சூலை 5: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள் |
||
வரிசை 73: | வரிசை 73: | ||
[[பகுப்பு:ஜூலை]] |
[[பகுப்பு:ஜூலை]] |
||
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] |
18:01, 1 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்
<< | சூலை 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சூலை 5 (July 5) கிரிகோரியன் ஆண்டின் 186 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 187 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 179 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1295 - இங்கிலாந்துக்கு எதிராக ஸ்கொட்லாந்தும் பிரான்சும் கூட்டை உருவாக்கின.
- 1594 – போர்த்துக்கீசப் படைகள் பெதுரோ லோப்பெசு டெ சொயுசா தலைமையில் கண்டி இராச்சியம் மீது திடீர்த் தாக்குதலை ஆரப்பித்துத் தோல்வியடைந்தனர்
- 1610 - நியூபவுண்ட்லாந்து தீவை நோக்கிய தனது பயணத்தை ஜோன் கை பிறிஸ்டலில் இருந்து 39 குடியேறிகளுடன் கடற்பயணத்தை ஆரம்பித்தார்.
- 1687 - ஐசாக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார்.
- 1770 - ரஷ்யப் பேரரசுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையில் செஸ்மா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
- 1811 - வெனிசுவேலா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1830 - பிரான்ஸ் அல்ஜீரியாவினுள் நுழைந்தது.
- 1865 - இரட்சணிய சேனை இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1884 - ஜெர்மனி கமரூனை ஆக்கிரமித்தது.
- 1900 - ஆஸ்திரேலியப் பொதுநலவாய சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
- 1950 - கொரியப் போர்: அமெரிக்கப் படைகளுக்கும் வட கொரியாப் படைகளுக்கும் இடையில் முதலாவது மோதல் ஆரம்பமானது.
- 1950 - சியோனிசம்: யூதர்கள் அனைவரும் இஸ்ரேலில் குடியேற அனுமதி அளிக்கும் சட்டம் இஸ்ரேலில் கொண்டுவரப்பட்டது.
- 1951 - சந்தி திரான்சிஸ்டரை வில்லியம் ஷொக்லி கண்டுபிடித்தார்.
- 1954 - பிபிசி தன் முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது.
- 1954 – ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
- 1962 - பிரான்சிடமிருந்து அல்ஜீரியா விடுதலை அடைந்தது.
- 1970 - கனடிய விமானம் ஒன்று டொரொண்டோ விமான நிலையத்தில் மோதியதில் 109 பேர் கொல்லப்பட்டனர்.
- 1971 - ஐக்கிய அமெரிக்காவில் வாக்களிக்கும் வயது எல்லை 21 இலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது.
- 1975 - போர்த்துக்கல்லிடம் இருந்து கேப் வேர்ட் விடுதலை பெற்றது.
- 1977 - பாகிஸ்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோ பதவி இழந்தார்.
- 1987 - விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலித் தாக்குதல் மில்லரினால் யாழ்ப்பாணம், நெல்லியடி இராணுவ முகாம் மீது நடத்தப்பட்டது.
- 1992 - இயக்கச்சியில் வை-8 விமானம் விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
- 1996 - குளோனிங் முறையில் முதலாவது பாலூட்டி, டோலி என்ற ஆடு ஸ்கொட்லாந்தில் பிறந்தது.
- 1998 - செவ்வாய்க் கோளுக்கு தனது முதலாவது விண்கலத்தை ஜப்பான் ஏவியது.
- 2004 - இந்தோனீசியாவில் முதலாவது அதிபர் தேர்தல் இடம்பெற்றது.
- 2006 - வட கொரியா குறைந்தது இரண்டு குறுகிய தூரம் பாயும் ஏவுகணைகளையும், ஒரு ஸ்கட் ஏவுகணையையும் ஒரு நீண்ட தூரம் பாயும் ஏவுகணையையும் சோதித்தது.
- 2009 – சீனாவின் சிஞ்சியாங் மாகாணத் தலைநகர் உருமுச்சியில் கலவரங்கள் வெடித்தன.
- 2009 – ரொஜர் பெடரர் விம்பிள்டன் டென்னிசுத் தொடரில் ஆண்டி ரோடிக்கை வென்று 15வது பெருவெற்றித் தொடரைப் பெற்ற் சாதனை புரிந்தார்.
பிறப்புகள்
- 1750 – அய்மே ஆர்கண்ட், சுவிட்சர்லாந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1803)
- 1853 – செசில் ரோட்சு, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (இ. 1902)
- 1857 – கிளாரா ஜெட்கின், செருமானிய மார்க்சியவாதி (இ. 1933)
- 1904 – எர்ணஸ்ட் மாயர், செருமானிய-அமெரிக்க உயிரியலாளர் (இ. 2005)
- 1918 – கே. கருணாகரன், கேரள அரசியல்வாதி (இ. 2010)
- 1949 – சிவசங்கர் மேனன், இந்திய முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்
- 1954 – ஜான் ரைட், நியூசிலாந்து துடுப்பாளர்
- 1958 – பில் வாட்டர்சன், அமெரிக்க எழுத்தாளர்
- 1987 – அஸ்வின் ககுமனு, தமிழ் திரைப்பட நடிகர்
இறப்புகள்
- 1826 – இசுடாம்போர்டு இராஃபிள்சு, ஆங்கிலேய அரசியல்வாதி, சிங்கப்பூரை நிறுவியவர். (பி. 1782)
- 1833 – யோசெப் நிசிபோர் நியெப்சு, பிரெஞ்சுக் கண்டுபிடிப்பாளர் (பி. 1765)
- 1898 – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், தமிழிசையாளர் (பி. 1839)
- 1966 – ஜியார்ஜ் டி கிவிசி, நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-செருமானியர் (பி. 1885)
- 1987 – கப்டன் மில்லர், விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலி (பி. 1966)
- 1997 – அருணாசலம் தங்கத்துரை, ஈழத்து அரசியல்வாதி (பி. 1936)
- 2006 – திருநல்லூர் கருணாகரன், இந்தியக் கவிஞர் (பி. 1924)
- 2015 – நாம்பு ஓச்சிரோ, நோபல் பரிசு பெற்ற சப்பானிய-அமெரிக்கர் (பி. 1921)
சிறப்பு நாள்
- வெனிசுவேலா - விடுதலை நாள் (1811)
- அல்ஜீரியா - விடுதலை நாள் (1962)
- கேப் வேர்ட் - விடுதலை நாள் (1975).
- ஆர்மீனியா - அரசியலமைப்பு நாள் (1995)
- தமிழீழம் - கரும்புலிகள் நாள்