தேசியமயமாக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Neechalkaran பயனரால் நாட்டுடைமையாக்கல், தேசியமயமாக்கல் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
சி தானியங்கிஇணைப்பு category பொருளாதார அமைப்புகள்
வரிசை 25: வரிசை 25:
[[பகுப்பு:சமூகம்]]
[[பகுப்பு:சமூகம்]]
[[பகுப்பு:பொருளாதாரக் கொள்கை]]
[[பகுப்பு:பொருளாதாரக் கொள்கை]]
[[பகுப்பு:பொருளாதார அமைப்புகள்]]

09:01, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

நாட்டுடைமையாக்கல் அல்லது தேசியமயமாக்கல் (Nationalization) என்பது தனியாரின் உடைமைகளை அல்லது நிறுவனங்களைப் பல்வேறு காரணங்களுக்காக ஒரு நாட்டின் அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையாகும். பொதுவாக மக்களுக்கு இன்றியமையாத துறைகளை அரசு தன்வசப்படுத்தி அதன் மூலம் சீராக நிர்வகிக்கப்படுகிறது. தனியார்மயமாக்கல் என்பது இதற்கு எதிரான நடவடிக்கையாகும். பொருளாதாரக் காரணிகளுக்காகவே பெரும்பாலான நடவடிக்கைகள் அமைகின்றன. 2007-09 சர்வதேச நிதிநெருக்கடியின் போது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளால் இந்தியாவின் பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.[1][2]

இந்தியா

இந்தியாவில் வங்கிகள், நிறுவனங்கள் போன்றவை பல தேசியமயமாக்கப்பட்டுள்ளன.

  • 1949 இந்திய விடுதலைக்குப் பின் (1 ஜனவரியில்) இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்டது.
  • 1953 வான் நிறுவனங்களின் சட்டம் 1953ன் படி ஏர் இந்தியா நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டது.
  • 1955 இந்திய இம்பீரியல் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகள் பாரத ஸ்டேட் வங்கி என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்டன.
  • 1969 மேலும் 14 இந்திய வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.
  • 1973 நிலக்கரி தொழிலும், எண்ணெய் நிறுவனங்களும் தேசியமயமாக்கப்பட்டன.
  • 1980 மேலும் ஆறு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன
  • 1972 106 காப்பீட்டு நிறுவனங்களை நான்காக தேசியமயமாக்கப்பட்டன.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்ட சான்றோர்களின் நூல்கள் பொதுவுரிமை ஆக்கப்பட்டு, தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ் நூல்கள் நாட்டுடைமையாக்கம் செய்யப்படுகிறது.

இலங்கை

  • 1958 பேருந்து போக்குவரத்து தேசியமயமாக்கப்பட்டு, சிலோன் போக்குவரத்து வாரியம் உருவாக்கப்பட்டது. மேலும் கொழும்புத் துறைமுகமும் தேசியமயமாக்கப்பட்டது
  • 1961 பெட்ரோலிய நிறுவனங்கள், காப்பீட்டு நிருவனங்கள் மற்றும் சிலோன் வங்கி ஆகியவை இவ்வாண்டில் தேசியமயமாக்கப்பட்டன.
  • 1971 கிராஃபைட்டுச் சுரங்கங்கள் தேசிய மயமாக்கப்பட்டன
  • 1972 நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் படி தேயிலை, ரப்பர் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டன.

மேற்கோள்கள்

  1. PSU banks' policies saved India from financial blushes: Chidambaram
  2. The importance of public banking
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசியமயமாக்கல்&oldid=2224045" இலிருந்து மீள்விக்கப்பட்டது