"பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
36,510 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
ஆவணம்
சி (template using AWB)
(ஆவணம்)
'''பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டின்]] தென்கிழக்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரிக்கு வடக்கில் அமைந்துள்ளது. இப்பிரிவு 167.7 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளவு கொண்டது<ref name="npc">{{cite web | url=http://www.np.gov.lk/pdf/Statistical%20InformationNPC-2013.pdf | title=Northern Provincial Council: Statistical Information - 2013 | publisher=[[வட மாகாண சபை]] | accessdate=10 மார்ச் 2014}}</ref>.
 
== அறிமுகம்       ==
==கிராம அலுவலர் பிரிவுகள்==
 
== பச்சிலைப்பள்ளி    பிரதேசமானது   இலங்கையின் வடமாகணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில்  அமைந்துள்ள  இப் பிரதேசம் . யாழ்பாணக் குடாநாட்டில்  தென்கிழக்கிப் பகுதியில்  யாழ்பாண நீரேரிக்கு  வடக்கில் அமைந்துள்ள இப் பிரதேசத்தின்  167.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவினை   கொண்டது  இது ==
 
== யாழ்ப்பாணக்குடாநாட்டின் நுழைவாயிலாக இருக்கும் பச்சிலைப்பள்ளி, வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டது. இங்கே இலங்கையின் ஆதிக்குடிகளில் ஒன்றான இயக்கர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அதற்குச் சாட்சியாக குவேனி கோட்டை என்ற ஒரு மையத்தை மக்கள் அடையாளம் சொல்கிறார்கள். ஆனால், இது ஒரு ஐதீகம் என்பது பலருடைய கருத்து. ==
 
== கிளிநொச்சி மாவட்டத்தின் புர்வீக குடியிருப்புகளில் ஒன்றாக இருக்கும் பச்சிலைப்பள்ளிப் பிரதேசம், காடும் வயலும் கடலும் இணைந்தது. முல்லையும் மருதமும் நெய்தலும் கலந்த வாழ்க்கைப் பண்பாடே இந்த மக்களுடையது. ==
 
== (காடு, வயல், கடல் ஆகியவை காட்சியாகும்) ==
 
== பச்சிலைப்பள்ளியின் தென்பகுதி எல்லைக்கோடு ஆனையிறவுக்கடனீரேரி. வடக்கே வீரக்களி ஆறும் தரவை வெளியும். அதற்கப்பால் வடமராட்சி கிழக்குப் பிரதேசம். கிழக்கே சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயமும் சிறு காடும் பெருவெளியும் ஆனையிறவுக் கடனீரேரியின் தொடுப்பும். மேற்கில் தென்மராட்சி எல்லைகளும் காணப்படுகிறது ==
 
== நிர்வாக பிரிவுகள் ==
 
==        பச்சிலைப்பள்ளி    பிரதேசத்திக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக 18 கிராம அலுவர் பிரிவுகளாக இந்தப் பிரதேசம் நிர்வாக ரீதியில் பிரிக்கப்பட்டுள்ளது.  ==
 
== 1.  கோவில்வயல் ==
 
== 2.  இயக்கச்சி ==
 
== 3.  முகாவில் ==
 
== 4. மாசார் ==
 
== 5. சோரன்பற்று ==
 
== 6. தர்மகேணி ==
 
== 7. புலோப்பளை ==
 
== 8. புலோப்பளை மேற்க்கு ==
 
== 9. முல்லையடி ==
 
== 10. தம்பகாமம் ==
 
== 11. பளை ==
 
== 12. அல்லிப்பளை ==
 
== 13. கச்சார்வேலி ==
 
== 14.அரசங்கேணி ==
 
== 15.இத்தாவில் ==
 
== 16. முகமாலை ==
 
== 17.வேம்பொடுகேணி ==
 
== 18.கிளாலி ==
 
== வலலாறு ==
 
==               பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தின் இயற்கை அமைவே அதனுடைய வாழ்வுக்கும் அழிவுக்கும் காரணமாக உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் நுழைவாசலில் இருக்கும் பிரதேசம் என்பதால், யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புக்கு இந்தப் பிரதேசத்தை அதிகாரத் தரப்புகள் வரலாறு முழுவதும் பயன்படுத்தியுள்ளன. இதனால், புர்வீக மக்கள் குடியிருப்பான இந்தப் பிரதேசம் எப்போதும் யுத்த முன்னரணாகவே இருந்திருக்கிறது. யுத்த முன்னரங்குகள் எப்போதும் சந்திக்கும் அழிவை பச்சிலைப்பள்ளியும் தன்னுடைய காலம் முழுவதும் சந்தித்தே வந்திருக்கிறது. ==
 
== ==
 
==            யாழ்ப்பாண ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிய போர்த்துக் கீச, ஒல்லாந்த, பிரித்தானியர்கள் அதைப் பாதுகாப்பதற்காக பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தைக் கேடயமாக்கியிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் ஆனையிறவிலும் இயக்கச்சியிலும் வெற்றிலைக்கேணியிலும் கோட்டைகளைக் கட்டினார்கள். இந்தக் கோட்டைகள் பின்னர் வந்த அத்தனை அதிகாரச் சக்திகளினாலும் பயன்படுத்துப்பட்டன. ==
 
== ==
 
==               இயக்கச்சியில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட பைல் கோட்டையின் சிதைவுகள் இன்னும் சாட்சியாக இருக்கிறது. வன்னியிலிருந்து வரும் படையெடுப்புகளைக் கட்டுப்படுத்தவும் வெளியாரிடமிருந்து யாழ்ப்பாணத்தைப் பாதுகாக்கவும் இந்தக் கோட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இங்கே 1750 களில் சுங்கப்பகுதியும்      இயங்கியிருப்பதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. இந்தக் காலப்பகுதியில் இந்தக் கோட்டையை அண்மித்ததாக ஐரோப்பியர்கள் தேவாலயமொன்றையும் கட்டினர். இப்படிக் கட்டப்பட்டதே புல்லாவளித் தேவாலயம். இந்தத் தேவாலயத்துக்கு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் என பல திசைகளில் இருந்தும் பெருநாளுக்கு யாத்திரீகர்கள் வந்து போகிறார்கள். ==
 
== ==
 
==            இதேகாலப்பகுதியில் ஐரோப்பியர்கள் கிளாலி, புலோப்பளை போன்ற பிரதேசங்களிலும் தங்களுடைய செல்வாக்கை நிறுத்தினார்கள். கடல் வழியாக வரும் படையெடுப்பைத் தடுப்பதற்காக கிளாலியில் ஒரு இறங்குதுறையும் கண்காணிப்புத் தளமும் இருந்தது. ==
 
==            இயக்கச்சியில் ஒரு பெரிய நன்னீர்க்கிணறு இருக்கின்றது . இந்தக் கிணற்றிலிருந்தே முன்னர் ஆனையிறவு, தட்டுவன்கொட்டி, உப்பளம், உமையாள்புரம் போன்ற இடங்களுக்குத் தண்ணீர் சென்றது. இப்போதும் இந்த நன்னீர்க்கிணறுகள் நீரை வழங்கிக் கொண்டேயிருக்கின்றன. ==
 
==            1984 இற்கு முன்னர் பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் எல்லை இன்னும் விரிந்திருந்தது. அது கிழக்கே சுண்டிக்குளத்தைக் கடந்து, வங்கக் கடலில் தொட்டது. வடக்கு எல்லை, இன்றைய வடமராட்சி கிழக்கின் கடலோரம். 1984 இல் வடமராட்சி கிழக்கு என்ற புதிய பிரதேச செயலர் பிரிவு உருவாக்கப்பட்ட பிறகு வீரக்களியாற்றுடன் எல்லை குறுகி விட்டது.  ==
 
== மக்கள் தொகை ==
 
== அந்த வகையில் பிரதேச வளம் செழிக்க பயன்படுத்த மக்கள் தேவையன்றோ? இயக்கச்சியிலிருந்து முகமாலை வரையான இப்பிரதேசத்தில் 3914 குடும்பங்களைச் சேர்ந்த 12 637மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ==
 
== கலை, கலைஞர்கள் ==
 
==      அவ்வாறே குளிர்ந்த மனதில் பாட்டும் கூத்தும் குடிவரல் இயல்பு அன்றோ? இக்கூத்துக்களையும் தமிழர் பாராம்பரியங்களை இப்பிரதேசத்தில் வாழ்ந்த வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல கலைஞர்கள் பதிவிட்டும் தொடர்ந்தும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ==
 
== 1.வாளபீமன், ==
 
== 2.சத்தியவான் சாவித்திரி, ==
 
== 3.அல்லி அருச்சுனன், ==
 
== 4.பவளக்கொடி, ==
 
== 5.அரிச்சந்திர மயான காண்டம், ==
 
== 6.கோவலன் கூத்து ==
 
== என்று ஊரெங்கும் கூத்துகள் அரங்கேறின. வீட்டுக்கு வீடு கூத்துக் கலைஞர்கள் செழித்திருந்தார்கள். இதைப்போல, புலோப்பளை. கிளாலிப் பிரதேசங்களில்  கிறிஸ்தவக் கூத்துகளும் ஆடப்பட்டன. இன்னும் இந்தக் கூத்துகள் இங்கே ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய கலைமுகங்களோடு அரங்கேறுகின்றன. ==
 
== ==
 
==        களமது பல கண்டு,கலைக்கான கௌரவமும் கொண்டு பளைக்கு பெருமை சேர்க்கும் பல கலைஞர் இங்கு உண்டு. கூத்தும் கூத்துக் கலைஞர்களும் இருந்தால் அதைப் பழக்கி நெறிப்படுத்தும் அண்ணாவியர்களும் இருப்பார்களல்லவா... ! ==
 
== 1.முத்தையா அண்ணாவி ==
 
== 2.அண்ணாவி இராசர், ==
 
== 3.அண்ணாவி கனகரத்தினம் ==
 
== ஆகியோர் கடந்த நூற்றாண்டில் புகழ் பெற்று விளங்கினர். தற்போது, ==
 
== 1.அண்ணாவி ஆறுமுகம் ==
 
== 2.அண்ணாவி நீக்கிலாப்பிள்ளை ==
 
== 3.அண்ணாவி சுந்தரம்பிள்ளை ==
 
== ஆகியோர் கலை வாரிசுகளை தற்போதும் உருவாக்கி வருகின்றனர். ==
 
== ==
 
== அன்றும்,இன்றும் எல்லாருக்கும் ஒப்பனை செய்து, அரங்கமைத்து கூத்துக்களை சிறப்பாக்கியவர்கள் செல்லையா அணியினர். பளை, வண்ணாங்கேணியைச் சேர்ந்த செல்லையா அணி இந்தப் பணியில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றியுள்ளது. 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கலாபூசண விருது வழங்கல் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்துக்கு கிடைத்த  2 விருதுகளில் ஒன்றை பச்சிலைப்பள்ளி பிரதேசம் ஒப்பனைக் கலைக்கு செல்லையா தனபாலசிங்கம்  பெற்றமை கலைக்கும் கலைஞர்களுக்கும் கிடைத்த அதி பெரு கௌரவமே. இக் கௌரவத்திற்கு ஊன்றுகோலாக பச்சிலைப்பள்ளி பிரதேச கலாசார பேரவை, கலாசார அதிகார சபை இயங்கு நிலையிலுள்ள 10 இற்கு மேற்பட்ட கலாமன்றங்களும், அறநெறிப்பாடசாலைகளும் குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டியவையாகும்.அத்துடன் இப்பிரதேச கலைஞர்கள் பலரும் ஆண்டுதோறும் முதலமைச்சர் விருது,கலைத்தென்றல் விருது,கலைக்கிளி விருது,கலாபூசண விருது என்பவற்றை பெற்று வருகிறார்கள். ==
 
== எழுத்தாளர் ==
 
==             இப்பிரதேசத்தில் மிகவும் போற்றத்தக்க எழுத்தாளர்கள் இலக்கியத்துறையில் நாடாளவிய ரீதியில் புகழ்ப்பெற்று காணப்படுகின்றார்கள். குறிப்பாக ==
 
== 1. கருணாகரன்- இயக்கச்சி ==
 
== 2. சிவராஜா- இத்தாவில் ==
 
== 3. சிவஞானம்- தர்மக்கேணி ==
 
== 4. (செல்வராஜா மகன்) ==
 
== போன்றவர்கள் இலக்கியப் படைப்புகளின் நாயகர்களாக வலம் வருகின்றார்கள் ==
 
== அரசியல் துறையில் ஈடுப்பட்டவர்கள் ==
 
== இப்பிரதேசத்தன் மன்னின் மைந்தர்களான இருவர் அரசியல் துறையிலும் பெயர் பெற்று விளங்குகின்றனர் ==
 
== 1.மு. சந்திரகுமார் (பாராளுமன்ற உறுப்பினராக) ==
 
== 2.ப.அரியரத்தினம் ( மாகாண சபை உறுப்பினர்) ==
 
== வேட்டை முறை ==
 
== தமிழர் தொன்மையான வேட்டை முறைகள் பச்சிலைப்பள்ளியில் காணப்பட்டுள்ளன. இவ் வேட்டை முறைகள் தற்போது  சட்டம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தினால் வேட்டை என்பது இல்லாது போய்விட்டது. ==
 
== இப்பகுதியில் காணப்பட்ட வேட்டை முறைகள் ==
 
== 1. காவல் வேட்டை ==
 
== 2. களைப்பு வேட்டை ==
 
== 3. ஓழி வேட்டை ==
 
== 4. பொறி வேட்டை ==
 
== ஆகியவைகள் காணப்பட்டுள்ளன. ==
 
== முக்கிய தொழில்கள் ==
 
== இப்பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் முக்கியத் தொழில்களாக  ==
 
== 1. வேளாண்மை ==
 
== 2. கடற்றொழில் ==
 
== 3. பனை சார்தொழில் ==
 
== 4. கால்நடை வளர்ப்பு ==
 
== 5. தொழிற்சாலை ==
 
== போன்றவைகளும் தொழில்சார் நிறுவனங்களாக சிறு கைத்தொழில்களும் காணப்படுகின்றன. ==
 
==      இன்னொரு இயற்கையோடிணைந்த தொழில் உப்பு உற்பத்தி. ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்கள் இந்தப் பிரதேச மக்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கின. குறிஞ்சாத்தீவு உப்பளத்தின் உப்பு உற்பத்தி பெரும் நிதியீட்டத்தை தேசியப் பொருளாதாரத்துக்கு வழங்கியது. யுத்தத்தினால் இவையெல்லாம் சிதைந்து விட்டன. இப்போது மீண்டும் தொடங்கும் மிடுக்கு என இவை மெல்ல மெல்ல உயிர்பெற்று  வருகின்றன. ==
 
== ==
 
== இங்கே இன்னொரு தொழில் வாய்ப்பும் வருவாயுமாக இருப்பது கடற்தொழில். கிளாலி, அல்லிப்பளை கடல் தொழிலாளிகள் மீன்பிடியில் ஈடுபடுகிறார்கள். கிளாலியில் இதற்காக ஒரு இறங்குதுறையும் உண்டு. கிழக்கே இயக்கச்சி, கோவில்வயல் பகுதிகளில் இறால்பிடியும் நன்னீர் மீன்பிடியும் நடக்கிறது. இது பெரும்பாலும் பருவகாலத்தொழிலாக இருந்தாலும் ஆயிரக்கணக்கானவர்களுக்குச் சோறு போடுகிறது. ==
 
== ==
 
== ஏனையவர்கள் வேளாண்மையிலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபடுகிறார்கள். பச்சிலைப்பள்ளியின் பெரும்பான்மைப்பொருளாதாரம் சுயசார்ப்பிலேயே உள்ளது. இதைத் தவிர, காற்றலை மின்னுற்பத்தி நிலையம் ஒன்றும் இங்கே உள்ளது. பளைப்பிரசேத்தில் அமைந்திருக்கும் இந்த மின்னுற்பத்தி நிலையத்தின் மூலமாக ஆண்டொன்றுக்கு ............. மெகா வாட்ஸ் மின் பெறப்படுகிறது. ==
 
== ==
 
== வழிபாட்டு முறை ==
 
== பச்சிலைப்பள்ளியின் வழிபாட்டு முறை என்பது பெரும்பாலும் சிறு தெய்வ வழிபாட்டுக்குரியதே. இன்று அந்தப் பாரம்பரியம் மெல்ல மெல்ல மாறி வந்தாலும் இன்னும் அதனுடைய அடையாள மரபு மாறவில்லை. பாரம்பரியக் குடிகள் இங்கே மண்டலாய்ப்பிள்ளையார், மல்வில் வல்லியக்கன், இயக்கச்சி கண்ணகி அம்மன், அறத்தி அம்மன், மொண்டுவான் வைரவர், முகாவில் திரியாய் அம்மன், பாப்பாங்குளம் பிள்ளையார், கிளாலி அம்மன், சின்னமண்டலாய்ப்பிள்ளையார் என்ற வழிபாட்டுத்தலங்ளை உருவாக்கி வழிபட்டனர். இதில் மல்வில் வல்லியக்கன் பின்னாளில் மல்வில் கிருஷ்ணன் கோயிலாக மாறி விட்டது. மல்வில் கிருஸ்ணன், திரியாய் அம்மன், மண்டலாய்ப்பிள்ளையார் என்ற மூன்று கோயில்களுக்கும் பச்சிலைப்பள்ளிப்பிரதேசத்தின் நாலா திசைகளிலிருந்தும் வடமராட்சி, பருத்தித்துறை, வலி கிழக்கு போன்ற பிரதேசங்களிலிருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இது அவர்களுடைய வழமையாக உள்ளது. ==
 
== ==
 
== இதேவேளை பச்சிலைப்பள்ளியில் ( மிசன் சேர்ச் ) என்று சொல்லப்படும் தேவாலயமொன்று பளை நகரின் மத்தியிலே உள்ளது. இது 1883 இல் கட்டப்பட்டது. ==
 
== முக்கிய இடங்கள் ==
 
== பளையில் வரலாற்று முக்கியத்துவம் வாயந்த பல இடங்கள் காணப்படுகின்றன. அவற்றில் முக்கியமானதாக ==
 
== 1. இயக்கச்சி பெயரி கிணறு ==
 
== 2. புல்லாவெளி அந்தோணியார் ஆலயம் ==
 
== 3. பளை நகர் திருச்சபை ==
 
== 4. கிளாலி சுற்றுவட்டார கிறிஸ்த்தவ  ஆலயங்கள் ==
 
== 5. புலோப்பளை மாதா கோவில் ==
 
== 6. மண்டலாய் பிள்ளையார் ஆலயம் ==
 
== 7. இயக்கச்சி கண்ணகி அம்மன் ஆலயம் ==
 
== 8. மல்வில் கிருஸ்ணர் கோவில் ==
 
== 9. திரியாய் திரௌபதி அம்மன் ==
 
== 10. இரட்டைக் கேணி அம்மன் ==
 
== 11. இயக்கச்சி குவேனிக்கோட்டை ==
 
== படசாலைகள் ==
 
== அழிவில்லா மூலதனமாம் அறிவு. அதை அழகாய் சொல்லித் தரும் நற்பல கல்விச் சாலைகள் எம் பிரதேசத்தில் உண்டு.  பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 14 பாடசாலைகள் உள்ளன. இதில் புலோப்பளை றோமன் கத்தோலிக்கப் பாடசாலை நானூறு ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புக்குரியது.போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் புலோப்பளை தமிழ்க்கலவன் பாடசாலை எனும் பெயருடன் புலோப்பளை தர்மக்கேணி, ஆழியவளை பெரியபளை சோரன்பற்று முதலிய கிராம மாணவர்கள் கல்வி பயின்றதுடன் யேசு சபைக்குருமாரின் பராமரிப்பில் இப்பாடசாலை இருந்ததாக யேசுபிற் இன் சிலோன் எனும் நூலில் பதிவிடப்பட்டுள்ளது. ஒல்லாந்தர் தேவாலயங்கள் பாடசாலைகளை தமதாக்கிய காலத்தில் இப் பாடசாலை சுதேச மொழிப் பாடசாலையாக மாற்றம் கண்டது. பிற்காலத்தில் கிளி பளை றோ.க.த பாடசாலையாக பரிணாமம் பெற்றது.  பச்சிலைப்பள்ளி பிரதேசமானது கல்விசார் செயற்பாடுகளில் மட்டுமன்றி இணைப்பாடவிதானம் சார் துறைகளிலும் தேசியரீதியில் தடம்பதித்து வருகின்றது.இதற்கு சான்றாக,தேசிய மட்ட கோலூன்றி பாய்தலில் யோ.சுகிர்தா மூன்றாம் இடத்தையும்,தேசிய இளைஞர் சேவை மன்ற விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் இரண்டாம் இடத்தையும்,அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கோலூன்றிப் பாய்தலில் இரண்டாம் இடத்தையும்,தெ.திவ்யா  அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கோலூன்றிப்பாய்தலில் இரண்டாம் இடத்தையும்,தேசிய இளைஞர்சேவை மன்ற கடற்கரைகரப்பந்தாட்ட போட்டியில் யோ.சுகிர்தா,யோ.வாணிஷா ஆகிய இருவரும் மூன்றாம் இடத்தையும் அத்துடன் மாகாண மட்ட 100மீற்றர் பெண்களுக்கான போட்டியில் யோ.வாணிஷா முதலாம் இடத்தைப் பெற்றதுடன் 2016ஆம் ஆண்டிற்கான  வடமாகாண சிறந்த தட வீராங்கானையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  ==
 
== அத்துடன் பளையின் சிறப்பு மிகு பாடசாலைகளாக மாசார் அ.த.க பாடசாலை, இயக்கச்சி அ.த.க பாடசாலை, சோரன்பற்று சிறிகணேசா, கோவில்வயல் அ.த.க,வேம்படுகேணி சி.சி.த.க பாடசாலை,கிளாலி றோமன் கத்தோலிக்க பாடசாலை என்பன கல்வியை வழங்கி வருகின்றன. ==
 
== நிர்வாக ரீதியில் ==
 
==       நிர்வாக ரீதியில் பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை, பளை பொது மருத்துவமனை, பச்சிலைப்பள்ளி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், பச்சிலைப்பள்ளி பனை, தென்னை வள உற்பத்திக் கூட்டுறவுச் சங்கம், பளை காவல்துறை நிலையம், கமநல சேவைகள் திணைக்களம், தொலைத்தொடர்புப் பரிவர்த்தனை நிலையம், அஞ்சல் நிலையம் என்பன இயங்கி வருகின்றன. ==
 
== ஆவணப்படம் ==
 
== 2017 ல் இப்பிரதேசத்தை  பற்றிய ஆவணப்படத்தை ஆவணப்பட இயக்குனரும் திரைப்படக கல்வி விரிவுரையாளருமாகிய சத்திய ஸ்ரீ இராமேஸ்வரன் வடமாகான பண்பாட்டலுவள்கள் திணைக்கள நிதி அனுசரனையுடன் பிரதேச செயலக உதவியுடனும்  பனுவல் பாகம் 01 ஆவணப்படத்தை இயக்கியுள்ளார் ==
 
== உள்நாட்டு யுத்தம் ==
 
==     இந்தப் பிரதேசத்தின் முக்கியமான ஆளுமைகளாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பலர் வாழ்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். அவர்களுடைய தகவல்களையும் வரலாற்றையும் திரட்ட முடியாமல் உள்ளது. பாரம்பரியமான பிரதேசமொன்றில் தொடர்ச்சியாக வாழ்ந்த மக்களைப் பற்றிய தகவல்களைப் பெற முடியாத அளவுக்கு கடந்த கால யுத்தம் இந்தப் பிரதேசத்தை அழித்து விட்டது. இந்தப் பிரதேச மக்கள் இந்தப்பிரதேசத்தை விட்டு முற்று முழுதாகவே பல தடவைகள் இடம்பெயர்ந்தனர். 1985 இல் இருந்து பச்சிலைப்பள்ளி ஒரு முழுமையான யுத்த வலயத்துள்தான் இருந்துள்ளது எனலாம். பின்னர் ஆனையிறவு, இயக்கச்சி, முகமாலை, கிளாலி என்ற நான்கு பெரிய போர்த்தளங்களில் கட்டுப்பட்டிருந்தது. இந்தக் காலம் இந்தப்பிரதேசத்தின் இருண்ட காலம் எனலாம். ==
 
== ==
 
==      எல்லாவற்றையும் யுத்தம் சிதைத்தது. முகமாலை, இயக்கச்சி, ஆனையிறவு, கிளாலி என்ற பெருந்தளங்களில் சிறைப்பட்டிருந்த இந்தப் பிரதேசம் இன்னும் முழுதாக இயல்பு நிலையை அடைந்ததில்லை. ==
 
==       யுத்த முடிவுக்குப் பிறகு இங்கே மக்கள் மீண்டும் மீள்குடியேறி தங்களின் இயல்பு வாழ்க்கையைக் கட்டியெழுப்பி வருகிறார்கள். இதிலே முக்கியமான பங்களிப்பைச் செய்து வருகிறது பச்சிலைப்பள்ளி அபிவிருத்திச் சங்கம். லண்டனில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சங்கம் இப்போது பளையில் தன்னுடைய செயற்பாட்டு மையத்தை வைத்து இயங்கி வருகிறது. பாதிக்கப்பட்ட  மக்களுக்கு ஆதரவும் உதவியும் அளித்து அவர்களை மீள் நிலைப்படுத்தும் பணிகளில் பெரும் பங்களிப்பைச் செய்து வருகிறது. ==
 
==       வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் பிரதேசம் சுற்றுலாத்தளமாகப் பரிணமிக்கக் கூடியது. தற்பொழுது இயக்கச்சிச் சந்தியின் வழியாக சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயத்துக்குப் போகும் வழி சுற்றுலாப் பயணிகளுக்குரியது. அங்கே உள்ள மணல் வெளியும் சிறு குளங்களும் நன்னீர் நிலைகளும் தனிச்சிறப்புக்குரியவை. ==
 
== கிராம அலுவலர் பிரிவுகள் ==
பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 18 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது.
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2234059" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி