சோழர் கால ஆவணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 15: வரிசை 15:


''பதிவாளர் அலுவலகம்''
''பதிவாளர் அலுவலகம்''
ஆவணம் என்பது உரிமைச்சிட்டாகும். [[களரி]] என்பது பதிவு செய்யுமிடமாகும். தற்பொழுது ஆவண உரிமைகளைப் பதிவு செய்யும் அலுவலகத்தைப் [[பதிவாளர் அலுவலகம்]] என்று அழைக்கப்படுகின்றனர். சோழார் ஆட்சியில் நிலம், பணம், தங்கம் மற்றும் பிறபொருட்களின் பரிவர்த்தணைகள் அனைத்தும் [[ஆவணச்சுவடி]]யில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆவணம் என்பது உரிமைச்சிட்டாகும். [[களரி]] என்பது பதிவு செய்யுமிடமாகும். தற்பொழுது ஆவண உரிமைகளைப் பதிவு செய்யும் அலுவலகத்தைப் [[பதிவாளர் அலுவலகம்]] என்று அழைக்கப்படுகின்றனர். சோழார் ஆட்சியில் நிலம், பணம், தங்கம் மற்றும் பிறபொருட்களின் பரிவர்த்தணைகள் அனைத்தும் [[ஆவணச்சுவடி]]யில் பதிவு செய்யப்பட்டுள்ளன.


== மேற்கோள் ==
== மேற்கோள் ==

15:22, 10 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

ஆவணங்கள்

சோழர் கால ஆட்சியில் பல்வேறு வகையான ஆவணங்கள், அரசு அதிகாரிகளால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

ஆவணங்களைப் புதுப்பித்தல்

கோயிலில் உள்ள கல்வெட்டுகள் அனைவருக்கும் பொதுவான சட்ட ஆவணங்களாகத் திகழ்நந்தன. அவற்றை தாம் விரும்பியவாறு ஒருவரோ இருவரோ மாற்றி அமைக்க முடியாது. அவற்றை திருத்தவும், புதுப்பிக்கவும் செய்யும் பணி கிராம மக்கள் முன்னிலையில் நிகழ்ந்துள்ளது. முதலாம் இராசராசனின் நான்காம் ஆட்சி ஆண்டில் (கி.பி.989) நித்தவினோத வளநாட்டில் முன்னியூர் என்னும் ஊரில் திருவகத்தீச்சுரம் உடையார் கோயிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு சிதைந்துவிட்டது. வழங்கப்பட்ட நிலங்களின் ஆவணமாக அக்கல்வெட்டு திகழ்ந்தது. ஊரார்களும் அக்கோயில் தானத்தார்களும் உதையப் பெருமாள் சோழக் கோனார் என்பவரிடம் விண்ணப்பித்தனர். அக்கோயில் திருமண்டபத்தின் முன்னர் ஊர் தண்டல் முதலானோர் கூடி இறையிலி நிலங்களை உறுதிப்படுத்தி ஒதுக்கி மீண்டும் பழையக் கல்வெட்டில் உள்ளபடியே புதுப்பித்து கல்லில் பொறித்தனர்.

தரப்பொத்தகம்

இன்றைய ஊர் வருவாய்க் கணக்குகளை “அ-பதிவேடு” என்ற பதிவேட்டில் வருவாய் அலுவலர்கள் பதிவு செய்கின்றனர். அப்பதிவேட்டில் நிலங்களின் தரம், அளவு, வரிவிகிதம் போன்றவற்றைப் பதிவு செய்கின்றனர். இத்தகைய முறை பிற்கால சோழார் காலத்தில் இருந்துள்ளது. நிலங்களின் அளவு, தரம், வரிவிகிதம் போன்றவற்றை பதிவு செய்வதற்கு “தரப்பொத்தகம்” என்ற பதிவேடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வப்பொழுது நிலங்கள் அளவிடப்பட்டு தரம் மதிப்பீடு செய்யப்பட்டது. நிலத்தின் தரத்திற்கேற்ப நிலவரி நிர்ணயம் செய்யப்பட்டது. அவற்றை தரப்பொத்தகம் என்ற பதிவேட்டில் பதிவு செய்தனர்.

ஆவணக்களரி

பதிவாளர் அலுவலகம் ஆவணம் என்பது உரிமைச்சிட்டாகும். களரி என்பது பதிவு செய்யுமிடமாகும். தற்பொழுது ஆவண உரிமைகளைப் பதிவு செய்யும் அலுவலகத்தைப் பதிவாளர் அலுவலகம் என்று அழைக்கப்படுகின்றனர். சோழார் ஆட்சியில் நிலம், பணம், தங்கம் மற்றும் பிறபொருட்களின் பரிவர்த்தணைகள் அனைத்தும் ஆவணச்சுவடியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்கோள்

இராசராசன் துணுக்குகள் நூறு வெளியீடு :தமிழ்நாடு தொல்லியல் துறை, பக்கம் எண் 34,35,36..

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழர்_கால_ஆவணங்கள்&oldid=2362408" இலிருந்து மீள்விக்கப்பட்டது