"கனிமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
முதல் மூன்று பொதுவான பண்புகள் கடைசி இரண்டு பொதுப்பண்புகளோடு ஒப்பிடும் போது அதிகம் விவாதமின்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அறை வெப்பநிலையில் நிலையானதாக இருக்க வேண்டும் என்ற வரையறையின் விதிவிலக்குகளாக −39 °C இல் படிகமாகும் பாதரசமும், 0 °C வெப்பநிலைக்குக் கீழாக மட்டும் பனிக்கட்டியாக மாறும் நீரும் திகழ்கின்றன.
ஒரு [[பதார்த்தம்]], [[திண்மம்|திண்மமாகவும்]], [[படிகம்|படிக]] அமைப்பை உடையதாகவும் இருந்தால் மட்டுமே அது, உண்மையான கனிமமாக வகைபிரிக்கப்படும். அத்துடன், அது, ஓரினத் தன்மை (homogeneous) உள்ளதும், வரையறுக்கப்பட்ட [[வேதியியல்]] அமைப்பைக் கொண்டதாகவும், இயற்கையிற் காணப்படக்கூடிய [[கனிம வேதியியல்]] பதார்த்தமாகவும் இருத்தல் வேண்டும். இயற்கையில் தனிமங்களாக கிைடக்கும் உலோகங்கள் தாமிரம், வெள்ளி, தங்கம், பாதரசம், பிளாட்டினம் ஆகியவை ஆகும். இதர தனிமங்கள் அனைத்தும் சேர்மங்களாகவே காணப்படுகின்றன. பூமியில் காணப்படக்கூடிய, இயற்கையான உலோகச் சேர்மப் பொருட்களே '''கனிமம்''' (mineral)என அழைக்கப்படுகிறது. இவ்வாறான கனிமங்களில் எந்த கனிமங்களிலிருந்து சிக்கனமான மற்றும் இலாபகரமான முறையில் ஒரு உலோகமானது பிரித்தெடுக்கப்பட இயலுமோ அத்தகைய கனிமங்கள் '''தாதுக்கள்''' (ore) என அழைக்கப்படுகின்றன.<ref>{{cite book | title=Advanced Inorganic Chemistry | publisher=S. Chand Publishing | author=R. D. Madan | year=1985 | location=New Delhi | pages=753}}</ref>
 
== பெயரிடும் முறையும், வகைப்பாடும் ==
கனிமங்கள் அவற்றின் தன்மை, அதிகரிக்கும் பொதுத்தன்மையின் வரிசை, குழு மற்றும் தொடர், சிறப்பினம் இவற்றின் அடிப்படையில் வகைப்பாடு செய்யப்படுகின்றன. கனிம சிறப்பினங்கள் மற்ற சிறப்பினங்களிலிருந்து அவற்றின் குறிப்பிடத்தக்க மற்றும் தனித்தன்மை வாய்ந்த இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளின் அடிப்படையில் வகைப்பாடு செய்யப்படுகின்றன. உதாரணமாக, [[குவார்ட்சானது]] அதனுடை SiO<sub>2</sub> என்ற மூலக்கூறு வாய்ப்பாடு மற்றும் அதன் குறிப்பிடத்தக்க படிக அமைப்பு கொண்டு அதே வகையான வேதியியல் வாய்ப்பாட்டை உடைய மற்ற கனிமங்களிலிருந்து (பல்லுருத்தோற்றம்) வித்தியாசப்படுத்தப்படுகிறது. இரண்டு கனிம சிறப்பினங்களுக்கிடையே ஒரே விதமான இயைபு வீதம் இருக்கும் போது ஒரு தொடர் மட்டும் வரையறுக்கப்படுகிறது. உதாரணமாக, [[பயோடைட்]] தொடரானது [[ஃப்ளோகோபைட்]], [[சிடெரோஃபிலைட்]], [[அன்னைட்]] மற்றும் [[ஈஸ்டோடைட்]] போன்ற இறுதி உறுப்பினர்களை மாறுபட்ட அளவில் கொண்டுள்ள தன்மையினால் குறிப்பிபடப்படுகிறது. மாறாக, ஒரு கனிமத் தொகுதியானது, பொதுவான வேதிப்பண்புகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட படிக அமைப்பினைப் பகிர்ந்து கொள்ளும் தன்மையின் காரணமாக வகைப்படுத்தப்படுகிறது. பைராக்சீன் தொகுதியானது, XY(Si,Al)<sub>2</sub>O<sub>6</sub>, என்ற பொதுவான வாய்ப்பாட்டை உடையதாக உள்ளது. இதில் X மற்றும் Y இரண்டுமே நேர்மின் அயனிகளாகவும் X ஆனது Y ஐ விட பெரியதாகவும் அமைகின்றன. பைராக்சீன்களானவை ஒற்றை சங்கிலி சிலிகேட்டுகளாகவும், செஞ்சாய்சதுர அல்லது ஒற்றைச்சாய்வு கொண்ட படிக அமைப்பைக் கொண்டவையாகவும் உள்ளன.இறுதியாக, கனிம வகை என்பது இயற்பியல் பண்புகளில் வேறுபட்ட அதாவது, நிறம் அல்லது படிக வடிவமைப்பு பாணி போன்றவற்றில் வேறுபட்ட, ஒரு குறிப்பிட்ட கனிம சிறப்பினத்தின் வகை ஆகும். உதாரணமாக அமெதிஸ்டு என்பது குவார்ட்சு வகைப்பாட்டின் சிவப்பு கலந்த நீல வகையாகும். <ref>{{cite book | title=Mineralogy and Optical Mineralogy | publisher=Mineralogical Society of America | author=Dyar, Gunter, and Tasa | year=2007 | pages=20-22}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2303093" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி