பயனர் பேச்சு:Arafath.riyath: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளம்: MassMessage delivery
வரிசை 189: வரிசை 189:


தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். <b><big>[[விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017]]</b></big>. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 20:29, 10 ஏப்ரல் 2017 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். <b><big>[[விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017]]</b></big>. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 20:29, 10 ஏப்ரல் 2017 (UTC)

== துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு ==

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் [[விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017|இங்கு]] உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)
<!-- Message sent by User:Ravidreams@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=2280684 -->

17:05, 9 மே 2017 இல் நிலவும் திருத்தம்



பயனர்:Arafath.riyath
   
பயனர்:Arafath.riyath/என்னைப் பற்றி
   
பயனர் பேச்சு:Arafath.riyath
   
பயனர்:Arafath.riyath/பங்களிப்பு
   
பயனர்:Arafath.riyath/பயனர் பெட்டி
   
சிறப்பு:EmailUser/Arafath.riyath
   
பயனர்:Arafath.riyath/மணல்தொட்டி
 
முகப்பு
   
நான்
   
பேச்சு
   
பங்களிப்பு
   
பயனர் பெட்டி
   
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி

மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களைக் காண மகிழ்ச்சி!

வணக்கம், Arafath.riyath!

வருக! வருக!

மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களைக் காண்பதில் மகிழ்கிறேன்.

நீங்கள் என்னைப் போன்றவர் என்றால், பங்களிக்க இயலாத காலத்திலும் அண்மைய மாற்றங்களைக் கவனித்தவாறே இருந்திருப்பீர்கள். எனினும், இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகளை அறிய நமது ஆண்டு அறிக்கைகளைப் பாருங்கள். குறிப்பாக, மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரையும் உள்ளடக்கி வளர்ந்து வரும் தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தைக் காணுங்கள்.

பலரும் இணைந்து பங்களிக்கும் போது, அவ்வப்போதாவது வந்து செல்லும் போது, ஏற்கனவே இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியாகவும் உந்துதலாகவும் இருக்கும். உங்களைப் போன்றோரிடம் இருந்து புதுப்பயனர்களும் நிறைய கற்றுக் கொள்ள இயலும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இதற்கு மேல் உங்களுக்குத் தெரியாதா என்ன :) ? உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். அன்புடன்...

--இரவி (பேச்சு) 17:47, 25 மார்ச் 2013 (UTC)
வரவேற்புக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றி இரவி. முடிந்த அளவில் ஆழமான கட்டுரையாக்கம் மற்றும் துப்பரவுபணிகளில் ஈடுபட திட்டம். பார்க்கலாம் :) --அராபத்* عرفات (பேச்சு) 12:59, 27 மார்ச் 2013 (UTC)

தங்களின் உதவி தேவை...

வணக்கம் அராபத்!
கருநாடக இசையின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக வலைவாசல் ஒன்றினை உருவாக்கி வருகிறேன்; தங்களின் 'தமிழீழம்' வலைவாசலை முன்மாதிரியாக வைத்தே உருவாக்கி வருகிறேன். எனினும் வலைவாசல் முகப்பு இன்னமும் எனக்கு சரியாக வரவில்லை. துணைப் பக்கங்கள் அனைத்தையும் உருவாக்கியபின் தங்களுக்குத் தெரிவிக்கிறேன். அதன் பின்னர், முகப்புப் பக்கத்தில் தோன்றும் பிழைகளை சரிசெய்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:17, 22 ஏப்ரல் 2013 (UTC)

கண்டிப்பாக உதவுகிறேன். சேர்ந்தே சரி செய்யலாம்.--அராபத் (பேச்சு) 05:25, 22 ஏப்ரல் 2013 (UTC)
வலைவாசல்:கிறித்தவம் ஐயும் பாருங்கள்.--Kanags \உரையாடுக 08:56, 22 ஏப்ரல் 2013 (UTC)

Kanags, பார்த்துவிட்டேன் படிமம்:Smiley 180.jpg இங்கு உங்களுக்கான செய்தி உள்ளது. கருத்துக்களை அறியத்தாருங்கள் --அராபத் (பேச்சு) 13:01, 25 ஏப்ரல் 2013 (UTC)

விக்கியன்பரே, நண்பர் செல்வசிவகுருநாதனைப் போலவே தங்களுடைய தமிழீழம் வலைவாசலை முன்மாதிரியாக கொண்டு இந்து சமயம் வலைவாசலை அமைத்துள்ளேன். மிக்க நன்றி. அதில் விக்கிமீடிய திட்டங்கள் பக்கத்தில் அனைத்து இணைப்புகளும் ஆங்கிலத்திற்கே செல்கின்றன. அவற்றை தமிழ் திட்டங்களுக்கு மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும். தங்களுடைய தமிழீழம் வலைவாசலிலும் அவ்வாறு இருக்கிறது. உதவுங்கள் நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:42, 30 ஏப்ரல் 2013 (UTC)

மாற்றிவிட்டேன். சரியாக உள்ளதா எனப் பாருங்கள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:51, 30 ஏப்ரல் 2013 (UTC)
இத்துனை நாள் நானே கவணிக்கவில்லை. சுட்டிக்காட்டியதற்கும், திருத்தியமைக்கும் நன்றி அன்பர்களே.--அராபத் (பேச்சு) 13:28, 1 மே 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் அராபத்!

  1. தங்களின் முந்தைய வலைவாசல் பக்கத்தின் ('தமிழீழம்') வடிவமைப்பு நுணுக்கங்களை பின்பற்றி நடந்ததால்... எவ்விதப் பிரச்சினைகளுமின்றி வலைவாசல்:கருநாடக இசை பக்கத்தினை என்னால் அமைக்க இயன்றது. கற்றுக்கொள்ளும் ஆர்வத்தினால், நானே சோதித்துப் பார்த்து சிறுசிறு பிழைகளை திருத்தினேன்; உங்களை தொந்தரவு செய்யவில்லை. உதவி தேவைப்படும்போது உங்களிடம் மீண்டும் வருவேன்!
  2. வலைவாசலின் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்தினைப் படித்தேன். மே மூன்றாம் வாரத்தில் அதனை செயல்படுத்துகிறேன்.
  3. வார்ப்புரு:Purge - இதில்,'தேக்கத்தை' என இருக்க வேண்டும். சரி செய்யவும். (இப்பக்கம் தொகுப்பதிலிருந்து காக்கப்பட்டுள்ளதால் என்னால் சரிசெய்ய இயலவில்லை)

நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:05, 1 மே 2013 (UTC)[பதிலளி]

மாற்றி விட்டேன் செல்வசிவகுருநாதன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. --அராபத் (பேச்சு) 13:28, 1 மே 2013 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
அண்மையில் உருவான புதிய வலைவாசல் பக்கங்களுக்கு தங்களின் முந்தைய உழைப்பு உறுதுணையாக இருந்ததை தெரிவிக்கும் வகையிலும், அதற்கு நன்றி பாராட்டும் வகையிலும், வலைவாசல்:கிறித்தவம் பக்கத்தினை புதுப் பொலிவுடன் பதிப்பிடுதல் செய்ததைப் பாராட்டியும் தங்களுக்கு இப்பதக்கம் வழங்கப்படுகிறது! - நேசமுடன் மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:35, 1 மே 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம், அபார வேகமும் கூட :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:42, 1 மே 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:33, 1 மே 2013 (UTC)[பதிலளி]

ஊக்கத்திற்கு நன்றி தோழர்களே. --அராபத் (பேச்சு) 13:29, 1 மே 2013 (UTC)[பதிலளி]

வலைவாசல்கள் வடிவமைப்பு மட்டுமன்று, பல பயனர் பக்கங்களின் வடிவமைப்புக்கும் உங்கள் பயனர் பக்க வடிவமைப்பே முன்னோடி. அதற்காக ஒரு பதக்கம் கொடுக்க எண்ணியிருந்தேன். மற்றவர்கள் முந்திக் கொண்டு விட்டார்கள். வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 16:38, 1 மே 2013 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கும், ஊக்கத்துக்கும் நன்றி. --அராபத் (பேச்சு) 11:16, 2 மே 2013 (UTC)[பதிலளி]

உதவி

வணக்கம் அராபத். வலைவாசல் இலக்கியம் பக்கத்தை மேம்படுத்த தங்கள் உதவி தேவை. தாங்கள் ஓய்வாக இருக்கும்போது அதனை மேம்படுத்துங்கள் நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:13, 5 மே 2013 (UTC)[பதிலளி]

கட்டாயம் செய்கிறேன். வலைவாசலின் தாய்ப் பகுப்புகளை மேம்படுத்த ஆரம்பித்துள்ளேன். அது முடிந்ததும் இதில் பங்களிக்கிறேன். பொருத்தருள்க.. --அராபத் (பேச்சு) 05:25, 6 மே 2013 (UTC)[பதிலளி]

Regarding the Photograph of Jaya Sri Maha Bodhi Anuradhapura Sri Lanka

Hey Sorry that I cant use your language,The Earlier Photograph which said to be the Holy Jaya Sri Maha Bodhi of Anuradhapura Sri Lanka is NOT the real Jaya Sri Maha Bodhi its Just an ordinary Bo tree beside the main Bodhi tree (Jaya Sri Maha Bodhi),trust me I am a Buddhist from Sri Lanka,What I posted is the REAL one (Its a well gurded tree,only selected number of people can visit near the tree),Still UNSURE then GOOGLE :) Thanks.MediaJet (பேச்சு) 17:37, 10 மே 2013 (UTC)[பதிலளி]

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்

வணக்கம், Arafath.riyath!

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 07:10, 2 சூன் 2013 (UTC)[பதிலளி]

நன்றி இரவி. இன்னும் விளையாடலாம் :) --அராபத் (பேச்சு) 04:09, 3 சூன் 2013 (UTC)[பதிலளி]

பதக்கம்

மெய்வாழ்வுப் பதக்கம்
போட்டிக்குட்பட்ட கட்டுரைகளில் வெற்றிக் கோடான 15360 பைட்டுகளைத் தாண்டியும் கட்டுரைகளைச் சீராக்க முனைவதைக் கண்டு மகிழ்கிறேன். இந்த மெய்யான விக்கிப் பண்பு மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியான செயற்பாடு ஆகும் இரவி (பேச்சு) 13:19, 11 சூன் 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி இரவி. பல நாட்களாக (உண்மையில் ஆண்டுகளாக :) ) செய்ய நினைத்து, சோம்பேறித்தனத்தால் செய்யாமல் விட்ட பணிகளையே இப்போது செய்கிறேன். போட்டியெல்லாம் ஒரு சாக்கு தானே :)--அராபத் (பேச்சு) 04:08, 12 சூன் 2013 (UTC)[பதிலளி]

வழமையான போட்டிகள் புதுப்பயனர்களை ஈர்க்கும் நோக்கிலேயே. இந்தப் போட்டியின் முதன்மை நோக்கமே ஏற்கனவே உள்ள பயனர்களை முனைப்புடன் ஈடுபட வைக்க வேண்டும் என்பதே. அது நிறைவேறுவது கண்டு மகிழ்ச்சி :)--இரவி (பேச்சு) 12:58, 21 சூன் 2013 (UTC)[பதிலளி]

வார்ப்புரு பிரச்சினை

அன்புள்ள அராபத், தமிழ் மற்றும் மலையாளம் விக்கிபீடியாக்களில் அவ்வப்போது கட்டுரைகளை ஏற்றுவதுண்டு.. ஆனால் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் நான் அதிக கவனம் செலுத்துவதில்லை ... சமீபகாலத்தில் மலையாளம் விக்கிபீடியாவில் எழுத்துக்கள் தென்படும் முறையில் சற்று வித்தியாசம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. யு.எல்.எஸ். என்ற சுருக்கெழுத்துக்கு என்ன அர்த்தம் என்றும் எனக்கு தெரியாது :) Irumozhi (பேச்சு) 11:07, 19 சூன் 2013 (UTC)[பதிலளி]

விக்கப்பீடியர்களை சமய அடிப்படையில் பிரிப்பது தொடர்பாக

வணக்கம் நண்பரே, வார்ப்புரு:பயனர் இசுலாமியர் என்பதை தாங்கள் வடிவமைத்து தந்திருப்பதைக் கண்டேன். பகுப்பு பேச்சு:இசுலாமிய விக்கிப்பீடியர்கள் -ஐ காணவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:33, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு







விக்கப்பீடியா பத்தாண்டு கொண்டாட்ட சட்டை வடிவமைப்பு

வணக்கம் நண்பரே, தாங்கள் விக்கப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்டத்திற்காக முன்மொழிந்த டிசர்ட் வடிவமைக்கும் வேலையை தற்போது தொடங்க இருக்கிறோம். நண்பர் ஆன்டன் அவர்கள் இப்பணியை மனமுவந்து ஏற்றுக் கொண்டுள்ளார். தங்களுடைய எண்ண வழிகாட்டல்களை வடிவமைப்பிற்கு தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:08, 25 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 19:59, 18 செப்டம்பர் 2013 (UTC)

வரலியா :( --இரவி (பேச்சு) 21:19, 26 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்...

