புனலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: ISTஇசீநே using AWB
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்|கொல்லம் மாவட்டத்தி...
வரிசை 87: வரிசை 87:


[[பகுப்பு:கேரளாவிலுள்ள மாநகரங்கள்]]
[[பகுப்பு:கேரளாவிலுள்ள மாநகரங்கள்]]
[[பகுப்பு:கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்]]

08:12, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

புனலூர்
நகரம் மற்றும் நகராட்சி
புனலூர் தொடர்வண்டி நிலையம்
புனலூர் தொடர்வண்டி நிலையம்
Country இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்கொல்லம்
பரப்பளவு
 • மொத்தம்34 km2 (13 sq mi)
பரப்பளவு தரவரிசை14
ஏற்றம்56 m (184 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,01,251
 • தரவரிசை9
 • அடர்த்தி3,337/km2 (8,640/sq mi)
மொழிகள்
 • ஆட்சிமொழிமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்691305 to 034
தொலைபேசிக் குறியீட்டு எண்0475
வாகனப் பதிவுKL 25,KL 2
அருகிலுள்ள நகரங்கள்கொல்லம் (44 km), திருவனந்தபுரம் (75 km)
இணையதளம்www.punalurmunicipality.in

புனலூர் (Punalur) நகரம் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள நகரம் ஆகும். இது கல்லடா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊரின் பெயரான புனலூர் என்பது இரண்டு தமிழ் சொற்களிலிருந்து வந்தது. தண்ணீர் ஊர் என்பது இதன் பொருள் ஆகும் ( புனலூர்=புனல்+ஊர்: புனல்-தண்ணீர், ஊர்- ஊர்). இது கொல்லம் நகரத்திலிருந்து 45 கிலோமீட்டர்கள் கிழக்கு திசையிலும் மாநிலத் தலைநகரான திரிவனந்தபுரத்திலிருந்து 75 கிலோமீட்டர்கள் வடகிழக்கு திசையிலும் அமைந்துள்ளது. இந்நகரம் பத்தனாபுரம் தாலுகாவின் தலைநகராகவும் விளங்குகிறது. இது மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதை மேற்குத் தொடர்ச்சி மலையின் நுழைவாயில் என்றும் சொல்வர்.

இது கொல்லம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும் . மேலும் தென் கேரளத்தின் 5 வது பெரிய நகரமும் ஆகும். புனலூர் காகித ஆலைகளுக்கு புகழ் பெற்றது. கேரளாவின் முதல் தொழிற்சாலையான புனலூர் காகித ஆலை 1850-ல் நிர்மாணிக்கப்பட்டது. திருவாங்கூர் ஆட்சிக் காலத்தில் கொல்லம் மாவட்டத்திற்கும் தமிழகத்தின் செங்கோட்டை நகருக்குமான போக்குவரத்திலும், வணிகத்திலும் புனலூர் முக்கியப் பங்கு வகித்தது. புனலூர் பஞ்சாயத்து 1972 ஆம் ஆண்டில் நகராட்சியாக மாற்றம் பெற்றது.

புவியியல் அமைப்பு

புனலூர் கடல் மட்டத்திலிருந்து 56 மீட்டர்கள் உயரத்தில் உள்ளது.[1] கல்லடா ஆற்றைச் சார்ந்து பல சுற்றுலாப் பகுதிகள் இருக்கின்றன.[2] இங்கிருந்து செங்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 208 ( NH 208 ) 20 கிலோமீட்டர்கள் தொலைவில் கேரளாவின் முதல் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டம் அமைந்துள்ளது. மேலும் பாலருவி இந்நகரிலிருந்து 35 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது[3].

கால நிலை

இது மேற்குத் தொடர்ச்சி மலையின் அருகில் அமைந்திருந்தாலும் கேரளாவின் வெப்பமான பகுதிகளுள் ஒன்று. கோடைக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 44 ° செல்சியசு (44 °C ) ஆகும். பொதுவாக ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் மேகமூட்டமான நாட்களில் குறைந்த அளவாக 15° செல்சியசும் (15 °C ), மார்ச்-ஏப்ரல் மாதங்களில் அதிகபட்சமாக 40° ( 40 °C ) செல்சியசும் இருக்கும்.

பொருளாதாரம்

இந்நகரின் முக்கிய விவசாய விளைபொருட்கள் ரப்பர் மற்றும் மிளகு ஆகும். மலைப் பொருட்கள், அன்னாசிப்பழம், மரத்தடி போன்றவை பிற உற்பத்திப் பொருட்களாகும். 1888 -ல் ஜெர்மனி நாட்டால் நிர்ணயிக்கப்பட்ட புனலூர் காகித ஆலை 1987 முதல் தொழிலாளர் பிரச்சனையால் மூடப்பட்டுள்ளது. பின்னர் பிப்ரவரி 2011 -ல் கேரள அரசுக்கும் புதிய நிர்வாகத்திற்கும் இடையே நடைபெற்ற சட்டபூர்வ ஒப்பந்தத்தின் படி அதை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேற்கோள்கள்

  1. Falling Rain Genomics, Inc - Punalur
  2. Panoramio - Photo of Amazing Punalur - Kakod Whitewater02
  3. "Palaruvi Falls". World of Waterfalls. பார்க்கப்பட்ட நாள் 2010-06-26.

புகைப்படங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனலூர்&oldid=2222771" இலிருந்து மீள்விக்கப்பட்டது