சூன் 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள் |
||
வரிசை 60: | வரிசை 60: | ||
[[பகுப்பு:ஜூன்]] |
[[பகுப்பு:ஜூன்]] |
||
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] |
18:03, 1 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்
<< | சூன் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXIV |
சூன் 16 (June 16) கிரிகோரியன் ஆண்டின் 167 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 168 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 198 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 632 – மூன்றாம் யாசுடெகெர்டு சாசானியப் பேரரசின் மன்னராக முடிசூடினார். இவரே சாசானிய வம்சத்தின் கடைசி அரசராவார்.
- 1487 – ரோசாப்பூப் போர்களின் கடைசிப் போர் ஸ்டோக் ஃபீல்டு என்ற இடத்தில் இடம்பெற்றது.
- 1586 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி, இரண்டாம் பிலைப்பைத் தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்தார்.
- 1745 – ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: நியூ இங்கிலாந்து குடியேற்றப் படையினர் புதிய பிரெஞ்சு லூயிசுபேர்க் கோட்டையைக் கைப்பற்றினர்.
- 1779 – எசுப்பானியா பெரிய பிரித்தானியா மீது போரை அறிவித்தது. ஜிப்ரால்ட்டர் மீதான போர் ஆரம்பமானது.
- 1846 – ஒன்பதாம் பயசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- 1883 – [இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] விக்டோரியா நாடக அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
- 1897 – அவாய் குடியரசை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் ஒப்பந்தம் எழுதப்பட்டது.
- 1903 – போர்ட் தானுந்து நிறுவனம் அமைக்கப்பட்டது.
- 1903 – ருவால் அமுன்சென் தனது முதலாவது வடமேற்குப் பெருவழியின் கிழக்கு-மேற்கு நோக்கிய கடற்பயணத்தி ஒசுலோவில் இருந்து ஆரம்பித்தார்.
- 1911 – ஐபிஎம் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1911 – 772 கிராம் எடையுள்ள விண்வீழ்கல் விஸ்கொன்சின் கில்போர்ன் நகரில் வீழந்தது.
- 1940 – லிதுவேனியாவில் கம்யூனிச அரசு ஆட்சிக்கு வந்தது.
- 1944 – ஐக்கிய அமெரிக்கா 14-வயது ஜார்ஜ் ஸ்டின்னி என்பவரை தூக்கிலிட்டது.
- 1948 – மலாயன் கம்யூனிச்டுக் கட்சி உறுப்பினர்கள் மூன்றுய் பிரித்தானியத் தோட்ட அதிகாரிகளைக் கொன்றதை அடுத்து அங்கு அவசர காலச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
- 1955 – அர்கெந்தீனாவில் உவான் பெரோன் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் பொருட்டு, அரசுக்கு ஆதரவான பேரணி ஒன்றின் மீது கடற்படையினர் குண்டுகள் வீசியதில் 364 பேர் கொல்லப்பட்டனர், 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- 1958 – 1956 அங்கேரியப் புரட்சியில் ஈடுபட்ட தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
- 1963 – வஸ்தோக் 6: உருசியாவின் வலன்டீனா டெரெஷ்கோவா உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
- 1976 – தென்னாபிரிக்காவில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
- 2012 – ஐக்கிய அமெரிக்க வான்படையின் தானியங்கி போயிங் எக்ஸ்-37 விண்ணூர்தி 469-நாள் பயணத்தின் பின்னர் பூமி திரும்பியது.
பிறப்புகள்
- 1723 – ஆடம் சிமித், இசுக்கொட்டிய மெய்யியலாளர் (இ. 1790)
- 1829 – யெரொனீமோ, அமெரிக்க பழங்குடித் தலைவர் (இ. 1909)
- 1888 – அலெக்சாந்தர் ஃபிரீடுமேன், உருசிய இயற்பியலாளர் (இ. 1925)
- 1891 – விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி, உருசிய வானியலாளர் (இ. 1952)
- 1893 – கருமுத்து தியாகராஜன் செட்டியார், தொழிலதிபர் (இ. 1974)
- 1896 – கோட்டா ராமசுவாமி, இந்தியத் துடுப்பாட்டக்காரர் (இ. 1990)
- 1902 – பார்பரா மெக்லின்டாக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1992)
- 1917 – கேத்தரின் கிரகாம், அமெரிக்கப் பதிப்பாளர் (இ. 2001)
- 1927 – டொம் கிரவெனி, ஆங்கிலேயத் துடுப்பாளர் (இ. 2015)
- 1930 – வில்மோஸ் சிக்மண்ட், அங்கேரிய-அமெரிக்க திரைப்பட ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் (இ. 2016)
- 1937 – எரிக் செகல், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2010)
- 1940 – என். சந்தோசு எக்டே, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி
- 1950 – மிதுன் சக்கரவர்த்தி, இந்திய நடிகர், அரசியல்வாதி
- 1958 – அபு சயாப் ஆத்திரேலிய இசைக்கலைஞர்
- 1958 – சா. பாலுச்சாமி, தமிழக எழுத்தாளர்.
- 1968 – எஸ். பி. முத்துக்குமரன், தமிழக அரசியல்வாதி (இ. 2012)
- 1968 – கவிமுகில், தமிழக எழுத்தாளர்.
- 1971 – டூப்பாக் ஷகூர், அமெரிக்க செவ்விசையாளர் (இ. 1996)
இறப்புகள்
- 1925 – சித்தரஞ்சன் தாஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1870)
- 1940 – யோசப் மைசிட்டர், லூயி பாஸ்டர் கண்டுபிடித்த விசர்நாய்க் கடி தடுப்பூசி மருந்தை தன் மேல் செலுத்தி சோதனை செய்த முதலாவது நபர் (பி. 1876)
- 2015 – சார்லசு கோர்ரியா, இந்திய கட்டிடவியலாளர் (பி. 1930)
சிறப்பு நாள்
- இளைஞர் நாள் (தென்னாபிரிக்கா)