சஞ்சய் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1948 பிறப்புகள்
சி தானியங்கிஇணைப்பு category 7வது மக்களவை உறுப்பினர்கள்
வரிசை 74: வரிசை 74:
[[பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-நபர்கள்]]
[[பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-நபர்கள்]]
[[பகுப்பு:1948 பிறப்புகள்]]
[[பகுப்பு:1948 பிறப்புகள்]]
[[பகுப்பு:7வது மக்களவை உறுப்பினர்கள்]]

13:15, 26 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

சஞ்சய் ஃபெரோஸ் காந்தி
தொகுதிஅமெதி, உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1946-12-14)14 திசம்பர் 1946
இறப்பு23 சூன் 1980(1980-06-23) (அகவை 33)
புது தில்லி
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்மேனகா காந்தி
பிள்ளைகள்வருண் காந்தி
நேரு-காந்தி குடும்ப உறுப்பினர்

சஞ்சய் காந்தி (டிசம்பர் 14, 1946 – ஜூன் 23, 1980) ஒரு இந்திய அரசியல்வாதி. முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அரசியல்வாதி ஃபெரோஸ் காந்தி ஆகியோரின் இளைய மகன். இவர், அரசியல்வாதிகளான மேனகா காந்தியின் கணவரும் வருண் காந்தியின் தந்தையும் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை

சஞ்சய், தனது மூத்த சகோதரர் ராஜீவ் காந்தியுடன், 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை வெல்ஹாம் சிறுவர் பள்ளியில் படித்தார். ராஜீவ், 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை டேரா டூனில் உள்ள தி டூன் பள்ளியில் பயின்றார். சஞ்ஜய் 7 ஆம் வகுப்பையும் 8 ஆம் வகுப்பில் பாதியையும் தி டூன் பள்ளியில் பயின்றார். மீதமிருந்த 8 ஆம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்பு வரை, புனித கொலம்பஸ் பள்ளி, தில்லியில் பயின்றார். சஞ்ஜய் கல்லூரிக்குச் சென்றதேயில்லை. ஆனால் இங்கிலாந்தில் க்ரூ (Crewe) என்னுமிடத்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பணிபயில்பவராகச் சேர்ந்தார்.[1]. அவர் பந்தயக் கார்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததுடன், விமான ஓட்டுனர் உரிமமும் பெற்றிருந்தார். அவரது அண்ணன் ராஜீவ், அரசியலிலிருந்து விலகியிருந்து, விமான ஓட்டித் தொழிலை மேற்கொள்வதில் முனைந்திருந்தபோது, சஞ்ஜய் தனது அன்னையின் அருகில் இருக்க முடிவெடுத்தார்.

மாருதி உத்யோக், இந்தியா குறித்த சச்சரவு

1971 இல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் அமைச்சரவை, விலை குறைந்த, திறன்வாய்ந்த, உள்நாட்டில் தயாரித்த, நடுத்தர மக்கள் எளிதில் வாங்கக்கூடிய 'மக்களுக்கான தானுந்து' ஒன்றைத் தயாரிக்கக் கருதியது. சஞ்ஜயிடம் அனுபவமோ, திட்ட வரைவோ, எந்த ஒரு நிறுவனத்துடனும் பிணைப்போ இல்லாதபோதும், அதற்கான தயாரிப்பு உரிமத்தையும், ஒப்பந்த உரிமையையும் அவர் பெற்றார். இம்முடிவைத் தொடர்ந்து எழுந்த கண்டனங்கள் பெரும்பாலும் இந்திராவைக் குறிவைத்தன. ஆனால், 1971 இல் நிகழ்ந்த வங்காளதேச விடுதலைப் போரும், பாகிஸ்தான் மீது பெற்ற வெற்றியும் இந்த சச்சரவை மூழ்கடித்தன. இந்திராவின் வெற்றியும், அதைத் தொடர்ந்து தேர்தலில் காங்கிரஸ் பெற்ற மகத்தான வெற்றியும் இந்திரா காந்தியை மேலும் அதிகார ஆற்றல் மிக்கவராக்கின. இன்று இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்கும் மாருதி உத்யோக் என்ற நிறுவனத்தை, சஞ்ஜய் காந்தி நிறுவினார், ஆனால் அவரது வாழ்நாளில் அந்நிறுவனம் எந்த வாகனத்தையும் உற்பத்தி செய்யவில்லை. சோதனைக்கான மாதிரி வாகனம் ஒன்று, முன்னேற்றத்தைக் காட்டும் வகையில் காட்சிப் பொருளாக முன் வைத்தது மிகுந்த கண்டனத்துக்குள்ளானது. பொது மக்களின் கருத்து சஞ்ஜய் காந்திக்கு எதிராகத் திரும்பியது. பலர் ஊழல் பெருகி வருவதாக ஆட்சேபம் தெரிவித்தனர். மேற்கு ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் ஏஜி என்னும் நிறுவனம் முன்னதாக VW பீட்டில் என்னும், உலக அளவில் பிரபலமான, மக்கள் வாகனம் ஒன்றைத் தயாரித்து, வெற்றிகரமாக விற்பனை செய்து வந்தது. அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இணைந்து செயல்படுவதன் மூலம் மக்கள் வாகனத்தின் (மாருதி) இந்திய மாதிரியைத் தயாரிக்கும் சாத்தியக் கூறுகளை ஆயும் பொருட்டு, சஞ்ஜய் காந்தி, அந்நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். மேலும் ஜப்பான் நாட்டு சுசூக்கி மோட்டார் கொர்போரேசன் நிறுவனத்திடம் இந்தியாவில் மக்களுக்கான மலிவான வாகனங்களை தயாரிப்பதற்கான வாகனத்தின் வடிவமைப்பு மற்றும் அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் படி கேட்டுக்கொள்ளப்பட்டனது. மேற்கு ஜெர்மனியை சேர்ந்த வோல்க்ஸ்வேகன் ஏஜி நிறுவனத்தை இந்திய அரசு தொடர்பு கொண்டுள்ளதை சுசுகி நிறுவனம் அறிந்தது. இந்தியாவின் முதல் மக்கள் வாகனத்தைத் (மாருதி 800) தயாரிக்கும் போட்டியில் இருந்து வோல்க்ஸ்வேகனை வெளியேற்ற தன்னால் இயன்ற அனைத்தையும் சுசுகி நிறுவனம் செய்தது.[citation needed]. ஜப்பானிலும் கிழக்காசிய நாடுகளிலும் மிகப் பிரபலமான தனது '796' (ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் மற்றுமொரு பெரிய வெற்றி பெற்றது) என்ற மாதிரியின் வடிவத்தை அது அரசுக்கு அளித்தது.

நெருக்கடிநிலை காலத்தில் இவரது செயல்பாடு

1974 ஆம் ஆண்டு எதிர்க் கட்சியினர் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும், நாடெங்கிலும் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தின. அரசாங்கத்தையும் பொருளாதாரத்தையும் மோசமான பாதிப்பிற்குள்ளாக்கின. 1975 ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று பிரதமர் இந்திரா காந்தி தேசிய நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். தேர்தல்களைத் தாமதப் படுத்தினார், செய்தி நிறுவனங்களுக்குத் தடை விதித்ததோடு, தேசிய பாதுகாப்பென்ற பெயரில், அரசியல் சாசனம் அளிக்கும் உரிமைகளை மறுத்தார். நாடெங்கிலும் காங்கிரஸ் அல்லாத அரசுகள் பதவி நீக்கப் பெற்றது. நெருக்கடி நிலையை எதிர்த்த ஜெயப் பிரகாஷ் நாராயண் மற்றும் ஜீவத்ராம் கிருபளானி போன்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கைதானார்கள்.

நெருக்கடி நிலைக்கு சற்று முன்னரும், அதற்குப் பின்பும் நிலவிய எதிர்ப்புகள் நிறைந்த அரசியல் சூழலில், இந்திராவின் ஆலோசகர் என்ற நிலையில் சஞ்ஜய் காந்தியின் முக்கியத்துவம் அதிகரித்தது. சஞ்ஜய் காந்தி எந்த அலுவல் பொறுப்பும் வகித்ததில்லை, எந்தப் பதவிக்கும் தெரிவாகவில்லை. ஆயினும், முன்னாள் பற்றுருதியாளர்கள் கட்சியை விட்டு விலகியபோதும், இந்திராவிடமும் அரசாங்கத்திடமும் சஞ்ஜயின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்தது. மார்க் டுல்லி பின்வருமாறு கூறுகிறார், "காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு அரசை அமைக்க அவரது அன்னை இந்திரா காந்தி, நிர்வாகத்தை அச்சுறுத்தும் கொடுமையான அதிகாரங்களை எடுத்துக் கொண்டார். சஞ்ஜய் காந்தியின் அனுபவமின்மை, இந்திரா இந்த அதிகாரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை.[2]

அரசியலிலும் ஆட்சியிலும் இவரது ஈடுபாடு

சஞ்ஜய் தனது அன்னையிடம் கொண்டிருந்த செல்வாக்கு, நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தியதை உறுதி செய்தது என்று தோன்றுகிறது. நெருக்கடி நிலை அமுலில் இருந்தபோது (1975-1977) சஞ்ஜய் தனது அதிகார ஆற்றலைப் பெருக்கிக் கொண்டார் என்பது தெளிவு. இவர் எந்தப் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எந்த ஒரு அலுவல் பொறுப்பும் வகித்ததில்லை. ஆயினும், இவர் தான் புதிதாகப் பெற்ற செல்வாக்கை அமைச்சர்களிடமும், உயர்மட்ட அரசு அலுவலர்களிடமும் காவல் துறை அலுவலர்களிடமும் பயன்படுத்தத் துவங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல அமைச்சர்களும் அலுவலர்களும் பதவியைத் துறந்தபோது, அவர்கள் பணிக்குப் புதியவர்களை சஞ்ஜய் நியமித்ததாகக் கூறப்படுகிறது.

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயல்பாடுகளில் சஞ்ஜய் தலையிட்டு அமைச்சருக்கு ஆணைகள் வழங்கியபோது, பின்னாளில் பிரதமரான இந்தர் குமார் குஜ்ரால் தனது அமைச்சர் பணியைத் துறந்தது பிரபலமான எடுத்துக்காட்டாகும். குஜ்ரால் சினத்துடன் சஞ்ஜய்யை எதிர்த்ததோடு, தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரிடமிருந்து ஆணைகளைப் பெற்றுக்கொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது.

ஜமா மஸ்ஜித் சேரி மற்றும் குடும்பக் கட்டுப்பாடு விவகாரங்கள்

1976 இல், சஞ்ஜய் காந்தி நகரத்தை சுத்தப்படுத்தும் முயற்சியாக சேரிகளை அகற்றத் தலைப்பட்டார். இதனால் சேரிகளில் வாழ்ந்து வந்தோர் தலைநகரை விட்டு வெளியேற நேர்ந்தது. தில்லியிலுள்ள டர்க்மான் கேட் மற்றும் ஜாமா பள்ளி ஆகியவற்றின் அருகே இருந்த, பெரும்பாலும் இஸ்லாமியர்கள் அடங்கிய பெரும் மக்கள் தொகையைக் கொண்ட சேரிகளை அகற்றும்படி, இவரது கூட்டாளியான ஜக்மோகன் தலைவராக இருந்த தில்லி மேம்பாட்டு ஆணைய அலுவலர்களுக்கு சஞ்ஜய் உத்தரவிட்டதாக தெரிகிறது. இதனால் 250,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர நேர்ந்தது. குறைந்தது பன்னிரண்டு நபர்களாவது இறந்த்ருக்கலாம் எனப் பதிவாகியுள்ளது.[3] இது எதிர்க்கட்சியினருக்கு ஒரு உரைகல்லானது.

மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, பரவலான குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஒன்றை சஞ்ஜய் வெளிப்படையாகத் தொடங்கி வைத்தார். ஆனால், குறிக்கோள் எண்ணிக்கையை எட்டும்பொருட்டு, அரசு அலுவலர்களும் காவல்துறை அலுவலர்களும் வலுக்கட்டாயமாக விதைநாள அறுவை செய்ய நேர்ந்தது. சில நிகழ்வுகளில், பெண்கள் கூட மலடாக்கப்பட்டனர். அதிகாரபூர்வமாக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்கள் கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்றிருந்தபோதும், திருமணம் ஆகாத பல இளைஞர்கள், அரசியல் எதிரிகள் மற்றும் அறியாமையிலிருந்த ஏழை ஆண்களுக்கும் கருத்தடை செய்ததாக செய்திகள் குறிப்பிட்டன. இந்தியாவில், மக்கள் இன்றும் இந்த நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொண்டு அதை நையாண்டி செய்து வருகிறார்கள். மேலும் குடும்பக் கட்டுப்பாடு மீது பொதுமக்களுக்கு ஒரு தவறான வெறுப்பை உருவாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை பல ஆண்டுகளுக்கு பாதிப்பிற்குள்ளாக்கியது.

1977-1980: அவமானமும் மீட்சியும்

பிரதமர் இந்திரா காந்தி, ஒரு வருடத் தாமதத்திற்குப் பிறகு, 1977 இல் புதிதாகத் தேர்தல்களை நடத்த எண்ணினார். அவரது எதிரிகளை விடுதலை செய்ததோடு, நெருக்கடி நிலையையும் முடிவுக்குக் கொண்டு வந்தார். ஆனால், அவரும் அவரது காங்கிரஸ் கட்சியும், ஜனதா கட்சி கூட்டணியால் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்ற போது, சஞ்ஜய் நெருக்கடி நிலையை மீண்டும் திணிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆனால் இந்திரா காந்தி அதை ஏற்கவில்லை. புதிய ஜனதா அரசு, சரியான நேரத்தில், நெருக்கடி நிலை காலத்தில் நிகழ்ந்த குற்றச்செயல்களை விசாரிப்பதற்கென தீர்ப்பாயங்களை நியமித்தது. உள்துறை அமைச்சராக இருந்த சரண் சிங் இந்திராவையும் சஞ்ஜயையும் கைது செய்ய உத்தரவிட்டார். சஞ்ஜய் மீதான குற்றச்சாட்டுகளாக, விதைநாள அறுவை, துன்புறுத்துதல்கள், கொலைகள் மற்றும் லஞ்சம் போன்ற குற்றச் செயல்களை செய்தித்தாள்கள் வெளியிட்டன.

நாளடைவில், இந்திரா காந்தி கைதானது நியாயமற்றதாக மக்களிடையே தோன்றியது. போதிய சாட்சியம் இல்லாததால் அவர்கள் விரைவில் விடுதலை அடைந்தனர். ஜனதா கூட்டணி கலையத் தொடங்கியதுடன் தீர்ப்பாயங்களும் செயலிழந்தன. 1979 இல் பிரதமர் மொரார்ஜி தேசாய் பதவியைத் துறந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சௌதரி சரண் சிங், முன்னர் ஜனதா கூட்டணி அமையக் காரணமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால், இந்திரா காந்தியின் ஆதரவை நாடினார். அவருக்கு ஆதரவளிப்பதாக வாக்களித்த இந்திரா, சில மாதங்களுக்குப் பிறகு ஆதரவை விலக்கிக் கொண்டார். இதனால் ஜனதாவின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்து புதிய தேர்தல்கள் நடந்தன.

1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி அடைந்ததும், நெருக்கடி காலத்தில் உறுதியாக ஆட்சி புரிந்ததன் காரணமாக மக்கள் அவரை ஒரு தெய்வமாகவே போற்றும் அளவுக்கு உயர்த்தின. ஜனதா அரசு சிதறுண்டபோது ஏற்பட்ட குழப்பங்களை வன்மையாகக் கண்டித்த திருமதி காந்தி தனது முந்தைய நிலைக்குச் சென்றார். நெருக்கடி நிலையின்போது நிகழ்ந்த தவறுகளுக்கு அவர் மன்னிப்புக் கோரினார். முக்கியமான எதிரிகளுடன் கூட்டணி அமைத்தார். 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திருமதி காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மிகப்பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதியிலிருந்து சஞ்ஜய் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.

