ரந்தெனிவலைச் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ரந்தெனிவலைச் சண்டை''' என்பது, சிங்கள - போர்த்துக்கேயப் போர்களின் ஒரு பகுதியாக 25 ஆகத்து 1630 இல் [[பதுளை]] நகருக்கு அண்மையில் அமைந்த வெல்லவாயா என்னும் இடத்துக்கு அருகில் உள்ள ரந்தெனிவலை என்னும் இடத்தில் இடம்பெற்ற சண்டை ஆகும். இது, கண்டி மன்னன், அவனது இரண்டு மகன்கள் ஆகியோரின் படைகள், போர்த்துக்கேய ஆளுனன் [[கான்சுட்டன்டினோ டி சா டி நோரொஞ்ஞா]]வின் தலைமையிலான படைகளுக்கும் இடையில் நிகழ்ந்தது. கான்சுட்டன்டினோ டி சா, பதுளை ஊடாகக் கண்டிக்குள் படையெடுத்தபோது இச்சண்டை ஏற்பட்டது. இது இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும். இச்சண்டையின்போது போர்த்துக்கேயர் பக்கமிருந்த "[[லாசுக்காரின்]] படை" எனப்பட்ட சிங்களப் படையணிகள் முழுமையாக கண்டியரசன் பக்கத்துக்குச் சென்றுவிட்டன. போர்த்துக்கேயப் படைகள் முழுமையாக அழிக்கப்பட்டதுடன், படைகளுக்குத் தலைமையேற்று வந்த கான்சுட்டன்டினோ டி சாவும் கொல்லப்பட்டான்.
'''ரந்தெனிவலைச் சண்டை''' என்பது, சிங்கள - போர்த்துக்கேயப் போர்களின் ஒரு பகுதியாக 25 ஆகத்து 1630 இல் [[பதுளை]] நகருக்கு அண்மையில் அமைந்த வெல்லவாயா என்னும் இடத்துக்கு அருகில் உள்ள ரந்தெனிவலை என்னும் இடத்தில் இடம்பெற்ற சண்டை ஆகும். இது, கண்டி மன்னன், அவனது இரண்டு மகன்கள் ஆகியோரின் படைகள், போர்த்துக்கேய ஆளுனன் [[கான்சுட்டன்டினோ டி சா டி நோரொஞ்ஞா]]வின் தலைமையிலான படைகளுக்கும் இடையில் நிகழ்ந்தது.<ref name=lingo>[http://www.ceylontoday.lk/64-92267-news-detail-rasin-deviyo.html Rasin Deviyo] - Chandra Tilake Edirisuriya (Ceylon Today) Accessed 2015-12-13</ref> கான்சுட்டன்டினோ டி சா, பதுளை ஊடாகக் கண்டிக்குள் படையெடுத்தபோது இச்சண்டை ஏற்பட்டது. இது இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும். இச்சண்டையின்போது போர்த்துக்கேயர் பக்கமிருந்த "[[லாசுக்காரின்]] படை" எனப்பட்ட சிங்களப் படையணிகள் முழுமையாக கண்டியரசன் பக்கத்துக்குச் சென்றுவிட்டன. போர்த்துக்கேயப் படைகள் முழுமையாக அழிக்கப்பட்டன.<ref name=Voyage>[http://www.colonialvoyage.com/portuguese-ceylon-portuguese-sri-lanka-before-war-dutch/ The Portuguese in Ceylon: Before the war with the Dutch] - Colonial Voyage Web. Accessed 2015-11-25</ref><ref name=Ceilo>[https://books.google.com/books?id=3OLhcTjEFCcC&pg=PR1 The Historic Tragedy of the Island of Ceilāo] - J. Ribeiro (AES) ISBN 8120613341 p 20, 91-92</ref><ref name=Nira>{{cite book|first=Nira |last=Wickramasinghe |authorlink=Nira Wickramasinghe|title=Sri Lanka in the Modern Age: A History of Contested Indentities|url=https://books.google.com/books?id=Y-xQ8qk9mgYC&q=Nayar#v=snippet&q=Nayar&f=false|accessdate=18 February 2016|year=2005|publisher=C Hurst & Co Publishers Ltd|isbn=978-18-5065-807-8|pages=13}}</ref> படைகளுக்குத் தலைமையேற்று வந்த கான்சுட்டன்டினோ டி சாவும் கொல்லப்பட்டான்.


