சிலிகுரி பாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category டார்ஜிலிங் மாவட்டம்
சி தானியங்கிஇணைப்பு category இந்தியப் புவியியல்
 
வரிசை 17: வரிசை 17:
[[பகுப்பு:மேற்கு வங்காளம்]]
[[பகுப்பு:மேற்கு வங்காளம்]]
[[பகுப்பு:டார்ஜிலிங் மாவட்டம்]]
[[பகுப்பு:டார்ஜிலிங் மாவட்டம்]]
[[பகுப்பு:இந்தியப் புவியியல்]]

09:58, 27 மார்ச்சு 2017 இல் கடைசித் திருத்தம்

சிலிகுரி பாதை


சிலிகுரி பாதை (வங்காளம்: শিলিগূড়ি করিডোর, ஆங்கிலம்: Siliguri Corridor or Chicken's Neck) இது வ‌ட‌கிழ‌க்கு இந்தியாவை இந்தியாவின் ம‌ற்ற‌ ப‌குதிக்ளோடு இணைக்கும் 21 கி. மீ., கொண்ட குறுகிய‌ ப‌குதியாகும். இத‌ன் இருபுற‌மும் நேபாளம் மற்றும் வங்காளதேசம் அமைந்திருக்கிற‌து. இத‌ன் வ‌ட‌ ப‌குதியில் பூடான் அமைந்துள்ள‌து.

வரலாறு[தொகு]

1947 இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் இப்பாதை உருவாக்கப்பட்டது.

முக்கிய‌த்துவம்[தொகு]

இந்த‌ப் பாதையான‌து இந்தியாவிற்கு மிக‌வும் முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌து. வ‌ட‌கிழ‌க்கு இந்தியாவுட‌ன் இந்தியாவை இணைக்கும் ஒரே பாதை இதுவாகும். கிழக்கு பாக்கிஸ்தான் (தற்போதைய வங்காளதேசம்) உருவாக்கம் இந்திய வடகிழக்கு பகுதியில் புவியியல் ரீதியாக இந்தப் பாதையை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகிறது. சிலிகுரி பாதை 14 மைல் அகலம் மட்டுமே கொண்டது. இந்தியாவின் வடகிழக்கு பகுதி மற்றும் நாட்டின் மீதமுள்ள பகுதிகளுக்கு இடையே பாலமாக இருக்கிறது. இந்திய சீனப்போரின் போது சீனா இந்தப்பாதையைக் கைப்பற்றி வடகிழக்கு இந்தியாவை இந்தியாவின் பிற‌ பகுதிகளில் இருந்து துண்டிக்க முயற்சி செய்தது..[1] முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்பகுதி இந்திய ராணுவம், அசாம் ரைபிள்ஸ், எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மேற்கு வங்காள காவல் துறை ஆகியவற்றால் கண்காணிக்கப்படுகிறது. சமீபகாலங்களில் இந்தப்பகுதி வங்காளதேச கிளர்ச்சியாளர்களும் நேபாள மாவோயிஸ்டுகளும் ஊடுருவும் இடமாகக் கருதப்படுகிறது. சட்டவிரோத போதை மற்றும் ஆயுதங்கள் போக்குவரத்து இந்த பகுதியில் நடைபெறுகிறது. 2004 ஆம் ஆண்டில் இந்தியா, நேபாளம், பூடான் மற்றும் வங்காளாதேசம் அனைத்தும் இணைந்து தடையற்ற வர்த்தகத்தை இப்பகுதியில் உருவாக்கும் சாத்தியத்தை ஆராய்ந்தனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Partha S. Ghosh, "Cooperation and Conflict in South Asia", UPL, Dhaka,1989,p-43
  2. "Siliguri corridor 'vulnerable', warns security expert." DNA. 22 July 2007. Accessed 30 May 2008.

இதையும் பார்க்க[தொகு]

சிலிகுரி

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலிகுரி_பாதை&oldid=2225843" இலிருந்து மீள்விக்கப்பட்டது