திசம்பர் 21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள் |
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது |
||
வரிசை 65: | வரிசை 65: | ||
[[பகுப்பு:டிசம்பர்]] |
[[பகுப்பு:டிசம்பர்]] |
||
[[பகுப்பு:AFTv5Test]] |
|||
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] |
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] |
18:55, 7 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 21 (December 21) கிரிகோரியன் ஆண்டின் 355 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 356 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 10 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 69 - வெஸ்பசியான் ரோமப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான்.
- 1768 இல் நேபாளம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றுவரையுள்ள நாடு தோற்றுவிக்கப்பட்டது.
- 1902 - இலங்கையில் போவர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
- 1913 - உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் போட்டி "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையில் வெளியானது.
- 1967 - உலகின் முதலாவது இருதயமாற்றுச் சிகிச்சை பெற்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் நாஷ்கான்ஸ்கி சிகிச்சை பெற்று 18 நாட்களின் பின்னர் இறந்தார்.
- 1968 - சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.
- 1971 - ஐநா அவையின் பொதுச் செயலாராக கூர்ட் வால்ட்ஹெயிம் தெரிவானார்.
- 1973 - அரபு-இஸ்ரேல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஜெனீவா மாநாடு ஆரம்பமானது.
- 1979 - ரொடீசியாவின் விடுதலைக்கான உடன்பாடு லண்டனில் கைச்சாத்திடப்பட்டது.
- 1988 - ஸ்கொட்லாந்தில் லொக்கர்பி என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானத்தில் குண்டு வெடித்ததில் 270 பேர் கொல்லப்பட்டனர்.
- 1991 - கசக்ஸ்தானின் அல்மா-ஆட்டா நகரில் கூடிய பதினொரு சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி டிசம்பர் 26 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
- 1992 - டச்சு விமானம் ஒன்று போர்த்துக்கலில் வீழ்ந்ததில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
- 1995 - பெத்லகேம் நகரம் இஸ்ரேலியர்களிடம் இருந்து பாலஸ்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- 2007 - பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1118 – தாமஸ் பெக்கெட், ஆங்கிலேய ஆயர், புனிதர் (இ. 1170)
- 1804 – பெஞ்சமின் டிஸ்ரைலி, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1881)
- 1890 – ஹெர்மன் முல்லர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1967)
- 1892 – ரெபெக்கா வெஸ்ட், ஆங்கிலேய ஊடகவியலாளர், நூலாசிரியர் (இ. 1983)
- 1898 – இரா சுப்பிரேகு போவன், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1973)
- 1921 – ஆர். உமாநாத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2014)
- 1932 – உ. இரா. அனந்தமூர்த்தி, இந்தியக் கவிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர் (இ. 2014)
- 1942 – கூ சிங்தாவ், சீனாவின் 6வது அரசுத்தலைவர்
- 1947 – பாக்கோ தே லூசீயா, இசுப்பானிய கித்தார் இசைக்கலைஞர் (இ. 2014)
- 1948 – சாமுவேல் எல். ஜாக்சன், அமெரிக்கநடிகர், தயாரிப்பாளர்
- 1949 – தோமசு சங்காரா, புர்க்கினா பாசோவின் 5வது அரசுத்தலைவர் (இ. 1987)
- 1959 – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தமிழக துடுப்பாட்ட வீரர்
- 1967 – மிக்கைல் சாக்கஷ்விலி, ஜார்ஜியாவின் 3வது அரசுத்தலைவர்
- 1972 – ஜெகன் மோகன் ரெட்டி, இந்திய அரசியல்வாதி
- 1985 – ஆண்ட்ரியா ஜெரெமையா, இந்தியப் பின்னணிப் பாடகி, நடிகை
- 1989 – தமன்னா, இந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
- 72 – தோமா (திருத்தூதர்), உரோமைப் புனிதர் (பி. 1)
- 1597 – பீட்டர் கனிசியு, டச்சு மதகுரு, புனிதர் (பி. 1521)
- 1940 – எப். ஸ்காட் பிட்ஸ்ஜெரால்ட், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1896)
- 1975 – கோவை அய்யாமுத்து, தமிழக எழுத்தாளர், காந்தியவாதி (பி. 1898)
- 1988 – நிக்கோ டின்பெர்ஜென், நோபல் பரிசு பெற்ற டச்சு ஆங்கிலேய மருத்துவர் (பி. 1907)
- 1998 – துரை விஸ்வநாதன், ஈழத்து பதிப்பாளர், தொழிலதிபர் (பி. 1931)
- 2006 – வரதர், ஈழத்தின் மறுமலர்ச்சி எழுத்தாளர் (பி. 1924)
- 2008 – கே. இந்திரகுமார், ஈழத்து எழுத்தாளர், நடிகர்
- 2010 – ஈழத்துப் பூராடனார், ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் (பி. 1928)
- 2011 – பி. கே. அய்யங்கார், இந்திய அணு அறிவியலாளர் (பி. 1931)
- 2015 – சார்வாகன், தமிழகத் தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (பி. 1929)