தெகுரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:Wiki tamil 100|கிஷோர்]]|சூன் 07, 2017}}
{{Infobox Settlement
{{Infobox Settlement
|official_name = தெஹ்ரான்
|official_name = தெஹ்ரான்

06:28, 7 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

தெஹ்ரான்
تهران
மிலாத் கோபுரம் பின்பக்கத்திலிருந்து தெஹ்ரானின் ஒரு படிமம்
மிலாத் கோபுரம் பின்பக்கத்திலிருந்து தெஹ்ரானின் ஒரு படிமம்
அடைபெயர்(கள்): 72 நாடுகளின் நகரம்.
ஈரானில் தெஹ்ரான் இருப்பிடம்
ஈரானில் தெஹ்ரான் இருப்பிடம்
நாடு ஈரான்
மாகாணம்தெஹ்ரான்
அரசு
 • மாநகராட்சித் தலைவர்முகமது பகெர் கலிபஃப்
பரப்பளவு
 • நகரம்686 km2 (265 sq mi)
 • Metro18,814 km2 (7,264 sq mi)
ஏற்றம்1,200 m (3,900 ft)
மக்கள்தொகை (2006)
 • நகரம்11,000,000
 • அடர்த்தி11,360.9/km2 (29,424.6/sq mi)
 • நகர்ப்புறம்7,705,036
 • பெருநகர்13,413,348
நேர வலயம்IRST (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே)பயன்படுத்தவில்லை (ஒசநே+3:30)
இணையதளம்http://www.tehran.ir

டெஹ்ரான் ஈரான் நாட்டின் தலைநகரமும் தெகுரான் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 9 மில்லியன் மக்கள் நகரத்திலும் 16 மக்கள் தெகுரான் பெரு நகர வட்டாரத்திலும் வசிக்கிறார்கள். கராச் நகர மக்கள் தொகை இதில் அடங்காது. ஈரானின் மக்கள் தொகை மிகுந்த நகரம் இதுவாகும். மேற்கு ஆசியாவிலுள்ள மக்கள் தொகை மிகுந்த இரண்டாவது நகரமும் மத்திய கிழக்கிலுள்ள மூன்றாவது பெரிய பெரு நகர வட்டாரமும் இதுவாகும். உலக அளவில் 29வது பெரிய பெரு நகர வட்டாரம் இதுவாகும்.[1]

பழங்காலத்தில் சௌராசுட்டிர மதத்தவர்களின் நகரின் ஒரு பகுதியாக தற்போதைய தெகுரானின் பகுதி விளங்கியது.[2] 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்களால் அந்நகரம் அழிக்கப்பட்டது. அந்நகரின் எச்சம் தெகுரான் மாகாணத்தில் தற்போதைய தெகுரானின் தென்புற முடிவில் உள்ளது

ஈரானின் காக்கேசியா அருகில் உள்ள பகுதிகளை எளிதில் அடைவதற்காக 1796ஆம் ஆண்டு குசார் அரசமரபு வழிவந்த ஆகா முகமது கான் தெகுரானை முதன் முதல் ஈரானின் தலைநகர் ஆக்கினார். உருசிய-பெர்சிய போர் காரணமாகவும் முன்னால் ஈரானை ஆண்ட அரசமரபுகளின் எதிர்ப்பை சமாளிக்கவும் காக்கேசியா ஈரானிடம் இருந்து பிரிந்தது. பல முறை ஈரானின் தலைநகர் மாறியுள்ளது. 32வது முறை நாட்டின் தலைநகராக தெகுரான் ஆகியுள்ளது,

ஈரானின் கடைசி இரு அரசமரபுக்களான குசார், பாலவிசு ஆகியவற்றின் தலைநகராக தெகுரான் இருந்துள்ளது. சாடாபாத் வளாகம், நியவரன் வளாகம், கோல்சுடன் வளாகம் ஆகிய அரசு வளாகங்கள் இங்கு உள்ளன.

பெருமளவிலான மக்கள் ஈரானின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தெகுரானுக்கு குடியேறியதை தொடர்ந்து 1920ஆம் ஆண்டு இங்கு பெரிய அளவில் கட்டடங்கள் இடிக்கப்பட்டன, பல புதிதாக கட்டப்பட்டன.[3]

தெகுரானின் புகழ் பெற்ற கட்டடங்கள் பாலவி காலத்தில் கட்டப்பட்ட ஆசாதி கோபுரம், 2007இல் கட்டப்பட்ட உலகின் 17வது உயர்ந்த கட்டடமான மிலாட் கோபுரம், 2014ஆம் ஆண்டு கட்டப்பட்ட டாபியட் பாலம் ஆகியவை ஆகும்[4]

தெகுரானின் பெரும்பாலான மக்கள் பாரசீக மொழி பேசுபவர்கள்,[5][6] 99% மக்கள் பாரசீக மொழியை பேசுபவர்களாகவோ புரிந்து கொள்பவர்களாகவோ உள்ளார்கள். அசர்பைசானியர்கள், அருமேனியர்கள், குர்துகள் என பல இனக்குழுக்கள் பாரசீக மொழியை இரண்டாம் மொழியாக பேசுகிறார்கள்.[7]

புவியியல்

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், Tehran from: 1988–2005
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 16.4
(61.5)
19.0
(66.2)
23.8
(74.8)
33.6
(92.5)
33.6
(92.5)
41.8
(107.2)
43.8
(110.8)
41.4
(106.5)
35.6
(96.1)
31.2
(88.2)
23.0
(73.4)
19.0
(66.2)
43.8
(110.8)
உயர் சராசரி °C (°F) 6.1
(43)
8.1
(46.6)
12.9
(55.2)
19.8
(67.6)
25.0
(77)
31.2
(88.2)
33.9
(93)
33.5
(92.3)
29.3
(84.7)
22.4
(72.3)
14.3
(57.7)
8.6
(47.5)
20.43
(68.77)
தாழ் சராசரி °C (°F) -1.5
(29.3)
-0.2
(31.6)
4.0
(39.2)
9.8
(49.6)
14
(57)
19.6
(67.3)
22.6
(72.7)
21.9
(71.4)
17.5
(63.5)
11.6
(52.9)
5.4
(41.7)
1.0
(33.8)
10.48
(50.86)
பதியப்பட்ட தாழ் °C (°F) -13.0
(8.6)
-11.0
(12.2)
-8.0
(17.6)
-1.6
(29.1)
3.0
(37.4)
12.0
(53.6)
15.4
(59.7)
13.5
(56.3)
8.8
(47.8)
2.6
(36.7)
-5.2
(22.6)
-9.6
(14.7)
−13
(8.6)
பொழிவு mm (inches) 34.6
(1.362)
34.2
(1.346)
40
(1.57)
30.1
(1.185)
15.1
(0.594)
4.0
(0.157)
2.2
(0.087)
1.2
(0.047)
0.4
(0.016)
10.5
(0.413)
26.3
(1.035)
34.3
(1.35)
232.9
(9.169)
ஈரப்பதம் 67 59 53 44 39 30 31 31 33 44 57 66 46.2
சராசரி மழை நாட்கள் 6.3 6.9 6.3 6.0 5.9 1.3 0.4 0.6 0.3 1.8 3.6 4.7 44.1
சராசரி பனிபொழி நாட்கள் 5.9 3.6 2.5 0.1 0.1 0 0 0 0 0 0.6 4.9 17.7
சூரியஒளி நேரம் 137.2 151.1 186.0 219.1 279.8 328.7 336.6 336.8 300.5 246.8 169.4 134.1 2,826.1
ஆதாரம்: [8]

மேற்கோள்கள்

  1. "World's largest urban areas in 2006 (1)". City Mayors. பார்க்கப்பட்ட நாள் 2010-09-25.
  2. George Erdösy, "The Indo-Aryans of ancient South Asia: Language, material culture and ethnicity", Walter de Gruyter, 1995. p. 165: "Possible western place names are the following: Raya-, which is also the ancient name of Median Raga in the Achaemenid inscriptions (Darius, Bisotun 2.13: a land in Media called Raga) and modern Rey south of Tehran"
  3. "Tehran (Iran) : Introduction – Britannica Online Encyclopedia". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2012-05-21.
  4. Arch Daily: Tabiat Pedestrian Bridge / Diba Tensile Architecture, 17 Nov 2014
  5. "Chand Darsad Tehranihaa dar Tehran Bedonyaa Amadand"(How many percent of Tehranis were born in Tehran)-Actual census done by the University of Tehran – Sociology Department. Retrieved December, 2010 [1][2][3][4][5]
  6. Mohammad Jalal Abbasi-Shavazi, Peter McDonald, Meimanat Hosseini-Chavoshi, "The Fertility Transition in Iran: Revolution and Reproduction", Springer, 2009. pp 100–101: "The first category is 'Central' where the majority of people are Persian speaking ethnic Fars (provinces of Fars, Hamedan, Isfahan, Markazi, Qazvin, Qom, Semnan, Yazd and Tehran..."
  7. Mareike Schuppe, "Coping with Growth in Tehran: Strategies of Development Regulation", GRIN Verlag, 2008. pp 13: "Besides Persian, there are Azari, Armenian, and Jewish communities in Tehran. The vast majority of Tehran's residents are Persian-speaking (98.3%)"
  8. I.R. OF IRAN SHAHREKORD METEOROLOGICAL ORGANIZATION (IN PERSIAN). 1988–2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெகுரான்&oldid=2300934" இலிருந்து மீள்விக்கப்பட்டது