== சண்டை ==
== சண்டை ==

09:07, 20 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்

ரந்தெனிவலைச் சண்டை என்பது, சிங்கள - போர்த்துக்கேயப் போர்களின் ஒரு பகுதியாக 25 ஆகத்து 1630 இல் பதுளை நகருக்கு அண்மையில் அமைந்த வெல்லவாயா என்னும் இடத்துக்கு அருகில் உள்ள ரந்தெனிவலை என்னும் இடத்தில் இடம்பெற்ற சண்டை ஆகும். இது, கண்டி மன்னன், அவனது இரண்டு மகன்கள் ஆகியோரின் படைகள், போர்த்துக்கேய ஆளுனன் கான்சுட்டன்டினோ டி சா டி நோரொஞ்ஞாவின் தலைமையிலான படைகளுக்கும் இடையில் நிகழ்ந்தது.[1] கான்சுட்டன்டினோ டி சா, பதுளை ஊடாகக் கண்டிக்குள் படையெடுத்தபோது இச்சண்டை ஏற்பட்டது. இது இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும். இச்சண்டையின்போது போர்த்துக்கேயர் பக்கமிருந்த "லாசுக்காரின் படை" எனப்பட்ட சிங்களப் படையணிகள் முழுமையாக கண்டியரசன் பக்கத்துக்குச் சென்றுவிட்டன. போர்த்துக்கேயப் படைகள் முழுமையாக அழிக்கப்பட்டன.[2][3][4] படைகளுக்குத் தலைமையேற்று வந்த கான்சுட்டன்டினோ டி சாவும் கொல்லப்பட்டான்.

சண்டை

ரந்தெனிவலையில் லாசுக்காரின் படைகள் அணிமாறியவுடன் இரவு நேரத்தில், அம்புகளாலும், துப்பாக்கிக் குண்டுகளாலும் போர்த்துக்கேயப் படைகள் தாக்கப்பட்டன. இரவு நேரத்தில் அவர்களால் பாதுகாப்பு அரண்களை நிறுவிக்கொள்ள முடியவில்லை. இதற்கும் மேலாகப் பல மணிநேரம் பெய்த மழையால், போர்த்துக்கேயரின் வெடிமருந்துகள் பயனற்றவை ஆகிவிட்டன. போர்த்துக்கேயரோடு சேர்ந்து சண்டையிட்ட லாசுக்காரின் படைத் தலைவன் ஒருவனே போர்த்துக்கேய ஆளுனன் டி சாவைக் கொன்றான்.

மேற்கோள்கள்

  1. Rasin Deviyo - Chandra Tilake Edirisuriya (Ceylon Today) Accessed 2015-12-13
  2. The Portuguese in Ceylon: Before the war with the Dutch - Colonial Voyage Web. Accessed 2015-11-25
  3. The Historic Tragedy of the Island of Ceilāo - J. Ribeiro (AES) ISBN 8120613341 p 20, 91-92
  4. Nira Wickramasinghe (2005). Sri Lanka in the Modern Age: A History of Contested Indentities. C Hurst & Co Publishers Ltd. பக். 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-18-5065-807-8. https://books.google.com/books?id=Y-xQ8qk9mgYC&q=Nayar#v=snippet&q=Nayar&f=false. பார்த்த நாள்: 18 February 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரந்தெனிவலைச்_சண்டை&oldid=2175817" இலிருந்து மீள்விக்கப்பட்டது