பலபடி வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
{{cleanup june 2017}}
'''பலபடி வேதியியல்''' (''Polymer chemistry'') [[வேதியியல்|வேதியியலின்]] உட்பிரிவுகளுள் ஒன்றாகும். இந்தப் பிரிவு [[பலபடி]]களின் (குறிப்பாக [[நெகிழி]]கள், மீட்சிப் பொருள்கள் (''elastomer'') போன்ற [[வேதித் தொகுப்பு|செயற்கைப்]] பலபடிகளின்), வேதியியல் அமைப்பு, [[வேதித் தொகுப்பு]], மற்றும் வேதியியல் பண்புகள் ஆகியவை குறித்து ஆழமாக விவரிக்கிறது. பலபடி வேதியியல் [[பலபடி இயற்பியல்]], [[பல்பகுதியப் பொறியியல்|பலபடிப் பொறியியல்]] ஆகியவற்றை உள்ளடக்கிய [[பலபடி அறிவியல்]] என்ற அகன்ற களத்தோடு தொடர்புடையதாக விளங்குகிறது.
 
எர்மேன் இசுடாடிஞ்சா் என்ற வேதியியலாளர் முதன்முதலாகப் பலபடிகளைப் பற்றிய வரையறையைப் பின்வருமாறு முன்மொழிந்தார். அவரது கூற்றுப்படி, நீண்ட சங்கிலித் தொடர்களில் [[சகப் பிணைப்பு|சகப்பிணைப்பால்]] பிணைக்கப்பட்ட [[அணு]]க்களைக் கொண்ட [[பருமூலக்கூறு]]கள் என்பதே பலபடியின் முதல் வரையறையாக இருந்தது. அவருடைய ஆய்வானது, பலபடிகளைப் பற்றிய வேதியியல் ரீதியான புரிதலை ஆழப்படுத்தியது. நியோப்ரீன், நைலான் மற்றும் பாலியெசுடர் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு பலபடி வேதியியல் மேலும் விரிவடைந்தது.
 
== பலபடிகள் மற்றும் அவற்றின் பண்புகள் ==
[[பலபடி]]கள் எனப்படுபவை தனித்த ஒற்றை மூலக்கூறுகளின் [[பலபடியாக்கல்]] வினையின் காரணமாக உருவான அதிக மூலக்கூறு நிறையைக் கொண்ட சேர்மங்கள் ஆகும். ஒரு பலபடியின் அமைப்பில் மீண்டும் மீண்டும் வருகின்ற தனியான வினைபடு மூலக்கூறே ஒற்றை மூலக்கூறு (''monomerMonomer'') எனப்படுகிறது. ஒரு [[பலபடி|பலபடி]] என்பது வேதியியல்ரீதியாக, [[பலபடியாக்கல்|பலபடியாக்கலின்]] அளவு, [[வாய்ப்பாட்டு எடை|மோலார் நிறை]] பரவல், [[இழுவைத்திறன்]], கூட்டுப்பலபடி, பக்கத்தொடர் இணைப்பின் அளவு, பலபடியின் இறுதித் தொகுதிகள், குறுக்குப் பிணைப்புகள், படிகத்தன்மை மற்றும் வெப்பவியல் பண்புகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது. கரைசலில் உள்ள பலபடிகள் [[கரைதிறன்]], [[பிசுக்குமை]] மற்றும் பசையாதல் ஆகியவை தொடர்பான சிறப்புப் பண்புகளைப் பெற்றுள்ளன.
 
அமைப்புரீதியாகப் பலபடிகள் [[உயிரிப்பலபடி]]கள் மற்றும் [[தொகுப்பு முறைப் பலபடிகள்]] என அவற்றின் மூலங்களை அடிப்படையாகக் கொண்டு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சேர்மங்களின் ஒவ்வொரு வகைப்பாட்டிலிருந்தும் அவற்றின் பயன்பாடு, பண்புகள், இயல் மற்றும் வேதியியல் பண்புகள் ஆகியவற்றோடான தொடர்பின் அடிப்படையில் பல பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2304087" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி