கோபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31: வரிசை 31:


==== சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரம் ====
==== சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரம் ====
[[சிதம்பரம் நடராசர் கோயில்]] தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தில் உள்ள அழகிய மிகப் பழைமையான சைவ சமயத்திருக்கோவில். இந்தக் கோவில் பல வரலாற்றுச் சிற்ப்புகள் கொண்டது. சிவ ஆலயங்களில் முதன்மையானது, 2000 ஆண்டுகள், தமிழ் பக்தி இலக்கியங்களில் ஒன்றான தேவாரத்தில் பாடல் பெற்றத் தலம்.
[[சிதம்பரம் நடராசர் கோயில்]] தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தில் உள்ள அழகிய மிகப் பழைமையான சைவ சமயத்திருக்கோவில். இந்தக் கோவில் பல வரலாற்றுச் சிற்ப்புகள் கொண்டது. சிவ ஆலயங்களில் முதன்மையானது, 2000 ஆண்டுகள் பழைமையானது, சிதம்பர இரகசியத்திற்கு பெயர் பெற்றது. தமிழ் பக்தி இலக்கியங்களில் ஒன்றான தேவாரத்தில் பாடல் பெற்றத் தலம். சிதம்பர இரகசியம் என்று அழைக்கப்படுவது, சிவனாகிய பரம்பொருளின் எல்லைகள் அற்ற ஆரம்பமும் முடிவும் இல்லாத நிலையை உலகிற்கு உணர்த்துவதாகும்.

இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாகவும், 135 அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையவையாகும்.


==== திரு அண்ணாமலையார் கோவில் கோபுரம் ====
==== திரு அண்ணாமலையார் கோவில் கோபுரம் ====

06:01, 12 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள டொராண்டோவில் அமைந்துள்ள சி. என். கோபுரம். உலகின் மிக உயர்ந்த தனித்து நிற்கும் அமைப்பு இதுவே.

கோபுரம் என்பது மனிதரால் உருவாக்கப்பட்ட உயரமான அமைப்பு ஆகும். இவை அவற்றின் நீள, அகலங்களைக் காட்டிலும் பல மடங்கு உயரமாக இருக்கும். கோபுரங்கள் பொதுவாக அவற்றின் உயரத்திலிருந்து பயன் பெறுவதற்காகவே கட்டப்படுகின்றன. இவை தனியாகவோ அல்லது வேறு பெரிய அமைப்புக்களின் ஒரு பகுதியாகவோ அமைக்கப்படலாம்.

வரலாறு

கோபுரங்கள் மிகப் பழைய காலம் தொட்டே மனிதனால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஸ்காட்லாந்தில் காணப்படும் "புரோச்" எனப்படும் கூம்பு வடிவக் கோபுர வீடுகள் இவற்றுக்கு எடுத்துக்காட்டு ஆகும். சீனர்கள் கிமு 210 ஆம் ஆண்டிலேயே சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதியாகக் கோபுரங்களை அமைத்திருந்தனர்.

இந்திய கோபுரங்கள்

குதுப்மினார் கோபுரம்

72.5 மீ (234 அடி) உயரமுடைய குதுப் மினார் தான் உலகின் உயரமான தங்கு தடையில்லாமல் நிற்கின்ற தூபி

குதுப் மினார், இந்தியாவின் தலைநகரமான தில்லியில் உள்ளது. இந்தக் கோபுரத்தின் உயரம் 72.5 மீட்டர்கள், (237.8 அடி) உயரம் கொண்ட கோபுரமாகும். மேலும் செங்கல்லால் செய்த உலகிலேயே உயர்ந்த பள்ளி வாயில் தூபி இதுவே ஆகும். இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு அதன் தொடக்க மற்றும் மிகப் பிரசித்தி பெற்ற எடுத்துக்காட்டுகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக குதுப் மினார் திகழ்கின்றது. இந்த வளாகம் யுனெசுக்கோ அமைப்பால் உலக பாரம்பரிய நினைவிடமாக [1] அழைக்கப்டுகிறது. தில்லியில் மிகவும் பிரபலமான சுற்றுலாப் பயணிகள் விரும்பிப் பார்க்கும் இடமாக இந்த இடம் திகழ்கிறது.

இந்த கோபுரம் எதற்காக கட்டினார்கள் என்பதைப் பற்றி பரவலாக விவாதங்கள் நடைபெற்றுள்ளன. தில்லி சுல்தான்கள் காலத்தில் மக்களை தொழுகைக்காக அழைக்கவே, பள்ளி வாயிலில் தூபியை கட்டி இருக்கலாம் அல்லது வெற்றிவாகை சூடியதைக் கொண்டாட இவ்வாறு கோபுரத்தை எழுப்பி இருக்கலாம், இது இஸ்லாம் மதத்தினரின் படை பலத்தை குறிப்பதாக அமையலாம் அல்லது பாதுகாப்பிற்காக ஏற்படுத்திய காவல் கோபுரமாகவும் இருக்கலாம். இதற்கு யார் பெயர் வைத்தார்கள் மற்றும் அப்படி ஏன் வைத்தார்கள் என்பது பற்றியும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பல வரலாற்று வல்லுனர்கள் முதலில் இந்தியாவுக்கு வந்து வெற்றி கண்ட துருக்கிய சுல்தான் குத்துபுத்தின் ஐபக் அவர்களின் நினைவை போற்றும் வகையில் இந்தப் பெயர் சூட்டியிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டு கோவில் கோபுரங்கள்

"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்பது பழமொழி." தமிழர் வரலாறு கோவில் கிடைக்கப்பெறும் கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவை மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. பண்டைய காலம் தொட்டே தமிழர்கள் கட்டிடக் கலையில் சிறந்தவர்களாக இருந்திருப்பதை இந்தக் கோவில்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். கோபுரங்கள் கோவில்களின் ஒரு அமைப்பாக மட்டுமல்லாமல் பல விதங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

திருவில்லிபுத்தூர் கோபுரம்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம்

திருவில்லிபுத்தூர் என்பது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தமிழ் பக்தி இலக்கியங்களில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற பல சிற்ப்புகள் கொண்ட 1000 ஆண்டுகள் பழமைவாயந்த மிகவும் புகழ்பெற்ற ஊர். இந்தக் கோவில் கோபுரம் 11 அடுக்குகளைக் கொண்ட கோவில் ஆகும். இந்த கோவில் கோபுரம் 192 அடி உயரமானது. இக்கோவில் கோபுரமே தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சின்னம் ஆகும். இங்கு அமைந்துள்ள ஆண்டாள் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. மேலும் தமிழ் பக்தி இலக்கியத்தில் திருப்பாவை அருளிய ஆண்டாள் பிறந்த ஊர் என்பதற்காகவும் அறியப்படுகிறது.

இந்த சீர்மிகு கோவில் பெரியாழ்வார் என்னும் பெருமாளின் அடியாரால் கட்டப்பட்டது. ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய இவர், தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்று கூறுவர். அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிகொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம்

கோபுரங்கள், மதுரை

வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள மிகப் பழமையான நகரம் மதுரை. இந்த நகரத்தில் தான் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டதாக வரலாறு உள்ளது. சைவ சமய பக்தி இலக்கியங்களால் பாடல் பெற்ற நகரமாக உள்ளது. உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் பழமையான நகரங்களில் ரோமிற்கு மேலான மிக்ப் பழமையான நகரமாக மதுரை அறியப்படுகிறது. இந்த நகரத்தின் மையமாக இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த கோவிலை சுற்றியுள்ள வீதிகள் அனைத்தும் தமிழ் மாதப் பெயர்களால் அழைக்கபடுகிறது. ஆடி வீதி, சித்திரை வீதி, ஆவணி வீதி மற்றும் மாசி வீதி என்று மாதங்களின் பெயர்களால் அழைக்கபடுகிறது. மேலும் குறிப்பிட்ட தமிழ் மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் அந்த மாதங்களின் பெயர் கொண்ட வீதிகளில் தான் நடைபெறும். இந்தக் கோவிலை சுற்றி நான்கு திசைகளுக்கு (வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு) ஒன்றாக நான்கு அழகிய கோபுரங்களை கொண்ட நுழைவுவாயில்கள் உள்ளது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரம்

சிதம்பரம் நடராசர் கோயில் தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தில் உள்ள அழகிய மிகப் பழைமையான சைவ சமயத்திருக்கோவில். இந்தக் கோவில் பல வரலாற்றுச் சிற்ப்புகள் கொண்டது. சிவ ஆலயங்களில் முதன்மையானது, 2000 ஆண்டுகள் பழைமையானது, சிதம்பர இரகசியத்திற்கு பெயர் பெற்றது. தமிழ் பக்தி இலக்கியங்களில் ஒன்றான தேவாரத்தில் பாடல் பெற்றத் தலம். சிதம்பர இரகசியம் என்று அழைக்கப்படுவது, சிவனாகிய பரம்பொருளின் எல்லைகள் அற்ற ஆரம்பமும் முடிவும் இல்லாத நிலையை உலகிற்கு உணர்த்துவதாகும்.

இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாகவும், 135 அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையவையாகும்.

திரு அண்ணாமலையார் கோவில் கோபுரம்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபுரம்&oldid=2365906" இலிருந்து மீள்விக்கப்பட்டது