சொந்த வாழ்க்கை மற்றும் குடும்பம்

சஞ்ஜய் தனது அன்னை மீது ஆழமான உணர்ச்சி மிக்க கட்டுப்பாடு வைத்திருந்ததாக மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.[சான்று தேவை] இக்கட்டுப்பாடு பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. விதவையான தனது அன்னையின் தனிமையைப் பயன்படுத்தி, சஞ்ஜய் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டதுடன் அரசியல் விவகாரங்கள் மற்றும் தேசியக் கொள்கைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக, குஷ்வந்த் சிங் உட்பட சிலர் கூறியுள்ளனர்.[சான்று தேவை] சஞ்ஜய் காந்தி, இளைய பஞ்சாபிப் பெண்ணான மேனகா காந்தியை மணந்தார். அவர்களது மணவாழ்வு கொந்தளிப்பு நிறைந்ததாக இருந்தது. ஆயினும் அவர்களது மணவாழ்வு தொடர்ந்தது. அவர்களுக்கு வருண் காந்தி என்ற ஒரு மகன் பிறந்தான்.

இவர் தனது மூத்த சகோதரருடன் கொண்ட உறவு சுமுகமானதல்ல. 1977 ஆம் ஆண்டில் அரசியல் தோல்விக்குப் பின் இவரது அன்னையின் நிலைமை ராஜீவை மிகவும் ஆழமாக பாதித்தது. பிரான்க் எழுதிய இந்திராவின் சரிதையில் கூறியுள்ளபடி, இந்திராவின் நிலைமைக்கு சஞ்ஜய் தான் காரணம் என நேரடியாக ராஜீவ் குற்றம் சாட்டினார். இது, சஞ்ஜய் அவரது அன்னை மீதும் அரசாங்கத்தின் மீதும் கொண்டிருந்த, அழிவுக்கு வழி வகுக்கும் செல்வாக்கை உறுதி செய்கிறது.

இறப்பு

சஞ்ஜய் காந்தி, புது தில்லியில் உள்ள சப்தர்ஜங் விமான நிலையமருகே நிகழ்ந்த ஒரு விமான விபத்தில் 1980 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று இறந்தார். தில்லி விமானக் கழகத்தின் (Delhi Flying Club) புதிய விமானம் ஒன்றை இவர் ஓட்டிக் கொண்டிருந்தார். இவரது அலுவலகத்தின் மேலே ஒரு வளைவுச் சுற்றை நிகழ்த்தியபோது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து, நொறுங்கி விழுந்தது. விமானத்தின் ஒரே பயணியாக இருந்த இராணுவத்தலைவர் சுபாஸ் சக்சேனாவும் அவ்விபத்தில் இறந்தார். ஒரு சில வாரங்களுக்கு முன், விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குனர் வெளிப்படையான தடை விதித்திருந்தபோதும், சஞ்ஜய் காந்தி தனது பிட்ஸ் எஸ்-2A (Pitts S-2A) என்ற சாகச இருதள விமானத்தை (aerobatic biplane) ஓட்டிச் சென்றார். விமானத்தை ஓட்டுவதற்கு இவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், இவர் ஒரு விமான ஒட்டியாகத் தரப்படுத்தப்பட்டிருக்கவும் இல்லை, என டிஜிசிஎ, ஏர் மார்ஷல் (ஒய்வு பெற்ற) கூறியிருந்தார். பயணிகளுடன் கூடிய வணிக விமானம் ஒன்றை விதிகளுக்குப் புறம்பாக ஓட்டிச் சென்றதற்காக, காந்தியை விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குனராக இருந்த, ஓய்வு பெற்ற டிஜிசிஎ, ஏர் மார்ஷல் ஜே.ஜாகிர் முன்னதாகவே கண்டித்திருந்தார்.[4].

குறிப்புதவிகள்

  1. இந்தியாவின் முதல் பெண்மணி செயின்ட் பீடர்ஸ்பர்க் டைம்ஸ், ஜனவரி 10, 1966.
  2. மார்க் டுல்லியின் 'அம்ரித்சர் - திருமதி காந்தியின் கடைசி போர், பக்கம் 55, ஐஎஸ்பிஎன் 81-291-0917-4
  3. "புது தில்லியில் நடந்த மோதலில் 12 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது", தி நியூ யார்க் டைம்ஸ், ஏப்ரல் 20, 1976
  4. http://www.independent.co.uk/news/obituaries/air-marshal-jaffar-zaheer-principled-indian-air-force-officer-806294.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_காந்தி&oldid=2213393" இலிருந்து மீள்விக்கப்பட்டது