"திருத்தந்தை பிரான்சிசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
66 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: CNN → CNN
சி (clean up, replaced: CNN → CNN)
2013ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 11ஆம் நாள் [[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] அதிர்ச்சியான ஒரு செய்தியை அறிவித்தார். அதாவது, தமது முதிர்ந்த வயது காரணமாகவும் உடல்நிலைக் குறைவு காரணமாகவும் 2013, பெப்ருவரி 28ஆம் நாள் தாம் திருத்தந்தைப் பணியைத் துறக்கப்போவதாக அவர் செய்தி வெளியிட்டார். கடந்த சுமார் 600 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வாறு ஒரு திருத்தந்தை பணியிலிருந்து விலகியதில்லை. மாறாக, திருத்தந்தைப் பதவி வாழ்நாள் முழுவதற்கும் நீடிப்பது என்ற வழக்கம் நிலவியது.
 
அந்த அதிர்ச்சியான அறிவிப்பைத் தொடர்ந்து, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 2013, மார்ச்சு 12ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடிய 115 கர்தினால்மார் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க வாக்குகள் அளித்தார்கள். அடுத்த நாள் மார்ச்சு 13, புதன்கிழமையன்று கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.vatican.va/holy_father/francesco/elezione/index_sp.htm |title=FRANCISCUS |date=13 மார்ச் 2013|quote= Annuntio vobis gaudium magnum; habemus Papam: Eminentissimum ac Reverendissimum Dominum, Dominum Georgium MariumSanctae Romanae Ecclesiae Cardinalem Bergoglioqui sibi nomen imposuit Franciscum|archiveurl=http://www.webcitation.org/6F60wLVTO|archivedate=13 மார்ச் 2013|publisher=Holy See}}</ref><ref>[http://www.news.va/en/news/habemus-papam-cardinal-bergolio-elected-pope Habemus Papam! Cardinal Bergolio Elected Pope - Fracis I]</ref> இவர் பிரான்சிசு என்பதை தனது [[திருத்தந்தையின் ஆட்சி பெயர்|ஆட்சி பெயராகத்]] தெரிவு செய்தார்.<ref name="cnbc">{{cite news |title=Cardinal Jorge Mario Bergoglio of Argentina Named as New Pope of the Roman Catholic Church |url=http://www.cnbc.com/id/100538976 |newspaper=CNBC |date=13 மார்ச் 2013 |accessdate=13 மார்ச் 2013}}</ref> அதே நாளில் வத்திக்கான் நகரின் துணை செய்தித் தொடர்பாளர் அருள்திரு தாமசு ரோசிக்கா, இப்பெயரை திருத்தந்தை [[அசிசியின் பிரான்சிசு]]வின் நினைவாகத் தேர்வு செய்தார் எனக் கூறினார்.<ref>Michael Martinez, [http://www.cnn.com/2013/03/13/world/pope-name/index.html?hpt=hp_t1 CNN Vatican analyst: Pope Francis' name choice 'precedent shattering'], [[CNN]] (13 மார்ச் 2013). Retrieved 13 மார்ச் 2013.</ref><ref>{{cite web|author=David Batty |url=http://www.guardian.co.uk/world/2013/mar/13/pope-francis-assisi-seagull-sistine |title=Pope named after Francis of Assisi heralded by gull atop Sistine chimney &#124; World news |publisher=The Guardian |date= |accessdate=2013-03-13}}</ref><ref>{{cite web|url=http://news.blogs.cnn.com/2013/03/13/cardinals-elect-new-pope/ |title=Argentina's Bergoglio becomes Pope Francis – This Just In - CNN.com Blogs |publisher=News.blogs.cnn.com |date= |accessdate=2013-03-14}}</ref> மேலும் அவர் திருத்தந்தையின் பெயர் ''பிரான்சிசு'' என்றும் ''முதலாம் பிரான்சிசு'' அல்ல எனவும் தெளிவுபடுத்தினார். பின்னாட்களில் வேறு ஒருவர் பிரான்சிசு என்னும் பெயரினைத் தேர்வு செய்தால் அப்போது இவர் முதலாம் பிரான்சிசு எனக் குறிக்கப்படுவார் எனவும் கூறினார்.<ref>Emily Alpert, [http://www.latimes.com/news/world/worldnow/la-fg-wn-vatican-pope-francis-name-20130313,0,1309501.story Vatican: It's Pope Francis, not Pope Francis I], ''[[Los Angeles Times]]'' (13 மார்ச் 2013). Retrieved 13 மார்ச் 2013.</ref>
 
===ஆட்சி முத்திரை===
 
*1946-1955: ஹுவான் பெரோன் என்னும் வலதுசாரி இராணுவத்தலைவர் நாட்டுத் தலைவராக ஆட்சிசெய்தார்.
 
*1955 செப்டம்பர் - இராணுவத்தின் மூன்று பிரிவுகளும் இணைந்து மூன்று நாள் பயங்கரச் சண்டைக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்றின. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள். பெரோன் பணிதுறந்தார். இறுதியில் எசுப்பானியாவில் தஞ்சம் புகுந்தார். நாட்டின் ஆட்சிச் சட்டம் (1893) மீண்டும் செயல்முறைக்குக் கொண்டுவரப்பட்டது.
*1966 - மீண்டும் இராணுவ ஆட்சி தளபதி ஹுவான் கார்லோஸ் ஓங்கானியா தலைமையில் அமைக்கப்பட்டது.
 
*1973 - பெரோன் கட்சி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பயங்கரவாத வன்முறை நாட்டில் கோலோச்சியது. ஹுவான் பெரோன் எசுப்பானியாவிலிருந்து அர்ஜென்டீனா திரும்பி ஆட்சித் தலைவர் ஆனார்.
 
*1974 சூலை - ஹுவான் பெரோன் இறப்பு. அவருடைய மூன்றாம் மனைவி இசபெல் பெரோன் பதவி ஏற்றார். வலதுசாரி மற்றும் இடதுசாரி வன்முறை அதிகரித்தது. நூற்றுக்கணக்கானோர் வன்முறைக்குப் பலியாயினர். வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தன. பணவீக்கம் ஓங்கியது.
 
*1975 - பணவீக்கம் 300% எல்லைக்கு மேல் சென்றது.
 
*1976 - தளபதி ஹோர்கே விதேலா என்பவர் தலைமையில் இராணுவக் கூட்டாட்சி (military junta) ஆட்சியைக் கைப்பற்றியது. இராணுவ ஆட்சியின் கீழ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இராணுவ ஆட்சியை எதிர்த்தவர்கள், மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தவர்கள், கல்லூரி மாணவர்கள், சமூகத் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கைதுசெய்யப்பட்டார்கள். மேலும் பெயரோ முகவரியோ இன்றி "காணாமற்போனவர்கள்" அரசு கொடுமைக்கு ஆளானர்கள். இந்த "அரசு பயங்கரவாதம்" (''state terrorism'') [[இழிவான போர் (அர்ஜென்டினா)|அர்ஜென்டீனாவின் இழிவான போர்]] (''Dirty War'') என்னும் பெயரால் அறியப்படுகிறது. அத்தகைய அரசு பயங்கரவாதம் 1983 வரை நீடித்தது.
 
*1981 - இராணுவ ஆட்சிக்குத் தளபதி லெயோப்போல்டோ கல்த்தியேரி (''General Leopoldo Galtieri'') தலைமை ஏற்றார்.
 
*1982 ஏப்பிரல் - தளபதி கல்த்தியேரி கொடுத்த கட்டளையின்மேல் அர்ஜென்டீனிய படைகள் ஃபாக்லாந்து தீவுகளைக் கைப்பற்றின. ஐக்கிய இராச்சியம் தனது அயல்நாட்டுக் குடியேற்றப் பிரதேசமாகக் கருதிய அத்தீவுகளை மீட்க படை அனுப்பியது. போரில் 700 அர்ஜென்தீனியர் இறந்தனர். ஐக்கிய இராச்சியம் தீவுகளை மீண்டும் கைவசம் கொண்டுவந்தது. தளபதி கல்த்தியேரி பதவி இறங்கினார், தளபதி ரேய்னால்டோ பிக்னோனே என்பவர் பதவி ஏற்றார்.
 
*1983 - இராணுவ ஆட்சியிலிருந்து மீண்டு அர்ஜென்டீனா குடிமக்கள் ஆட்சிக்குத் திரும்பியது. ராவுல் அல்ஃபோன்சின் என்பவர் அதிபர் ஆனார். உடனேயே அரசு ''இழிவான போர்'' நடந்த காலக் கட்டத்தில் (1976-1983) இராணுவ ஆட்சியினர் நிகழ்த்திய அட்டூழியங்களை விசாரிக்கக் கட்டளையிட்டது. அப்போது ஆட்சியில் பங்கேற்ற இராணுவத் தலைவர்கள் மனித உரிமைகளை மீறியது பற்றித் தகவல் சேகரித்து அவர்களுக்குத் தண்டனை வழங்க வழி ஏற்பட்டது. பணவீக்கம் 900% அளவை மிஞ்சியது.
 
*1989 - பெரோன் கட்சியைச் சார்ந்த கார்லோஸ் மேனெம் என்பவர் நாட்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
*1995 - கார்லோஸ் மேனெம் மீண்டும் அதிபரானார்.
 
*1996 - நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பொது வேலைநிறுத்தம்.
 
*1997 - எசுப்பானியாவில் ஒரு நீதிபதி அர்ஜென்டீனாவின் ''இழிவான போர்'' காலத்தில் (1976-1983) அர்ஜென்டீனிய இராணுவ அதிகாரிகள் எசுப்பானிய குடிகளைக் கடத்திச்சென்றதற்கும் அவர்களைக் கொன்றதற்கும் தண்டனைபெற வேண்டும் என்று கூறி அவர்களைக் கைதுசெய்ய ஆணை பிறப்பித்தது. ஆனால் அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அர்ஜென்டீனிய மன்னிப்புச் சட்டம் பாதுகாப்பு அளித்தது.
 
*1998 - அர்ஜென்டீனிய நீதிபதிகள் ''இழிவான போர்'' காலத்தில் (1976-1983) பெண்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களுடைய குழந்தைகள் கடத்தப்பட்ட குற்றத்தைச் செய்தவர்களைக் கைதுசெய்ய ஆணை பிறப்பித்தனர்.
 
*1999 - மைய-இடதுசாரிக் கூட்டணி ஃபெர்னாண்டோ தெ லா ரூவா தலைமையில் பதவி ஏற்றது.
 
*2001 அக்டோபர் - நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியினரான பெரோன் கட்சியினர் இரு அவைகளிலும் பெரும்பான்மை இடங்களைப் பெற்றார்கள்.
 
*2001, திசம்பர் 20 - மோசமாகிப்போன பொருளாதார நிலை காரணமாகக் கலவரங்களும் எதிர்ப்புகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து அதிபர் ஃபெர்னாண்டோ தெ லா ரூவா பதவி துறந்தார்.
 
*2002, சனவரி 1 - பெரோன் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எதுவார்தோ துகால்தே தற்காலிகத் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
*2003 மே - நெஸ்டோர் கிர்ச்னர் நாட்டு அதிபராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
 
*2003 ஆகத்து - இராணுவ ஆட்சிக்காலத்தில் ஆட்சிப் பங்கேற்ற இராணுவத் தலைவர்களுக்கு மனித உரிமை மீறல் விசாரணையிலிருந்து அளிக்கப்பட்ட பாதுகாப்பை விலக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தீர்மானம் இயற்றின.
 
*2005 சூன் - நாட்டின் உச்ச நீதிமன்றம் ''இழிவான போர்'' காலத்தில் (1976-1983) இராணுவ ஆட்சியின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்களில் பங்கேற்றதாகக் கருதப்பட்ட இராணுவ ஆட்சியாளர்களை விசாரிப்பதிலிருந்து அளித்த பாதுகாப்பை விலக்கிவிட கட்டளை இட்டது.
 
*2005 நவம்பர் - அமெரிக்காக்களின் உச்ச மாநாடு அர்ஜென்டீனாவில் நடந்தது. அமெரிக்க அதிபர் ஜோர்ஜ். டபிள்யூ. புஷ்க்கு எதிராகவும் சுதந்திர வாணிகத்துக்கு எதிராகவும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
 
*2006 சனவரி - [[அனைத்துலக நாணய நிதியம்|அனைத்துலக நாணய நிதியத்துக்கு]] அர்ஜென்டீனா திருப்பிச் செலுத்த வேண்டிய பல பில்லியன் டாலர் கடனை அர்ஜென்டீனா செலுத்தியது.
 
*2006 அக்டோபர் - முன்னாள் அதிபர் தளபதி ஹூவான் பெரோனின் உடலைப் புவேனோஸ் ஐரேஸ் நகரின் வேறொரு பகுதியில் புதைத்த போது வன்முறை நிகழ்ந்தது.
 
*2007 சனவரி - வலதுசாரி இராணுவக் குழுக்கள் 1970களில் கட்டவிழ்த்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த அப்போது ஆட்சியிலிருந்த இசபெல் பெரோன் கைதுசெய்யப்பட்டார்.
 
*2007 அக்டோபர் - அர்ஜென்டீனாவின் காவல்துறை ஆன்ம குருவாகச் செயல்பட்ட கிறிஸ்தியான் ஃபோன் வேர்னிச் என்பவர் அர்ஜென்டீனாவின் ''இழிவான போர்'' காலத்தில் (1976-1983) கைதிகளைச் சித்திரவதை செய்து, கொன்ற நிகழ்ச்சிகளில் ஒத்துழைத்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.
 
