ஆயுதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Landscape-1497639814-lrpf-lead-img-lrg.jpg" நீக்கம், அப்படிமத்தை Christian Ferrer பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியு...
"உந்துகணை.jpg" நீக்கம், அப்படிமத்தை Christian Ferrer பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார...
வரிசை 16: வரிசை 16:
==== உந்துகணை ====
==== உந்துகணை ====



[[File:உந்துகணை.jpg|thumb|உந்துகணை]]


உந்துகணை (Rockets) என்பது சக்தி மீளுதைப்புத் (Energy Reaction) தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் விண்ணூர்திகளாகும். உந்துகணைத் தொழிநுட்பமானது வானவேடிக்கை, ஏவுகணை, விண்வெளிப்பயணம் போன்ற பல்வேறுபட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. உந்துகணைகள், அவற்றிற் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அடிப்படையில் பிரதானமாக இரண்டுவகையாகப் பிரிக்கப்படுகின்றன.
உந்துகணை (Rockets) என்பது சக்தி மீளுதைப்புத் (Energy Reaction) தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் விண்ணூர்திகளாகும். உந்துகணைத் தொழிநுட்பமானது வானவேடிக்கை, ஏவுகணை, விண்வெளிப்பயணம் போன்ற பல்வேறுபட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. உந்துகணைகள், அவற்றிற் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அடிப்படையில் பிரதானமாக இரண்டுவகையாகப் பிரிக்கப்படுகின்றன.

08:38, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

ஒரு வாள்
வெண்கலக் கால ஆயுதங்கள்

ஆயுதம் என்பது ஒருவரை காயப்படுத்தவோ, கொல்லவோ அல்லது ஒரு பொருளினை அழிக்கவோ, சேதப்படுத்தவோ பயன்படும் ஒரு கருவி ஆகும். ஆயுதங்கள் தாக்கவோ, அல்லது தடுக்கவோ, அச்சமூட்டவோ, தற்காத்துக் கொள்ளவோ பயன்படலாம். மேலோட்டமாக, சேதத்தை ஏற்படுத்தக் கூடிய எதனையும் ஆயுதம் எனலாம். ஆயுதம் என்பது சாதாரண தடியில் இருந்து கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை வரை எதுவாகவும் இருக்கலாம்.

இத்தகு படைக்கருவிகளை இலக்கியங்கள் கலம் என்னும் சொல்லாலேயே குறிப்பிட்டுவந்தன. [1]

சங்க கால ஆயுதங்கள்

சங்க கால மக்கள் இரும்பினைக் கொண்டு பெரும்பான்மையாகப் பல்வேறு வகையான ஆயுதங்களையே செய்தனர். வில், அம்பு, வேல், அரிவாள், ஆண்டலையடுப்பு, ஈர்வாள், உடைவாள், கதிரருவாள், கதை, கவை, கல்லிடு கூடை, கணையம், கழுகுப்பொறி, கவசம், குத்துவாள், கைவாள், கொடுவாள், கோல், சிறுவாள், தகர்ப்பொறி, தொடக்கு, பிண்டிபாலம், ஞாயில், மழுவாள், விளைவிற்பொறி, அரிதூற்பொறி, இருப்பு முள், எரிசிரல், கழு, கருவிலூகம், கல்லமிழ் கவண், கற்றுப்பொறி, கழுமுள், குந்தம், கூன்வாள், கைபெயர், கோடாரி, சதக்கணி, தண்டம், தூண்டில், தோமரம், புதை, நாராசம், வச்சிரம் , போன்ற கருவிகளை கொல்லர்கள் செய்து கொடுத்தனர் . இதனால் ,கொல்லரின் அடிப்படைத்தொழில் இரும்பாலான ஆயுதங்களைச் செய்தல் என்பது புலனாகிறது .[2]


தற்கால ஆயுதங்கள்

நாகரிகம் வளர்ச்சியடைந்த பிறகு , புதிய நவீன கண்டுபிடிப்புகளால் நவீன ஆயுதங்கள் தற்காலத்தில் பயன்படுத்தபடுகிறது .

உந்துகணை

உந்துகணை (Rockets) என்பது சக்தி மீளுதைப்புத் (Energy Reaction) தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் விண்ணூர்திகளாகும். உந்துகணைத் தொழிநுட்பமானது வானவேடிக்கை, ஏவுகணை, விண்வெளிப்பயணம் போன்ற பல்வேறுபட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. உந்துகணைகள், அவற்றிற் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அடிப்படையில் பிரதானமாக இரண்டுவகையாகப் பிரிக்கப்படுகின்றன. திண்ம எரிபொருள் உந்துகணைகள் (Solid Propellant Rocket), திரவ எரிபொருள் உந்துகணைகள் (Liquid Propellant Rocket) பெரும்பாலும் குறுந்தூரத்திற்கு ஏவுவதற்குப் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள், திண்ம எரிபொருள் உந்துகணைகளையே பயன்படுத்துகின்றன. நெடுந்தூர ஏவுகணைகள் மற்றும் விண்வெளிப் பயண ஊர்திகள் போன்றவற்றிற் பயன்படுத்தப்படும் உந்துகணைகள் திரவ எரிபொருள் உந்துகணைகளைப் பயன்படுத்துகின்றன. உந்துகணைகளின் வரலாறு, கி.மு. 1232 இல் சீனர்களால் மொங்கோலியர்களுடனான யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட உந்துகணைகளுடன் ஆரம்பமாகின்றது. உந்துகணைகள் பலகாலமாக போர்கள், கடல்சார் மீட்புப்பணிகள், சமிக்கை வழங்குதல் மற்றும் வானவேடிக்கை போன்றவற்றிற் பயன்படுத்தப்பட்டுவந்த போதிலும் அவற்றின் அடிப்படைத் தத்துவ விளக்கம் 20 ஆம் நூற்றாண்டிலேயே தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட்டதுடன் அதன்பின்னரே அவை தொழிநுட்ப மற்றும் பயன்பாட்டுரீத்தில் பாரியளவில் வளர்ச்சியடையத் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக விண்வெளிப் பயணங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளும் விண்வெளி தொடர்பான விஞ்ஞான ஆராய்ச்சிகளும் வேகம்பெற்றன. ஆரம்பகால திண்ம எரிபொருள் உந்துகணைகளில் எரிபொருளாக கரிமருந்தே (Gun Powder) பயன்படுத்தப்பட்டது. உலகின் முதலாவது திரவ எரிபொருள் உந்துகணை Robert Goddard இனால் 1926 ஆம் ஆண்டு ஏவப்பட்டது. 1920 ஆம் ஆண்டுகளில் பல உந்துகணை ஆராய்ச்சி நிறுவனங்கள் தோற்றம் பெற்றன. 1920 களின் நடுப்பகுதியில், ஜெர்மனிய விஞ்ஞானிகள் திரவ எரிபொருளைப் பயன்படுத்தி உச்ச வலுவைப் பெறக்கூடிய உந்துகணைகளை வடிவமைக்கும் ஆய்வில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பலதரப்பட்ட ஆய்வுகள் பல நாடுகளிலும் நடத்தப்பட்டன .

எறிகணை

எறி கணை என்பது தொலைதூரத்தில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்கும் கருவியாகும் . இது ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது .


ஏவுகணை

இன்றைய காலத்தில் ஏவுகணையை ஒவ்வொரு நாடுகளும் போட்டிபோட்டுக்கொண்டு தயாரித்து வருகின்றது . எதிரி நாட்டு இலக்கை அழிக்கும் வகையில் , கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை , அணு ஆயுதம் எடுத்துச்செல்லும் ஏவுகணை, எதிரி நாட்டு ஏவுகணையினை வானிலேயே தாக்கும் ஏவுகணை என்று பல வகைகளில் இன்று தயாரிக்கப்படுகிறது . ஒரு நாட்டின் ராணுவப்பலத்தை நிரூபிக்க இந்த மாதிரியான ஏவுகணைகள் பயன்படுகின்றது .



துப்பாக்கி

தனி நபர் ஆயுதமாக துப்பாக்கி , கைத்துப்பாக்கி ,பிஸ்டல் , போன்றவைகள் பயன்படுத்தப்படுகிறது , இது பாதுகாப்பு படையில் உள்ள வர்களுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கும் வழங்கப்பட்டு உள்ளது .

GP K100 target

படைக்கலங்கள்

  • எஃகு [3]
  • எஃகம் [4]

காண்க

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக் கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டி - பட்டினப்பாலை 70
  2. 1 .வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே“ என்று புறநானூற்றின் 312ஆவது பாடல் குறிப்பிடுகிறது
  3. முருகன் வேல்
  4. கேடயம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயுதம்&oldid=2306280" இலிருந்து மீள்விக்கப்பட்டது