சோ ராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றை
சி →‎மறைவு: *விரிவாக்கம்*
வரிசை 51: வரிசை 51:


== மறைவு ==
== மறைவு ==
சோ, 7 டிசம்பர் 2016 அன்று காலை 4.40 மணியளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.
சோ ராமசாமி, 7 டிசம்பர் 2016 அன்று காலை 4.40 மணியளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.<ref>{{cite news | url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/Cho-Ramaswamy-passes-away/article16771236.ece?homepage=true | title= Cho Ramaswamy passes away|work=[[தி இந்து (தமிழ்)]] | date=7 டிசம்பர் 2016 | accessdate=7 டிசம்பர் 2016}}</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

02:03, 7 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

சோ ராமசாமி
படிமம்:Cho ramasamy.jpg
பிறப்பு (1934-10-05)அக்டோபர் 5, 1934
மயிலாப்பூர், சென்னை ராஜதானி, பிரிட்டிஷ் இந்தியா
இறப்பு 7 திசம்பர் 2016(2016-12-07) (அகவை 82)
சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
தொழில் நடிகர், அரசியல்வாதி, பத்திரிகையாளர், வழக்கறிஞர்
குடும்பம் தந்தை: ஆர் சீனிவாச ஐயர்
அம்மா: ராஜம்மாள்
குறிப்பிடத்தக்க மதிப்பு(கள்) துக்ளக்

சோ ராமசாமி (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் என பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர். சோ என அழைக்கப்பட்டவர். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்துத் தந்தது.

வாழ்க்கைக் குறிப்பு

சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார். 1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ’சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயராகும். [1]

கலையுலகம்

1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.

இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.

விருதுகள்

இவர் தனது பத்திரிக்கைத்துறைச் பணிக்காக 1985 இல் 'மஹாரான மேவார்' வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998 இல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றார்.

படைப்புகள்

இவர் 22 நாடகங்களையும், 8 புதினங்களையும், அரசியல், கலை எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவரது முகமது பின் துக்ளக் என்னும் 'அரசியல் நையாண்டி' நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது.

அரசியல்

இவர் மாநிலங்களவை உறுப்பின‎ராக வாஜ்பாயால் நியமனம் செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை பணியாற்றினார்.

மறைவு

சோ ராமசாமி, 7 டிசம்பர் 2016 அன்று காலை 4.40 மணியளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.[2]

மேற்கோள்கள்

  1. அமுதசுரபி தீபாவளி மலர் 2004; தமிழக அரசியல் சூழலில் ஓர் உன்னத நிகழ்ச்சி; பக்கம் 251
  2. "Cho Ramaswamy passes away". தி இந்து (தமிழ்). 7 டிசம்பர் 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Cho-Ramaswamy-passes-away/article16771236.ece?homepage=true. பார்த்த நாள்: 7 டிசம்பர் 2016. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ_ராமசாமி&oldid=2151786" இலிருந்து மீள்விக்கப்பட்டது