ஈ. காயத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎விருதுகள்: விரிவாக்கம்
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
வரிசை 34: வரிசை 34:
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:சங்கீத கலாசிகாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:சங்கீத கலாசிகாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]

14:36, 26 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

வீணை காயத்ரி

‘வீணை காயத்ரி’ என்றழைக்கப்படும் ஈச்சம்பட்டி காயத்ரி (பிறப்பு: நவம்பர் 9, 1959) தென்னிந்தியாவைச் சேர்ந்த வீணைக் கலைஞர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை

பெற்றோர்: ஜி. அஸ்வத்தாமா (தெலுங்கு திரைப்படத்துறையில் இசையமைப்பாளர்), கமலா அஸ்வத்தாமா (வீணைக் கலைஞர்). காயத்ரியின் இயற்பெயர்: காயத்ரி வசந்த ஷோபா. தனது ஆரம்பகால இசைப் பயிற்சியை பெற்றோரிடம் கற்றார். பிறகு டி. எம். தியாகராஜனிடம் (சங்கீத கலாநிதி விருது பெற்ற பாடகர் மற்றும் வாக்கேயக்காரர்) மாணவராக பயிற்சி பெற்றார்.

தொழில் வாழ்க்கை

இவரின் முதல் மேடைக் கச்சேரி, 1968ஆம் ஆண்டு நடைபெற்ற ‘தியாகராஜா விழாவில்’ நடந்தது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபாவினால் நடத்தப்பட்ட இந்த விழாவில், தனது 9ஆவது வயதில் காயத்ரி, வீணை இசை நிகழ்ச்சியை வழங்கினார். இதன்பிறகு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விருதுகள் பலவற்றை பெற்றுள்ளார். இசைத் தொகுப்புகள் பலவற்றை ஒலிதத் துறையில் வெளியிட்டுள்ளார்.

சிறப்புகள்

  • 13ஆவது வயதில் ஒரு முதுநிலைக் கலைஞராக அனைத்திந்திய வானொலி, காயத்ரிக்கு அங்கீகாரம் தந்தது (1973).
  • தமிழக அரசால் அதன் இசை, நுண்கலை பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக 2013 நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். மூன்று வருடங்களுக்கு அவர் இந்தப் பதவியை வகிப்பார். முன்னதாக அவர் தமிழக அரசு இசைக் கல்லூரிகளுக்கான இயக்குநராகவும் அரசு இசைக் கல்லூரியின் முதல்வராகவும் இருந்துள்ளார்.[1][2]

விருதுகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._காயத்திரி&oldid=2218024" இலிருந்து மீள்விக்கப்பட்டது