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:56, 27 செப்டம்பர் 2013 (UTC)

தமிழீழம் வலைவாசலின் அளவீடுகளை கவனிக்கவும்

வணக்கம் நண்பரே, தாங்கள் வடிவமைப்பினை தொடங்கிய வலைவாசல்:தமிழீழம் 15''கணினி திரையில் காணுகையில் கணினி திரையைவிடவும் அகலமாக உள்ளது. எல்லா திரையிலும் காண வழிவகை செய்யுங்கள். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:05, 3 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உயிரியல் வலைவாசலை மேம்படுத்தி தர கோரிக்கை

வணக்கம் நண்பரே, தாங்கள் வலைவாசல்:உயிரியல் என்ற வலைவாசலை தொடங்கி மேம்படுத்தியிருக்கின்றீா்கள் என்பதைக் கண்டேன். சிறந்த வடிவமைப்புடன் இருக்கும் இந்த வலைவாசலில் சிறப்புக் கட்டுரைகள், மற்றும் சிறப்புப் படங்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் நமது விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் காட்சிபடுத்த இயலும். இத்தகு பணியில் விக்கித்திட்டம் உயிரியலில் பங்குபெற்றிருக்கும் பிற பயனர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:26, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு


கருத்துவேண்டல்

பேச்சு:சுன்னி இசுலாம் என்பதில் உங்கள் கருத்தினை பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 12:52, 18 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

உடன் கருத்திட்டமைக்கு நன்றி!--≈ உழவன் ( கூறுக ) 13:13, 18 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி--அராபத் (பேச்சு) 13:15, 18 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

முதற்பக்கத்தில் தமிழீழ வலைவாசல்

வணக்கம் நண்பரே, தாங்கள் தொடங்கி மேம்படுத்திய தமிழீழ வலைவாசலை முதற்பக்கத்தில் காட்சிபடுத்தியுள்ளோம். இந்த வலைவாசல் ஒரு மாதகாலத்திற்கு முதற்பக்கத்தில் காட்சிபடுத்தப்பட்டிருக்கும். தொடர்ந்து வலைவாசல்களில் ஈடுபாடு கொண்டு மேம்படுத்தி தரவும் வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:42, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

முதற்பக்க வலைவாசல் அறிவிப்பு


பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வணக்கம் Arafath.riyath அவர்களே, பிறந்தநாள் வாழ்த்துக் குழுமத்தின் சார்பாக பிறந்தநாளை இனிதே கொண்டாட வாழ்த்துகிறோம்!
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
~~~~

--..«♦♥' விக்கிப்பீடியாவின் பள்ளி மாணவர்கள் '♥♦»..]]02:14, 22 பெப்ரவரி 2014 (UTC)

Wikimedians Speak

      

An initiative to bring the voices of Indian Wikimedians to the world
Hi Arafath.riyath,

I am writing as Community Communications Consultant at CIS-A2K. I would like to interview you. It will be a great pleasure to interview you and to capture your experiences of being a wikipedian. You can reach me at rahim@cis-india.org or call me on +91-7795949838 if you would like to coordinate this offline. We would very much like to showcase your work to the rest of the world. Some of the previous interviews can be seen here.

Thank you! --రహ్మానుద్దీన్ (பேச்சு) 18:40, 9 ஏப்ரல் 2014 (UTC)

முதற்பக்க வலைவாசல் அறிவிப்பு


விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Arafath.riyath!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:24, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

உதவித்தொகை பெற ஆதரவு கோரிக்கை

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 17:43, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மதனாகரன் (பேச்சு) 07:10, 9 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 21:42, 10 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:29, 10 ஏப்ரல் 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arafath.riyath&oldid=2280689" இலிருந்து மீள்விக்கப்பட்டது