காரைக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 10°04′N 78°47′E / 10.07°N 78.78°E / 10.07; 78.78
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Bot:Removing stub template from long stubs
வரிசை 90: வரிசை 90:
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:சிவகங்கை மாவட்டம்]]
[[பகுப்பு:சிவகங்கை மாவட்டம்]]


{{TamilNadu-geo-stub}}

07:36, 24 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

காரைக்குடி
—  சிறப்பு நிலை நகராட்சி  —
காரைக்குடி
இருப்பிடம்: காரைக்குடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°04′N 78°47′E / 10.07°N 78.78°E / 10.07; 78.78
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சித் தலைவர் கற்பகம் இளங்கோ
சட்டமன்றத் தொகுதி காரைக்குடி
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். மான்குடி (இ.தே.கா)

மக்கள் தொகை 106,714 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


82 மீட்டர்கள் (269 அடி)

குறியீடுகள்

காரைக்குடி (ஆங்கிலம்:Karaikudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பெருநகராட்சி ஆகும். "செட்டிநாடு" என்று அழைக்கப்படும் பிரதேசத்தின் பகுதியாகும். சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டு, கரை வீடுகள் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த வீடுகளின் அடிப்படையில், காரைக்குடி தமிழக அரசால் பாரம்பரியமிக்க நகரென அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறந்த கல்வி நிறுவனங்களான அழகப்பா பல்கலைகழகம் மற்றும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI) அமையபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும், காரைக்குடி கீழ்பட்டுள்ளது. நகரானது, 13.75 சதுர கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய காரைக்குடி நகராட்சியினால் நிர்வகிக்கப்படுகின்றது. 2011ஆம் ஆண்டைப் பொறுத்தவரை காரைக்குடியின் மக்கள் தொகை 306,714 ஆகும்.போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் சாலை வழிப் போக்குவரத்தே முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றது என்றபோதிலும், காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை சாலை ரயில் நிலையம், கோட்டையூர் ரயில் நிலையம், கண்டனூர் ரயில் நிலையம் ஆகியவை, காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற மக்களின் போக்குவரத்து தேவைக்கு இன்றியமையாததாக விளங்குகின்றன. மேலும், காரைக்குடி நகரிலிருந்து 97.2 கிலோமீட்டர் தொலைவில், மதுரை விமான நிலையமும் மற்றும் 83.6 கிலோமீட்டர் தொலைவில், திருச்சிராப்பள்ளி விமானநிலையமும் அமைந்துள்ளன.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°04′N 78°47′E / 10.07°N 78.78°E / 10.07; 78.78 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 82 மீட்டர் (269 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 106,793 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 53,425 ஆண்கள், 53,368 பெண்கள் ஆவார்கள். காரைக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காரைக்குடி மக்கள் தொகையில் 9,940 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்

காரைக்குடி நகராட்சி நிர்வாகம் 1928ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, 1988ஆம் ஆண்டு தேர்வு நிலைக்கு உயர்த்தப்பட்டது, 2013 ஆண்டில் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிற்கும், தனித்தனியே ஒரு கவுன்சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நகராட்சிப் பணிகள் ஆறு துறைகளாக பிரிக்கப்பட்டுளன: அவை, பொது நிர்வாகம்,பொறியியல், வருவாய், சுகாதாரம், திட்டமிடுதல் மற்றும் தகவல் தொழில்நுட்பம். ஆறு துறைகளும், நகராட்சி ஆணையரால் நிர்வகிக்கப்படுகின்றன. இவரே நிர்வாகத் தலைவர் ஆவார். சட்டமன்ற அதிகாரங்கள் 36 உறுப்பினர்களுடன் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியே ஒவ்வொரு வார்டுகளைச் சார்ந்தவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர், மற்றும் துணைத்தலைவர் தலைமையில் சட்டமன்ற அவை ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது.

காரைக்குடி தேர்தல் தொகுதியின் ஒரு பகுதியாக காரைக்குடி திகழ்ந்து, ஐந்தாண்டுக்கு ஒருமுறை தமிழக சட்டசபைக்கு ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுக்கின்றது. நான்கு முறை அதிமுகவும் (1977, 1984, 1991 மற்றும் 2009 தேர்தல்கள்), இரண்டு முறை திமுகவும் (1980, 1989), ஒரு முறை தமிழ் மாநில காங்கிரசும் (1996), மற்றொரு முறை இந்திய தேசிய காங்கிரசும்(2006) இத்தொகுதி தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியின் தற்போதைய சட்டசபை உறுப்பினர் அதிமுகவைச் சார்ந்த சோழன் பழனிச்சாமி ஆவார்.

திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, ஆலங்குடி, மானாமதுரை மற்றும் சிவகங்கையை உள்ளடக்கிய சிவகங்கை பாராளுமன்ற தொகுதியின் பகுதியாக காரைக்குடி திகழ்கிறது. இத்தொகுதியின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், அதிமுகவின் செந்தில்நாதன் ஆவார். 1967ஆம் வருடத்திலிருந்து, இத்தொகுதியின் பாராளுமன்ற தேர்தல்களில் 8 முறை இந்திய தேசிய காங்கிரஸும் (1980, 1984, 1989, 1991, 1999, 2004 மற்றும் 2009 தேர்தல்கள்), இரு முறை அதிமுகவும் (1977 மற்றும் 2014 தேர்தல்கள்), இரு முறை தமிழ் மாநில காங்கிரஸும் (1996 மற்றும் 1998 தேர்தல்கள்), இரு முறை திமுகவும் (1967 மற்றும் 1971 தேர்தல்கள்) வெற்றி பெற்றுள்ளன.

காரைக்குடி நகரின் சட்டம் ஒழுங்கு, தமிழ்நாடு காவல்துறையின் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான சிவகங்கை உட்பிரிவினால் பராமரிக்கப்படுகின்றது. நகரில் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையத்துடன், மொத்தம் மூன்று காவல் நிலையங்கள் உள்ளன. சிறப்புப் பிரிவுகளான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, சமூக நிதி மற்றும் மனித உரிமை, மாவட்ட குற்ற பதிவு மற்றும் சிறப்புப் பிரிவு ஆகியவை உள்ளன. இவை கண்காணிப்பாளர் தலைமையில் இயங்கி மாவட்ட அளவிலான காவல்துறை பிரிவுகளில் இயங்குகின்றன.

தொகுதி எல்லைகள்

  • தேவகோட்டை தாலுக்கா,
  • பாலையூர்,
  • சாக்கொட்டை,
  • பாணான்வயல் என்கிற பன்னாம்பட்டி,
  • வெள்ளிப்பட்டி,
  • பெரியகோட்டை,
  • களத்தூர்,
  • நட்டுச்சேரி,
  • ஜெயம்கொண்டன்,
  • புக்குடி,
  • ஆம்பக்குடி,
  • குளப்பாடி,
  • மேலமணக்குடி,
  • கண்டனூர்,
  • செக்கலைக்கோட்டை,
  • காரைக்குடி,
  • செஞ்சை,
  • கழனிவாசல்,
  • கோவிலூர்,
  • காரைக்குடி (ஆர்.எப்)
  • அரியக்குடி,
  • இலுப்பைக்குடி,
  • மாத்தூர்,
  • சிறுகவயல்,
  • பிரம்புவயல்,
  • மித்ரவயல்,
  • செங்காத்தான்குடி,
  • பெரியகோட்டகுடி,
  • புதூர்,
  • அமராவதி மற்றும் கல்லுப்பட்டி கிராமங்கள்.
  • கண்டனூர் (பேரூராட்சி) புதுவயல்(பேரூராட்சி) மற்றும் காரைக்குடி (நகராட்சி).

மேலும் பார்க்க

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "Karaikkudi". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  4. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

[www.dinakaran.com › District_Detail 1]


பிழை காட்டு: <ref> tags exist for a group named "www.dinakaran.com › District_Detail", but no corresponding <references group="www.dinakaran.com › District_Detail"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரைக்குடி&oldid=2208564" இலிருந்து மீள்விக்கப்பட்டது