கோவிந்த் வல்லப் பந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot:Removing stub template from long stubs
சி தானியங்கிஇணைப்பு category 1887 பிறப்புகள்
வரிசை 50: வரிசை 50:
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:உத்தரப் பிரதேச முதலமைச்சர்கள்]]
[[பகுப்பு:உத்தரப் பிரதேச முதலமைச்சர்கள்]]
[[பகுப்பு:1887 பிறப்புகள்]]

22:34, 25 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

பண்டிட்
கோவிந்த் வல்லப் பந்த்
ஐக்கிய மாகாண முதலமைச்சர்
பதவியில்
17 சூலை 1937 – 1939
முன்னையவர்நவாப் சர் (முகம்மது அகமது சையித் கான் சடாரி)
பின்னவர்ஆளுனர் ஆட்சி
ஐக்கிய மாகாண முதலமைச்சர்
பதவியில்
1 ஏப்ரல் 1946 – 26 சனவரி 1950
முன்னையவர்ஆளுனர் ஆட்சி
பின்னவர்பதவி அழிக்கப்பட்டது
உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர்
பதவியில்
26 சனவரி 1950 – 27 திசம்பர் 1954
முன்னையவர்புதிய உருவாக்கம்
பின்னவர்சம்பூரானந்த்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 30, 1887
கூந்த்-தாமாசு கிராமம், அல்மோரா,
வட மேற்கு மாகாணம்
இறப்புமார்ச் 7, 1961
உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சிகாங்கிரசு

கோவிந்த் வல்லப் பந்த்(1887 ஆகத்து 30 - 1961 மார்ச் 7, गोविंद वल्लभ पंत) இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பணியாற்றியவரும் ஆவார். இந்தியை ஆட்சிமொழியாக்குவதில் பெரும் பங்கு வகித்தார்.தான் தலைமையேற்ற நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் இந்தியை முதன்மையான அலுவல் மொழியாகவும் ஆங்கிலத்தைத் துணைமொழியாக்கவும் பரிந்துரைத்தார்.இவருக்கு 1957ஆம் ஆண்டு நாட்டின் மிக உயர்ந்த குடிமை விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.[1]

இளமைக்காலம்

1887 ஆகத்து 30-ல், பிளவுபடாத இந்தியாவின் வடமேற்கு மாகாணத்திலிருந்த அல்மோராவில் மனோரத் பந்த் மற்றும் கோவிந்தி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.[2]. 1909ஆம் ஆண்டு சட்டப்படிப்பு முடித்த பந்த் அடுத்த ஆண்டு அல்மோராவில் தமது வக்கீல் தொழிலைத் துவங்கினார்.பின்னர் காசிப்பூரில் 1914ஆம் ஆண்டு சுற்றுலா வரும் ஆங்கிலேயர்களுக்கு உள்ளூர்வாசிகள் கட்டணமின்றி பளு தூக்கவேண்டும் என்றிருந்த சட்டத்தை எதிர்க்க கிராமசபைக்கு உதவிய நேரத்தில் ஆளும் பிரித்தானியர்களுக்கு எதிராக மனம் மாறினார். 1921ஆம் ஆண்டு காந்தியின் அகிம்சை வழியில் ஈர்க்கப்பட்டு அரசியல் வாழ்வில் நுழைந்தார். ஐக்கிய மாகாணத்தில் நடந்த பொதுத்தேர்தல்களில் நைனிதால் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்திய விடுதலை இயக்கதின் போது 1930,1933,1940 மற்றும்1942ஆம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். 1937 மற்றும் 1946 ஆண்டுகளில் ஐக்கிய மாகாணத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.புதியதாக உருவாக்கப்பட்ட உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

1955ஆம் ஆண்டு நடுவண் ஆயத்தில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

  1. http://india.gov.in/myindia/bharatratna_awards_list1.php
  2. http://www.liveindia.com/freedomfighters/8.html

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்த்_வல்லப்_பந்த்&oldid=2210124" இலிருந்து மீள்விக்கப்பட்டது