வளைகுடா நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22: வரிசை 22:
*[http://gulf2000.columbia.edu/ Gulf2000]
*[http://gulf2000.columbia.edu/ Gulf2000]


[[பகுப்பு:பாரசீக வளைகுடா நாடுகள்|பாரசீக வளைகுடா நாடுகள்]]
[[பகுப்பு:பாரசீக வளைகுடா]]

23:47, 13 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்

பாரசீக வளைகுடாவின் அரபு நாடுகள்

அராபிய பாரசீக வளைகுடா நாடுகள் (Arab states of the Persian Gulf) அல்லது சுருக்கமாக வளைகுடா நாடுகள் (Gulf States) என்பவை நடுவண் ஆசியாவில் பாரசீக வளைகுடாவினை ஒட்டி அமைந்துள்ள எண்ணெய் வளமிக்க முடியாட்சிகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளைக் குறிக்கும். ஈராக் மற்றும் ஏமன் நாடுகளும் பெர்சிய வளைகுடாவினை ஒட்டி யிருந்தாலும் அரபு நாடுகளாக இருப்பினும் அவை வளைகுடா நாடுகளாகக் கருதப்படுவதில்லை.

பொருளியல்

பாரசீக வளைகுடாவின் அனைத்து அரபு நாடுகளும் எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் மிகுந்த வருமானம் பெறுகின்றன. சவுதி அரேபியாவைத் தவிர ஏனைய நாடுகள் சிறிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளன. இதனால் இந்நாட்டு மக்களின் தனிநபர் வருமானம் அண்டை நாடுகளின் வருமானத்தைவிட கூடுதலாக உள்ளது. தங்களின் பணியாள் தேவைகளுக்காக தெற்காசியா (பெரும்பாலும் இந்தியா) மற்றும் தென்கிழக்கு ஆசியா (பெரும்பாலும் பிலிப்பைன்சு, இந்தோனேசியா) பகுதிகளிலிருந்து குடியுரிமையற்ற பொருளாதார குடியேறிகளை அமர்த்துகின்றனர்.

தவிர, முத்துக் குளித்தல் மற்றும் முத்து தொழில் பக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் குவைத்தில் முதன்மையான பொருளாதாரச் செயலாக இருந்தது. 1930களில் யப்பானில் முத்து வளர்ப்பு மேம்பாடு அடைந்தபிறகு இத்தொழில் நலிவடைந்துள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளைகுடா_நாடுகள்&oldid=2170616" இலிருந்து மீள்விக்கப்பட்டது