ஹிஸ்புல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
'''ஹெஸ்புல்லா''' (''Hezbollah'') என்பது [[லெபனான்]] நாட்டை தளமாக கொண்டு இயங்கும் இயக்கமாகும். '' ஹெஸ்புல்லா'' என்பதற்கு அரபு மொழியில் ''கடவுளின் கட்சி'' என்று அர்த்தம்.
'''ஹெஸ்புல்லா''' (''Hezbollah'') என்பது [[லெபனான்]] நாட்டை தளமாக கொண்டு இயங்கும் இயக்கமாகும். '' ஹெஸ்புல்லா'' என்பதற்கு அரபு மொழியில் ''கடவுளின் கட்சி'' என்று அர்த்தம்.



14:28, 23 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

ஹெஸ்புல்லா (Hezbollah) என்பது லெபனான் நாட்டை தளமாக கொண்டு இயங்கும் இயக்கமாகும். ஹெஸ்புல்லா என்பதற்கு அரபு மொழியில் கடவுளின் கட்சி என்று அர்த்தம்.

இவ்வியக்கம், லெபனானின் அரசியல் கட்சியொன்றாக இருக்கும் அதேவேளை ஆயுதமேந்திய போராளி இயக்கமாகவும் உள்ளது. 1982ம் ஆண்டு தொடக்கம் 2000ம் ஆண்டுவரை தெற்கு லெபனானில் நிலைகொண்டிருந்த இஸ்ரேலிய படையினரை எதிர்த்துப்போராடவென உருவானது.

ஹெச்புல்லாவின் செயலதிபர், செய்யத் ஹசன் நஸ்ரல்லா (Sayyed Hassan Nasrallah) என்பவராவார்

படிமம்:Sayyed Hassan Nasrallah.jpg
ஹெஸ்புல்லா இயக்கத்தின் செயலதிபர் செய்யத் ஹசன் நஸ்ரல்லா

அமெரிக்க ஐக்கிய நாடுகளும் பிரித்தானியாவும் ஹெஸ்புல்லாவை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இணைத்துள்ளன.

வரலாறு

1980 களில் லெபனானில் உருவாகி வளர்ந்த இவ்வியக்கம் சிரியா, ஈரான் ஆகிய நாடுகளின் பொருளாதார, ஆயுத விநியோக ஆதரவினைப் பெற்றதன் பிற்பாடு மிக வேகமாக வளர்ச்சிகண்டது.

1990 களின் இறுதிப்பகுதியில் ஹெஸ்புல்லா ஓர் அரசியல் கட்சியை உருவாக்கியதோடு லெபனான் மக்கள் மத்தியிலும் கிராம மட்டத்திலும் பல சமூக நல செயற்றிட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்தது. இலவச வைத்தியசாலைகள், இலவச பாடசாலைகள் போன்றவற்றை இவ்வியக்கம் நடத்திவருகிறது.

மே 2000 இல் லெபானானை விட்டு இஸ்ரேல் வெளியேறியதைத்தொடர்ந்து இவ்வெளியேற்றத்திற்கான காரணமாக பரந்தளவில் கருதப்பட்டது ஹெஸ்புல்லாவின் போராட்டமேயாகும். இஸ்ரேல் படையை தோற்கடித்த முதல் அரபுப்படையாக ஹெஸ்புல்லா இனங்காணப்பட்டது. அடிப்படையில் ஷியா முஸ்லிம்களிடையே உருவான அமைப்பாக ஹெஸ்புல்லா கருதப்பட்டாலும், சுன்னி முஸ்லிம்கள், லெபனான் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் இவ்வியக்கம் ஆதரவினையும் புகழினையும் பெற்றுக்கொண்டது.

இஸ்ரேல் படை வெளியேறியபின்னர் உலக வல்லரசுகள் சில ஹெஸ்புல்லா ஆயுதங்களை கைவிட்டு சனனாயக அரசியலில் ஈடுபடவேண்டும் என வலியுறுத்தின. 2000ம் ஆண்டின் இறுதிப்பகுதில் ஆயுதக்களைவுக்கான தீவிர வெளிநாட்டு அழுத்தங்களை இவ்வியக்கம் எதிர்கொண்டது.

ஹெஸ்புல்லாவின் சமூகசேவை

ஹெஸ்புல்லாவின் சமூக சேவைப்பிரிவு ஏராளமான சமூக சேவைகளை லெபனானில் புரிந்துவருகிறது. கழிவகற்றல் தொடக்கம் வைத்தியசாலைகள், கல்விக்கூடங்கள் வரை ஒரு அரசு செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் இது செய்துவருகிறது.

மே 2006 இல் ஐக்கிய நாடுகள் அவையின் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் பணிமனை வெளியிட்ட அறிக்கையின்படி, ஹெஸ்புல்லா இயக்கத்தின் சமூகசேவைப்பிரிவு 4 பெரும் வைத்தியசாலைகள், 12 சிறு வைத்திய கூடங்கள், 12 பாடசாலைகள், 2 விவசாய நிலையங்களை நடத்திவருகிறது. விவசாய கூடங்கள் வழியாக விவசாயிகளுக்கு தொழிநுட்ப ஆலோசனைகளும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. சூழலியல் திணைக்களம் ஒன்றையும் இவ்வமைப்பு கொண்டிருக்கிறது. வைத்திய உதவிகள், லெபனானில் இயங்கும் மற்றைய தனியார் வைத்தியசாலைகளைவிடவும் மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுவதோடு, ஹெஸ்புல்லா அங்கத்துவர்களுக்கு இலவச சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது. தற்போது ஹெஸ்புல்லா வறிய விவசாயிகளுக்கான கல்விக்கூட நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.

ஜூலை 2006 இல் இஸ்ரேலிய தாக்குதலின் காரணமாக தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வழங்கல் தடைப்பட்டுள்ள நிலையில் ஹெஸ்புல்லா நகரமெங்கும் நீர்வினியோகத்தையும் மேற்கொள்கிறது.

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிஸ்புல்லா&oldid=2146548" இலிருந்து மீள்விக்கப்பட்டது