பீரங்கி வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26: வரிசை 26:
===முதல் உலகப் போர்===
===முதல் உலகப் போர்===


[[File:Tanks of WWI.ogg|thumb|right|முதல் உலகப் போரின் தகரிகள்இன் படக்காட்சி]]
[[File:Tanks of WWI.ogg|thumb|right|முதல் உலகப் போர்த் தகரிகளின் படக்காட்சி]]


====பெரும்பிரித்தானியா====
====பெரும்பிரித்தானியா====

16:08, 5 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

போர்க்களத்தில் முதலில் 1916 இல் பயன்பட்ட பிரித்தானிய மார்க் 1 தகரி. இது சாலமன் கரப்புத் திட்டத்தைக் கொண்டுள்ளது
இரண்டாம் உலகப் போரில் 1943 இல் இத்தாலியில் பயன்படுத்தப்பட்ட பிரித்தானிய எம்4 செர்மன் வகை பீரங்கி வண்டி
A row of seven large German tanks from World War Two lined up with their long cannons pointing up at an angle, as if saluting
செருமனி செய்திப்படத்துக்காக அணிவகுத்து நிற்கும் செருமானிய டைகர் II தகரிகள்,(Schwere Panzer Abteilung 503 (s.Pz.Abt. 503) 'Feldherrnhalle')

தகரி (tank) அல்லது தகர்கலம் அல்லது பீரங்கி வண்டி என்பது முன்னணித் தாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்ட கவசம் பூட்டிய போரிடும் ஊர்தியாகும். பீரங்கி வண்டி எஃகு கவசம் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதில் உயர் சுடுதிறன் உள்ள சுடுகலன்கள் அல்லது எந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதன் கவசமும், வேகமான இயங்குதிறமும், உயர் சுடுதிறமும் வலுவான கவசத் தாங்கியும் இதைத் தற்காலத் தரைப் போரின் ஒரு முதன்மை வாய்ந்த முன்னணி ஆயுதமாக ஆக்கியுள்ளது. இதில் அமைந்த எந்திரத் துப்பாக்கியை அனைத்து பக்கமும் திருப்பி தாக்க முடியும். இதை முதலாம் உலக போரின் போது இங்கிலாந்து உருவாக்கியது. முதல் உலகப் போரின் போது குறைந்த அளவே இது பயன்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது பேரளவு வடிவமைப்பு மாற்றம் பெற்றது. சோவியத் ஒன்றியம் T-34 பீரங்கி வண்டியை உருவாக்கியது. இது ஒரு சிறந்த பீரங்கி வண்டியாக இரண்டாம் உலகப் போரின் போது விளங்கியது.

தற்காலத் தகரிகள் அனைத்துப்பொது இயங்குநிலைth தரை ஆயுத அமைப்புc செயல்மேடைகள் ஆகும். இதில் சுழலும் துப்பாக்கிப் படுகையில் பேரளவீட்டுச் சுடுகலன் நிறுவப்பட்டிருக்கும். உடன் எந்திரத் துப்பாக்கிகளும் மற்ற பிற ஆயுதங்களும் அமைந்திருக்கும். படைக்குழுவுக்கும் ஆயுதங்களுக்கும் செலுத்தும் அமைப்புகளுக்கும் இயங்குதிறத்துக்கும் பாதுகாப்பளிக்க இது அடர்ந்த ஊர்திக் கவசத்தால் மூடப்பட்டுச் சக்கரங்களில் இயங்காமல் சுழல் தடத்தில் இயங்கும். எனவே இவை முரடான தரைப்பரப்பிலும் இயங்கிப் போர்க்களத்தில் மிக மேப்பட்ட இடத்தில் அமைந்து இயங்கவல்லதாக உள்ளது. இந்தக் கூறுபாடுகள் தகரி போர்த்தந்திரத்தோடு செயல்பட வழிவகுக்கிறது. திறம் மிக்க ஆயுதங்களின் சேர்மானம் தகரியின் துப்பாக்கி வழியாகச் சுடுகிறது. இது தனது தற்காப்புதிறத்தால் எதிரிப்படையின் சுடுதலில் இருந்தும் தப்பிக்கவல்லதாகும். இவை முற்றுகை, தற்காப்பு ஆகிய இருநிலைகளிலும் போர்க்களத்தில் கவச வண்டி அலகுகளுக்குத் தேவைப்படும் அனைத்துச் செயல்களையும் ஆற்றும் வல்லமைகொண்ட அலகுகளாக அமைகின்றன.[1] தற்காலத் தகரி முதல் எளிய கவச ஊர்திகளில் இருந்து ஒரு நூற்றாண்டு கால வளர்ச்சியில் உருவானதாகும். உள் எரி பொறி போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகள் கவச வண்டிகளின் வேகமான இயக்கத்துக்கு உதவின. இந்த முன்னேற்றங்களின் விளைவாக, தகரிகள் தன் முதல் தோற்றத்துக்குப் பிறகு பல ஆண்டுகளாக பேரளவு திறமை மாற்றங்களைப் பெற்றன.

இந்தியா உருசியத் தயாரிப்பான T -72 பீரங்கி வண்டி மற்றும் T-90 பீரங்கி வண்டியை உபயோகிக்கிறது.

அர்ஜுன் என்னும் பீரங்கி வண்டி இந்தியாவின் இன்றியமையாத போர் ஆயுதமாகும். இது மொத்தமாக இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. இதன் வரைவு முதல் உருவாக்கம் வரை சென்னையிலேயே நடந்தது.

19ம் நுாற்றாண்டு வகைமைப் பீரங்கிவண்டியின் பக்கத் தோற்றப்படம்


வரலாறு

கருத்துப்படிமங்கள்

தகரி படைக்கு இயங்குதிறப் பாதுகாப்பும் சுடுதிறமும் வழங்க விரும்பிய பண்டைய கருத்துப்படிமத்தின் 20 ஆம் நூற்றாண்டு நடைமுறைப்படுத்தல் ஆகும். உள் எரி பொறி , கவசத் தட்டு, தொடர்ச்சியான தடம் ஆகியமை தற்காலத் தகரி புணைவுக்கான முதன்மையான புத்தாக்கங்களாகும்.

இலியனார்தோ தாவின்சி முன்மொழிந்த ஊர்தி

முதல் உலகப் போர்

முதல் உலகப் போர்த் தகரிகளின் படக்காட்சி

பெரும்பிரித்தானியா

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. von Senger and Etterlin (1960), The World's Armored Fighting Vehicles, p.9.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீரங்கி_வண்டி&oldid=2396028" இலிருந்து மீள்விக்கப்பட்டது