*நாட்டு அதிபர் நெஸ்டோர் கிர்ச்னருக்குப் பின், அவருடைய மனைவி கிறிஸ்டீனா ஃபெர்னாண்டெஸ் தெ கிர்ச்னர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
*2007 திசம்பர் - கிறிஸ்டீனா ஃபெர்னாண்டெஸ் தெ கிர்ச்னர் நாட்டு அதிபராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
 
*2008 ஏப்ரல்- முன்னாள் அதிபர் இசபெல் பெரோன் தமது ஆட்சிக்காலத்தில் மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டதால் அவரை அர்ஜென்டீனாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அர்ஜென்டீனா அரசு கேட்டது. அக்கோரிக்கைக்கு இணங்குவதற்கு எசுப்பானிய நீதிமன்றம் மறுத்துவிட்டது.
 
*2008 ஆகத்து - 1973 முதல் 1983 வரை இராணுவ ஆட்சிக்காலத்தில் நடந்த ''இழிவான போர்'' காலத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டு இரண்டு முன்னாள் தளபதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
 
*2009 சூலை - சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தீனா கிர்ச்னரின் பெரோன் கட்சி நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழந்தது.
 
*2009 திசம்பர் - தற்போது ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகையின் கீழ் உள்ள ஃபாக்லாந்து தீவுகளும் வேறு பல தீவுகளும் தனது ஆளுகைக்கு உட்பட்டது என்று அர்ஜென்டீனிய நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது.
 
*2010 சூலை - ஓரினத் திருமணங்கள் சட்டப்பூர்வமாக நடத்தப்படலாம் என்று அர்ஜென்டீனா சட்டம் இயற்றுகிறது. இலத்தீன் அமெரிக்காவில் இவ்வாறு ஓரினத் திருமணங்களை ஏற்கும் ஒரே நாடு அர்ஜென்டீனா தான்.
 
*2010 அக்டோபர் - முன்னாள் அதிபர் நெஸ்டோர் கிர்ச்னர் இறப்பு. அவர் அதிபர் கிறிஸ்டீனா கிர்ச்னரின் கணவர். நெஸ்டோர் 2011இல் நிகழவிருந்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
 
*2010 திசம்பர் - மனித இனத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு முன்னாள் இராணுவத் தளபதி-ஆட்சியாளர் ஹோர்கே விதேலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
 
*2011 அக்டோபர் - அர்ஜென்டீனாவின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து அதிபர் கிறிஸ்டீனா கிர்ச்னர் இரண்டாம் முறை பதவியைக் கைப்பற்றினார். அவருக்கு 54% வாக்குகள் கிடைத்தன.
 
*முன்னள் கடல்படைத் தலைவர்களுள் ஒருவரான ஆல்பிரேடோ ஆஸ்டிஸ் என்பவருக்கும் அவரோடு பாதுகாப்புப் படையினர் வேறு பதினொரு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவர்கள் அர்ஜென்டீனாவின் ''இழிவான போர்'' காலத்தில் (1976-1983) இராணுவ ஆட்சியில் பங்கேற்று மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தார்கள் என்ற அடிப்படையில் இத்தண்டனை பெற்றார்கள்.
 
*2012 சூலை - அர்ஜென்டீனாவின் ''இழிவான போர்'' காலத்தில் (1976-1983) அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்ட பெண்களின் குழந்தைகளைத் திருடியதை மேற்பார்வை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு முன்னாள் இராணுவ ஆட்சித் தலைவர் ஹோர்கே விதேலா மற்றும் ரெய்னால்டோ பிக்னோனே என்பவர்களுக்கு நீண்ட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் வேறு மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்.
 
==திருத்தந்தை பிரான்சிசு உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றல்==
{{main|உலக இளையோர் நாள் 2013}}
திருத்தந்தை பிரான்சிசு கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பணியை ஏற்ற பிறகு முதன்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு பிரேசில் நாட்டின் [[ரியோ டி ஜனேரோ]] சென்றார். அங்கு அவர் [[உலக இளையோர் நாள் 2013|உலக இளையோர் நாள்]] கொண்டாட்டத்தில் (சூலை 22-28, 2013) கலந்துகொண்டு பல்லாயிரக் கணக்கான இளையோர் மற்றும் பிறரோடு உரையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
==நற்செய்தியின் மகிழ்ச்சி பற்றிய போதனை மடல்==
==உலக அமைதி பற்றிய செய்தி வழங்கல்: 2014 உயிர்த்தெழுதல் பெருவிழா==
 
வத்திக்கான் நகரின் [[புனித பேதுரு பெருங்கோவில்]] முன்னே அமைந்துள்ள [[புனித பேதுரு சதுக்கம்|புனித பேதுரு சதுக்கத்தில்]] கூடியிருந்த சுமார் 150 ஆயிரம் முன்னிலையில் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்]] பெருவிழாவான 2014, ஏப்பிரல் 20ஆம நாளன்று திருத்தந்தை பிரான்சிசு ''(உரோமை) நகருக்கும் உலகுக்கும்'' ([[:en:Urbi et Orbi|Urbi et Orbi]]) என்று கூறப்படுகின்ற சிறப்பு ஆசியுரை வழங்கினார். வானொலி, தொலைபேசி, சமூக வலையங்கள் வழியாகக் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைந்த அந்த ஆசியுரையின்போது திருத்தந்தை பிரான்சிசு உலக மக்கள் அனைவருக்கும் அமைதிச் செய்தியை எடுத்துரைத்தார்.
 
