"பீரங்கி வண்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,877 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
தகரிகள் போரிடைக் காலத்தில் மிகப் பெரியனவாகவும் திறன்மிக்கனவாகவும் படிமலர்ந்து, இரண்டாம் உலகப் போர்க்காலத் தகரிகளாகப் படிமலர்ந்தன. இதில் கவசப் படைக்கலஞ்சார்ந்த பல கருத்துப்படிமங்கள் உருவாக்கப்பட்டன; சோவியத் ஒன்றியம் கால்கின் போரில் 1939 ஆகத்து திங்களில் முதல் பெருந்திரள் தகரி வான் தாக்குதலைத் தொடுத்தது.<ref>[[Tank#CITEREFCoox1939|Coox (1985)]], p. 579, 590, 663</ref> பின்னர், முதன்மைப் போர்க்களத் தகரியின் முன்னோடிகளில் ஒன்றாகிய T-34 வகை தகரியை உருவாக்கியது. இருவாரக் காலத்துக்கும் முன்பாக, செருமனி மின்னல்போர் எனும் பேரளவு கவச ஊர்திகளை வடிவமைத்தது. இதில் ஒடிகள் பூட்டிய தன்னியக்கப் பெருந்திரள் தகரிகள் பயன்பாட்டால், புதுவகைக் காலாட்படை, தரைப்படைக்கல அணி, வான்படையணி ஆகியவற்றை இணைவாக அணிதிரட்டி, எதிரிப்படை முகப்பை உடைத்து பகைவரின் எதிர்ப்பை முறியடித்தது.
 
இரண்டாம் உலகப் போரின் பின்னரைப் பகுதியில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்ட உயர்வெடிப்பு தகரிதகர் படைக்கலங்கள் பாஞ்சர்பாசுட்டு போன்ற எடைகுறைந்த காலாட்படை சுமக்கும் தகரிதகர்ப்பு ஆயுதங்களை உருவாக வழிவகுத்தன. இவை சிலவகை தரிகளை அழிக்கும் வல்லமையைப் பெற்றிருந்தன. பனிப்போர்க் கால ஆயுதங்கள் இந்த ஆயுதங்களைக் கருத்தில்கொண்டு வடிவமைக்கப்பட்டன. இதனால், 1960 களில் மிகவும் மேம்பாடான கவசங்கள் உருவாகின; குறிப்பாக, கூட்டுக் கவசங்கள் உருவாகின. மேம்பாடான பொறிகளும் செலுத்தமும் தொங்கல்களும் இக்காலத் தகரிகளைப் பெரிய அளவில் வளர வழிவகுத்தன. துப்பாக்கித் தொழில்நுட்பம் சில கூறுபாடுகளின் மாற்றங்களாலும் வெடிகுண்டு வடிவமைப்பின் மேம்பாட்டாலும் குறிபார்த்தல் அமைப்புகளின் மேம்பாட்டாலும் கணிசமாக வளர்ந்தது.
 
இந்தியா உருசியவகை T -72 பீரங்கி வண்டி, T-90 பீரங்கி வண்டிகளைப் பயன்படுத்துகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2396842" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி