மின்சாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
* [[மின்னழுத்தம்]] |
* [[மின்னழுத்தம்]] |
||
* [[மின்காந்தம்]] |
* [[மின்காந்தம்]] |
||
{{stub}} |
|||
[[பகுப்பு:மின்னியல்]] |
[[பகுப்பு:மின்னியல்]] |
08:48, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரை 'உலோ.செந்தமிழ்க்கோதை' எனும் பயனரால் தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக சூன் 15, 2017 அன்று முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து, வேறு எவரும் 10 நாட்களுக்கு இக்கட்டுரையில் எதுவித தொகுப்புக்களையும் செய்யவேண்டாம். இக்கட்டுரை 10 நாட்களுக்கு மேல் குறிப்பிட்ட பயனரால் தொகுக்கப்படாதிருப்பின், இங்கிருக்கும் வார்ப்புருவை நீக்கிவிட்டு, வேறொருவர் இந்தக் கட்டுரையைத் தொகுக்கலாம். |
மின்சாரம் (electricity) என்பது மின்னூட்டத்துடன் தொடர்புடைய இயற்பியல் நிகழ்வாகும். அதாவது, மின்னூட்ட்த்தின் பாய்வே ஆகும். அதாவது, எதிர்மின்னூட்டம் உடைய மின்னன்களின் பாய்வையே நாம் மின்சாரம் என்று அழைக்கின்றோம். இயற்கையில் முகிலில் இருந்து புவிக்குப் பாயும் மின்னன்களின் பாய்வே அல்லது மின்சாரமே மின்னலுக்கு காரணமாகும். தொடக்கத்தில் மின்சாரம் காந்த நிகழ்வோடு தொடர்பற்ற தனி நிகழ்வாகக் கருதப்பட்டாலும் மேக்சுவெல் சமன்பாடுகளின் உருவாக்கத்துக்குப் பின்னர், மின்சாரமும் காந்தமும் ஒருங்கிணைந்த மின்காந்த நிகழ்வின் கூறுகளே என்பது புலனாகியது. மின்னோட்டம் ஓர் மின்சுருளில் பாய்ந்தால் அச்சுருளில் மின்காந்தப் புலம் உருவாகிறது. மின்னல், நிலைமின்சாரம், மின்வெப்பமாக்கம், மின் இறக்கம் என பலநிகழ்வுகள் மின்சாரத்தோடு தொடர்பு கொண்டுள்ளன. மேலும் மின்சாரம் பல நிகழ்காலத் தொழில்நுட்பங்களின் உயிரோட்டமாக அமைகிறது.
மின்சாரம் பற்றிய அறிவு பழங்காலத்தில் இருந்ததற்கான சான்று இருந்தாலும், இத்துறையின் வளர்ச்சி பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டது.
மின் ஆற்றலை எவ்வகை ஆற்றலாகவும் எளிதில் மாற்ற பல கருவிகள் உள்ளன. அன்றாட வாழ்வில் மின்சாரம் தற்போது பரவலாக பயன்பட்டு வருகிறது. இத்தகைய மின்சாரம் அனல் மின், நீர் மின், அணு மின் நிலையங்களில் பேரளவில் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வாழ்ந்து வருகிறார்கள். வீடுகளில் மட்டுமில்லாமல் பல தொழிற்சாலைகளில் உலகம் முழுவதும் பலவித வளர்ச்சிப் பணிகளுக்காகவும் ஆக்கப் பணிகளுக்காகவும் மின்சாரம் பயன்படுகிறது.
மின்னாக்க நிலையங்கள்
- அனல் மின் நிலையம்
- அணு மின் நிலையம்
- நீர் மின் நிலையம்,
- காற்று மின் ஆலை,
- சூரிய மின் நிலையம் ,
- கடலோத மின் நிலையம்,
- உயிரி வளிம மின்னாக்கம்,