2 அரசர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: adding unreferened template to articles
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
[[Image:Genealogy of the kings of Israel and Judah.png|thumb|இசுரயேல் - யூதா மன்னர்கள் பட்டியல் (1&2 அரசர்கள் நூல்களின்படி).]]
[[Image:Genealogy of the kings of Israel and Judah.png|thumb|இசுரயேல் - யூதா மன்னர்கள் பட்டியல் (1&2 அரசர்கள் நூல்களின்படி).]]



04:42, 29 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

இசுரயேல் - யூதா மன்னர்கள் பட்டியல் (1&2 அரசர்கள் நூல்களின்படி).

2 அரசர்கள் (2 Kings) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். இதற்கு முன்னால் அமைந்த 1 அரசர்கள் இந்நூல் கூறும் வரலாற்றிற்கு முந்திய காலக் கட்டத்தை விரித்துரைக்கிறது.

நூல் பெயர்

"2 அரசர்கள்" என்னும் இத்திருநூல் "வடக்கு - தெற்கு" என்று பிளவுண்ட யூதா - இசுரயேல் அரசுகளின் வரலாற்றை "1 அரசர்கள்" விட்ட இடத்திலிருந்து தொடர்கிறது. மூல மொழியாகிய எபிரேயத்தில் இந்நூல்கள் "Sefer melakhim" (= அரசர்கள் பற்றிய நூல்கள்) என அறியப்படுகின்றன. கி.மு. 10ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 6ஆம் நூற்றாண்டுவரை யூதா-இசுரயேல் நாடுகளில் நிகழ்ந்தவற்றை, குறிப்பாக அவற்றை ஆண்ட அரசர்களின் வாழ்க்கையை எடுத்துரைப்பதால் இந்நூல்கள் இப்பெயர் பெற்றன.

நூலின் மையக் கருத்துகள்

'2 அரசர்கள்' என்னும் இத்திருநூல் இரு பகுதிகளைக் கொண்டது:

(1) கி.மு. 850 முதல் கி.மு. 722 (சமாரியாவின் வீழ்ச்சி) வரையிலான வடக்கு - தெற்கு அரசுகளின் வரலாறு.
(2) சமாரியாவின் வீழ்ச்சியிலிருந்து, கி.மு. 586 (எருசலேமின் வீழ்ச்சி) வரையிலான யூதா அரசர்களின் வரலாறு.

இந்நூல் யோயாக்கின் அரசனது விடுதலையுடன் முடிகிறது.

யூதா, இசுரயேல் ஆகியவற்றின் அரசர்களும் மக்களும் ஆண்டவருக்கு அஞ்சி நடக்காததாலேயே அந்நாடுகள் பேரழிவுக்குள்ளாயின என்பதை இந்நூல் மிகவும் வற்புறுத்திக் கூறுகிறது. எருசலேம் வீழ்ச்சியுற்றதும், யூதா நாட்டு மக்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதும் இசுரயேலரின் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளன.

இந்நூலில் எலியாவின் பதிலாளான இறைவாக்கினர் எலிசாவின் புதுமைகள் சிறப்பிடம் பெறுகின்றன.

2 அரசர்கள் நூலின் உள்ளடக்கம்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. பிளவுபட்ட நாடு (தொடர்ச்சி)

அ) இறைவாக்கினர் எலிசா
ஆ) யூதா, இசுரயேல் அரசர்கள்
இ) சமாரியாவின் வீழ்ச்சி

1:1 - 17:41

1:1 - 8:15
8:16 - 17:4
17:5-41

560 - 594

560 - 575
576 - 592
592 -593

2. யூதா அரசு

அ) எசேக்கியாவின் ஆட்சி
ஆ) யோசியாவின் ஆட்சி
இ) யூதாவின் இறுதி அரசர்கள்
ஈ) எருசலேமின் வீழ்ச்சி

18:1 - 25:30

18:1 - 21:26
22:1 - 23:30
23:31 - 24:20
25:1-30

594 - 610

594 - 602
602 - 606
606 - 608
608 -610

மேலும் காண்க

விக்கிமூலத்தில் அரசர்கள் - இரண்டாம் நூல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=2_அரசர்கள்&oldid=2266228" இலிருந்து மீள்விக்கப்பட்டது