டு உலக அளவில் படிக்கப்பட்டு மதிக்கப்படுகின்றன. அவர் ஒரு சுயசரிதையையும், இரண்டு புதினங்கள் உட்பட 39 புத்தகங்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

ட்ரக்கர், தனது பல்வேறு எழுத்துப்பணிகளுக்கிடையே பேராசிரியராகவும் செம்மையாக பணியாற்றியிருக்கிறார். முதலில் அரசியல் தத்துவ பேராசிரியராக பெனிங்டன் கல்லூரியிலும், பின்னர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, நியுயார்க் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பட்டக் கல்லூரியில்(Graduate Business School of New York University), பேராசிரியராகவும் இருந்தார். 1971ல் இருந்து கலிபோரினியாவின் க்ளேர்மாண்ட் பட்ட கல்லூரியில்(Claremont Graduate School) சமூக அறிவியல் பேராசிரியராக இருந்தார்[1].

மேற்கோள்கள்

  1. "The Essential Drucker" எனும் நூலின் ஆசிரியர் குறிப்பிலிருந்து


"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_டிரக்கர்&oldid=240628" இலிருந்து மீள்விக்கப்பட்டது