உலகம் முழுவதும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை குறிப்பாக, சிரியா நாட்டில் அப்பாவி மக்களுக்கு எதிராக வன்முறைச் செயல்கள் நடைபெறுபெவது நிற்க வேண்டும் என்றார். அதுபோலவே, உக்ரைன் நாட்டில் இழுபறிநிலை தளர்த்தப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் நைஜீரியா நாட்டில் நிகழும் கொடூரமான பயங்கரவாதம், ஈராக் நாட்டில் நிலவும் வன்முறை, தென் சூடான் மற்றும் உலகெங்கிலும் வன்முறைகள் முடிவுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, [[எபோலா தீநுண்ம நோய்]] காரணமாகக் [[கினியா]], [[சியேரா லியோனி|சியேரா லியோனே]], [[லைபீரியா]] போன்ற நாடுகளில் துன்புறும் மக்களைத் திருத்தந்தை நினைவுகூர்ந்தார். மேலும், அக்கறையின்மையாலும் கொடிய வறுமையாலும் பரவுகின்ற நோய்கள் காரணமாக உலகில் எத்துணையோ மக்கள் இன்னல்படுகின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை, அந்நிலையை மாற்றிட அனைவரும் உழைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
வழக்கம்போல, திருத்தந்தை தம் உரையின் முடிவில் நகைச்சுவையோடு கீழ்வருமாறு கூறினார்: "அவ்வளவு தான்! உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துகள்! எல்லாரும் போய் நன்றாக விருந்துண்ணுங்கள்!"<ref>[http://www.usatoday.com/story/news/world/2014/04/20/pope-easter-religion-rome/7926551/ 2014ஆம் ஆண்டு உயிர்த்தெழுதல் விழா அமைதிச் செய்தி]</ref>
 
==திருத்தந்தையின் முதல் ஆசியப் பயணம் - கொரியா: ஆகத்து 13-18, 2014==
1984, 1989 ஆகிய ஆண்டுகளில் [[திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்]] கொரியா நாட்டுக்குப் பயணமாகச் சென்றிருந்தார். அவருக்குப் பின் பதவியேற்ற [[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்த போதிலும் ஆசியாவுக்குப் பயணமாகச் சென்றதில்லை. இப்போது கொரியாவுக்கு வருகின்ற திருத்தந்தை பிரான்சிசு மேற்கொண்டுள்ள பயணம் கொரியாவில் நிகழ்கின்ற திருத்தந்தைப் பயணங்களுள் மூன்றாவதாக அமைகிறது.
 
தென் கொரிய நாட்டு மக்கள் இந்த வருகையைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். வீதிகள் தோறும் திருத்தந்தைக்கு வரவேற்பு அறிக்கைகளும் வளைவுகளும் எழுப்பப்பட்டுள்ளன.
 
ஆசிய நாட்டு மக்களோடு நேரடியாகத் தொடர்புகொள்ளும் வகையில் ஆங்கில மொழியில் உரையாற்றுவதற்காகத் திருத்தந்தை பிரான்சிசு தயாரிப்போடு வருகிறார். வழக்கமாக அவர் இத்தாலிய மொழியில் உரையாற்றுவார். சிலவேளைகளில் தமது தாய்மொழியான எசுப்பானியத்தில் உரை நிகழ்த்துவார்.
 
ஆகத்து 14, வியாழன்: இன்று காலை கொரியா வந்து சேர்ந்த திருத்தந்தை பிரான்சிசு, கொரியா நாட்டு ஆட்சித் தலைவர்களைச் சந்தித்த பிறகு, மாலையில் கொரியா கத்தோலிக்க ஆயர்களைச் சந்தித்து உரையாற்றினார்.
 
குண்டு துளைக்காத பாதுகாப்பு அரண்கொண்ட சிறப்பு ஊர்தியில் பயணம் செல்வதைத் தவிர்த்து, கொரியா நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற வாகனங்களுள் மிகச் சிறிய வகை சேர்ந்த “கியா சோல்” (Kia Soul) சிற்றுந்தைத் திருத்தந்தை தேர்ந்துகொண்டார். உலகப் பெரும் தலைவர்களுள் ஒருவரான திருத்தந்தை இவ்வாறு எளிய முறையில் பயணம் செய்வது குறித்து கொரியா மக்களும் பிறரும் வியக்கின்றனர்.
 
ஆகத்து 15, வெள்ளி: ஆகத்து 15ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபை அன்னை [[மரியாவின் விண்ணேற்பு]] பெருவிழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டுத் திருத்தந்தை பொது அரங்கில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினார். அப்போது அவர் கூறியது: “கொரியா நாட்டு மக்கள் கிறித்தவ நம்பிக்கையில் உறுதியாக நிலைத்து நிற்கின்றனர். எத்தனையோ துன்பங்களுக்கு நடுவிலும், துன்புறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் கிறித்துவுக்குச் சான்று பகர்ந்துள்ளனர்...இவ்வுலகச் செல்வங்கள் மனிதரின் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற ஆன்ம வேட்கையை நிறைவு செய்ய முடியாது...கட்டற்ற போட்டியின் அடிப்படையில் எழுகின்ற பொருளாதார அமைப்புகளும், தொழிலாளரின் உரிமைகளை மறுக்கின்ற பொருளாதார அமைப்புகளும் மனித மாண்பை ஏற்க மறுக்கின்றன. கிறித்தவர்கள் ஏழை மக்கள்மீது சிறப்பான கரிசனை காட்ட வேண்டும்.”
 
ஆசியாவின் பல நாடுகளிலிருந்து வந்திருந்த இளையோருக்கு செய்தி வழங்கிய திருத்தந்தை, கொரியா நாட்டுக் குடும்பத்திற்காக இறைவனை வேண்டுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். இளையோர் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்திருந்த கொரியா நாட்டுப் பெண் ஒருவர் திருத்தந்தை பிரான்சிசிடம், “எங்கள் கொரியா நாடு இன்று வடக்கு ஒன்று, தெற்கு ஒன்று எனப் பிரிந்துகிடக்கின்றது. இதனால் மக்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்கள் என்றுதான் மறையுமோ” என்று கூறியதை அவர் கூர்ந்து கேட்டார்.
 
இளைஞர்களைச் சந்திக்கையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட உரையை வாசித்து அளிப்பதில் திருத்தந்தை சிரமப்பட்டது தெரிந்தது. அப்போது திருத்தந்தை “ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரையை வாசிப்பது இளையோரைக் கவராது. அவர்களோடு உறவாட வேண்டுமென்றால், இதயத்தின் ஆழத்திலிருந்து நேராகப் பேச வேண்டும் என்று என் நண்பர் ஒருவர் சொன்னார்” என்று கூறியதுமே, கூட்டத்திலிருந்து பலத்த கைத்தட்டு எழுந்தது. உடனேயே, திருத்தந்தை, ஆங்கில மொழியில் பேசுவதை விட்டுவிட்டு, இத்தாலிய மொழியில் உரையாடல் பாணியில் பேசத் தொடங்கினார். அப்போது, “கொரியா நாட்டு மக்கள் ஒரே மொழியைப் பேசுகின்றனர். நீங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு கொரியா என்று நாடு பிளவுபட்டுக் கிடப்பது மறைந்தது ஒரே குடும்பமாக நீங்கள் மாறிட அமைதியாக இறைவனை வேண்டுவோம்” என்று கூறியதும் கூட்டத்தில் பேரமைதி நிலவியது.
 
கம்போடியா நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு பெண், திருத்தந்தையிடம், கம்போடியாவிலும் பல கிறித்தவ மக்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களையும் புனிதர் என்று அறிக்கையிடுவது நல்லது என்று கூறியதும், திருத்தந்தை அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்தார்.
 
“தாமி” (selfie) வகை ஒளிப்படங்கள் எடுப்பதற்கு இளையோரோடு கூடவே பிரான்சிசு நின்றார்.
 
ஆகத்து 16, சனி: சியோல் நகரில் கொரியா மறைசாட்சிகள் திருத்தலத்தைத் திருத்தந்தை பிரான்சிசு சந்தித்தார். 10 மணிக்குப் பவுல் சி-சுங் என்பவருக்கும் அவரோடு வேறு 123 பேருக்கும் “அருளாளர்” பட்டம் வழங்கினார். இவர்கள் 18-19 நூற்றாண்டுகளில் கொரியாவில் கிறித்தவ நம்பிக்கையை முன்னிட்டு கொல்லப்பட்டவர்கள். வெளிநாட்டு மறைபரப்பாளர்கள் கொரியாவில் கிறித்தவத்தைக் கொணரவில்லை, மாறாக, கொரியா நாட்டு பொதுமக்களில் சிலர் சீன நாடு சென்று, அங்கு வாழ்ந்த கிறித்தவர்களிடமிருந்து கிறித்தவப் போதனைகளைக் கற்று, அவற்றைத் தம் சொந்த நாட்டிலும் பரப்பினார்கள். தமது சமய நம்பிக்கையின் பொருட்டு துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். இன்று, கொரியா மக்களுக்கும் ஆசிய மக்களுக்கும் ஏன் உலக மக்கள் அனைவருக்குமே அவர்கள் தலைசிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர் என்று திருத்தந்தை பிரான்சிசு கூறினார்.
 
பின்னர், கோட்டோங்னே (Kkottongnae) என்ற ஊனமுற்றோர் இல்லம் சென்று அங்கு பலவித ஊனங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெரியவர்களாக 70 பேரைச் சந்தித்து ஒரு மணி அளவு நேரம் செலவிட்டார். அவர்களுள் சிலர் தங்கள் ஊனங்கள் காரணமாக மருத்துவப் படுக்கைகளிலும் சக்கர வண்டிகளிலும் இருந்தனர். அவர்களை ஒருவர் ஒருவராகச் சந்தித்து, வாழ்த்துக் கூறி அவர்களுக்காகச் செபம் ஒப்புக்கொடுத்தார்.
 
மாலையில் கொரியாவின் கத்தோலிக்க துறவியர் சுமார் 5000 பேரைச் சந்தித்து உரையாற்றினார். துறவியர், கற்பு, கீழ்ப்படிதல், ஏழ்மை ஆகிய வாக்குறுதிகள் அளிப்பதன் வழியாக, தங்கள் கிறித்தவ அழைத்தலை அதிக ஆர்வத்தோடு ஏற்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். குறிப்பாக, ஏழைகளோடு தங்களை ஒன்றுபடுத்திக் கொண்டு, செல்வத்தை நம்பியிராமல் எளியவர்களாக வாழ வேண்டும் என்றும் கூறினார்.
 
ஆகத்து 17, ஞாயிறு: திருத்தந்தை ஆசிய பெருநிலத்தின் ஆயர் பேரவைகளின் பிரதிநிதிகளான 70 ஆயர்களைச் சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: கத்தோலிக்க திருச்சபை வெற்றி மமதை கொண்ட மனப்பான்மையோடு இங்கு வரவில்லை. ஆயர்கள் ஆசிய நாடுகளின் பண்பாடுகளை மதித்து, கத்தோலிக்க நம்பிக்கையைக் கடைப்பிடித்து, பிறரோடு பகிர வேண்டும். உரையாடல் மிக முக்கியம். ஆசியா பெருநிலத்தில், திருப்பீடத்தோடு முழு உறவு இன்னும் ஏற்படுத்தாத நாடுகள் இந்த உரையாடல் மனப்பான்மையோடு உறவுகள் ஏற்படுத்த முன்வரும் என்று எதிர்பார்க்கிறோம். உரையாடல் என்பது அரசியம் துறையில் மட்டுமல்ல, சகோதர மனப்பான்மையோடு நிகழ்வதாகவும் இருக்க வேண்டும்.
ஆசியாவில், சீன நாடு 1951இல் திருப்பீடத்தோடு ஆட்சி உறவுகளை முறித்துக்கொண்டது. வட கொரியா நாட்டில் சமய சுதந்திரம் இல்லை. அங்கு கிறித்தவர்களும் மிகச் சிலரே என்று தெரிகிறது. அவர்களும் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். வட கொரியாவோடும் திருப்பீடத்திற்கு அரசியல் உறவுகள் இல்லை.
 
கொரியாவுக்கு வான்வழியாகப் பயணம் சென்ற திருத்தந்தை பிரான்சிசின் விமானம் சீன நாட்டு வான் எல்லையில் பறந்த போது, வழக்கம்போல, திருத்தந்தை பிரான்சிசு சீன அரசுத் தலைவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
 
ஆகத்து 18, திங்கள்: திருத்தந்தை பிரான்சிசு, பல மதங்களைச் சார்ந்த தலைவர்களைச் சந்தித்து உரையாற்றினார். பின்னர், சியோல் உயர் மறைமாவட்டத்தின் பெருங்கோவிலில் திருப்பலி நிகழ்த்தினார். அமைதியையும், கொரியா நாடுகளுக்கிடையே நல்லுறவு இணக்கத்தையும் வலியுறுத்தி அத்திருப்பலி அமைந்தது.
 
நண்பகலில் பிரியா விடை நிகழ்ந்தது. பின்னர் திருத்தந்தை பிரான்சிசு வத்திக்கான் நோக்கிப் பயணமானார்.<ref>[http://www.nytimes.com/2014/08/19/world/asia/pope-caps-visit-to-south-korea-with-plea-for-reconciliation.html?_r=0 திருத்தந்தை பிரான்சிசின் கொரியா பயணம்]</ref>
- திருமணம் ஆகாமலே கூடிவாழ்கின்ற தம்பதியர்<br>
- திருமணத்திற்குப் பின் விவாகரத்து பெற்று, மறுமணம் செய்துகொள்வோர் நிலை<br>
- ஓரினப் பால் தம்பதியர் நிலை<br>
 
கத்தோலிக்க திருச்சபை மேற்கூறிய பொருள்கள் பற்றி இறுக்கமான கொள்கை கொண்டுள்ளது. திருச்சபை முறைப்படி மட்டுமே கத்தோலிக்கர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் கொள்கை இருந்தாலும் பல கத்தோலிக்கர் திருமணம் ஆகாமலே கூடிவாழ்வதால், அவர்களைத் திருச்சபை எந்த மனநிலையோடு நடத்த வேண்டும் என்னும் பொருள் ஆயர் மன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அதுபோலவே, ஓரினப் பால் தம்பதியரின் வாழ்க்கைமுறை குறையுள்ளது என்றாலும், அவர்கள் மட்டில் பரிவுகாட்டி, அவர்களுக்குத் தேவையான வழிகாட்டலை வழங்கவேண்டியது திருச்சபையின் பணி என்று வலியுறுத்தப்பட்டது.
==இரு இந்தியர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுதல்==
 
திருத்தந்தை பிரான்சிசு 2014, நவம்பர் 23ஆம் நாள், கிறித்து அரசர் பெருவிழாக் கொண்டாட்டத்தின்போது இந்தியாவின் கேரளத்தைச் சார்ந்தவர்களும் கத்தோலிக்க திருச்சபையின் சீரோ மலபார் வழிபாட்டு முறையினருமான இரு துறவிகளுக்குப் புனிதர் பட்டம் அளித்தார். உரோமையில் வத்திக்கான் நகரில் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிகழ்ந்த சிறப்புச் சடங்கின்போது வேறு நான்கு இத்தாலியர்களுக்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
 
புதிதாக புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்ட இந்தியர்கள் [[குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா]], [[எவுப்ராசியா எலுவத்திங்கல்]] ஆகியோர். நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியாவிலிருந்து, குறிப்பாக கேரள மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் உரோமை சென்றிருந்தனர். கேரள அரசும் இந்திய நடுவண் அரசும் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தன.<ref>[http://indiatoday.intoday.in/story/indians-declared-saints-vatican-pope-francis-father-kuriakose-elias-chavara-chavara-achen-sister-euphrasia-evuprasiamm/1/403365.html இரு இந்தியர் புனிதர் பட்டம் பெறுதல்]</ref>
 
===அகதிகளுக்கு உதவி===
உலகம் முழுவதும் பல நாடுகளில் போரினால் மனித இனங்கள் [[ஏதிலி|அகதிகளாக]] வேறு நாட்டுக்கு ஓடும் கொடுமை நடந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு உலக கத்தோலிக்க நாடுகளில் அகதிகளைச் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். <ref>[
http://tamil.thehindu.com/bbc-tamil/குடியேறிகளுக்கு-உதவ-போப்-கோரிக்கை/article7622288.ece|குடியேறிகளுக்கு உதவ போப் கோரிக்கை]தி இந்து தமிழ் 08 செப்டம்பர் 2015</ref>
இதில் முதல் கட்டமாக [[பிரான்சு|பிரான்ஸ்]],<ref>
[http://tamil.thehindu.com/world/24000-அகதிகளை-ஏற்க-பிரான்ஸ்-முடிவு/article7628204.ece|24,000 அகதிகளை ஏற்க பிரான்ஸ் முடிவு] தி இந்து தமிழ் 08 செப்டம்பர் 2015</ref> மற்றும் [[ஆத்திரேலியா|ஆஸ்திரேலியாவும்]], <ref>[http://tamil.thehindu.com/world/12000-அகதிகளுக்கு-புகலிடம்-அளிக்க-ஆஸ்திரேலியா-முடிவு/article7632538.ece?homepage=true|12,000 அகதிகளுக்கு புகலிடம் அளிக்க ஆஸ்திரேலியா முடிவு
இவரின் அழைப்பை ஏற்று [[சிரியா]] அகதிகளை தங்களது நாட்டில் குடியேற்ற முடுவு செய்துள்ளது]தி இந்து தமிழ் 08 செப்டம்பர் 2015</ref>
 
* http://www.washingtontimes.com/news/2013/nov/21/pope-francis-says-no-middle-east-without-christian/
* http://www.bbc.com/news/world-europe-25041259
 
 
{{Commons category|Franciscus}}
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2192262" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி